"ஹலோ தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர்னு பலரையும் சந்திச்சிருக்காரு.''”
"சந்திப்புகளின் விளைவு எப்படி இருக்குமாம்?''”
"ஏற்கனவே கவர்னர் ரவி டெல்லிக்குப் போனப்ப, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திச்சார். அப்ப, தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டாலின் அமைச்சரவை சகாக்கள் ஆகியோரை தீவிரமாக் கண்காணிச்சி ரிப்போர்ட் கொடுக்கும்படி, அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டது. இதுபத்தி ஏற்கனவே நாம் பேசிக்கிட்டோம். அதன்படி கவர்னர் ரவியும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினார். இந்த நேரத்தில்தான் எடப்பாடியும் அவரது சகாக்களும் தி.மு.க. மீது கடும் புகார்களை கவர்னரிடம் வச்சாங்க. அதுபத்தியும் போனமுறை நாம பேசிக் கிட்டோம்.''”
’"ஆமாம்பா... ஊரக உள்ளாட்சித் தேர்தல், முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு பற்றி எடப்பாடி தரப்பு கவர்னரிடம் புகார் வாசிச்சிதே?''”
’"இந்த நிலையில்தான், 22ந்

’"இந்த நிலையில்தான், 22ந் தேதி பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் டெல்லி சென்ற கவர்னர், தமிழக நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், தொழில்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை, பள்ளிக் கல்வித்துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை, மணல் காண்ட்ராக்ட் விவகாரம் உள்ளிட்டவை குறித்து தயாரிக்கப்பட்டிருந்த ரிப்போர்ட்டை பிரதமர் மோடியிடம் கொடுத்திருக்கார். இது தவிர, தங்கள் மீதான ரெய்டின் பின்னணி குறித்து எடப்பாடி தரப்பு சொன்ன ரகசியத் தகவலையும் மோடியிடம் கவர்னர் சொன்னாராம். மேலும், நீட் தேர்வு மற்றும் 7 பேர் விடுதலை உள்ளிட்டவை குறித்த தி.மு.க.வின் நிலை குறித்தும், மோடியிடம் கவர்னர் விவாதிச்சிருக்கார்.''”
"நாம ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரியே மின்வாரியத்தில் நடக்கும் விவகாரங்களை பா.ஜ.க. பிரச்சினையாக்கி இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, மின்சார வாரியத்தில் இடமாறுதலில் நடக்கும் முறைகேடு குறித்து நாம் பேசிக்கிட்டப்ப, தமிழக பா.ஜ.க.வும், மத்திய உளவுத்துறையும் இதையெல்லாம் கண் காணிக்குதுன்னு சொன்னோம். அதுபோலவே, இது தொடர்பான நம் செய்தி வந்த 2ஆவது நாளே, மின்வாரிய ஊழல் பற்றி பா.ஜ.க. அண்ணாமலை பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதனையடுத்து, அண்ணாமலைக்கும் துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இடையே வார்த்தை யுத்தம் வெடித்தது. ஆக, தமிழக அரசின் முக்கியத்துறை கள் அனைத்தையும், பா.ஜ.க.வும் டெல்லியும் கண்காணிப்பது இதன் மூலம் உறுதியாகி இருக்கு.''”
"ஆவின்ல தனி நபர்களுக்காக சட்டவிதிகளை விருப்பம் போலத் திருத்தி, அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தறாங்களேப்பா?''”
"இது குறித்து நக்கீரனில் தனி ஸ்டோரி ஒன்னும் வெளிவந்திருந்தது. இதைப் பார்த்த மேல் அதிகாரி விசாரிக்க, அவருக்கு விளக்கம் தந்துள்ளார் ஆவின் எம்.டி. கந்தசாமி. ஆனால் அந்த விளக்கத்தில் நிறைய விசயங்கள் பொய்யாக தரப்பட்டுள்ளதாம். இதற்கிடையே, 35 கோடி மதிப்பிலான 6 லட்சம் லிட்டர் உபரி பால் விற்பனைக்கான டெண்டரை, கடந்த 21-ந் தேதி என்.சி.டி.எஃப்.ஐ. மூலமாக அறிவித்தது ஆவின். முதல் நாள் மாலையில் டெண்டர் அறிவித்து, கால அவகாசம் தராமல், மறுநாள் காலை 11 மணிக்கு அதில் கலந்து கொள்ளனும்ன்னு அறிவித்தார் ஆவின் எம்.டி. இதுவும் பெரும் விவாதமாகியிருக்கு.''”
"வருமான வரித்துறை ஒரு கோல்டு பார்ட்டியைக் குறிவைக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, பிரேம்னு ஒரு ஜுவல்லரி அதிபர். ஏற்கனவே சேகர் ரெட்டியோடு கைதானவர். அவர் அரசியல் புள்ளிகள் பலரையும் தங்கத்தில் முதலீடு செய்ய வச்சவராம். அவரைக் கண்காணிச்ச அதிகாரிகள், மாஜி சுகாதார மந்திரி விஜயபாஸ்கருக் கும், ஏகப்பட்ட தங்கத்தை வாங்கிக் கொடுத்தது தெரிய வந்திருக்குது. அதனால் அவரைக் கையில் எடுக்க வியூகம் வகுத்துக்கிட்டிருக்காங்க. அவர் விசாரணைக்கு வந்தால், பலரின் கோல்டு முதலீடுகள் வெளிவருமாம். தலைவரே... இன்னொரு செய்தி, அதானிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுனில் பாலிவால், டெல்லியின் காய் நகர்த்தலில் துறைமுகக் கழகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கார்.''”
"ம்...''”
"வருகிற 29-ந் தேதி தேவர் ஜெயந்தி வருது. அவரது குருபூஜையில் சசிகலா கலந்துக்கவும், அதற்காக மதுரை வரும்போது அவரைப் பலரும் சந்திக்கவுமான ஏற்பாடுகள் நடக்குது. குருபூசைக்கு வரும் சசிக்கு, பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் கலெக்டரிடமும் காவல்துறை எஸ்.பி.யிடமும் கடிதம் கொடுக்கப்பட்டிருக்கு. இந்தக் கடிதத்தில் சசிகலாவை, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்றே அவர்தரப்பு குறிப் பிட்டிருப்பது எடப்பாடி சைடில் டென்ஷனை ஏத்தியிருக்குது.''”
"நான் ஒரு தகவல் சொல்றேன்.. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட்டங்களிலும் பெரும் வெற்றிபெற்ற தி.மு.க., அதே ஸ்பீடில் நகராட்சி -மாநகராட்சி தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராகுது. அதற் கேற்ப, அரசின் நிர்வாகப் பணிகள் முடுக்கிவிடப் பட்டிருக்குது. ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.க்களும் அவங்கவங்க தொகுதிகளில் கவனிக்க வேண்டிய அடிப்படை வசதிகள் பற்றி அசைன்மெண்ட் கொடுக் கப்பட்டிருக்கு. அத்துடன், பெண்களுக்கான உரிமைத் தொகை ரூ.1000 பற்றிய அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் முதல் வாரத்தில் மாநகராட்சி -நகராட்சித் தேர்த லுக்கான அறிவிப்பு வெளியிடப்படும்னு எதிர்பார்க்கப்படுது.''’