ராங்கால் தி.மு.க. ரேஸ்! சீனியர்களுக்கு சான்ஸ்! வெளிநாட்டில் முதலீடு! அமைச்சர்களை ஆட்டுவிக்கும் அதிகாரிகள்!

dd

"ஹலோ தலைவரே, உலகையே நடுங்க வைச்சிக்கிட்டு இருக்கும் கொரோனா பீதி, தமிழக சட்டமன்றத்திலும் காலெடுத்து வச்சிருக்கு. தி.மு.க. துரைமுருகன், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், சபைக்கு வரும் எல்லா உறுப்பினர்களுக் கும் மாஸ்க்கைக் கொடுங்கள். ஏன்னா, கொரோனா வைரஸ் தாக்கி, ஏதேனும் விபரீதம் நடந்துட்டா, இன்னொரு இடைத்தேர்தலை நாம சந்திக்க வேண்டி வரும்னு சொன்னார்.''

""16-ந் தேதி திங்கட்கிழமை சபை கூடியபோது, பொதுமக்கள் சபைக்குள் அனுமதிக்கப்படலை. மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லைன்னு சபாநாயகர் தனபால் தடை விதிச்சிட்டாரே! அதேபோல் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சோதனை செய்த பிறகே சட்ட சபைக்குள் அனுமதிச்சாங்க''’

rr

""தலைவரே, பேராசிரியர் அன்பழகன் வகித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் முண்டியடிச்சாங்க. கட்சித் தலைமையின் சாய்ஸாக துரைமுருகனே இருந்தார். அவரும் தன்னைப் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வசதியாக, தன் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலினிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திட்டார்.''

""அப்படின்னா பொருளாளர் பதவிக்கு யாரு?''

""பொதுச்செயலாளர், பொருளாளர் யார், யார்னு 29-ந் தேதி அன்று கூட இருக்கும் தி.மு.க. வின் பொதுக் குழுவில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பதவிக்கும் சித்தரஞ்சன் சாலை வழியா சில சீனியர்கள் ரூட் போட்டும் ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கலை. கலைஞரின் கடைசிக் காலம்வரை அவருடனேயே பயணித்தவர் துரைமுருகன். பொருளாளருக்கு டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் தரப்பு விறுவிறுப்பாகக் காய் நகர்த்தி வருது. இவர்களில் சிலர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தரப்பையும், இன்னும் சிலர் கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தரப்பையும் அணுகி இருக்காங்க. எனினும், சீனியரான டி.ஆர்.பாலு பக்கமே ஒளிவட்டம் அதிகமாகத் தெரிகிறது''’

""தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் என்ற ஒளிவட்டத்திற்கு வந்திருக்கும் முருகன், அந்தப் பதவியில் சோபிப்பாரா?''’

rr

""தமிழக பா.ஜ.க. சீனியர்கள் எப்படி நடந் துக்குவாங்க என்ற சந்தேகம் அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கே இருக்குது. ஏற்கனவே தலித் சமூகத்தைச் சேர்ந்த கிரு

"ஹலோ தலைவரே, உலகையே நடுங்க வைச்சிக்கிட்டு இருக்கும் கொரோனா பீதி, தமிழக சட்டமன்றத்திலும் காலெடுத்து வச்சிருக்கு. தி.மு.க. துரைமுருகன், தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், சபைக்கு வரும் எல்லா உறுப்பினர்களுக் கும் மாஸ்க்கைக் கொடுங்கள். ஏன்னா, கொரோனா வைரஸ் தாக்கி, ஏதேனும் விபரீதம் நடந்துட்டா, இன்னொரு இடைத்தேர்தலை நாம சந்திக்க வேண்டி வரும்னு சொன்னார்.''

