""ஹலோ தலைவரே, போன முறையே நாம பேசிக்கிட்டது போல இஸ்லாமிய அமைப்பான ஜமா அத்துல் உலமா சபையினரை ரஜினி சந்திச்சிருப்பதை கவனிச்சீங்களா?''’’
""ஆமாம்பா, கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் நடந்த இந்த சந்திப்பு காட்சிகள், ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய பேச்சுகளை மறுபடியும் விறுவிறுப்பாக்கியிருக்குதே?''
ஆமாங்க தலைவரே, மார்ச்1 ந் தேதி உலமா சபையைச் சேர்ந்த முஸ்லிம் மத குருமார்கள் 5 பேருக்கு ரஜினி நேரம் ஒதுக்கியிருந்தார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சியின் பாதிப்புகளை அவங்க எடுத்துச் சொன்னதை ரஜினி ஆச்சரியமா கேட்டுக்கிட்டா ராம். இத்தனை பாதிப்பு இருப்பதை இப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்னு சொன்னதோடு, அவங்க ளோட நிகழ்வுக்கும் வருவதா சொல்லியிருக்கார்.''’’
""இப்படிப்பட்ட நேரத்தில் போலீஸ் பாது காப்பை ரஜினி, வேண்டாம்ன்னு சொல்லியிருக்காராமே?''’
""துக்ளக் விழா சர்ச்சை பேச்சைத் தொடர்ந்து போயஸ் கார்டன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்திருந் தாங்க. அதை விலக்கும்படி ரஜினி சொன்ன நிலையில், சென்னை மாநகர உளவுப்பிரிவின் துணை ஆணையரான திருநாவுக்கரசு, ரஜினியை நேரிலேயே சந்தித்துப் பேசினார். ரஜினியோ, பாதுகாப்புக்கான தேவை இப்ப இல்லைன்னு சொன்னாராம். அதனால பாதுகாப்பு குறைக்கப் பட்டிருக்கு. அதுவும் கூட வேணாம்ங்கிறதுதான் ரஜினியோட நிலை. ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றி எதிர்பார்ப்பு இருப்பதால், பலரும் அவரது வீட்டுக்கு வந்து சந்திக்கிறாங்க. இதில் சர்வீசில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உண்டு. பாதுகாப்புங்கிற பேரில், இதையெல்லாம் நோட் பண்ணி அரசுத் தரப்புக்கு அனுப்புவதை விரும்பாத காரணத்தால்தான், பாதுகாப்பு தேவையில்லைங்கிற முடிவு எடுக்கப்பட்டிருக்குது.''
""ரஜினியும் கமலும் கூட்டணி அமைப் பாங்களாங்கிற எதிர்பார்ப்பும் இருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, டெல்லி கலவரம் பற்றி பேட்டி அளித்த ரஜினியின் வார்த்தைகளில் பா.ஜ.க. மீதான விமர்சனமும் இருந்ததால், கமல் தனது ட்விட்டரில் வரவேற்றார். மக்கள் நீதி மைய ஆண்டு விழாவில் பேசிய கமல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கூட்டணியை அமைப் போம்னு சொன்னார். ரஜினிகிட்டேயும் இது பற்றி கமல் பேசியிருக்கிறார். வியூகம் வகுக்கும் வேலைகள் நடக்குதாம். பா.ம.க.வோடும் தனிப்பட்ட முறையில் ரஜினி தரப்பு பேசி, முடிவெடுத்திடிச்சின்னு சொல்றாங்க. அதனால் ரஜினியின் அரசியல் என்ட்ரி பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகி யிருக்குது.''’
""பேராசிரியர் அன்பழகனின் உடல்நிலை காரணமா, மு.க.ஸ்டாலின் தன் 67-ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடலையே?''’
""அவரோட பிறந்தநாளுக்காக ஏற்பாடாகி யிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஆனாலும், அறிவா லயத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கம் ஆரவாரமில்லாமல் நடந்திருக்கு. இதில் பங்கேற்ற கனிமொழி எம்.பி., ஸ்டாலினை மனதார வாழ்த்தியதோடு, குடி யுரிமைச் சட்டத் திருத்தத்தின் ஆபத்துகளை உணர்ந்தும், அதனை எதிர்க்க வேண்டிய பலரும், ரெய்டு பயத்தால் அமைதியாக இருக் கிறார்கள். ஆனால், இதை எதிர்க் கும் முதல் குரலாக தலைவர் ஸ்டாலின் குரல்தான் ஒலிக்கிறதுனு பாராட்டினாரு.''’
""ஸ்டாலின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. வேட்பாளர்கள் தேர்வு எப்படி?''’
""மாநிலங்களவையில் சீனியரும், அழுத்தமாக வாதங்களை எடுத்து வைக்கக்கூடிய ஆற்றல் கொண்டவருமான திருச்சி சிவா வுக்கு மறுபடியும் வாய்ப்பைக் கொடுத்திருக்காரு ஸ்டாலின்.. அதேபோல், 2011-ல் ஜெ. ஆட்சிக் காலத்தில் தி.மு.க. மாஜி மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது போடப்பட்ட நில அபகரிப்பு சட்டம் தொடர்பான வழக்குகளி லும், குண்டாஸ் வழக்குகளிலும் ஆஜராகி வாதாடி, பல கேஸ்களை நொறுக்கித் தள் ளியவர் சீனியர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன். அவருக்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கு.''
