Advertisment

ராங்கால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.? பா.ஜ.க. மார்வாடிகளிடம் சிக்கிய அ.தி.மு.க மாஜிகள் பணம்!

vv

"ஹலோ தலைவரே... விரைவில் சட்டப் பேரவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் படத்திறப்பு விழா நடக்கப்போகுது.''”

Advertisment

"ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளாச்சே!''”

"ஆமாங்க தலைவரே, சட்டமன்ற வைரவிழா நாயகரான கலைஞரின் படம், சில வருடங்களுக்கு முன்பே சட்டப் பேரவையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் நின்று, அத்தனை முறையும் வென்ற பெருமைக்குரியவர் கலைஞர். 5 முறை முதல்வராகி 19 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி புரிந்தவர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட்டு, அந்தக் கூட்டத் தொடரின் போதே ஆகஸ்ட் 7-ல் கலைஞரின் படத்திறப்பு விழாவை நடத்தும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாராம்.''”

Advertisment

stalin-president

"தமிழகத் தலைவர்கள் படத்தைத் திறக்கும்போது அகில இந்திய தலைவர்களை அழைப்பது ஒரு மரபாச்சே?''”

"ஆமாங்க தலைவரே, இந்த நிகழ்ச்சிக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்க நினைக்கிறார் ஸ்டாலின். இதற்காக அவர் 18-ந் தேதி இரண்டாம் முறையாக டெல்லிக்குச் சென்றார். குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, கலைஞர் படத்திறப்புக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கார். முதல் குடிமகனான குடியரசுத் தலைவரோடு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட அனைத்து அகில இந்தியக் கட்சிகளின் தலைவர்களையும் படத் திறப்பு விழாவுக்கு அழைத்திருக்கிறாராம் ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியை கோட்டையிலுள்ள சட்டமன்ற அரங்கத்தில் நடத்திடலாம்னும் அவர் திட்ட மிட்டிருக்காராம்.''”’

"கலைஞரின் பொதுவாழ்வுக்குரிய சிறப்பான மரியாதை...''”’

"தலைவரே, தி.மு.க.வில் இப்ப சப

"தலைவரே, தி.மு.க.வில் இப்ப சபரீசனுக்கு பல தரப்பிலும் பெரியளவில் மரியாதை. ஜூலை 17-ந் தேதி அவருக்குப் பிறந்தநாள். முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்ற சபரீசனை, அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்தும், தொலைபேசியில் தொடர்புகொண்டும் வாழ்த்து தெரிவிச்சிருக்காங்க. இந்த முறை கூடுதலாக, ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்காங்க. அப்ப எடுக்கப்பட்ட போட்டோக்களை ரிலீஸ் செய்யக்கூடாதுன்னு சபரீசன் ஸ்ட்ரிக்ட் டாவே சொல்லியிருக்கார். அப்படியிருந்தும் தி.மு.க. நிர்வாகிகளும், பிரபலங்கள் சிலரும், அவரவர் வாட்ஸ்-ஆப் குரூப்பில் பகிர்ந்தார்கள்.''”’

"அதிகாரத்தில் கட்சி இருக்கும்போது எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பூங்கொத்துகள் வரும்.''”’

vv

"விஜயகாந்தை வீட்டிற்கு சென்று ஸ்டாலின் சந்தித்தது பற்றி நாம ஏற்கனவே பேசியிருக்கோம். இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரேமலதாவும், அவரது தம்பி சுதீஷும், விஜயகாந்த்தின் வாரிசுகளும், தே.மு.தி.க தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்காங்க. இனி அ.தி.மு.க உறவு வேண்டவே வேண்டாம் னும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாக வேண்டும்னும், அதற்கான முயற்சியை சித்தரஞ்சன் சாலை இல்லம் மூலம் எடுக்கணும்னு பிரேம லதாவிடம் வலியுறுத்தியிருக்காங்க. இதை ஏற்றுக்கொண்ட பிரேமலதா, தி.மு.க. கூட்டணிக்கு இப்பவே காய்களை நகர்த்த ஆரம்பிச்சிருக்காராம்.''”’

