""ஹலோ தலைவரே, இந்த கொரோனா நேரத்திலும் முதல்வர் எடப்பாடிக்குத் தேர்தல் காய்ச்சல் ஆரம்பிச்சிருக்கு.''

""ஆமாம்பா, அதுக்குக் காரணம் பிரதமர் மோடிதான்னு ஹாட் டாக் அடிபடுதே?''

""உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடி, கடந்த 19-ந் தேதி எடப்பாடிக்கிட்ட பேசினார். வீடியோ கான்பரன்ஸ் மூலமும் டெலிபோன் மூலமும் உரையாடல்கள் நடந்திருக்கு. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து அக்கறையோட விசாரிச்ச மோடி, சர்ச்சைகள் கிளம்பாமப் பார்த்துக்கங்கன்னு சொல்லியிருக்கார். பாதுகாப்பு உபகரணக் கொள்முதல் விவகாரம் பத்தித்தான் மோடி கேட்கறார்னு புரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, இங்கே எல்லாமே சரியா நடக் குது. இருந்தும் தி.மு.க.தான் எங்களுக்கு எதிராப் புழுதி கிளப்பி, குளிர் காயப் பார்க்குதுன்னு சொல்லியிருக்கார்.''’

""இதுக்கு மோடியின் ரீயாக்ஷன் என்னவாம்?''

Advertisment

""மோடியோ, வர்ற சட்டமன்றத் தேர்தல்ல தி.மு.க.வை நீங்க வீழ்த்தனும்னா, அதுக்கு உங்க கட்சியில் இருக்கும் கோஷ்டிகளை எல்லாம் முதல்ல ஒருங்கிணைக்கப் பாருங்க. சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் போது, அவங்களையும் கட்சியில் சேர்த்துக்கங்க. அவரால் வேறவிதமான சிக்கல்கள் வராம நாங்க பார்த்துக்கறோம். அப்பதான் உங்க கட்சி வலிமையடையும். சசிகலா விசயத்தில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் வேண்டாம்னு கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். எடப்பாடியோ, நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலைன்னு பொத்தாம் பொதுவாச் சொல்லி, சிரிச்சி மழுப்பியிருக்கார்.''

""அப்ப பெங்களூர் சிறைச்சாலையின் இறுக்கமான பூட்டு, இப்ப சசிகலாவுக்காக நெகிழ ஆரம்பிச்சிருக்குன்னு சொல்லு.''

""ஆமாங்க தலைவரே, சசிகலா பற்றி மோடி பேசியதை வச்சி, விரைவில் அவர் ரிலீசாகப் போகிறார்ங்கிறதை புரிஞ்சிக்கிட்டார் எடப்பாடி. அதை அவர் விரும்பலை. அதனால், கொஞ்சம் அப்செட்டான அவர், உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, மோடிஜி, சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கச் சொல்றார். ஆனால் அதுக்கு முன்னாடி, எனக்கு ஒரு உறுதியை நீங்கள்லாம் கொடுக்கனும். நான், இப்ப மேற்கொண்டிருக்கும் கொரோனா நிவாரணப் பணிகளால், என்னைத் தமிழகத்தின் காவல் தெய்வமாவே மக்களிடம் இமேஜை உயர்த்தும் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. அதை அரசியல் அலையாக மாற்றி, இதே இமேஜோட தேர்தலைச் சந்திக்க விரும்பறேன். அதனால் டிசம்பர் வாக்கில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்தனும். மறுபடியும் முதல்வராயிட்டா அதுக்கப்புறம் சசிகலா ரிலீசானாலும் எனக்குக் கவலை இல்லைன்னு சொல்லியிருக்கார்.''

Advertisment

eps

""அமித்ஷாவின் பதில் என்னவாம்?''

""தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே எந்த விதத்தில் அழுத்தமா கால் ஊன்றலாம்ங்கிறதுதான் பா.ஜ.க.வின் வியூகம். அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட்டான போதே பா.ஜ.க. தன்னோட அசைன் மென்ட்டை அனுப்பிடிச்சி. அதன்பிறகு நடந்த அரசியல் மாற்றங்களெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். தமிழ்நாட்டில் ஒரு எம்.எல்.ஏகூட பா.ஜ.கவுக்கு இல்லைன்னாலும், தாங்கள் சொல்றதையெல்லாம் உடனடியா செய்யக்கூடிய அரசாங்கம் கைவசம் இருக்குது. அதை வச்சி, அப்படியே பலமா கால் ஊன்றிடணும்னு ப்ளான் பண்ணுது. அதனால, எடப்பாடி சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்ட அமித்ஷா சிரிச்சிக்கிட்டே, பார்க்கலாம்ன்னு சொல்லியிருக்காராம்.''

""பா.ஜ.க.வின் கவனம் தமிழகத்தின் மேலேயே இருக்கு போலிருக்கே?''

rr

""உண்மைதாங்க தலைவரே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதுதான் பா.ஜ.கவின் பிரதான லட்சியம். பா.ஜ.க.வின் மேலிட பிரதிநிதி முரளிதரராவ் அதை ஓப்பனாவே பேசினார். தமிழக பா.ஜ.க.வுக்கு தரப்பட்டிருக்கும் அஜெண்டாவும் அதுதான். அதுக்கு ஏற்றபடி, அ.தி.மு.க.வை ஒருங்கிணைச்சி வலுவாக்கறதோட, பா.ஜ.க.வின் இமேஜையும் இங்க முடிஞ்சவரை உயர்த்திக் கனும்ன்னு டெல்லி நினைக்கிது. அதனால்தான் தமிழகத்தில் நடக்கும் கொரோனா நிவாரணப் பணிகளை கவனிக்க ஸ்பெஷலா நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சரான அர்ஜுன் ராம் மேக்வாலை நிய மிச்சிருக்கார் மோடி.''

""ஓஹோ...''

""மேக்வால் தமிழக நிவாரணப் பணிகளை ஊன்றி கவனிச்சிக்கிட்டு இருக்கார். இந்த நிலை யில் சேலம், சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட் டங்களிலும், 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு, எந்த விதமான நிவாரணத் தொகையும் போகலைங்கிற தகவலை, மேக்வா லின் கவனத்துக்கு அவரோட தனி உதவியாளர் ப்ரித்விக் கொண்டுபோனார். இதனால் ஷாக் கான மேக்வால், இதுகுறித்து மத்திய பஞ்சாயத் துத் துறை அமைச்சரான நரேந்திரசிங் தோம ரிடம் விவாதிச்சிருக்கார். இவங்க ரெண்டுபேரும் மேற்கொண்ட முயற்சியால் 75,000 கோடி ரூபாய் தமிழகத்துக்கு உடனடியாக சேங்ஷன் செய்யப்பட்டு, அது பயனாளிகளுக்கும் போய்ச் சேர்ந்திருக்கு. இப்படி பார்த்துப் பார்த்து தமிழகத்தைக் கவனிக்கிது பா.ஜ.க. தரப்பு.''

""அதிகார ஆசையில் தமிழகத்தைக் கூர்ந்து கவனிக்கும் பா.ஜ.க., மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு ஆட்சி செய்யும் சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா விவகாரத்தை வச்சே செக் வச்சிருக்கே?''’’

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு உத்தவ் தாக்கரே அரசு, தலா 15 ஆயிரம் ரூபாய் வழங்கப் போகு துன்னும், ரயில் சேவை தொடங்கப்போகுதுன்னும் திடீர்ன்னு கிளம்பிய வதந்தியால், ஏறத்தாழ 5 லட்சம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மும்பை ரயில் நிலையத்தில் முண்டியடிச்சாங்க. இதைபார்த்து இந்தியாவே அதிர்ச்சியில் உறைஞ் சிப் போச்சு. மோடியும் டென்ஷனாயிட்டார். இதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவைத் தொடர்பு கொண்ட அமித்ஷா, உங்களால் ஊரடங்கை அமல்படுத்த முடியலையா? இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம். உங்க ஆட்சியைக் கலைக்க வும் தயங்கமாட்டோம்ன்னு எச்சரிக்கை செய்திருக்கார். பா.ஜ.க. தரப்பு வைத்த இந்த செக்கால் பதறிப்போன உத்தவ் தாக்கரே, வதந்தி பரப்பியதாக ஊடகத்துறையினர் சிலர் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்திருக்கார்.''