""16-ந் தேதி திங்கட்கிழமை சபை கூடியபோது, பொதுமக்கள் சபைக்குள் அனுமதிக்கப்படலை. மறு உத்தரவு வரும்வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லைன்னு சபாநாயகர் தனபால் தடை விதிச்சிட்டாரே! அதேபோல் முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தொடங்கி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வரை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சோதனை செய்த பிறகே சட்ட சபைக்குள் அனுமதிச்சாங்க''’

rr

""தலைவரே, பேராசிரியர் அன்பழகன் வகித்த தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவிக்கு தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் முண்டியடிச்சாங்க. கட்சித் தலைமையின் சாய்ஸாக துரைமுருகனே இருந்தார். அவரும் தன்னைப் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வசதியாக, தன் பொருளாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலினிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திட்டார்.''

""அப்படின்னா பொருளாளர் பதவிக்கு யாரு?''

""பொதுச்செயலாளர், பொருளாளர் யார், யார்னு 29-ந் தேதி அன்று கூட இருக்கும் தி.மு.க. வின் பொதுக் குழுவில்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பதவிக்கும் சித்தரஞ்சன் சாலை வழியா சில சீனியர்கள் ரூட் போட்டும் ஸ்டாலின் அதற்கு இடம் கொடுக்கலை. கலைஞரின் கடைசிக் காலம்வரை அவருடனேயே பயணித்தவர் துரைமுருகன். பொருளாளருக்கு டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர் தரப்பு விறுவிறுப்பாகக் காய் நகர்த்தி வருது. இவர்களில் சிலர் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் தரப்பையும், இன்னும் சிலர் கட்சியின் அதிகாரப்பூர்வ அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தரப்பையும் அணுகி இருக்காங்க. எனினும், சீனியரான டி.ஆர்.பாலு பக்கமே ஒளிவட்டம் அதிகமாகத் தெரிகிறது''’

""தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவர் என்ற ஒளிவட்டத்திற்கு வந்திருக்கும் முருகன், அந்தப் பதவியில் சோபிப்பாரா?''’

rr

""தமிழக பா.ஜ.க. சீனியர்கள் எப்படி நடந் துக்குவாங்க என்ற சந்தேகம் அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கே இருக்குது. ஏற்கனவே தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதியை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் நோகடித்து ஓரம் கட்டினாங்க. எனினும், டெல்லியில் இருந்து வந்த தனக்கு விமான நிலையத்தில் தரப்பட்ட கோலாகலமான வரவேற்பில் முருகன் தரப்பு உற் சாகமாகவே இருக்கிறது. அதேசமயம், காஞ்சி சங்கரமடத்துக்கு அவர் ஆசி வாங்கப் போனபோது, தனக்கு நிகராக அவரை நாற்காலியில் அமரவைத் துப் பேசுவதா? என்று கருதிய சங்கரமட பீடாதி பதியான விஜயேந்திரர், தன் அறையில் இருந்த தன் நாற்காலியையும் அப்புறப்படுத்தச் சொல்லிவிட்டு, தரையில் அமர்ந்துகொண்டு, முருகனை நிற்கவைத்து சந்தித்தது சர்ச்சையாகியிருக்கு.''

""மாஸ்டர் பட ஆடியோ லாஞ்சில் நடிகர் விஜய்யின் பேச்சு எப்படி?’''

""ரெய்டுகள் மூலம் தன்னை மிரட்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் காரசாரமாக விஜய் பதிலடி கொடுப் பார்ன்னு அவர் ரசிகர்கள் ஆர்வமா காத்திருந் தாங்க. ஆனால் அவர் அந்த விழாவில் ரொம்பவும் சோகமாவும் இறுக்கமாவும் காணப்பட்டார். கடைசியா பேசும்போது மக்களுக்காகத்தான் சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மக்கள் இல்லைன்னு சொன்னாரு. இது சம்பந்தமா அவர் தரப்பில் கேட்டப்ப, ரெய்டுகளின் மூலம் விஜய்யை நேரடியாக டெல்லித் தரப்பால் சிக்கவைக்க முடி யலை. அதனால் அவருடைய "மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித் ஜெயினைக் குறிவச்சி, ரெய்டுகளை நடத்தி ஏகப்பட்ட செக் வச்சிட்டாங்க. விஜய்யை அமைதியாக இருக்கச் சொல்லுங்க. இல்லைன்னா உங்களுக்குத்தான் சிக்கல்னு ஜெயினை அவர்கள் மிரட்டிய மிரட்டல் தான், விஜய்யை அமைதி காக்க வச்சிருக்கு என்றவர்கள், அதனாலதான் அவர் சைலண்ட்டா இருந்துட்டு, விஜய்சேதுபதியை பேசவிட்டாரு. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்றவங்களை நம்பாதீங்கன்னு பா.ஜ.க. தரப்பை விஜய்சேதுபதி கலாய்ச்சதில் விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப சந்தோஷம். விஜய்யின் அமைதியும் ரொம்பநாளுக்கு நீடிக்காதுன்னும் அழுத்திச் சொல்கிறார்கள்''’