"அ.தி.மு.க., உட்கட்சித் தேர்தலை நடத்தத் தயாராகுதே?''”’

"ஆமாங்க தலைவரே, இதுக்குக் காரணம், சசிகலா சமீப நாட்களாக அ.தி.மு.க.வுக்குள் குட்டையைக் குளப்பும் முயற்சியில் இறங்கி இருப்பதுதான். இது எடப்பாடியை பதறவச்சிக்கிட்டே இருக்கு. அதிலும் ஒரு தனியார் தொலைக் காட்சியில், ’சசிகலா எனும் நான்’ என்கிற பெயரில் வெளியான பேட்டியும், அதில் அவர் வெளியிட்ட அழுத்தமான கருத்துக்களும் எடப்பாடியை ரொம்பவே பயமுறுத்தியிருக்கு. அதனால், அவர் அடுத்த கட்ட அதிரடிக்குப் போவதற்குள் உட்கட்சித் தேர்தலை நடத்தி, தன் ஆதரவாளர்களை முக்கியமான பதவிகளில் உட்கார வச்சிடணும்னு நினைக்கிறார். அது தொடர்பாக கட்சி சீனியர்களிடம் அவர் விவாதிச்சிக்கிட்டு இருக்கார். தொலைக்காட்சி நேர்காணலுக்கான தலைப்பை சசிகலாதான் கொடுத்தாராம். அவர் இப்போது தினகரனை விட, தன் தம்பி திவாகரனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி இருப்பது அவர் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குது.''”’

rr

"சரிப்பா, அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் சிலர், தங்கள் முதலீடுகள் குறித்த பதட்டத்திலும் கவலையிலும் தவிக்கிறாங்களேப்பா?''”’

"உங்க காதுக்கும் தகவல் வந்துடுச்சாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், பிரபல கனிமவள நிறுவனமான திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறுவன உரிமையாளர்களும், சங்கீதா ஓட்டல் முரளி உள்ளிட்டவர்களும் எடப்பாடி தரப்போடு ரொம்பவும் நெருக்கமாக இருந்தாங்க. அதனால் முதல்வராக இருந்த எடப்பாடி மற்றும் அமைச்சர்களாக இருந்த தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோரின், பெரிய அளவிலான கரன்ஸிகள் எல்லாம் இவர்கள் மூலம் மும்பையில் இருக்கும் பா.ஜ.க ஆதரவு மார்வாடிகள் வழியாக வட்டிக்கு விடப்பட்டன. அதேபோல் மத்திய அமைச்ச ராக இருந்த பிரகாஷ் ஜவ்டேகர் தரப்பு வழியாகவும் பெரிய அளவில் முதலீடுகள் நடந்திருக்கு. பா.ஜ.க.வுட னான உறவைப் பேணுவதற்காக என்ற பெயரில், இந்த கணக்கு வழக்கு தொடர்பாகவே இவர்கள் அடிக்கடி டெல்லிக்குப் பறந்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப, ஆட்சி மாறியதால், அவர்கள் அத்தனை பேரும் இந்த மாஜிக்களுடன் வேண்டுமென்றே முரண்பட்டு, விலகி நிற்கிறார்களாம். அதனால் கொடுத்ததெல்லாம் அம்பேல்தானாங்கிற பதட்டத்தில் மாஜிக்கள் இப்ப பரிதவிக்கறாங்க. எதிர்தரப்போ, அது மக்கள் பணம் தானேன்னு நக்கலாச் சிரிக்குதாம்.''”’

"ஆகாத வழியில் வந்ததெல்லாம் ஆத்தோடு போகும்ன்னு சொல்வாங்க. இருக்கட்டும்.''”’

