"ஹலோ தலைவரே, 3 வருட காத் திருப்புக்குப் பிறகு தமிழக உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக, ஊரகத் தேர்தல் மட்டும் ரெண்டு கட்டமா நடந்து முடிஞ்சிருச்சே''
""ஆமாம்பா, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் எல்லாம் இன்னும் நடக்கவேண்டி இருக்கே? நடந்து முடிஞ்சவரை தேர்தல் நிலவரம் எப்படி இருக்குதாம்?''’
""மூன்றாண்டுகளா அதோ இதோன்னு இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த உள்ளாட்சித் தேர்தலின் ஒருபகுதி முதல்கட்டமா 27-ந் தேதி நடந்தது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கு. வாக்குப் பதிவு யாருக்கு சாதகமா இருக்குன்னு உளவுத்துறையினர் மூலம் முதல்வர் எடப்பாடி விசாரிச்சிருக்கார். பரவலா கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாலும், அங்கங்கே போட்டி வேட்பாளர்கள் நின்றதாலும் அ.தி.மு.க. வின் வெற்றி சதவீதம் 35-ல் இருந்து 40 சதம் வரைதான் இருக்கும்ன்னு எடப்பாடியிடம் சொல்லப்பட்டிருக்கு. அமைச்சர்கள் எல்லாம் 70, 80 சதம் வரை நாம ஜெயிப்போம்னு சொன்னதுக்கு மாறா முதல்கட்ட ரிப்போர்ட் வந்திருப்பதால் அப்செட்டான எடப்பாடி, 30-ந் தேதி ரெண்டாம் கட்ட வாக்குப் பதிவிலாவது தீவிர கவனம் செலுத் துங்கன்னு கட்சிப் பிரமுகர்களை எச்சரிச்சிருக்காராம்''
""தி.மு.க. தரப்பு என்ன நினைக்கிது?''’
""முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்கள் பல இடங்களிலும் நடந்திருப்பதால் 30-ந் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் தி.மு.க.வினரும் கூட்டணிக் கட்சியினரும் இன்னும் விழிப்புடன் செயல்படனும்னு தி.மு.க. தலைமை அங்கங்கே இருக்கும் மா.செ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மூலம் எச்சரித்தது. இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முரசொலியில் எழுதியிருக்கும் கடிதத்தில் ’நேரடித் தேர்தலிலேயே தில்லு முல்லுகளை அரங்கேற்றும் ஆளும்தரப்பு மறைமுகத் தேர்தலில் பல மோசடிகளை செய்வதற்கு முயலும். அதனால் அவற்றை முறியடிக்கும் வகையில் கட்சியினரும் தோழமைக் கட்சியினரும் செயல்படனும்னு’ சொல்லியிருந்தாரு. தி.மு.க.வை 10 விழுக்காடு இடங்களில் கூட ஜெயிக்கவிடக் கூடாதுன்னு ஆளும்தரப்பு மும்முரம் காட்டிவரும் நிலையில், தி.மு.க. தலைமையோ, கூட்டணிக் கட்சிகளோடு குறைந்த பட்சம் 60 சத இடங்களிலாவது வெற்றி பெற்றே ஆகணும்னு இலக்கை நிர்ணயிச்சி வேலை செய்தது.''
""ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், அங்கே முதல்வராகப் பொறுப்பேற்ற ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனின் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து
"ஹலோ தலைவரே, 3 வருட காத் திருப்புக்குப் பிறகு தமிழக உள்ளாட்சித் தேர்தலின் ஒரு பகுதியாக, ஊரகத் தேர்தல் மட்டும் ரெண்டு கட்டமா நடந்து முடிஞ்சிருச்சே''
""ஆமாம்பா, நகராட்சி, மாநகராட்சித் தேர்தல் எல்லாம் இன்னும் நடக்கவேண்டி இருக்கே? நடந்து முடிஞ்சவரை தேர்தல் நிலவரம் எப்படி இருக்குதாம்?''’
