"ஹலோ தலைவரே, இந்தியாவே கொரோனா நெருக்கடியில் சிக்கியிருக்கும் இந்த இக்கட்டான நிலையில், மக்கள் ஊரடங்கு நாளான மார்ச் 22-ந் தேதி நிச்சயிக்கப்பட்டிருந்த பல திருமணங்களை தள்ளி வச்சிட்டாங்க. தவிர்க்க முடியாத நிலையில் இருந்த ஒருசில திருமணங்கள் மட்டும் ரொம்பவும் சிம்பிளா நாலஞ்சுபேர் முன்னிலையில் நடத்தப்பட்டிருக்கு.''’

""ஆமாம்பா, குல தெய்வங்கள் முன்னாடியும், மூடப்பட்ட கோயில் முகப்புகள்லயும், குடும்பப் பெரியவர்கள் முன்னிலையிலும் திருமணத்தை நடத்தியிருக்காங்க. ''’‘

rr

""தலைவரே, மலைக்கோட்டை மாநகரான திருச்சியைப் பொறுத்தவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள்ல மட்டும், 12 திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டது. ஒரு திருமணம் மட்டும் மத்திய பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கலையரங்கம் மண்டபத்தில் நடந்தது. அதையும் ஊரடங்கு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதிகாலையிலேயே குறைந்த உறவினர்கள் முன்னிலையில் நடத்தியிருக்காங்க இந்தத் திருமணத்தில், உறவினர்களைப் பன்னீர் தெளித்து சந்தனத்தோட வரவேற்பதற்கு பதிலாக, சானிட்டைசரைக் கொடுத்து கைகழுவச் சொன்னது புதுமணத்தம்பதிகள் அவர்கள் குடும்பத்தினரின் சமூக அக்கறையைக் காட்டியது.''

Advertisment

""திருமண விழாக்கள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க பெரும்பாடு பட்டிருக்கிறார்களே ஸ்டாலினும் தி.மு.க.வினரும்?''’

""சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, கொரோனாவின் கொடிய காலடித் தடம், சட்டமன்றத்திலும் பதிஞ்சிடக் கூடாதேங்கிற கவனத்தோட, கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க. கோரிக்கை வைத்தபடியே இருந்தது. ஆனால் எடப்பாடி அரசோ அதைக் கண்டுக்காமல் விடாப்பிடியா நடத்திக்கிட்டே இருந்தது. தி.மு.க.வின் கடும் எதிர்ப்பால் ஏப்ரல் 9-ந் தேதிவரை நடக்க இருந்த கூட்டத்தைக் காலையிலும் மாலையிலுமாக 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கலாம்ன்னு எடப்பாடி திட்டமிட்டார். இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தையும் கொரோனா காரணமாக ஒத்திவைக்கணும்னு எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. இதுக்கு மோடி அரசும் அசைஞ்சி கொடுக்காததால், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதே பாணியில் தி.மு.க.வும் சட்டமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக 23 ந் தேதி அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பிவச்சார். இதேபோல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம்னு அறிவிச்சிது. 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வராட்டி, ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடுமேன்னு சுதாரிச்ச எடப்பாடி, சட்டசபைக் கூட்டத் தொடரை 24-ந் தேதியோடு முடிவுக்கு கொண்டு வருவதா சபாநாயகர் மூலம் அறிவிச்சாரு.''’

vv

Advertisment

""பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கட்சிப் பதவியை எடப்பாடி பறித்துவிட்டாரே?''’

""ஆமாங்க தலைவரே, அமைச்சர் ராஜேந் திர பாலாஜியைப் பொறுத்தவரை கட்சியின் கடிவாளத்துக்கு அடங்காத குதிரையாகவே தொடர்ந்து இருப்பது, எடப்பாடியை ஏகத்துக்கும் எரிச்சலாக்கி வந்தது. இதைப் பற்றி நம்ம நக்கீரனில் ஏற்கனவே தனிக் கட்டுரையே வந்திருக்குது. அவரோட பேச்சு தொடர்ந்து பா.ஜ.க. தொனியில் இந்துத்வா ஆதரவுக் குரலாகவே இருந்தது. இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியும் அடிக்கடி தடாலடியா விமர்சிச்சி, அந்தத் தரப்பு மக்களை கொதிக்க வச்சார். அவரைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் இனி அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடமாட்டாங்கன்னும், அதனால் இந்துக்கள் ஓட்டுகளை முழுமையாக வாங்குறதுக்காகத்தான் பேசுறேன்னும் சொல்லிவந்தார். அதோடு, அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான அன்வர்ராஜா, குடிமக்கள் சட்டத் திருத்தத் துக்கு நாம் ஆதரவா இருந்ததால்தான் தோற்றோம்ன்னு பகிரங்கமாவே சொன்னதை சுட்டிக்காட்டி, அவர் எப்படி முஸ்லிம்களுக்கு ஆதரவா இருக்காரோ அதுபோல நானும் இந்துக்களுக்கு ஆதரவா இருக்கேன்னு ஸ்பீட் பிரேக்கர் இல்லாம போய்க்கிட்டே இருந்தார்.''

""அவர் சொல்ற வாதப்படி இந்துக்கள் மதம் பார்த்து வாக்களிப்பாங்கன்னா, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்ல இருக்கும் இந்துக்கள்லாம் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப் போட்டுடுவாங்களா?''

""அதைத்தான் ராஜேந்திர பாலாஜியின் போக்கு பிடிக்காத அ.தி.மு.க. சீனியர்களும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கிட்டே சொல்லிக்கிட்டிருந்தாங்க. இந்த நிலையில், இந்துமதத்தை விமர்சித்ததால், அதற்கு பழிவாங்கும் வகையில் கொரோனா தாக்குதல் நடந்திருக்குன்னு ஊரடங்கு நாளில் ராஜேந்திர பாலாஜி ட்வீட் பண்ண, அது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை உண்டாக்க, அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து கட்சித் தலைமை நீக்கிடிச்சி. அதோடு, அவர் சீக்ரெட்டா ரஜினியைச் சந்திச்சார்ன்னு எடப்பாடி காதுக்கு ஒரு தகவல் போயிருக்குது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அதனால் முதல் பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத் தான்னு இ.பி.எஸ். நினைக்கிறாரு. அத னாலதான் இந்த அதிரடி நடவடிக்கையாம்''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்பா. மருத்துவர்களின் ஆலோ சனைப்படி செயல்படும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு, இந்த கொரோனா காலத்தில் சின்ன அளவிலான தொற்றுக்கூட ஏற்பட்டு விடக் கூடாதுன்னு, அவரை எப்பவும் மாஸ்கோட இருக்க வச்சி பராமரிக்கிறார் பிரேமலதா. 22- ந் தேதி ஊரடங்கு நாள்ல கட்சியின் தொழிற்சங்கப் பிரமுகர் வேணுராஜின் மகன் விமலின் திருமணத்தை, மாஸ்க் அணிந்தபடி, தன் வீட்டிலேயே நடத்தி வச்சிருக்காரு கேப்டன்.''