rr

""ம்...’''

""ஸ்டேட் பாங்க் ஆஃப் இண்டியாவின் சேர்மனும் ரிசர்வ் பேங்கின் துணைத் தலைவரு மான ரஜ்னீஷ் குமாரிடம் ஆன்லைனில் பேசிய மத்திய நிதியமைச்ச ரான நிர்மலா சீதா ராமன், அசாம் மாநில தேயிலைத் தோட்டத் தொழி லாளர்களின் பல கோடி ரூபாய் வைப்பு நிதியை ரிசர்வ் பேங்க் ரிலீஸ் செய்யாமல் வேடிக்கை காட்டுது. ரெண்டரை லட்சம் வங்கிக் கணக்குகளை அது சரிவர பராமரிக்கலை. உங்களுக்கெல்லாம் இதயமில்லையா? நீங்க திறமைசாலிகள்தானா?ன்னு குரலுயர்த்தி ஆவேசமா திட்டித் தீர்த்திருக்கிறார். இந்தக் கடுமையான பேச்சை டேப் செய்த ரஜ்னீஷ் குமார் அதைத் தன் மேலதிகாரிகளிடம் காட்டி முறையிட்டார். அந்த ஆடியோ இப்ப ஊடகங்கள் மூலமா பரவி வங்கிப் பணியாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சில் தேவையில்லாத தனிமனிதத் தாக்குதலும் மிரட்டலும் இருப்பதாகக் குற்றம்சாட்டி அவருக்கு எதிராக போராட்ட வியூகங்களை வகுத்து வருகிறார்கள்''’

""நிதித்துறை நெருக்கடி, பொருளாதார சரிவுன்னு நாடு தடுமாறுதே?''

""அண்மையில் உருக்குலைவை சந்திச்ச எஸ் பேங்கை, ரிசர்வ் பேங்க் மீட்டெடுக்க முனைந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்து, எஸ் வங்கியின் 49% பங்குகளை வாங்கும்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவை களமிறக்கி இருக்குது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வினோதமானதுன்னு காங்கிரஸ் சீனியரான ப.சி. கடுமை யாக விமர்சிச்சிருக்கார். தமிழகத் தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வங்கிகளில், கரூர் வைஸ்யா வங்கி, தனலட்சுமி வங்கி, சௌத் இண்டியா வங்கி உள் ளிட்டவைகளின் இதயத்துடிப்பு மோசமாகிவிட்டன. எல்லாத்தையும் சரிசெய்ய வேண்டிய ரிசர்வ் வங்கியை யும் சுதந்திரமாகச் செயல்பட விடாமல் மோடி அரசு பலவீனமாக்குகிறது என்கிறார்கள் நிதித்துறை நிபுணர்கள்''’

""உலகையே அச்சுறுத்தும் கொரோனா என்னை ஒன்றும் செய்யாதுன்னு, சாமியார் நித்தியானந்தா கொக்கரிச்சிருக்காரே?''

