"ஹலோ தலைவரே... ஆளும்கட்சித் தரப்புக்கு இது தேர்தல் வெற்றித் தீபாவளியா அமைஞ்சிருக்கே?''’
""இடைத்தேர்தல் வெற்றியைத் தானே சொல்றே?''
""ஆமாங்க தலைவரே, இடைத்தேர்தல்னாலே, அதுல கிடைக்கும் வெற்றி எப்படிப்பட்டதா இருக்கும் என்பது ஜெயிச்சவங்களுக்கும் தெரியும். ஜெயிக்க விட்டவங்களுக்கும் தெரியும். இடைத் தேர்தல் தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய ரெண்டிலும் ஆளும் கட்சிக்குதான் சாதக மான நிலைன்னு உளவுத்துறை கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடிக் குக் கொடுத்த ரிப்போர்ட் பற்றி நாம் போன முறையே பேசிக்கிட் டோம். அதே மாதிரிதான் ரிசல்ட்டும் வந்திருக்கு. வாக்குகளை எண்ணத் தொடங்கி முன்னணி நிலவரம் தங்க ளுக்குச் சாதகம்னு வர ஆரம்பிச்சதுமே, உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியைத் தொடர்பு கொண்டு சரியான ரிப்போர்ட்டுன்னு மகிழ்ச்சியையும் நன்றியையும் முதல்வர் எடப்பாடி உற்சாகமா தெரிவிச்சிருக்கார்''’’
""ஆளும்கட்சித் தரப்புக்கு இது வெற்றித் தீபாவளி என்பதையும் தாண்டி... கலெக்ஷன் தீபாவளியாவும் அமைஞ் சிருக்கே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறைன்னு சகல துறைகளிலும் தித்திப்பான தீபாவளி கலெக்ஷனும், வெயிட்டான பங்கு பிரிப்புகளும் ஜரூராவே நடந்திருக்கு. குறிப்பா உள்ளாட்சித் துறையில் அமைச்சரின் அன்-அபிஷியல் உதவி யாளரா இருப்பவர் மூலம் ஒவ்வொரு நகராட்சியும் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் கோல்ட் காயினைக் கொடுக்கணும், மாநகராட்சிக்கு இதைவிடக் கூடுதலா இருக்கணும். பேரூராட்சிகளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி அன்பளிப்பு இருக்கணும்னு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைக் கொண்டுவந்து கொடுக்கணும்ன்னு சென்னையில் இருந்து இன்ஷ்ஸ் ட்ரக்ஷன் போயிருக்கு. பிறகு "நேரில் வரவேண்டாம். வரும் நபர்களிடம் கொடுத்தனுப்பவும்'னு அடுத்த தகவல் அனுப்பப்பட்டு, அதன்படி மெஹா வசூலும் விறுவிறுப்பாவே நடத்தப்பட்டி ருக்கு. இப்படி சகல துறைகளிலும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தத் தீபாவளி அமர்க்களமாவே இருந்திருக்கு''’
""ப.சிதம்பரத்துக்கு இது திகார் தீபாவளியா ஆயிடுச்சே?''’
""ஆமாங்க தலைவரே, ஐ.என்.எக்ஸ் தொடர்பான வழக்கில் ப.சி.க்கு ஜாமீன் கிடைத்தாலும், அவர் வெளியே இப்போதைக்கு வர முடியாதபடி அமலாக்கத் துறை மூலம் வலை பின்னப் படுதுன்னு நாம் தொடர்ந்து பேசினோம். அதேபோல் தான் ப.சி. விவகாரத்திலும் நடந்திருக்கு. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சி.க்கு பெயில் கொடுக்கப்பட்ட நிலையில் அமலாக்கத் துறையின் வழக்கு, அவரை அங்கிருந்து நகரவிடாமல் இறுக்கமாகப் பிணைத் திருக்கிறது. ஜெ. மீது போடப் பட்டது போலவே இப்போது ப.சி. மீதும் சொத்துக் குவிப்பு வழக்கைப் பதிவு செய்திருக்கிறது அமலாக்கத் துறை. வருமானத்துக்கு அதிகமாக 320 கோடி ரூபாய் அளவிற்கு ப.சி. வெளி நாடுகளில் சொத்துக்களைச் சேர்த்திருப்பதாக, டொலெய்ட் (க்ர்ப்ர்ண்ற்) என்ற தணிக்கை அமைப்பு கணக்கிட்டுச் சொன்னதன் அடிப்படையி லேயே இந்த வழக்கு அழுத்த மாகப் போடப்பட்டிருக் கிறது. இந்த வழக்கிலும் ப.சி. மனைவி நளினி சிதம்பரமும், மகன் கார்த்தி சிதம்பரமும் இணைக்கப்பட்டிருக்கிறார் கள். அதனால் அடுத்தடுத்த அதிரடிக் காட்சிகள் விரைவில் நடக்கலாம்னு டெல்லி வட்டாரம் மர்மப் புன்னகையோடு சொல்லுது''’
""இடைத்தேர்தல் தந்த வெற்றிக் களிப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி, இதே மூடில் அமைச்சரவையை மாற் றும் எண்ணத்தில் இருக்கிறாராமே?''’
""அப்படித்தான் அவர் தரப்பு சொல்கிறது. இது தெரிஞ்சதும் செம்மலை, ராஜன் செல்லப்பா, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட கட்சியின் சீனி யர்கள் பலரும் அமைச்சர் கனவில் மிதந்தபடி எடப் பாடியை கிரிவலம் வந்துக்கிட்டு இருக்காங்க. மாஜி மந்திரி சண்முக நாதனுக்கும் அமைச்சரவை மாற்றத்தின் போது ஜாக் பாட் அடிக்கலாம்ங்கிற பேச்சும் இருக்குது''’
""நாங்குநேரியில் வெற்றி வாய்ப்பை இழந்த காங்கிரஸ், தரப்பில் புலம்பல் கேட்குதாமே?''
""ஆமாங்க தலைவரே, நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரன், 50 ’சி’ யை நான் வாரி இறைத்தேன். தி.மு.க.வின் தொகுதிப் பொறுப்பாளர்களான மாஜி மந்திரிகள் ஐ.பெரிய சாமியும் கே.கே.எஸ். எஸ்.ஆரும் சரியாக திட்ட மிடாததால் அதில் "15 ’சி'’ எங்கெங்கோ போய் பதுங்கிடுச்சுன்னு பகிரங்கமாகவே புலம்பிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாகத் தி.மு.க. தரப்பிடம் கேட்டால், "தேர்தல் தேதியை அறிவிக்கிறதுக்கு முன்பாகவே, இந்தத் தொகுதி காங்கிரஸுக் குத்தான் என்றும், அதை எந்த சூழலிலும் தி.மு.க.விடம் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றும் எங்களுக்கு எதிராக முண்டா தட்டி எங்களோடு உரசத் தொடங்கினார்கள் காங்கிரஸ்காரர்கள். மேலும் எங்களோடு அவர்கள் இணக்க மாகவே நடந்துகொள்ள வில்லை. இருந்தும் கட்சித் தலைமையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்மையாகத் தான் உழைத்தோம். காஞ்சி புரத்தைச் சேர்ந்தவரைக் கொண்டுவந்து காங்கிரஸ் இங்கே நிறுத்தியதை தொகுதி மக்கள் விரும்பவில்லை. மேலும் தொகுதியில் இருக்கும் ஏறத் தாழ 20 ஆயிரம் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட் டார்கள். இவர்களின் தேர்தல் புறக்கணிப்பை நீட்டிக்க அ.தி.மு.க. வெயிட்டாக கவனிப்பு நடத்தியது. இதுவெல் லாம்தான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணம்' என்கிறார்கள் பதிலடியாக''’
""முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலமாக இருந்தால் நடவடிக்கை எடுப்போம்னு எடப்பாடி சொன்ன நிலையில்... தி.மு.க. தலைமை மீது, குடும்ப ரீதியிலான நெருக்கடியையும் அரசு ஏற்படுத்துகிறதாமே?''’
""ஆமாங்க, கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணி மீது பண மோசடி வழக்கு நீலாங்கரை காவல் நிலையத்தில் பதிவானது. உடனே புகார்தாரரோடு சமாதானம் பேசப்பட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்து, அந்தச் சிக்கலில் இருந்து ஜோதிமணி மீட்கப்பட்டார். இருந்தும் மேலிட விருப்பப்படி, அந்தப் புகாரை சென்னை மத்திய குற்றப் பிரிவு, தன்னிடம் கொடுக்கும்படி வாங்கி வைத் திருக்கிறதாம். இதையறிந்ததும் கலைஞர் மகள் செல்வியும் அவர் கணவர் முரசொலி செல்வமும் பொதுஅறிவிப்பு ஒன்றை வெளி யிட்டிருக்கிறார்கள். அதில், "ஜோதிமணி, தனிப்பட்ட முறையில் செய்யும் எந்தத் தவறுக்கும் நாங்கள் பொறுப்பாக மாட்டோம்'’ என்று தெரிவித்திருக்கிறார்கள்.''’
""ஆளுந்தரப்பில் ஆற்று மணல் அள்ளப்பட்டு வெளி நாடுகளில் சொத்துக்களா மாறுதாமே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே. தமிழகம் முழுக்க ஏறத்தாழ 250 மணல் குவாரிகள் அனுமதி வாங்கியும், வாங்கா மலும் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான குவாரிகளை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர்களான கரிகாலன், கருப்பையா, ராஜ்குமார் உள் ளிட்டோர் நடத்துகின்றனராம். இவற்றில் சுரண்டப்படும் மணலை ஒரு யூனிட் 15 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விலை வைத்து விற்று கல்லா கட்டு கிறார்களாம். இந்த மணல் வியாபாரத்தின்மூலம் வருடத் துக்கு 5 லட்சம் கோடி புழங்கு கிறதாம். இதில் கிடைக்கும் பணத்தை மாண்புமிகு தரப்பு துபாயில் முதலீடாக்கிப் பதுக்கு கிறதாம். இது அந்தத் தரப்பில் இருந்தே கசிகிற தகவல்''’
""நானும் ஒரு முக்கிய மான தகவலைச் சொல்றேன். சசிகலாவுக்கும் தினகரனுக்கும் முட்டல் மோதல்னு செய்திகள் உலவிய நிலையில்... கர்நாடக சிறையில் இருக்கும் சசிகலா, தீபாவளி வாழ்த்துச் செய்தியை தினகரனுக்கு அனுப்பியிருக்கிறாராம். அதில், "இந்த தீபாவளி புத்துணர்ச்சி தரும் தீபாவளித் திருநாளாக அமையட்டும்'னு வாய்குளிர வாழ்த்தியிருக்கிறாராம். இதையறிந்த அ.தி.மு.க. தரப்பு பகீராகி, தினகரன் மீது பயப்பார்வையைப் பதிக்கத் தொடங்கி இருக்கிறதாம்''’