rr

""இதனால் பா.ஜ.க. சமாதானமாயிடிச்சா? பா.ஜ.க. ஆட்சியை மகாராஷ்ட்ராவில் கெடுத்து, எதிரிக்கட்சிகளுடன் கைகோர்த்த உத்தவ் தாக்கரே மேலே கோபம் குறையலையாமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, உத்தவ் தாக்கரே, எம்.எல்.ஏ.வாகவோ, எம்.எல்.சி. யாகவோ இல்லை. ஒருவர் பதவியேற்ற 6 மாதத்திற்குள் இந்த இரு பதவிகளில் ஏதேனும் ஒன்றில், அரசியல் அமைப்புச் சட்டப்படி இருந்தாகனும். அந்த வகையில் வரும் மே 28-ந் தேதிக்குள் அவர் இதில் ஏதேனும் ஒன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாகனும். இல்லைன்னா அவரோட முதல்வர் பதவி பறிபோய்விடும். அங்கே காலியாக உள்ள 8 எம்.எல்.சி. இடங் களுக்குத் தேர்தல் நடத்த வாய்ப்பு இருந்தாலும், கொரோனா ஊரடங்கு அதற்கான வாசலை அடைச்சி சுவர் எழுப்பியிருக்கு.''

""மகாராஷ்டிர கவர்னராக இருக்கும் பகத்சிங் கோஸ்யாரிக்கிடம், இரண்டு எம்.எல்.சி.க்களை நியமிக்கும் அதிகாரம் இருக்கே?''

rr’""பொதுவாக ஆளும் கட்சியின் சிபாரிசை ஏற்று அந்த நியமன எம்.எல்.சி.க்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கலாம் என்பது மரபு. ஆனால், பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸின் ஆதரவோடு முதல்வராக இருக்கிறார் உத்தவ். இதனால் பா.ஜ.கவின் எதிர்ப்பை ஏகத்துக்கும் சம்பாதித் திருக்கும் இவரை, டெல்லியின் பிரதிநிதியான கவர்னர் எப்படி எம்.எல்.சி.யாக்குவார்ங்கிற குழப்பம் அங்கே நீடிக்கிது. இருந்தும் உத்தவ் தாக்கரேயை கவர்னர் எம்.எல்.சி.யாக நியமிக்க ணும்ன்னு, உத்தவ்வின் அமைச்சரவை கவர்ன ருக்குப் பரிந்துரை செய்திருக்கு. கவர்னரோ, எந்த முடிவையும் எடுக்காமல் மௌனத்தைக் கடைபிடிக்கிறார். இந்த மௌனத்தின் பின்னணியில் இருப்பது பா.ஜ.க.வா? இல்லை, தேசியவாத காங்கிரஸின் தலைவர் சரத்பவாராங் கிற குழப்பத்தில் இப்ப நிலைகொள்ளாமத் தவிக்கிறார் உத்தவ் தாக்கரே.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்… கொரோனா பரிசோதனைக்கான ரேபிட் கிட் கொள்முதல் விவகாரத்திலேயே ஏகப்பட்ட சர்ச்சை கிளம்பியிருக்கு. இந்த நிலையில், இந்த கிட் மூலம் பரிசோதிக்கும் நிகழ்ச்சியை, ஊரடங்கு நேரத்திலேயே கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரிப்பன் வெட்டி கோலாகலமாத் தொடங்கி வச்சிருக்கார் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. இதில் கொடுமை என்னன்னா, இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் சமூக ஒழுங்கைக் கொஞ்சம் கூடக் கடைபிடிக்காமல், அமைச்சருக்கு அருகே நெருக்கி யடிச்சி நின்னு, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுதான்.''’’