""போனமுறையே இவங்க இரண்டு பேரையும் பற்றி நாம சொல்லியிருந்தோமே!''’’
""மூன்றாவது சீட்டுதான் ரொம்ப எதிர்பார்ப்போடு இருந்தது. அதை அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு கொடுத்திருக்காரு ஸ்டாலின். 1996-ல் கலைஞர் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் செல்வராஜ். அப்ப தன் சமூகத்தினருக்கு பெரிதாக எதுவும் இவர் செய்யலைங்கிற அதிருப்தி அவங்களிடம் இருந்தாலும், கலைஞர் ஆட்சியில்தான் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கப்பட் டது. அதுபோல, இப்பவும் அவங்களுக் கான பிரதிநிதித்துவம் தரணும்னு ஸ்டாலின் முடிவு செய்திருக்காரு. அதோடு, அ.தி.மு.க. சைடில் கடந்த ஆண்டு தேர்வுசெய்த மூவரில் இதே சமூகத்தைச் சேர்ந்த மேட் டூர் நகர அ.தி.மு.க. செயலாளர் சந்திரசேகரும் இருந்தார். அதனால், தி.மு.க.வும் இந்த கோட்டாவை ஈடுகட்டியிருக்கு.''’
""குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆதரித்து வரும் நிலையில் தி.மு.க.வில் இருக்கும் இஸ்லாமியர் ஒருவருக்கோ அல்லது கூட்டணியில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கோ ராஜ்யசபா வாய்ப்பு கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்ததே?''’
""கிடைக்காததால தி.மு.க.வுக்குள் அதிருப்தி குரல்களும் கேட்குது. அதனால் அ.தி.மு.க. தரப்பு, குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்ததால், இஸ்லாமியர்களிடம் ஏற்பட்டிருக்கும் வெறுப்பை மாற்றும் வகையிலும், தி.மு.க. மீதான அதிருப்தி அதிகரிக்கும் வகையிலும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ராஜ்யசபா பதவியைக் கொடுக்கலாமான்னு யோசிக்குது. போனமுறை, முகமது ஜானுக்கு கொடுத்ததால், இந்த முறை எப்படி சீட் ஒதுக்குவதுன்னு சீனியர் நிர்வாகிகளோடு எடப்பாடி ஆலோசிச்சிருக்காரு.''
""தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டு வேணும்னு பிரேமலதா பேச, சுதீஷ் நேரடியா எடப்பாடியிடம் பேசியிருக்காரே?''
""பாசிட்டிவ் பதில் கிடைக்கலையாம். சுதீஷின் சந்திப்புக்கு முன்பாகவே பா.ம.க. தரப்பிலிருந்து, தே.மு.தி.க.வுக்கு நீங்க சீட் கொடுக்கணுமாங்கிறது பத்தி நல்லா ஆலோசனை பண்ணிக்கங்கன்னு ஸ்பீட் பிரேக் போட்டதாகவும் சொல்லப்படுது. 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டியிருப்பதால், அதில் வடமாவட்டங்க ளில் வாக்குவங்கி உள்ள பா.ம.க., தே.மு.தி.க. இரண்டையும் பேலன்ஸ் பண்ணிப் போக வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு இருக்குது. அதோடு த.மா.கா. வாசனுக்காக பா.ஜ.க.வும் சிபாரிசு பண்ணுது. அதனாலதான், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதில் கொஞ்சம் லேட் ஆனது.''’
""எடப்பாடியை பெங்களூரில் இருந்து வந்த ஒரு டீம் அடிக்கடி ரகசியமாக சந்திக்கிதாமே?''’
""ஆமாங்க தலைவரே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே மக்களை ஈர்க்கும் வகையில் எடப்பாடியின் நடை, உடை, பாவனைகளில் மாற்றத்தை ஏற்படுத்த, பெங்களூர் டீம் நியமிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் வாரத்திற்கு ரெண்டு நாள், தலா மூன்று மணி நேரம் பயிற்சி கொடுக்கிறார்களாம்.''
""விவசாயி எடப்பாடியை புது கெட்டப்பில் பார்க்கலாம்னு சொல்லு.''