"ஆமாங்க தலைவரே... இப்ப அமைச்சரா இருப்பவர்களும் இதை உணர்ந்து செயல்படணும். கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் கூடாதுன்னு அமைச்சர்களுக்கு ஆட்சித் தலைமை அறிவுறுத்திய போதும், சீனியர் அமைச்சர்கள் சிலர், தங்கள் துறையில் நடைமுறையில் உள்ள திட்டங்களில் ஆர்வம் காட்டாமல், எந்தெந்த திட்டங்களில் லாபம் இருக்கும்ன்னு அதிகாரி களிடம் ஆலோசிக்கிறார்களாம். உயரதிகாரி களும் அதற்கான அனுபவ அறிவோடு, உரிய வழிகளை அடையாளம் காட்ட ஆரம்பிச்சிருக் காங்க. அதே நேரம், புதிதா வந்திருக்கும் ஜூனியர் அமைச்சர்களோ, இதுதொடர்பான விபரங் கள் தெரியாமல் வெறுமனே பெருமூச்சு விடறாங்களாம். அவர்களைக் கட்சியினர் ஏதாவது கோரிக்கைகளோடு அணுகினால்கூட, அதுக்கு நாங்க சரிப்படமாட்டோம்னு பரிதாபமாகச் சொன்னபடி, முதல்வர் அலுவலகத்தில் செல்வாக்கு உள்ள அதிகாரிகள் சிலரை கை காட்டறாங்களாம்.''”’

"ஜூனியர் மந்திரி களால் எதுவும் முடியலைன்னாலும் அரசியலில் கரைகண்ட எம்.எல்.ஏ.க்கள் ஜமாய்க் கிறாங்களே?''”’

rr

"உண்மைதாங்க தலைவரே, அதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். வடசென்னை பகுதியைச் சேர்ந்த மணலியில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஒரு டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதில் ரவி என்பவரால் மட்டும்தான் அப்ளிகேஷன் போட முடிந்தது. மற்றவர்கள் விண்ணப்பத்தை அதற்கான பெட்டியில் போட முடியாதபடி, ஆட்களை நிறுத்தி, டெண்டர் போட வந்தவர் களை எல்லாம் விரட்டியிருக்காங்க. அதனால் ரவிக்கு அந்த டெண்டர் கிடைக்கும்படி ஆயிடிச்சி. இதன் பின்னணி தெரிந்த அதிகாரிகள் சிலர், மேலே புகார் அனுப்ப... அந்த டெண்டரை ஃபைனல் செய்த செயல் பொறியாளரான ஜாகிர்உசேனை சஸ்பெண்ட் செய்திருக்கிறார், மாநகராட்சி ஆணையரான ககன்தீப்சிங் பேடி. அந்த ரவிக்காக ஆட்களை நிறுத்தி சகல சித்து வேலைகளையும் செய்தவர், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சங்கராம்.''”’

"நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன். சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெ.வின் ஆள் உயரச் சிலையை அமைத்தது முந்தைய எடப்பாடி அரசு. அந்த சிலைக்கு தினமும் காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தச் செய்தனர் அ.தி.மு.க.வினர். இதற்காக 20 அடி உயர ஏணியும் உயர்கல்வி மன்றத்தின் செலவில் வாங்கப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் நடந்து தி.மு.க. பொறுப்புக்கு வந்த பிறகும், அ.தி.மு.க.வினர் அங்கே வந்து அதிகாரிகள் சிலரின் ஆதரவோடு, மாலை அணிவித்து வருகின்றனர். இது குறித்து உயர்கல்வித் துறைக்குக் கடிதம் எழுதிய பேராசிரியர்கள் சிலர், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஏ-1 என்று அறிவிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு அலுவலகத்திலேயே எதிர்க்கட்சியினர் தினசரி மரியாதை செய்வதா?'ன்னு அதிரடிக் கேள்வியையும் எழுப்பியிருக்கின்றனர்.''

nkn210721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe