ராங் கால் : விஜயேந்திரரை மிரட்டும் ஜெயேந்திரர் ஆவி! -காஞ்சி மட கலாட்டா! நித்தி சொத்து முடக்கம்! -பிடதி ஆசிரம பதட்டம்!

nn

"ஹலோ தலைவரே, பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கிறதா ட்வீட் போட்டதும் பரபரப்பானதை கவனிச்சீங்களா?.''’

""உலகில் ஒபாமா, டிரம்ப்புக்கு அடுத்தபடியா பிரதமர் மோடியைத்தான் 5 கோடியே 33 லட்சம் பேர் டுவிட்டர்ல பின் தொடர்றாங்க. திடீர்னு மோடி விலகுவதா ட்வீட் பண்ணினா எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருக்கத்தானே செய்யும்?''

nithy

""ஆமாங்க தலைவரே, இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நேரத்தில்தான் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம், கலவரமா வெடிச்சிது. இந்த நேரத்தில் மோடியும் டிரம்ப்பும் சந்திச்சது தொடர்பான சமூக வலைத்தளச் செய்திகளை நொடிக்கு 25 ஆயிரம் பேர் வீதம் பார்த்திருக்காங்க. அதில் பின்னூட்டம் போட்ட பலரும், டெல்லி கலவரத்தில் மசூதியில் அனுமன் சேனா ஆட்கள் காவிக்கொடியை ஏற்றிய காட்சியையும், மசூதிக்கு தீ வைக்கும் காட்சியையும் பதிவு செஞ்சு உலக அளவில் இந்த அநியாயத்தைக் கொண்டு போயிட்டாங்க. இதில் மோடி படுஅப்செட். அதனால்தான் அப்படி ஒரு யோசனை''’

""மோடியின் இந்த அறிவிப்பைப் பார்த்த ராகுல்காந்தி, நீங்க வெளியேற வேண்டியது சமூக ஊடகங்களில் இருந்தல்ல; வெறுப்பு அரசியலில் இருந்துன்னு பதிலடி கொடுத்தாரே!''

""ஆமாங்க தலைவரே.. மோடி முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அனல் பறந்தது. இமேஜ் டேமேஜ் ஆகாமல் காப்பாற்ற என்ன பண்ணலாம்னு பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் தன்னோட அரசியல் ஆலோசனை டீமிடமும் மோடி ஆலோசித்து, மார்ச் 8 மகளிர் தினத்தில், ட்விட்டரிலிருந்து தான் ஒதுங்குவதாகவும், அன்றைய தினம் அதை சமூக அக்கறையுள்ள பெண்களே நிர்வாகம் செய்வாங்கன்னும் பாசிட்டிவ்வா ட்வீட் பண்ணி, சுபம் போட்டாரு.''’

""சி.ஏ.ஏ. எதிர்ப்பும், அதையொட்டி நடக்கும் போராட்டங்களும் இந்த அளவுக்கு வீரியமா ஆகும்ன்னு மோடி நினைச்சிருக்கமாட்டாரே?''’

""உண்மைதாங்க தலைவரே, இஸ்லாமிய சமூகத்தினர் மட்டும்தான் போராடுவாங்கன்னு பா.ஜ.க. கணக்கு போட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் இப்படி எதிர்த்துப் போராடும்ன்னு பா.ஜ.க. எதிர்பார்க்கலை. இப்ப, வன்முறைப் பேச்சுக்கள் மூலம் டெல்லி கலவரத்தைத் தூண்டி யதா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள் ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளையும், சி.ஏ.ஏ.வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும்

"ஹலோ தலைவரே, பிரதமர் மோடி, சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கிறதா ட்வீட் போட்டதும் பரபரப்பானதை கவனிச்சீங்களா?.''’