""கொரோனாவால்தான் அவர் நிம்மதியா இருக்கார் என்பதே உண்மை நிலவரம். எப்படின்னா, இந்த கொரோ னா பீதியால் நித்தியின் வழக்கை விசாரிக்கும் கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இருக்கும் நீதிமன்றங்கள், செயல்படாமல் முடங்கி இருக்கு. அதனால் நித்திக்கு எதிராக பிறப்பிக்கப் பட்ட கைது வாரண்டையும், சொத்து முடக்க உத்தரவையும் செயல்படுத்தாமல் அதிகாரிகள் கொரோனாவுக்கு பயந்து ஓடிக்கிட்டேயிருக்காங்க. அத னால், கொரோனா என்னைப் பாதுகாக்குதுங்கிற அர்த்தத்தில் நித்தியானந்தா, கொரோனாவால் என்னை ஒன்றும் செய்யமுடி யாதுன்னு சொல்லிக்கிட்டி ருக்கார்.''

""கொரோனாவால் நம் தமிழக அமைச்சர்கள் பலரும் பேயறைஞ்ச மாதிரியே இருக் காங்களே?''’

""அது நோய்த்தொற்று தொடர்பான பீதியல்ல. நிதி தொடர்பான பீதிதான். தமிழக முதல்வர் எடப்பாடி தொடங்கி அமைச்சர்கள் பலரும் ஜெ.-சசி பாணியில் வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளை கணிசமா கப் போட்டிருக்கிறார்கள். ஜெ.-சசி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கூட இங்கே இருக்கும் சொத்துக்களை மட் டுமே அதிகாரிகளால் எளிதாக முடக்க முடிந்தது. தினகரன் மீதான லண்டன் ஓட்டல் முத லீட்டு வழக்கை, அங்கிருக்கும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் இன்னும் முழுதாக விசாரிக்க முடியவில்லை. இதையெல்லாம் தெரிந்துதான் அமைச்சர்கள் சிலர் கொரியா உள்ளிட்ட நாடுகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். கொரோ னாவால் உலக நாடுகள் பலவும் தங்கள் வர்த்தகக் கதவுகளைச் சாத்திவிட்டன. இதனால் மந்திரிகள் தரப்பு தவியா தவிக்குது''’

""இவ்வளவு பீதிகளுக்கு மத்தியிலும் எடப்பாடி, வயல் களில் இறங்கி நாற்று நடுகிறார், குழி தோண்டி மரம் நடுகிறார், மாட்டு வண்டி ஓட்டுறாரே?''

""ஆமாங்க தலைவரே, அதெல்லாம் ஏற்கனவே நாம் பேசிக்கிட்டோமே, அந்த பெங்க ளூர் அரசியல் வியூக டீமினரின் வேலை. இவர்கள் பிரபல அரசியல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பிரிந்து வந்த குழுவினர். அவர் கள்தான் முதல்வர் எடப்பாடிக்கு ஐடியா கொடுக்குறாங்க. முன்பு தி.மு.க.வுக்கு அட்வைஸராக இருந்த சுனில், இப்போது கர்நாடக முதல்வரான எடியூரப்பாவை இயக்கும் பணியில் இருக்கிறார். இப்படி பல மாநில அரசியலையும் இப்போது அரசியல் வியூக நிபுணர்கள்தான் இயக்கிக்கொண்டு இருக்கிறார்கள்''’

""ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அமைச்சர்களைத் தங்கள் ரிமோட் மூலம் ஏடாகூடமாக இயக்குகிறார் கள்னு கோட்டை வட்டாரத்தில் டாக் இருக்குதே?''’

""தலைவரே, ஒவ்வொரு துறையிலும் பவர் ஃபுல்லான இடத்தில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதி காரிகள், நாங்க சொல்ற படியெல்லாம் செய்யுங்கள். வீண் கேள்விகளை எழுப்பாதீங்க. உங்களுக்குக் கிடைக்க வேண்டியதைப் பிரச்சினை இல்லாமல் கிடைக்கச் செய்கிறோம்னு ஆசைகாட்டி, சம்பந்தப் பட்ட அமைச்சர்களைத் தங்கள் ரிமோட் கண்ட் ரோலுக்குள் கொண்டுவந்து விடுகிறார்களாம். கோவை மாவட்டத்தில் புரமோட்டர்கள் விற்கும் பிளாட்டுகளின் விலை, இப்படிப்பட்ட அதிகாரி ஒருவரால் 50% உயர்ந்திருக்கிறதாம். 50 சதவீதத்துல 25 சதவீதம் துறை அமைச்சர்களுக்காம். 16% சம் பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கஜானாவுக் காம். 2% கஸ்டமர்களை அழைத்துவரும் புரோக்கர்களுக்காம். கமிஷன் கலாச்சாரத்தின் மூலம் பிளாட்டுகளின் விலையேற்றத்துக்குக் காரணமாக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி வேறு யாருமில்லை, நகர்ப்புற வளர்ச்சித் துறை இயக்குநர் சந்திரசேகர் சக்குமாரிதானாம்.''

""ஓ...''

""அண்மையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இங்க வந்து மோடியை சந்திச்ச நேரத்தில், வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்’ங்கிற புகழ்பெற்ற அமெரிக்கப் பத்திரிகையின் இந்திய நிருபரான எரிக், டெல்லியில் வெடித்த கலவரத்தையும் அங்கே இந்துத்துவாக் கும்பலால் மசூதி எரிக்கப்பட்டதையும், மசூதி மேல் அனுமன் சேனா கொடிகள் ஏற்றப்பட்டதையும், இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டதையும் அந்தப் பத்திரிகையில் அப்பட்டமாக அம்பலப்படுத்தினார். இதனால் தனது இமேஜ் அங்கே பாதிக்கப் பட்டதை உணர்ந்த ட்ரம்ப், அந்த பத்திரிகைக்கு கடும் அழுத்தம் கொடுத்து, நிருபர் எரிக்கின் வேலையைப் பறிக்கும்படி செய்துவிட்டாராம்''’.

""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். தமிழக காவல் துறையின் தொழில்நுட்பப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யான அசோக்குமார் தாஸ், திடீரென விருப்ப ஓய்வுக்கான கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். இன்னும் பணிக்காலம் முடிய 6 மாதம் இருக்கும்போதே அவர் ஏன் இப்படி அவசர அவசரமாக வி.ஆர்.எஸ். பெறவேண்டும்? என்ற கேள்விக்கான பதிலை, அவருடைய சக காவல்துறை அதிகாரிகளாலேயே கண்டுபிடிக்க முடியவில்லையாம்''

--------------------

இறுதிச் சுற்று!

நக்கீரன் எஃபெக்ட்! அமைச்சரின் அதிரடி நடவடிக்கை!

கடந்த மார்ச் 11-13 ம் தேதி நக்கீரன் இதழில் "அன்னதான நிதியில் அரோகரா! பழனி முருகன் பெயரில் மோசடி!' என்ற தலைப்பில் இரண்டு பக்கச் செய்தி வெளியிட்டிருந்தோம்

நமது செய்தி வெளியான நக்கீரன் இதழ் கடைகளில் சப்ளையான சில மணி நேரத்திலேயே பழனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தலைமைச் செயலகத்தில் உள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் காதுக்கும் எட்டியது. மறுநாள் கோயில் செயலதிகாரி யான ஐ.ஏ.எஸ். சந்திரபானு ரெட்டியை தொடர்புகொண்டு மலைக்கோயில் கண்காணிப்பாளர் முரளியை அடிவாரம் பஞ்சாமிர்தம் குடோனுக்கு சூப்பிரண்டாகவும், விஞ்ச் ஸ்டேஷன் கண்காணிப்பாளர் சண்முகவடிவை ஊர்க் கோவிலான பெரியநாயகியம்மன் கோயில் கண்காணிப்பாளராகவும் பி.ஆர்.ஓ. கருப்பணனை திருஆவினன்குடி கண்காணிப்பாளராகவும் உடனே இடமாற்றம் செய்தார். கடந்த 14ஆம் தேதி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த அமைச்சர், விழா முடிந்தபின்பு பழனிக்குச் சென்று முருகனை தரிசித்து விட்டு நிலவரங் களையும் நேரில் கண்காணித்துத் திரும்பியிருக்கிறார்.

-சக்தி

nkn180320
இதையும் படியுங்கள்
Subscribe