""மூன்றாண்டுகளா அதோ இதோன்னு இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த உள்ளாட்சித் தேர்தலின் ஒருபகுதி முதல்கட்டமா 27-ந் தேதி நடந்தது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கு. வாக்குப் பதிவு யாருக்கு சாதகமா இருக்குன்னு உளவுத்துறையினர் மூலம் முதல்வர் எடப்பாடி விசாரிச்சிருக்கார். பரவலா கட்சிக்குள் உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாலும், அங்கங்கே போட்டி வேட்பாளர்கள் நின்றதாலும் அ.தி.மு.க. வின் வெற்றி சதவீதம் 35-ல் இருந்து 40 சதம் வரைதான் இருக்கும்ன்னு எடப்பாடியிடம் சொல்லப்பட்டிருக்கு. அமைச்சர்கள் எல்லாம் 70, 80 சதம் வரை நாம ஜெயிப்போம்னு சொன்னதுக்கு மாறா முதல்கட்ட ரிப்போர்ட் வந்திருப்பதால் அப்செட்டான எடப்பாடி, 30-ந் தேதி ரெண்டாம் கட்ட வாக்குப் பதிவிலாவது தீவிர கவனம் செலுத் துங்கன்னு கட்சிப் பிரமுகர்களை எச்சரிச்சிருக்காராம்''
""தி.மு.க. தரப்பு என்ன நினைக்கிது?''’
""முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல்கள் பல இடங்களிலும் நடந்திருப்பதால் 30-ந் தேதி நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில் தி.மு.க.வினரும் கூட்டணிக் கட்சியினரும் இன்னும் விழிப்புடன் செயல்படனும்னு தி.மு.க. தலைமை அங்கங்கே இருக்கும் மா.செ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மூலம் எச்சரித்தது. இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முரசொலியில் எழுதியிருக்கும் கடிதத்தில் ’நேரடித் தேர்தலிலேயே தில்லு முல்லுகளை அரங்கேற்றும் ஆளும்தரப்பு மறைமுகத் தேர்தலில் பல மோசடிகளை செய்வதற்கு முயலும். அதனால் அவற்றை முறியடிக்கும் வகையில் கட்சியினரும் தோழமைக் கட்சியினரும் செயல்படனும்னு’ சொல்லியிருந்தாரு. தி.மு.க.வை 10 விழுக்காடு இடங்களில் கூட ஜெயிக்கவிடக் கூடாதுன்னு ஆளும்தரப்பு மும்முரம் காட்டிவரும் நிலையில், தி.மு.க. தலைமையோ, கூட்டணிக் கட்சிகளோடு குறைந்த பட்சம் 60 சத இடங்களிலாவது வெற்றி பெற்றே ஆகணும்னு இலக்கை நிர்ணயிச்சி வேலை செய்தது.''
""ஜார்கண்ட்டில் ஜே.எம்.எம். மற்றும் காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில், அங்கே முதல்வராகப் பொறுப்பேற்ற ஜே.எம்.எம். கட்சித் தலைவர் ஹேமந்த் சோரனின் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின் கலந்துக்கிட்டாரே?''
""ஆமாங்க தலைவரே, அகில இந்திய அளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள். நம் தமிழகத்தில் இருந்து தி.முக. சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் போயிருந் தாங்க. அங்கே ஹேமந்த் சோரனுக்கு அடுத்து எல்லோராலும் தடபுடலாக வரவேற்கப்பட்டவர் ஸ்டாலின்தானாம். ராகுல் தொடங்கி மம்தா வரை, ஸ்டாலினிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடத்தப்பட்ட பிரமாண்ட பேரணி குறித்தும் ஆர்வமாக விசாரிச்சிருக்காங்க. ஸ்டாலினோ, மோடி அரசின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து கொல்கத்தா, சென்னையில் நடத்தப்பட்டது போல், இந்தியத் தலைநகரான டெல்லியிலும் ஒரு மிரட்டல் பேரணியை நாமெல் லாம் ஒன்று சேர்ந்து விரைவில் நடத்தனும்ன்னு யோசனை சொல்லியிருக்கார். இதற்கு எல்லோரும் சம்மதம் தெரிவிச்சிருக்காங்களாம்''’
""அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா, தி.மு.க.வுக்குப் போகப்போறதா தகவல் கசியுதே?''’
