"ஹலோ தலைவரே... தீபாவளி வசூல் மாமூல்னு அரசு இயந்திரம் களைகட்டியிருந்தாலும், தமிழ்நாட்டில் வழக்கமான தீபாவளி கொண் டாட்டத்தை இந்தமுறை பார்க்க முடியலை.''

""ஆமாப்பா... மணப்பாறை பக்கத்துல நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் 2 வயது சிறுவன் விழுந்த சோகநிகழ்வு இந்த ஆண்டு தமிழகத்தில் கண்ணீர் தீபாவளிக்கு காரண மாயிடிச்சி.''

rr

Advertisment

""ஆமாங்க தலைவரே... அந்த சோகம் எல்லார் மனதிலும் இருக்குது. அதே நேரத்தில் அரசியல் அதுபாட்டுக்கு நடந்துக்கிட்டிருக்கு. நாடாளுமன்றத் தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கட்சிகளிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த மூத்த அமைச்சர்களை அனுப்பிவைத்தார் எடப்பாடி. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றிபெற்ற உடனே பா.ம.க. ராமதாசையும், தே.மு.தி.க. விஜயகாந்தையும் போனில் தொடர்பு கொண்டு எடப்பாடி நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆனால், அமைச்சர்களை அனுப்பி, நேரில் நன்றி தெரிவிப்பது தான் சரின்னு உளவுத்துறை ரிப் போர்ட் அனுப்ப... அதன்படி, ராம தாஸையும், விஜயகாந்த்தையும் சந்தித்து நன்றி தெரிவிக்க அமைச் சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை அனுப்பி வைக்கவிருக்கிறார் எடப்பாடி. உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கு இந்தக் கூட்டணி தொடரணும்னு எடப்பாடி நினைக்கிறாராம்.''

""இடைத்தேர்தலில் தோற்ற தி.மு.க. சைடில் என்ன ஆலோசனை நடக்குதாம்?''

""கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு பயன்படவில் லைன்னு ஸ்டாலின்கிட்ட ஓட்டுக் கணக்கை காட்டியிருக்காங்க. விக்கிரவாண்டியில் பொன்முடி, தானே எல்லாத்தையும் பார்த்துக்கிறதா சொல்லி, பிற மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பல சீனியர்களையும் வேலை பார்க்க அனுமதிக் கலைன்னு புகார் போயிருக்கு. பொன்முடிகிட்ட இதைப்பற்றி ஸ்டாலின் விசாரிச்சப்ப, தொகுதி பொறுப்பாளர்களா வந்த எ.வ.வேலுவும் ஜெகத்ரட்சகனும்தான் நிலைமையை சொதப்பிட் டாங்கன்னும், தலைமையில் பொறுப்பு வாங்க நடக்கிற போட்டியில் தொகுதியை கெடுத்துட்டாங்கன்னும் பொன் முடி சொல்லியிருக்காராம். அப்புறம், சுனில் என்பவர் தலை மையில் இயங்கும் ஓ.எம்.ஜி.யின் யோசனைகள்படி ஸ்டாலின் செயல்படுவதும் வெற்றியைத் தரலைங்கிறதையும் அவர் கிட்டேயே சொல்லியிருக்காங் களாம்.

Advertisment

""ஸ்டாலின் என்ன நினைக் கிறாராம்?''

eps

""இதே கூட்டணி, இதே ஓ.எம்.ஜி. வியூகத்துடன் எம்.பி. தேர்தலில் ஜெயித்த தோடு, சட்டமன்ற இடைத் தேர்தலிலும் 13 இடங்களில் ஜெயித்தோம். அப்ப, தி.மு.க.வின் தேர்தல் வியூகம் இந்தியாவுக்கே வழிகாட்டின்னு சொன்னாங்க. இப்ப 2 இடைத்தேர்தலில் தோற்றதும் அதே வியூகங்கள் மைனஸா தெரியுது. எப்பவும், தோல்வி ஒரு அனாதை. அதற்கு யாரும் பொறுப்பேற்காமல், அடுத்தவர் பக்கம் தள்ளிவிடுவாங்கன்னு நினைக்கும் ஸ்டாலின், அதிக ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது எப்படிங்கிற வருத்தத்துடன் அது சம்பந்தமான ரிப்போர்ட்டை வாங்கி ஆலோசிக்கிறாராம்.''