""நான் இன்னொரு விஷயத்தை சொல்றேன், சசிகலாவின் சிறைவாசம் அக்டோபர் 13-ந் தேதி யோடு நிறைவடையுதாம். சசிகலாவுக்கு தன் விசு வாசத்தை அடிக்கடி எடப்பாடி தெரிவித்தாலும், அவர் ரிலீசாகி வந்து, கட்சியின் முக்கிய பதவியில் உட்கார்ந்து கொண்டு, எல்லோரையும் பழையபடி ஆட்டி வைப்பாரோங்கிற கவலை இருக்குது. இந்த நிலையில், 5-ந் தேதி நடக்கவிருக்கிற திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்தில் கலந்துக்கு றதுக்காக சசிகலா பரோல் கேட்டிருக்கிறார். இந்தத் திருமணத்திற்கு அ.தி.மு.க.வில் இருக்கும் அமைச்சர்கள் தொடங்கி முக்கிய பிரமுகர்கள் வரை அனைவருக்கும் ஜெய் ஆனந்த் தரப்பு அழைப்பு கொடுத்திருக்கிறது. அதனால அ.தி.மு.க. பிரமுகர்களும் சசிகலாவும் சந்திப்பாங்கன்னு எதிர்பார்ப்பு இருக்குது. இ.பி.எஸ்.ஸோ, சசிகலாவின் பரோலுக்கு பா.ஜ.க. பிரேக் போடும்னு எதிர்பார்ப்பில் இருக்காரு. இதே பதட்டம், சசியால் முதல்வர் பதவி பறிக்கப்பட்ட ஓ.பி.எஸ்.சுக்கும் இருக்குது.''
""சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் இருந்த வீடியோ அம்பலமாகி இந்த மார்ச்சோடு 10 வருடங்கள் ஆகப்போகுதே?''’
""ஆமாங்க தலைவரே, ஆனாலும், அது தொடர்பான வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருது. இந்த நிலையில் நித்தியின் முன்னாள் சீடர்களான லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் கொடுத்த பாலியல் டார்ச்சர் தொடர்பான வழக்கில் அவருக்கு நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அவருக்காக வெளியிடப்பட்ட புளு கார்னர் நோட்டீஸ் ரெட் கார்னர் நோட்டீ ஸாக மாறிய நிலையிலும் அவரைப் பிடிக்க பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டலை. நித்தி தரப்பால் சரிக்கட்டப்பட்ட தமிழக அரசியல் கட்சிகளும் அவருக்கு எதிராக வாயைத் திறக்கவே இல்லை. இந்த நிலையில் நித்தியின் மாஜி மேனேஜர் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் கடத்தப்பட்ட வழக்கில், அந்தப் பெண்கள் ’நாங்கள் கடத்தப்பட வில்லைன்னு தாக்கல் செய்த அபிடவிட்டை ஏற்காத ஆமதாபாத் நீதிமன்றம், அவர்களை நேரில் ஆஜராகச் சொல்லி, கிடிக்கிப்பிடி போட்டிருக்கு. நீதியுடன் நித்தி ஆடுகிற கண்ணாமூச்சி ஆட்டமும், அதற்கு அதிகார வர்க்கம் தருகிற சப்போர்ட்டும் நித்தியால் பாதிக்கப்பட்ட வங்களை கலங்கடிக்குது.''’
""முதல்வர் எடப்பாடிக்கு அவர் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கடிதம் எழுதியிருக்காரே?''’
""அதுவும் உங்க கவனத்துக்கு வந்துடுச்சா? சென்னை அருகே உள்ள ஆவடி நகராட்சிக் கட்டிடத் துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது. அந்த நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய அ.தி.மு.க அரசு, மாநகராட்சிக் கட்டி டத்துக்கு காமராஜர் பெயரை வைக்கலை. இது சம்பந்தமா நாடார் அமைப்புகள் பலமுறை எடப்பாடிக்கு கோரிக்கை வச்சும் அவர் கண்டுக்கலை. இப்ப அதே சமூகத்து அமைச்சரான மாஃபா பாண்டியராஜனிடம் அமைப்பினர் வலியுறுத்த, அவர் எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்காராம்.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்.. சி.எம்.டி.ஏ. நிறுவனத்தில் உள்ள உதவி திட்ட அதிகாரி ஒருவர், சென்னையிலுள்ள கட்டிடங்களுக்கு விசிட் அடித்து, வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு வரி விதிப்பில் கட்டிட உரிமையாளர்களுக்கு சாதகமாக நடக்கறாராம். இதேபோல், மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களை கவனிக்கும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரும் வரிவிதிப்பில் புகுந்து விளையாடி கல்லா கட்டுகிறாராம். இவர்கள் தொடர்பான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் குவிந்து வரும் நிலையில், ஓய்வு பெற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் சமீப காலத்தில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாகச் சொத்துக்களை வாங்கிக் குவித் திருக்கும் தகவலும் கிளம்பிவந்து, அதிகாரி களைக் கிறுகிறுக்க வைத்திருக்கிறதாம்.''’’
___________
இறுதிச்சுற்று!
பேராசிரியர்!
தி.மு.க. பொதுச்செயலாளரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் க.அன்பழகன் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டி லேட்டர் உதவியுடன் அவர் சுவா சித்து வருவதோடு, இதர மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு உடல்நலன் குறித்து மருத்துவர் களிடம் நேரில் விசாரித்துவருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டாலினிடம் மருத்துவர்கள் அடுத்த கட்ட சிகிச்சை குறித்து பேசியுள்ளனர். வென்டிலேட்டரை அடுத்து ட்ராக்கியோஸ்டமி சிகிச்சை வழங்கலாமா அதனை 98 வயதான அவரது உடல் தாங்குமா என்றும் கவலையுடன் ஆலோசித்துள்ளனர்.
-கீரன்