""இஸ்லாமியரைக் குறிவைத்து மோடி அரசு கொண்டுவரும் சட்ட திருத்தங்களை எல்லாம் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஆத ரித்து வாக்களித்ததை, அந்தக் கட்சியில் உள்ள இஸ்லாமியப் பொறுப்பாளர்களாலேயே ஜீரணிக்க முடியலை. இதையும் சகிச்சிக்கிட்டு யாராவது இருந்தால் அவர்களை இஸ்லாமிய ஜமாத்தினர், அங்கங்கே விலக்கிவைக்கும் வைபவங்களும் நடக்குது. அத னால்தான் அ.தி.மு.க. அமைச்ச ரான நிலோபர் கபில், எங்க வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. வோடு கூட்டணி இல்லைன்னு வெளிப்படையா சொன்னாரு. இவரைத் தொடர்ந்து இப்ப, தங்கள் சமூகத்தினரின் அ.தி. மு.க. மீதான கோபதாபங் களைப் பார்த்த அன்வர்ராஜா, கட்சிக் கோட்பாட் டையும் மீறி, குடிமக்கள் சட்டத்திருத்த மசோதா பத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு பத்தியும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பிச்சிட்டார். இது அ.தி. மு.க. தலைமைக்கு கசப்பை ஏற்படுத்த ஆரம்பிச்சிது. அதனால் இனியும் அ.தி.மு.க.வில் இருப்பது சரியில்லைங்கிற முடிவுக்கு வந்த அன்வர், தி.மு.க.வுக்குப் போகலாம்ங்கிற முடிவுக்கு வந்துட் டாராம். இது தி.மு.க. தலைமைக்குச் சொல்லப்பட, தி.மு.க. தலைமை அன்வரை கட்சிக்குள் அழைத் துக்கொள்வது பற்றி ஆலோசிக்குதாம்''’
""அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் அடங்கிய ஐவரணியில் இப்பவே குரூப் பாலிடிக்ஸ் வேலைகள் தொடங்கிடிச்சாமே?''’
""ஆமா... உண்மைதாங்க தலைவரே... இந்த டீமிலிருந்து ஓ.பி.எஸ். ஓரம் கட்டப்பட்டிருக்கிறாராம். அவருக்கு பதில் அமைச்சர் சி.வி.சண் முகம் அந்த டீமில் சேர்க்கப்பட்டி ருக்கிறாராம். ஐவரில் சி.வி.சண்முக மும் வேலுமணியும் தங்களுக்குள் ரொம்பவும் நெருக்கம் பாராட்டு கிறார்களாம். அதேபோல் முதல்வர் எடப்பாடியோடு அவரது உறவின ரும் அமைச்சருமான தங்கமணியும் மிகவும் நட்பு பாராட்டுகிறாராம். இவர்களோடு ஒட்டிக்கொண்டிருக் கும் அமைச்சர் விஜயபாஸ்கர், தான் சென்னையில் இருக்கும் போதெல்லாம் காலையிலேயே எடப்பாடியின் வீட்டில் ஆஜராகி விடுவதோடு, எடப்பாடியின் காரில் தான் கோட்டைக்கும் போகிறாராம்.''’
""சசிகலா விவகாரத்தில் மன் னார்குடித் தரப்பும் இப்போது இரண்டு பிரிவாகப் பிளவுபட்டிருக் கிறதாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, சசிகலாவையும் அவரது சொத்துக்களையும் இளவரசியின் குடும்பம் தான் வருமான வரித்துறையிடம் காட்டிக் கொடுத்ததுன்னு சொந்தங் கள் தரப்பில் இருக்கும் சசியின் ஆதரவுக் கோஷ்டி இளவரசி தரப் பைக் கரிச்சிக்கொட்டுதாம். ஏற் கனவே பண மதிப்பிழப்பு நேரத் தில், செல்லாதவையாக அறிவிக்கப் பட்ட, ஆயிரம் ரூபாய் ஐநூறு ரூபாய் நோட்டுக்களை வைத்து 1674 கோடி ரூபாய்க்கான சொத்துக் களை சசிகலா வாங்கினாரென்று அதற்கான ஆதரத்தை இளவரசி யின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்து வருமான வரித்துறை எடுத்தது. இது தொடர்பாக வாய் திறக்க மறுத்த கிருஷ்ணப்பிரியாவை, சசிகலாவின் வழக்கறிஞரான நாமக்கல் செந்தில், தேசபந்து ஆகியோரின் பதில்களை அவரிடம் எடுத்துப்போட்டு, அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட் டார்கள். எம்.நடராஜன் இறந்தபோது, பரோலில் வந்த சசிகலா, கடந்த 2017 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 7-ந் தேதி வரை தங்கள் வீட்டில் தங்கியிருந்தபோது சொத்து தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கை எல்லாவற்றையும் தன் செல்போனில் பதிவுசெய்து வைத்திருந்ததை கிருஷ்ணப்ரியா ஒப்புக்கொண்டார். இதுதொடர்பான முழு விபரமும் கடந்த நம் நக்கீரன் இதழில் (டிசம்பர் 28- 31) சசி வெளியிடும் 3 மணி நேர வீடியோ, "ஜெ.’சொத்து வில்லங்கம்'’என்ற தலைப்பில் விரிவாகவே தரப்பட்டிருந்தது. கிருஷ்ணபிரியாவைப் போலவே, அவர் தம்பி விவேக்கிடமிருந்தும் சசிக்கு எதிரான ஒரு கடித ஆதாரத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள்''’
""ஓ...''’