""அப்படின்னா புது டீமின் ஆலோசனைகள் கேட்கப்படுமா?''

""இந்திய அளவில் ஐ பேக் நிறுவனத்தின் தலைவர் பிரசாந்த் கிஷோர்தான் தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடின்னு பேர் எடுத்தவரு. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, எடப்பாடியையும் ரஜினியையும் ஒரு கட்டத்தில் சந்தித்தார் பிரசாந்த் கிஷோர். ஆனால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோரின் வியூகங் கள் வட மாநிலங்களுக்கு ஓ.கே. தமிழகத்துக்கு செட் ஆகாதுன்னு இருவரிடமும் அவரவர் ஆலோசகர்கள் தனித்தனியா சொன்னதால், அவங்க பிரசாந்த் கிஷோரை தவிர்த்தாங்க. அதற்கப்புறம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலை அணுகினார் கிஷோர். சமீபத்தில், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுக்காக நடந்து முடிந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வகுத்த வியூகம் வொர்க்அவுட் ஆகாததால் அங்கேயும் அதிருப்தியாம். புதுக்கட்சி ஆரம்பிப்பது பற்றி ஆலோசிக்கும் ரஜினியும் சிவசேனா தரப்பில் விசாரித்திருக்கிறார். அதற்கப்புறம், கிஷோருக்குப் பதில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் பிராண்டிங் வல்லுநரான ஜான் ஆரோக்கியசாமியை பற்றி விசாரித்திருக்கிறாராம் ரஜினி.''

""மகாராஷ்டிராவில் போட்ட கணக்குப்படி பா.ஜ.க.-சிவசேனா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கலைன்னாலும், முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பேரம் நடத்தியதால் பரபரப் பாயிடிச்சே?''

pc

""ஆமாங்க தலைவரே... அதனால் பா.ஜ.க. அடுத்த ஆப்ஷனைப் பற்றியும் யோசித்து, சரத்பவாரையும் அவர் கட்சியையும் தன்பக்கம் இழுக்க முடியுமான்னு யோசிக்குதாம். ஹரி யானாவில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கலைன்னதும், தேவிலால் பேரன் துஷ்யந்த் சவுதாலா கட்சியின் ஆதரவை பா.ஜ.க. பெற்றிடிச்சி. அந்தக் கட்சிக்கு துணைமுதல்வர் பதவி தரப்படுவதோடு, சிறையில் இருக்கும் துஷ்யந்த் அப்பா அஜய் சவுதாலாவுக்கு சலுகை, அவங்க அம்மாவுக்கு மத்திய அமைச்சர் பதவின்னெல்லாம் டீல் ஓடியிருக்கு.''

""ஓ... வாரிசு அரசியல், குடும்ப அரசியல்னு விமர்சனம் செய்கிற பா.ஜ.க.தான் இந்த டீலை நடத்தியிருக்கா?''

""அரசியல்னா இதெல்லாம் சகஜம்தானே.. இருந்தாலும் சட்டமன்றத் தேர்தல்கள், அதனுடன் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வோட பெர்ஃபார்மன்ஸ் பிரதமர் மோடிக்கு திருப்தி அளிக்கலையாம். அடுத்ததா உ.பி., பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வருது. அப்புறம், மேற்குவங்கத்தில் தேர்தல் வரும். அதோடு தமிழ்நாட்டுக்கும் தேர்தல். இதெல்லாம் அவருக்கு கவலை தருதாம். நாட்டின் பொருளாதாரச் சூழல்கள்தான் பா.ஜ.க.வின் வெற்றிக்கு தடையா இருக்குதுன்னு ஆர்.எஸ்.எஸ். ஒரு ரிப்போர்ட் தயாரிச்சிருக்குதாம்.''

jj

""சர்ச்சைக்குள்ளான தலைமை நீதிபதி தஹில் ரமானி மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருக்கு. அதில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் சாட்சியமளிப்பார்னு எதிர்பார்க்கப்படுது. அவரோட சாட்சியம், ராஜினாமா செய்த நீதிபதியைவிட எடப்பாடி அரசுக்கு நெருக்கடியா இருக்குமாம்.''

