"ஹலோ தலைவரே, அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பின் இந்திய வருகையை நாடே எதிர்பார்க்குதுன்னு பிரதமர் மோடி ட்வீட் பண்ணினாரு. ஆனா, பா.ஜ.க.வில் இருக்கும் சுப்ரமணியசாமியோ, இந்த வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் இல்லை. ராணுவரீதியான ஒப்பந்தங்களால் அமெரிக்காவுக்குத்தான் லாபம்னு சொல்லியிருக்காரே!''
""ஆமாப்பா.. இந்தியாவின் தொழில் வர்த்தகத் துறையினரும் ட்ரம்ப்பின் ஒன்றரை நாள் விசிட்டால் பெரியளவில் வணிக முதலீட்டுப் பலன் இல்லைன்னும், அமெரிக்க பொருட்கள்மீதான இந்தியாவின் வரி மட்டும் குறைய வாய்ப்பிருக்குன்னும் சொல்லியிருந்தாங்க.''
""தலைவரே.. அமெரிக்க அதிபருக்கான இந்திய குடியரசுத்தலைவர் மாளிகை விருந்தில் கலந்துக்க தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு வந்தது. அவரும் உற்சாகமா ரெடியானாரு. அதே மாதிரி அழைப்பை எதிர்பார்த்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்செட்டாம். எப்படியாவது அழைப்பு வரும்படி செய்யணும்னு டெல்லி லாபி மூலம் கடைசி நேரம் வரை கடும் முயற்சி செய்து பார்த்தாரு.''’
""அரசியல்னா கடைசி வரை ட்ரை பண்ணியாகணுமே?''
""தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில், ரஜினி தன்னோட கட்சியை அறிவிப்பார்னு எதிர்பார்க்கப்படுது. எம்.ஜி.ஆர். மாதிரி முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றிங்கிறதுதான் அவர் தரப்பின் எதிர்பார்ப்பாம். தி.மு.க
"ஹலோ தலைவரே, அமெரிக்க அதிபர் ட்ரெம்ப்பின் இந்திய வருகையை நாடே எதிர்பார்க்குதுன்னு பிரதமர் மோடி ட்வீட் பண்ணினாரு. ஆனா, பா.ஜ.க.வில் இருக்கும் சுப்ரமணியசாமியோ, இந்த வருகையால் இந்தியாவுக்கு எந்தப் பலனும் இல்லை. ராணுவரீதியான ஒப்பந்தங்களால் அமெரிக்காவுக்குத்தான் லாபம்னு சொல்லியிருக்காரே!''
""ஆமாப்பா.. இந்தியாவின் தொழில் வர்த்தகத் துறையினரும் ட்ரம்ப்பின் ஒன்றரை நாள் விசிட்டால் பெரியளவில் வணிக முதலீட்டுப் பலன் இல்லைன்னும், அமெரிக்க பொருட்கள்மீதான இந்தியாவின் வரி மட்டும் குறைய வாய்ப்பிருக்குன்னும் சொல்லியிருந்தாங்க.''
""தலைவரே.. அமெரிக்க அதிபருக்கான இந்திய குடியரசுத்தலைவர் மாளிகை விருந்தில் கலந்துக்க தமிழக முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு வந்தது. அவரும் உற்சாகமா ரெடியானாரு. அதே மாதிரி அழைப்பை எதிர்பார்த்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்செட்டாம். எப்படியாவது அழைப்பு வரும்படி செய்யணும்னு டெல்லி லாபி மூலம் கடைசி நேரம் வரை கடும் முயற்சி செய்து பார்த்தாரு.''’
""அரசியல்னா கடைசி வரை ட்ரை பண்ணியாகணுமே?''
""தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில், ரஜினி தன்னோட கட்சியை அறிவிப்பார்னு எதிர்பார்க்கப்படுது. எம்.ஜி.ஆர். மாதிரி முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றிங்கிறதுதான் அவர் தரப்பின் எதிர்பார்ப்பாம். தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றா பா.ம.க. உள்ளிட்ட கட்சி களுடன் கைகோத்து புது அணி அமைப்பாருன்னு எதிர்பார்க்கப்படும் நிலையில், பா.ஜ.க.வை ஆதரிப்பதா, ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வதை நம்பலாமான்னும் ஆலோசிக்கப்படுதாம். அதேநேரத்தில், அ.தி.மு.க. தரப்பில் இருந்து முக்கியமான அமைச்சர்கள் சிலரிடம் இருந்தே... ‘நீங்க கட்சியைத் தொடங்கும் நேரத்தில் நாங்க உங்க பக்கம் வந்துடுவோம்னு தூது விடப்பட்டிருக்குதாம். முதல்வர் எடப்பாடிக்கு எதிரா அதிருப்தி அணி ஒண்ணு அ.தி.மு.கவில் வேகமெடுக்குது.''’
""சசிகலா ரிலீஸ் ஆனதும் அ.தி.மு.க. அரசியல் வேகம் எடுக்கும்னு சொன்னாங்களே??''’
""சசிகலாவோட தண்டனைக் காலம் விரைவில் முடியப் போகுது. அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை கட்டாவிட்டால், மேலும் 6 மாத காலம் அவர் சிறையில் இருக்க வேண்டிவருமாம். அவரோ அபராதம் கட்ட வேணாம்னு குடும்பத்தாரிடம் சொல்லியிருக்காராம். இப்போதைய சூழ்நிலையில் சிறையில் இருப்பதையே பாதுகாப்பாக உணர்கிறாராம் சசிகலா. விடுதலையானாலும், அமலாக்கப்பிரிவின் வழக்கு உட்பட எதையாவது கிளறி, திரும்பவும் ஜெயிலில் தள்ளத் தான் மோடி அரசு துடிக்கும்னு நினைக்கிறாராம். 1989-ல் ஏற்பட்ட கார் விபத்தில் பாதிக்கப்பட்டு 18 தையல்கள் போடப் பட்ட அவரது கண்களில் இருந்து எப்போதும் நீர் வடிந்தபடியே இருப்பதும் அவரை ரொம்ப தளர்வாக்கியிருக்குதாம். அதோடு, அ.தி.மு.க. நிலவரமும் கலவரமாக இருப்பதால் விடுதலை யைத் தவிர்க்கும் விரக்தி மனநிலையில் இருக்காராம் சசி.''’
""நித்தியானந்தாவும் விரக்தியான குரலில், தமிழ் நாட்டுக்கே இனி வரமாட்டேன்னு பேசுன வாட்ஸ்ஆப் வீடியோ வந்திருக்கே?''’
""மேற்கிந்தியத் தீவுக்கூட்டத்தில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா, அப்படியே அமைதியாகத் தன் மிச்ச சொச்ச காலத்தையும் பெண் சீடர்கள் புடை சூழ கழித்துவிட நினைச்சார். ஆனால் பிடதி மற்றும் குஜராத் வழக்குகள், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வேகமெடுத்து துரத்த ஆரம்பிச்சிடுச்சி. இவரைப் போலவே பர்கினா பாசோ என்கிற நாட்டில் போலி பெயரில் போலி பாஸ்போர்ட்டை வாங்கிக்கிட்டுத் தப்பி ஓடிய மங்களூரைச் சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரியை, இண்டர்போல் போலீஸின் உதவியோடு கர்நாடகப் போலீஸ் அதிரடியாக மடக்கிக் கைது பண்ணியிருக்கு. கொலை உள்பட 200 கேஸில் சம்பந்தப்பட்ட பூஜாரி மாட்டியதும் சாமியாருக்கு மிரட்சி உண்டாயிடிச்சி. அதனால்தான் தன்னோட மரணம், சொத்து பற்றியெல்லாம் அந்த வீடியோவில் விரக்தியா பேசியிருக்காரு நித்தியானந்தா.''’