""உலகில் ஒபாமா, டிரம்ப்புக்கு அடுத்தபடியா பிரதமர் மோடியைத்தான் 5 கோடியே 33 லட்சம் பேர் டுவிட்டர்ல பின் தொடர்றாங்க. திடீர்னு மோடி விலகுவதா ட்வீட் பண்ணினா எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருக்கத்தானே செய்யும்?''

nithy

""ஆமாங்க தலைவரே, இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த நேரத்தில்தான் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம், கலவரமா வெடிச்சிது. இந்த நேரத்தில் மோடியும் டிரம்ப்பும் சந்திச்சது தொடர்பான சமூக வலைத்தளச் செய்திகளை நொடிக்கு 25 ஆயிரம் பேர் வீதம் பார்த்திருக்காங்க. அதில் பின்னூட்டம் போட்ட பலரும், டெல்லி கலவரத்தில் மசூதியில் அனுமன் சேனா ஆட்கள் காவிக்கொடியை ஏற்றிய காட்சியையும், மசூதிக்கு தீ வைக்கும் காட்சியையும் பதிவு செஞ்சு உலக அளவில் இந்த அநியாயத்தைக் கொண்டு போயிட்டாங்க. இதில் மோடி படுஅப்செட். அதனால்தான் அப்படி ஒரு யோசனை''’

""மோடியின் இந்த அறிவிப்பைப் பார்த்த ராகுல்காந்தி, நீங்க வெளியேற வேண்டியது சமூக ஊடகங்களில் இருந்தல்ல; வெறுப்பு அரசியலில் இருந்துன்னு பதிலடி கொடுத்தாரே!''

""ஆமாங்க தலைவரே.. மோடி முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் அனல் பறந்தது. இமேஜ் டேமேஜ் ஆகாமல் காப்பாற்ற என்ன பண்ணலாம்னு பா.ஜ.க. நிர்வாகிகளிடமும் தன்னோட அரசியல் ஆலோசனை டீமிடமும் மோடி ஆலோசித்து, மார்ச் 8 மகளிர் தினத்தில், ட்விட்டரிலிருந்து தான் ஒதுங்குவதாகவும், அன்றைய தினம் அதை சமூக அக்கறையுள்ள பெண்களே நிர்வாகம் செய்வாங்கன்னும் பாசிட்டிவ்வா ட்வீட் பண்ணி, சுபம் போட்டாரு.''’

""சி.ஏ.ஏ. எதிர்ப்பும், அதையொட்டி நடக்கும் போராட்டங்களும் இந்த அளவுக்கு வீரியமா ஆகும்ன்னு மோடி நினைச்சிருக்கமாட்டாரே?''’

""உண்மைதாங்க தலைவரே, இஸ்லாமிய சமூகத்தினர் மட்டும்தான் போராடுவாங்கன்னு பா.ஜ.க. கணக்கு போட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் இப்படி எதிர்த்துப் போராடும்ன்னு பா.ஜ.க. எதிர்பார்க்கலை. இப்ப, வன்முறைப் பேச்சுக்கள் மூலம் டெல்லி கலவரத்தைத் தூண்டி யதா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள் ளிட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளையும், சி.ஏ.ஏ.வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளையும் விரைவில் விசாரிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. அதனால் இது குறித்து என்ன மாதிரியான தீர்ப்பு வருதுன்னு பார்த்துட்டு, அதற்கு ஏற்ப சி.ஏ.ஏ.வை அமல்படுத்தலாம்ன்னு மத்திய அரசு காத்திருக்கு.''’

rr

""ம்... ''’

""தலைவரே, சென்னை அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தரா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட கன்னடரான சூரப்பாவை நியமிச்சது போல, சென்னைப் பல்கலைக் கழகத்தின் மீதும் பார்வை திரும்பியிருக்குது. சர்ச்சைகளில் சிக்கியுள்ள தற்போதைய துணைவேந்தர் துரைசாமி விரைவில் ரிடையர்டாவதால், டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். மனநிலை கொண்ட இந்தி பேசும் ஒரு பேராசிரியரை, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா நியமிக்கும் திட்டத்தில் இருக்குது மோடி அரசு. அதற்காக கோப்புகளை ரெடி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.''’

""தமிழ்நாட்டில் மத்திய அரசு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துதே? '’

""ஆமாங்க தலைவரே, 5-ந் தேதி சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகிட்ட பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்கு இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புதிய கல்விக் கொள்கையை இந்துத்வா சிந்தனையோடு மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் உருவாக்கிய டீமுக்கு தலைவருமான கஸ்தூரி ரெங்கன் பேருரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். இதற்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. எடப்பாடி அரசின் கவனத்துக்கும் கொண்டு போனாங்க. இருந்தும் வழக்கம் போலவே டெல்லி பொல்லாப்பு நமக்கு எதற்குன்னு எடப்பாடி அரசு அதைக் கண்டுகொள்ளவே இல்லை.''’

""அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு வியாழன் இரவு வரை இழுபறியாவே இருந்திருக்கே... '’

""26-ந் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 13-ந் தேதி தொடங்குது. அ.தி.மு.க.வில் 3 ராஜ்யசபா சீட்டுக்கு மாஜி மந்திரிகள், மாஜி எம்.பி.க்கள்., மா.செ.க் கள்ன்னு 30 பேருக்கு மேல் கடுமையாக முட்டி மோதுவதால் இவர்களில் யார் யாரை ராஜ்ய சபாவுக்கு நிறுத்தறதுன்னு எடப்பாடி திகைச்சிப் போயிட்டார். இதில் அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., எடப்பாடிக்கு அடுத்த நிலையில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர் தன் சைடிலிருந்து நிர்பந்தம் செய்றாராம். அதேபோல் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி மந்திரி ஒருத்தரும் பெரிய தொகை யைக் காட்டி, ராஜ்யசபா பதவிக்கு கனமா மொய் எழுதத் தயார்ன்னு, சுத்திச் சுத்தி வர்றாராம்.''’

""ஓ...''’

""இன்னும் சிலர், டெல்லியில் நாம் சரியா லாபி பண்ணணும்ன்னா, என்னை மாதிரி அனுபவஸ் தர்கள் ராஜ்யசபாவுக்குப் போனால்தான் சரியா இருக்கும்ன்னு மிரட்டாத குறையா சொல்றாங் களாம். அதனால் பேசாமல் புதுமுகங்களையே செலக்ட் பண்ணிடலாமான்னு எடப்பாடி யோசிக்கிறார். இதற்கிடையே த.மா.கா.வாசனுக்கு ஒரு சீட்டுன்னு டெல்லியில் இருந்து பிரஷர் வந்துக்கிட்டே இருக்கு. 8-ந் தேதி சிறப்பான மாசி மகம் வர்றதால் அன்னைக்கு லிஸ்ட்டை வெளி யிடலாம்ன்னு சிலர் சொல்ல, எந்த முடிவையும் எடுக்கமுடியாமல் நகம் கடித்துக்கொண்டிருந்தார் எடப்பாடி என்கிறார்கள்.''’

""தி.மு.க., தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தரலைங்கிற ஆதங்கம் காங்கிரஸுக்கு இருக்குதே?''’

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தேர்தல் வரும் போதெல்லாம் தி.மு.க. தங்களுக்கு உரிய மதிப்பைத் தர்றதில்லைங்கிற குமுறல் காங்கிரஸில் இருக்குது. அதிலும் 3 ராஜ்யசபா சீட்டையும் தி.மு.க. கைப்பற்றணும்ன்னா தங்கள் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு கட்டாயம் தேவை என்ற நிலையில், தி.மு.க. இப்படி அறிவித் தது காங்கிரசிடம் கோபத்தை உண்டாக்கியிருக் காம். 7-ந் தேதி மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்திய மூர்த்தி பவனில் கூடி, தி.மு.க.வுக்கு எதிரான குமுறல்களைக் கொட்ட பலரும் ஆயத்தமா இருந்தாங்க.''’

