"ஹலோ தலைவரே... எந்தச் சேனலைத் திருப்பினாலும் 2021-ல் அதிசயம் நடக்கும், அற்புதம் நடக்கும்னு விவாதம் நடக்குதே..''
""ஆமாப்பா.. செய்திச் சேனலா, மதப் பிரசங்க சேனலான்னு குழப்பமாயிடுது.''
""ரஜினியும் கமலும் மாற்றி மாற்றி இணைந்து செயல்படுவோம்னு சொல்றாங்க. அதனடிப்படையில்தான் 2021 தேர்தலில் அதிசயம் நடக்கும்னு ரஜினி சொல்றாரு. ஆனா, இரண்டு பேரும் சேர்ந்து இன்னும் பேட்டி கொடுக்கலை. இதற்கிடையிலே கமலின் மக்கள் நீதி மய்யத்தில் உள்ள நடிகை ஸ்ரீப்ரியா, முதல்வர் வேட்பாளர் கமல்தான்னு சொல்ல, அது ஒரு பக்கம் விவாதமாயிடிச்சி. ரஜினிகிட்ட கட்சி ஆரம்பிக்கிறது பற்றிக் கேட்டாலும், இணைந்து செயல்படுவது பற்றிக் கேட்டாலும், முதல்வர் வேட்பாளர் பற்றிக் கேட்டாலும் திரும்பத் திரும்பச் சொல்வது தேர்தல் வரும்போது தெரியும்னு சொல்றாரு. ஆனா, அதிசயம் நடக்கும்ங்கிறதில் உறுதியா இருக்காரு.''
""ரஜினி-கமல் பற்றி அ,தி.மு.க.வில் முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை எல்லாரும் விமர்சிக்கிறாங்க. ஆனா, தி.மு.க. சைலன்ட்டா இருக்கே?''
""துரைமுருகன்கிட்ட கேட்டப்ப, இணைஞ்சி வந்தா நல்லதுதானேன்னு சொன்னாரு. மற்றபடி தி.மு.க. பெருசா ரியாக்ட் பண்ணலை. அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் தி.மு.க.வுக்கு சாதகமா உள்ள நிலையில், பா.ஜ.க. சைடிலிருந்துதான் ரஜினி-கமல் இணைப்பு பற்றி கிளப்பிவிட்டு, தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு விழக்கூடிய வாக்குகளைப் பிரிக்க ப்ளான் பண்ணுறாங்கங்கிற டவுட் இருக்கு. அதே நேரத்தில், ரஜினி, கமல் இருவர் மூவ்மெண்ட்டையும் டெல்லி உன்னிப்பா கவனிச்சிக்கிட்டி ருக்கு. நெருக்கடிகளும் தொடருது. அரசியல் சூழல்கள் எப்படி இருக் குதுன்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான் சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் இணை வாங்க. அதுவரைக்கும் வெயிட்டிங் தான்னு இருதரப்பிலும் நெருக்க மானவங்க சொல்றாங்க.''
""மேயர், நகராட்சி சேர்மன் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல்னு எடப்பாடி அரசு போட்ட அவசர சட்டத்தால், கூட்டணிக் கட்சிகளுக்கே அதிருப்தியாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஓசூர் இந்த மூன்று மேயர் சீட்டையும் வாங்கிடணும்னு உறுதியா இருந்தது. மறைமுகத் தேர்தல்ன்னு அறிவிக்கப் பட்டதில் பா.ஜ.க. கடும் கொந்தளிப்பில் இருக்கு. இதேபோல் தங்களுக்குத் தோதான மேயர் தொகுதிகளைக் குறிவச்சிருந்த பா.ம.க.வும் பலத்த அப்செட்டில் இருக்குதாம். எடப்பாடி அரசின் இந்த மறைமுகத் தேர்தல் குறித்த அறிவிப்பு வந்ததுமே, முதல்வர் எடப்பாடியைத் தொடர்புகொண்ட பா.ம.க. நிறுவனர் ராம்தாஸ், இது நியாயமா? ஏன் இப்படி ஏடாகூடம் பண்றீங்கன்னு தன் ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கார். இதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுமே கடுப்பில்தான் இருக்கு. "
""ரியாக்சன் ஏதாவது இருக்குமா? ''’
""அ.தி.மு.க. மேலே தமிழக பா.ஜ.க.வினருக்கு அதிருப்தி இருந்தாலும், ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் துணையில்லாமல் இங்கே எதையும் செய்யமுடியாதுங்கிறதால, தி.மு.க பக்கமும் பார்வை திரும்பியிருக்கு. 24-ந் தேதி சென்னை ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நடக்க இருக்கும் ஹெச்.ராஜா மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, எப்படியும் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வரவழைத்து, அவர்களோடு மு.க.ஸ்டாலினை சந்திக்க வைக்க முடியுமா? என்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கு. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியமாகும்ன்னு தெரியலை.''’