""ஓ..''’
""தலைவரே.. காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான டிரான்ஸ்பர் உத்தரவை எடப்பாடி அரசு அண்மையில் வெளியிட்டிருக்கு. இதன்படி முறைகேடுகள் அதிகம் நடப்பதா புகார் எழுந்த சீருடைப் பணியாளர் துறைக்கு, ஆவின் நிறுவன விஜிலென்ஸ் டிபார்ட் மெண்ட்டில் கூடுதல் டி.ஜி.பி.யா இருந்த சுனில் குமாரை, பதவி உயர் வோடு டி.ஜி.பி.யாக நியமித்திருக்கிறது அரசு. இவர், கறாரான அதிகாரி. மதுரையில் ஐ.ஜி.அந்தஸ்த்துடன், கமிஷனராகப் பணியாற்றி வந்த டேவிட்சன் தேவ ஆசிர்வாதத் துக்கு கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்த்தைக் கொடுத்து, அவரை அதே மதுரை கமி ஷனர் பதவியிலேயே நீட்டிக்க வச்சிருக்கு. உளவுத்துறையின் கூடுதல் டி.ஜி.பி. பதவி அல்லது சென்னை கமிஷனர் பதவின்னு குறி வச்சிருக்கிறார் ஜாபர்சேட். அதை டேவிட்சன் தேவ ஆசிர்வாதமும் எதிர்பார்த் தார். அதனால், எதற்கு சிக்கல்ன்னு தேவ ஆசிர்வாதத் துக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அதே போஸ்டிங் கில் உட்காரவைத்துவிட்டதாம் எடப்பாடி அரசு.''’
""தமிழ்நாட்டைத் தாண்டி என்ன நியூஸ் இருக்கு?''“
"ட்ரம்ப் விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பில்லாததால், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் பங்கேற்பதில்லைன்னு முடிவெடுத்தாங்க. உடல்நிலை சரியில்லாத சோனியா, போன வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும், ராகுல் காந்தியையும் அழைத்து இருவரில் ஒருவரை கட்சிக்குத் தலைமையேற்கச் சொன் னாரு. இருவரும் சம்மதிக்கலை. கட்சியின் சீனியர்களின் சாய்ஸ், ராகுல்காந்தி. அவரோ, ப.சி.யையும் ஏ.கே. அந்தோணியையும் கூப்பிட்டு உங்கள்ல ஒருத்தர் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கங்கன்னு அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். அகில இந்திய தலைவர் நியமனமான தும், தமிழக காங்கிரஸ் தலைமையிலும் மாற்றம் இருக்குமாம். கே.எஸ்.அழகிரி கொடுத்திருக்கும் மாநில நிர்வாகிகள் பட்டியலை கிடப்பில் வைத்துவிட்டார் சோனியா. புதிய தலைவர் நியமனத்தின் போது, எம்.பி.க்களாக இருக்கும் டாக்டர் விஷ்ணுபிரசாத், டாக்டர் ஜெயக்குமார், வசந்தகுமார் ஆகியோரின் செயல்தலைவர் பொறுப்பையும் புதியவர்களிடம் கொடுக்கணும்னு வலியுறுத்தப்படுதாம்.''
""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். ஏப்ரலில் நடக்கும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. 3. பேரைத் தேர்ந்தெடுக்கப் போகுது. அந்த 3 சீட்டுகளுக்கு தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அரவிந்த் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மாஜி எம்.பி.சவுந்திரராஜன், எக்ஸ் எம்.எல்.ஏ. சிவபதி உள்பட 12 பேர் முண்டியடிக்கிறார் களாம். இவர்களோடு, அரசின் டெல்லி பிரதிநிதியாக இருக்கும் தளவாய் சுந்தரமும் ரேசில் குதித்திருக்கிறார். பிரதிநிதித்துவம் இல்லாத நாடார், முத்தரையர், மற்றும் முஸ்லீம் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க ணும்னு குரல்கள் ஒலிக்குது.''