""விவேக்கிற்கு சசிகலாவால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில்... அதில் பல்வேறு கம்பெனி டீலிங்குகள் பற்றி அவர் விரிவாக எழுதியிருக்கிறாராம். இந்த வில்லங்கக் கடிதம் பற்றி விவேக்கிடம் அதிகாரிகள் கேட்டபோது, எனக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரி யாது. எங்கள் வீட்டில் உள்ள ரெண்டு செக்யூரிட்டிகளில் யார் இந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து கொடுத்தது என்று தெரிய வில்லை என்று மழுப்பியிருக்கிறார். இந்த நிலையில்தான் சசிகலா வை இளவரசி குடும்பம் காட்டிக் கொடுத்துவிட்டது என்ற சர்ச்சை மன்னார்குடித் தரப்பையே இரண்டுபடுத்திக்கொண்டு இருக்கிறது''’
""சு.சாமியும் சந்திரலேகாவும், சசிக்கு நல்லது செய்வதாகச் சொல்லி ஒரு டீலிங்கில் இறங்கி இருக்கிறார்களாமே?''’
""அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியே இருக்கட்டும். உங்களை அ.தி.மு.க.வின் பவர்புல் பொதுச்செயலா ளர் பதவியில் உட்காரவைக்கிறோம். இதற்கான ஒத்துழைப்பை பா.ஜ.க.விடம் பெற்றுத்தருகிறோம்னு சொல்லி பா.ஜ.க.வின் தமிழக பார்வையாள ராக இருக்கும் பியூஸ் கோயல் மூலம் இருவரும் டீலிங்கை நடத்திவருகிறார்களாம். இதற் கான டார்கெட் 5000 கோடியாம். பியூஸ் கோயலின் அப்பாவான விஜய் கோயல் ஆர்.எஸ்.எஸ்.சில் பவர்ஃபுல்லாக இருந்தவர் என்பதால், இந்த டீலிங்கை சசிகலா முழுதாக நம்புகிறாராம்''’
’""எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் கவிஞர் வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது இந்துத்துவாத் தரப்பின் எதிர்ப் பால் நின்னு போயிடுச்சாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆகஸ்டு மாதம் எஸ்.ஆர். எம். பல்கலைக் கழகம் நடத்திய தமிழ்ப் பேராய விருது வழங்கும் விழாவிலேயே டாக்டர் பட்டம் முடிவாயிடிச்சு. கடந்த 28-ஆம் தேதி வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எஸ்.ஆர்.எம். அழைத் திருந்தது. இந்த நிலையில், ஆண்டாளைக் கொச்சைபடுத்திய வைரமுத்துவுக்கு டாக்டர் பட் டம் கொடுக்க ராஜ்நாத் சிங் வர லாமா, வந்தால் அவருக்கு கருப் புக் கொடி காட்டுவோம்ன்னு இந்துத்துவா அமைப்புகள் கொடி பிடிக்க ஆரம்பிச்சிது. இந்தத் தகவல் டெல்லிவரை போக, ராஜ்நாத் சிங் தன் புரோகிராமை ரத்து பண்ணிட்டார். அதனால் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து வின் வெற்றித் தமிழர் பேரவையின ரிடம் கேட்டப்ப, ‘"ஏற்கனவே அரசு பல்கலைக் கழகங்களான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகமும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும், கோவை பாரதியார் பல்கலைக் கழகமும் எங்கள் கவிஞருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கியிருக்கின்றன. இது தனியார் பல்கலைக் கழகம் வழங்க இருந்த பட்டம். இதை பா.ஜ.க. அமைச்சரான ராஜ்நாத் சிங் வந்து கவிஞருக்கு கொடுத்திருந்தால் கூட பலரிடமும் இருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கும். அதனால் இப்போது மகிழ்ச்சி யோடு இருக்கிறோம்’ என்கிறார்கள்''’
""நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை சிட்டி கமிஷன ராக 2017 மே மாதம் நியமிக்கப்பட்ட ஏ.கே.விஸ்வநாதன். இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருவதால் அவரை மாற்றுவதற்கு சிலர் லாபி செய்கிறார்கள். இந்தப் பதவிக்கு டி.ஜி.பி.அந்தஸ்தில் உள்ள அதிகாரி கள் இருவர், ரகசியமாக காய்களை நகர்த்திவருகின்றனர். அதனால், சென் னை கமிஷனர் பதவியை டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தலாமா என முதல்வர் எடப்பாடி ஆலோசித்து வருகிறாராம். ஆனாலும் ஏ.கே. விஸ்வநாதனின் செயல்பாடுகள் பொதுமக்களை கவர்ந்திருப்பதால் ஆளுந்தரப்பு யோசிக்குது.''
________________
இறுதிச் சுற்று!
கட்டுக்கட்டாக பணம்! தலைமறைவான தி.மு.க. பிரமுகர்!
தொண்டாமுத்தூர் சாலையில் ஜெயலட்சுமி நகரிலுள்ள தி.மு.க. முக்கிய பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான பங்களாவில் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளும், வடவள்ளி போலீசாரும் கடந்த 29-ம் தேதி நடத்திய ரெய்டில் பழைய ரூ.500, 1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்டன. மொத்தம் ரூ.2.68 லட்சம். ஒவ்வொரு நோட்டுக்கு அடியிலும் ஒரு பேப்பர் வைக்கப் பட்டிருந்தது. இந்த பங்களாவில் ரஷீத், ஷேக், பெரோஸ் ஆகிய மூவரை குடிவைத்திருந்த ஆனந்தன், அவர்களோடு சேர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுத்து வருவதாக தகவல் கிடைத்ததன் பேரில் ரெய்டு நடத்தியதாக சொல்லும் காவல்துறையினர், மூவரும் தப்பி விட்டதாகவும், ஆனந்தன் தலைமறைவாகி விட்டதாகவும் கூறுகின்றனர்.
பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் பணம்படைத்த கோடீஸ் வரர்களை, பங்களாவுக்குக் கூட்டிவருவார்கள். அவர்களுக்கு மதுகொடுத்து ஏமாற்றி கோடிகளைப் பறித்துவிடுவார்கள். அதில் பாதிக்கப்பட்ட ஒருவரின் குமுறல்தான் ரெய்டுக்குக் காரணம் என்கிறது போலீஸ் தரப்பு.
ஆனந்தன்தான் இதில் மூளையாக செயல்பட்டுள்ளார் என கோவை எஸ்.பி. சுஜித்குமார் அடித்துச் சொல்கிறார். இதற்கிடையே, பங்களாவில் அலமாரிக்குப் பின்னால் ரகசிய அறை இருப்பது, ஆனந்தன் மீதான சந்தேகத்தை மேலும் வலுக்கச்செய்கிறது. கட்சி வட்டாரத்திலோ, ஆனந்தனுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடைக்கக்கூடாது என்பதற்காக நடந்த உள்ளடி என்கிறார்கள். போலீசால் தேடப்படும் ரஷீத்தை நீண்ட முயற்சிக்குப் பின் நாம் தொடர்பு கொண்டபோது, ""நாங்கள் ஆனந்தன் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தோம். "செல்லாகாசு' என்ற படத்தை தயாரிக்கிறோம். அதற்காகத்தான் இந்த நோட்டுகளை அடுக்கி வைத்திருந்தோம். வேண்டாதவர்கள் வேறுவிதமா போட்டுக் கொடுத்து விட்டார்கள்'' என்கிறார்.
-அருள்குமார்