""ராமசாமி படையாச்சியார் மணிமண்டபத் திறப்பு விழாவை மையமா வைத்தும் ஒரு அரசியல் நடக்குது போலிருக்கே?''
""உள்ளாட்சித் தேர்தல், வன்னியர் சமுதாய வாக்குன்னு எல்லா அரசியலும் இதில் இருக்குது. ராமசாமி படையாச்சியாருக்கு கடலூர் மாவட்டத்தில் ரெடியாகியுள்ள மணி மண்டபத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் எடப்பாடி திறந்துவைக்க நினைச்சாராம். ஆனால் சி.வி.சண்முகம், கே.சி.வீரமணி உள்ளிட்ட வன்னிய அமைச்சர்கள், நேரில் போய்த் திறந்தால்தான் சிறப்பா இருக்கும்ன்னு சொல்ல, அதன்படி வரும் 25-ந் தேதி எடப்பாடி படை யாச்சியார் மணிமண்டபத்தைத் திறந்துவைக்க இருக்கார். பொதுவா வன்னிய சமூக முன்னோடித் தலைவர்களைக் கொண்டாடும் இயல்பில்லாத பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இப்போது படையாச்சியார் விசயத்தில் தன் கொள்கையை மாற்றிக்கொண்டிருக் கிறாராம். வன்னிய மக்களின் பேராதரவை மணிமண்டபம் மூலம் அ.தி.மு.க. மட்டுமே சிங்கிளாக அறுவடை செய்துவிடக் கூடாதுங்கிற கணக்கும் இதில் இருக்குது. திடீர்க் காய்ச்சலால் 19-ந் தேதி இரவு டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அட்மிட் ஆன நிலையில் அவரை உடல்நலன் விசாரிக்கச் சென்ற முதல்வர் எடப்பாடியிடம், இங்கேயே எனக்கான அழைப்பைக் கொடுத்திருங்கன்னு அவர் கையாலே வாங்கிக் கொண்டாராம் ராமதாஸ்.''’
""பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டதா தி.மு.க. மீது ராமதாஸ் உள்ளிட்டவர்கள் வைத்த குற்றச்சாட்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் வரை போயிருக்கே?''’
""அசுரன் படம் பார்த்துட்டு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்த கருத்தால், இந்த சர்ச்சை கிளப்பப்பட்டது. தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்தில் பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் முரசொலி அறக்கட்டளை மீது புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து முரசொலி தரப்புக்கும் தமிழக அரசுக்கும் உரிய ஆவணங்களோடு ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டது அந்த ஆணையம். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டீம், ஆஜரானது. தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் சண்முகமும், புகார் கொடுத்த பா.ஜ.க. சீனிவாசனும் ஆஜரானார்கள். அப்போது தி.மு.க. டீம், இந்தப் புகாரை விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை என்று சொல்லி சில விளக்கங்களை அளித்தது.. புகார் கொடுத்த சீனிவாசனும், அரசின் தலைமைச் செயலாளரும் ஆவணங்களை சமர்பிக்க அவகாசம் கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். இதைத் தொடர்ந்து, எங்கள் மீது சுமத்தப்பட்ட புகார் ஆதாரமற்றது என்பது அவர்கள் அவகாசம் கேட்டதிலேயே நிரூபணம் ஆகிவிட்டது என்று சொன்ன தி.மு.க. டீம், இப்படி யொரு புகாரை எழுப்பிய டாக்டர் ராமதாஸின் 1000 ஏக்கர் நிலம் குறித்த ஆவணங்களை விரைவில் வெளியிடுவோம்னு புது சர்ச்சையைக் கிளப்ப, அதை சந்திக்கத் தயார்னு ராமதாசும் தெரிவிக்க விவகாரம் எந்தத் திசையில் போகப் போகுதுன்னு பலரும் உற்று நோக்குகிறார்கள்.''’
""கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் கொடநாடு விவகாரம் எடப்பாடியைக் கலவரப்படுத்தும் வகையில் இருக்குதாமே?''’
""ஆமாங்க தலைவரே, ஜெ.வின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்து போனார். அடுத்து கொட நாட்டுக் குற்றவாளிகளில் ஒருவரான சயான், தன் குடும்பத்தோடு காரில் போகும் போது, ஒரு டேங்கர் லாரி மோதியதில், அவரது மனைவி வினுப்பிரியாவும், மகள் நீதுவும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். சயான் காயங் களோடு உயிர் பிழைத்தார். அவர் கொடநாட்டுச் சம்பவத் துக்குக் காரணமானவர் தமிழக முதல்வர் எடப்பாடிதான் என்று பகிரங்கமாகவே வாக்குமூலம் கொடுக்க, அதைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு, அண்மையில் விடுவிக்கப்பட் டார். அவர் மனைவியும் மகளும் கொல்லப்பட்ட வழக்குதான் இப்போது கேரள உயர்நீதி மன்றத்தின் விசா ரணையில் இருக்கிறது. இதில் ஆஜரான சயான் தரப்பு, கொடநாட்டில் நடந்த அத்த னைக்கும் காரணமானவர் தமிழக முதல்வர் எடப்பாடி தான். நாங்கள் சந்தித்த விபத்துக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று அழுத்தமான வாதங்களை வைத்தது, இங்குள்ள கோட்டை வட்டாரத்தை பதட்டப்படுத்தி இருக்கு.''’
""கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் ஐ.ஏ. எஸ்., தமிழக தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப் பட்டிருக்காரே?''’
""கவர்னர் மாளிகை யின் பவர்ஃபுல்லாக இருந் தவர் ராஜகோபால். சமீபகாலமா டெல்லிக்கும் ராஜ்பவனுக்கும் சில முரண்பாடுகள் இவரால் ஏற்பட்டதாக கவர்னர் ஃபீல் பண்ணியிருக்கிறார். அதேபோல் தான் சந் திக்கும் சிக்கல்களுக்கும் ராஜகோபால்தான் கார ணம்னு கவர்னர் நினைச்ச தால, ராஜகோபால் சம்பந்தமான உளவுத்துறை யின் ரிப்போர்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு, கவர்னரிடம் டெல்லி ஒப்பீனியன் கேட்க, அவர் ராஜகோபால் மீதான தன் அதிருப்தியை வெளிப் படுத்தியிருக்காரு.''
""அப்படின்னா கவர் னரின் ஓ.கே.க்குப் பிறகுதான் ராஜகோபால் மாற்றப்பட்டாரா?''
""ஆமாங்க தலைவரே.. டெல்லியிடமிருந்து கோட்டைக்கு உத்தரவுகள் பறந்து வர, முதல்வர் எடப்பாடி அவரை தமிழக அரசின் எந்தத் துறைக்கு அழைத்துக்கொள்வது என்று ஆலோசித்தார். இதையறிந்த ராஜகோபால், நான் இப்போதைய தலைமைச் செயலாளரை விடவும் சீனியர். அவர் எனக்குக் கீழ் ஐந்தாம் இடத்தில் இருப்பவர்னு கெத்தைக் காட்டியிருக்காரு. இதைத் தொடர்ந்தே ராஜகோபால் தலைமைத் தகவல் ஆணையராய் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராஜ்பவன் வட்டாரம் நிம்மதி பெருமூச்சு விடுது.''’
""சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில், நடந்த விபத்தை வைத்து அதிகாரத்தில் இருப்பவங்க கல்லா கட்டுகிறார்களாமே?''
""எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கழிவு நீர்த் தொட்டி சுத்திகரிப்புத் தொழிலாளி அருண்குமார், பணியில் இருக்கும்போது விஷவாயு தாக்கி இறந்துபோய்விட்டார். இதுபோல் கழிவுநீர்க் தொட்டிக்குள் ஆட்களை இறங்கச் சொல்லக்கூடாது என்று கடுமையான விதிகள் இருந்தும், அவ்வளவு மாடர்னான வணிக வளாகத்தினர் அருண் குமாரை இறக்கிப் பலிகொடுத்து இருக் கிறார்கள். இந்த விவகாரம் மீடியாக்கள் மூலம் சர்வதேச கவனம் பெறத் தொடங்கியதும், நிர்வாகத் தரப்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலு மணியை வெயிட் டாக சந்தித்திருக் கிறார்கள். அவர், சி.எம்.டி.ஏ.வின் செகரட் டரியான கார்த்தி கேயன் ஐ.ஏ.எஸ்.சை யும் உரியமுறையில் பார்க்கச் சொல்லி யிருக்கிறார். அப்புறம் எந்த நடவடிக்கையும் இல்லை. இறந்துபோன ஒரு உயிரை வச்சி எல்லாரும் லம்பா பாக்கறாங்கனு தொழிலாளர்கள் கண்ணீர் விடறாங்க.''’
""நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஐ.என்.எக்ஸ் வழக்கு, அமலாக்கப் பிரிவு வழக்குன்னு தொடர்ந்து 80 நாளைக் கடந்து திகார் சிறையில் அடைபட்டிருக்கும் காங்கிரஸ் சீனியரான ப.சிதம்பரம், தன் உடல் எடையில் எட்டரை கிலோ அளவுக்கு குறைந்துபோய் விட்டாராம். எப்போதுதான் ப.சி. வெளியே வருவார் என்று அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை 6 மாத காலம் சிறை யில் அடைத்து வைத்து மகிழ்ந்தவர் தான் ப.சி. அதனால் அதற்குக் குறையா மல் சிறை வாழ்க் கையைக் கழித்து விட்டுதான் வெளி உலகத்தை ப.சி. பார்க்கமுடியும்ங் கிறாங்க.''
__________
இறுதிச் சுற்று
நட்சத்திரக் கலைவிழாவில் மோடி!
தமிழ்நாட்டு அரசியலில் சினிமாவுக்குள்ள தாக்கத்தை உணர்ந்து, நட்சத்திரக் கலைவிழாவை சென்னையில் நடத்த அனுமதி பெற்றிருக்கிறார் மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பா.ஜ.க. நிர்வாகிகளிடம் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மோடி கலந்துரையாடிய நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவரு மான ப்ரித்வி. சினிமா ஸ்டார்கள் சங்கமிக்கும் விழாவை நடத்தி அதில் மோடி கலந்துகொள்வதன் மூலம் பா.ஜ.க.வின் மீதான பார்வையை தமிழகத்தில் அதிகம் பதியவைக்க முடியும் என்ற அடிப்படையில், "இளையராஜாவுக்கு சென்னையில் பாராட்டு விழா' என்ற பெயரில் கலைவிழா நடத்தி, அதில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரைப்பட உலகமே கலந்துகொள்வதற்கான கான்செப்ட்டை தயாரித்து, மோடியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது ப்ரித்வி டீம். "தேதி குறிக்கப்பட்டதும் விழாவுக்கான செயல்திட்டங்கள் விறுவிறுப்படையும்...'’என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
-இளையர்