""ஏப்ரல், மேயில் நடக்க இருக்கும் உள்ளாட் சித் தேர்தல் நேரத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் வந்துடுமோன்னு எடப்பாடி கவலைப்படறாராமே?''’

rr"இந்த வருடம் நல்ல மழை பெய்திருந் தாலும், எடப்பாடி கவலையாத்தான் இருக் காருங்க தலைவரே, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், இப்ப இருக்கும் நிலவரத்தை ஆராய்ந்து, விரைவில் சென்னை உள்ளிட்ட பகுதிகளைத் தண்ணீர்ப் பஞ்சம் தாக்கும்னு முதல்வர் எடப்பாடியிடம் அறிக்கை கொடுத்திருக்காங்க. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் இப்படியொரு சிக்கல் வந்தால், அது ரிசல்ட்டில் எதிரொலிக்குமேன்னு கவலைப்பட்ட அவர், அதிகாரிகளோடு கலந்து விவாதிச் சார். இதைத் தொடர்ந்து ஆந்திர அரசிடம், கிருஷ்ணா நீரைக் கேட்கும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையைக் கடிதமாக எழுதி, அதை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் கொடுக் கும்படி அமைச்சர்கள் ஜெயக்குமாரையும் எஸ்.பி.வேலுமணியையும் அனுப்பிவச் சார். அவங்க ஆந்திராவுக்குப் போய் 4-ந் தேதி ஜெகன்மோகன் ரெட்டியை சந் திச்சி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தாங்க.''

“""ஆந்திர முதல்வரின் ரியாக்ஷன் என்ன?''

""கடிதத்தைப் படிச்சிப் பார்த்த ஜெகன்மோகன், எங்க மாநில அதிகாரி களுடன் கலந்து பேசிட்டு, எந்த அளவுக்கு தமிழகத்துக்கு உதவ முடி யுமோ, அதைச் செய்யறேன்னு சொல்லி யிருக்கார். கூடவே, எனக்கும் உங்க முதல்வரைச் சந்திச்சிப் பேசவேண்டியி ருக்கு. விரைவில் சென்னை வருகிறேன்னும் அவர் சொல்லியனுப்பியிருக்காராம். கோட்டை வட்டாரம் இந்த வருகையை எதிர்பார்த்திருக்கு.''’

rr

""காஞ்சிமட பீடாதிபதியான விஜயேந்திரர், சங்கர மடத்திலேயே தங்க மாட்டேங்கறாராமே?''’

""ஆமாங்க தலைவரே, அவருக்கு முன்பு பீடாதிபதியா ஜெயேந்திரர் இருந்தப்ப, அவர் அறைக்கு எதிர் அறையில் கன கம்பீரமா சிம்மா சனம் போட்டு அமர்ந்திருந்த அன்றைய இளைய பீடாதிபதியான விஜயேந்திரர், ஜெயேந்திரரின் மரணத்துக்குப் பிறகு அந்த மடத்திலேயே தங்குவதில்லை. அவர் காஞ்சிபுரத்தில் இருந்தால் அந்த மடத்துக்கு அருகே இருக்கும் அன்னதானக் கூடத்தில்தான் தங்கறாராம். இல்லைன்னா பெரும்பாலான நேரம் நங்கநல்லூர் மடம் அல்லது பெங்களூர், ஹைதராபாத்துன்னு எங்காவது போய்த் தங்கிடறாராம்.''

""ஏன் இப்படி?''

""சங்கரமட சோர்ஸ்களிடமே விசாரிச்சேங்க தலைவரே.. மடத்தில் இருக்கும் ஸ்ரீராம் என்பவர், அங்குள்ள மரகத லிங்கத்தை வச்சி பூஜை பண்ணிவிட்டு, குட்டி தேவதைகளிடம் பேசுகிற வழக்கம் உள்ளவ ராம். அப்படி ஒருமுறை பேசியபோது, அந்தக் குட்டி தேவதை, மர்மமா மரண மடைந்த ஜெயேந்திரரின் ஆவி, இந்த சங்கர மடத்தி லேயே ஆக்ரோசமா சுற்றிக் கொண்டிருக்கிறது. அது சிலர் மீது கோபமாக இருக் கிறதுன்னு சொன்னதாம். இதைக் கேட்டதில் இருந்து, மடத்தில் தங்கவே விஜயேந்திரர் தயங்குகிறாராம்.''’