""எனக்கு கிடைச்ச தகவலை யும் சொல்லிடுறேன்... தமிழ்நாடே துக்கத்தில் இருந்தாலும், அ.தி. மு.க. சைடில் தீபாவளி அன் னைக்கு மட்டும் 150 கோடி ரூபாய் கிஃப்டுகள் மூலமா செலவிடப்பட்டிருக்கு. அதோடு, 455 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கில் தீபாவளி சேல்ஸ் நடந்ததில் எடப்பாடி அரசு ஹேப்பி அண் ணாச்சி. இது சம்பந்தமான ஸ்பெஷல் ஸ்டோரியை 10-ஆம் பக்கத்தில் படிங்க''

""கர்நாடகா காங்கிரஸின் முக்கிய தலைவர் டி.கே.சிவகுமார் திகாரிலிருந்து வந்துட்டாரு.. ப.சி.க்கு எப் போது ரிலீஃப் கிடைக்கும்?''

""வெளிநாட்டு முதலீடு சம்பந்தமா சிவகுமாரிடம் நடத்திய விசாரணையில் எதுவும் சிக்கலை. ஆனா, ப.சி. விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமா பல டாகுமெண்ட்டுகள் இருப்பதா அமலாக்கத்துறை சொல்லுது. அதுதான் ப.சி. விடுதலைக்கு நெருக்கடியை ஏற்படுத்துது. இதற்கிடையில், கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்கத்துறை ரகசிய விசாரணை நடத்தியிருக்குதாம்.''

_____________

இறுதிச்சுற்று!

பா.ஜ.க.வில் பல கட்சி பிரமுகர்கள்!

தமிழக பா.ஜ.க.வுக்கு நவம்பர் இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிக்கலைத் தீர்க்க பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா சென்னைக்கு விசிட் அடிக்கத் திட்டமிட்டுள்ளாராம். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ஈர்ப்பதுதான் பா.ஜ.க.வின் வியூகம். 15 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த பா.ஜ.க.வின் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம், டெல்லி சில அசைன்மென்டுகள் கொடுத்துள்ளது. தமிழகத்திலுள்ள தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெரும்பான்மை சமூகத்திலுள்ள அரசியல் பிரமுகர்களை பா.ஜ.க.வில் இணைக்கும் திட்டத்தில் செயலாற்றி வருகிறார் நரசிம்மன். இதுகுறித்த பாசிட்டிவ் தகவல்கள் டெல்லிக்குத் தெரிவிக்கப்பட, அங்கு தேதி ஓ.கே. ஆனதால் அமித்ஷா முன்னிலையில் அவர்களை பா.ஜ.க.வில் இணைக்கும் விழாவை சென்னையில் நடத்த தீர்மானித்துள்ளார்.

-இளையர்

அரசுக்கு கண்டனம்! மீட்புக்குழுவுக்குப் பாராட்டு!

சுபஸ்ரீயின் உயிர் பறித்த பேனர், சுஜித்தின் உயிர் குடித்த போர்வெல் என எதுவாக இருந்தாலும் நீதிமன்றம்தான் அரசுக்கு கிடுக்கிப்பிடி போடுகிறது. ஆழ்துளைக் கிணறுகளை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி பராமரிக்க உத்தரவிடவேண்டும் என பொன்ராஜ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யகோபால், சேஷசாயி பெஞ்ச், “"ஒவ்வொரு நடவடிக்கையை செயல்படுத்தவும் ஓர் உயிர் பலியாக வேண்டுமா?'’என அரசைக் கண்டித்ததுடன் நோட்டீசும் அனுப்பியுள்ளது.

குழந்தை சுர்ஜித்தை மீட்கும் முயற்சியில் அமைச்சர்கள் -ஆளுந்தரப்பு மீது விமர்சனங்கள் எழுந்தாலும் தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தனியார் அமைப்பினர், என்.எல்.சி. குழுவினர், உள்ளாட்சி பணியாளர்கள் உள்பட மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் இரவு-பகல் பாராமல் அயராது உழைத்தது பொதுமக்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.