""நானும் ஒரு முக்கிய மான தகவலைப் பகிர்ந்துக் கறேன். மன்மத சாமியார் நித்தி மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை, இனி ராம்நகர் நீதிமன்றம் விசா ரிக்கக் கூடாதுன்னு உச்ச நீதிமன்றத்தில் நித்தியால் பாதிக்கப்பட்ட லெனின் கருப்பன் முறையிட்டார். தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, நித்தியானந்தாவையும் அந்த வழக்கின் மற்றொரு குற்ற வாளியான பக்தானந்தா வையும் விரைவில் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க ணும்ன்னு ராம்நகர் நீதி மன்றத்துக்கு உத்தரவைப் பிறப்பிச்சிது. இதைத் தொடர்ந்து, முதற்கட்ட மாக நித்தி மற்றும் பக்தானந்தா ஆகியோரின் சொத்துக்களை முடக்கும்படி ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிச்சிடுச்சி. அதனால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறப் போகிறது நித்தி தரப்பு. நித்தியா னந்தாவால் இனி அதிகநாள் தலைமறைவா இருக்கமுடியாதுன்னு பிடதி ஆசிரம ஆட்களே பதட்டமா சொல்றாங்க.''’

-------------------------

தம்பி மகன் திருமணத்தை புறக்கணித்த சசிகலா!

ra

சசிகலாவின் தம்பியும் அண்ணா திராவிடர் கழகத்தின் தலைவருமான மன்னார்குடி திவா கரன் மகன் ஜெய்ஆனந்த்- ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் பாஸ்கரன் மகள் ஜெயா திருமணம் மார்ச் 5-ஆம் தேதி சுந்தரக்கோட்டையில் திவாகரன் வீடருகே பிரம்மாண்ட பந்தலமைத்து நடந்தது. அவரது மகள் திருமணத்திற்கு ஒட்டுமொத்த உறவுகளும் வந்திருந்து வாழ்த்தியது. ஆனால் மகன் திருமணத்திற்கு சசிகலா வகையறாவிலிருந்து டாக்டர் வெங்கடேசன் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. சிறையிலிருக்கும் சசிகலா பரோலில் வருவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரமாட்டார் என்பது திவாகரனுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. அதேபோல அரசியல் பகைகளைக் கடந்து தினகரன், இளவரசி குடும்பத்தினர் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பிருந்தாலும் பல நாட்களுக்கு முன்பே தினகரன் தனது உறவுகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் கல்யாணத்திற்கு போகக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிட்டாராம். சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தது திவாகரனை ஆறுதல்படுத்தியது.

அ.தி.மு.க.-அ.ம.மு.க. புறக்கணித்த கல்யாண பந்தலில் உடன்பிறப்புகளே அதிகம் காணப்பட்டனர். மன்னார்குடி, ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வந்திருந்தனர். மேலும் முன்னாள் ஐ.பி.எஸ். பொன்.மாணிக்கவேல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். திவாகரன் ஆதரவாளர் ஒருவர், “""பாஸ் பகை மறந்ததுபோல தினகரன் மறக்கல. அதனாலதான் யாரையும் வரவேண்டாம்னு சொல்லிருக்கார். விவேக்கூட வரலன்னா பாருங்க'' என்றார். அதேநாளில் தஞ்சை யில் நடந்த அமைச்சர் காமராஜ் உறவினர் இல்லத் திருமணத்தில் ஆளுந்தரப்பினர் மறக்காமல் ஆஜராகியிருந்தனர்.

-இரா.பகத்சிங்

nkn070320
இதையும் படியுங்கள்
Subscribe