"ஹலோ தலைவரே... இடைத்தேர்தல் நிலவரம் பற்றி நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு...''
""இடைத் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கிட்டு இருக்குதே? உங்களோட ரிப்போர்ட்டை சொல்லுங்க.''’
""இடைத் தேர்தல்னாலே ஆளும்கட்சிக்கு ஜாக்பாட்டா இருக்கும். ஆனால் இந்தமுறை எதிர்க் கட்சிகளைப் போலவே ஆளும்கட்சிக்கும் சோத னைகள் ஏற்பட்டிருக்கு. நாங்குநேரி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரா கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு, பிரச்சாரத்தில் இருக்கும்போதே மயங்கி விழுந்து நெல்லை மருத்துவமனையில் அட்மிட் ஆயிட்டார். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ், தற்கொலை செய்து கிட்டது அமைச்சர் தரப்பை சோகத்தில் தள்ளிடிச்சி. இரண்டு தொகுதி கேப்டன்களும் இல்லாம ஆளுங்கட்சி தள்ளாடுது.''
""வன்னியர் சமுதாயம் தொடர்பா தி.மு.க.வுக் கும் பா.ம.க.வுக்கும் அறிக்கை யுத்தம் நடந்ததே''
""விக்கிரவாண்டியைக் கைப்பற்ற, வன்னிய மக்களுக்கு விதவிதமான வாக்குறுதிகளால் வேப் பிலை அடிக்க ஆளும்தரப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினோ, முந்திக்கிட்டு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டுத் தியாகிகளுக்கு மணி மண்ட பம்ன்னு வாக்குறுதிகளைக் கொடுத்து அந்தத் தரப்பு மக்களின் கவனத்தை தி.மு.க. பக்கம் திருப்பினார். அதே சமயம் கட்சியால் மூன்றாகப் பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றில் கூட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மா.செ.வாக நியமிக்கப்படலையாம். இதை மாஜி மந்திரி பொன்முடியின் தந்திர அரசியலாகப் பார்க்கிறார் கள் ஏரியாவில் இருக்கும் வன்னிய சமூகப் பிரமுகர் கள். இதை கவனித்த ஆளும்கட்சி, பா.ம.க. மூலம் வன்னிய வாக்குகளை அறுவடை செய்ய, விறுவிறுப் பான வியூகங்களை வகுத்துக்கி
"ஹலோ தலைவரே... இடைத்தேர்தல் நிலவரம் பற்றி நம்ம நக்கீரனில் ஸ்பெஷல் ஸ்டோரி வந்திருக்கு...''
""இடைத் தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகள் போராடிக்கிட்டு இருக்குதே? உங்களோட ரிப்போர்ட்டை சொல்லுங்க.''’
""இடைத் தேர்தல்னாலே ஆளும்கட்சிக்கு ஜாக்பாட்டா இருக்கும். ஆனால் இந்தமுறை எதிர்க் கட்சிகளைப் போலவே ஆளும்கட்சிக்கும் சோத னைகள் ஏற்பட்டிருக்கு. நாங்குநேரி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளரா கட்சித் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு, பிரச்சாரத்தில் இருக்கும்போதே மயங்கி விழுந்து நெல்லை மருத்துவமனையில் அட்மிட் ஆயிட்டார். அதேபோல் விக்கிரவாண்டி தொகுதியின் பொறுப்பாளரான அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ், தற்கொலை செய்து கிட்டது அமைச்சர் தரப்பை சோகத்தில் தள்ளிடிச்சி. இரண்டு தொகுதி கேப்டன்களும் இல்லாம ஆளுங்கட்சி தள்ளாடுது.''
""வன்னியர் சமுதாயம் தொடர்பா தி.மு.க.வுக் கும் பா.ம.க.வுக்கும் அறிக்கை யுத்தம் நடந்ததே''
""விக்கிரவாண்டியைக் கைப்பற்ற, வன்னிய மக்களுக்கு விதவிதமான வாக்குறுதிகளால் வேப் பிலை அடிக்க ஆளும்தரப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலினோ, முந்திக்கிட்டு, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டுத் தியாகிகளுக்கு மணி மண்ட பம்ன்னு வாக்குறுதிகளைக் கொடுத்து அந்தத் தரப்பு மக்களின் கவனத்தை தி.மு.க. பக்கம் திருப்பினார். அதே சமயம் கட்சியால் மூன்றாகப் பிரிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றில் கூட வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மா.செ.வாக நியமிக்கப்படலையாம். இதை மாஜி மந்திரி பொன்முடியின் தந்திர அரசியலாகப் பார்க்கிறார் கள் ஏரியாவில் இருக்கும் வன்னிய சமூகப் பிரமுகர் கள். இதை கவனித்த ஆளும்கட்சி, பா.ம.க. மூலம் வன்னிய வாக்குகளை அறுவடை செய்ய, விறுவிறுப் பான வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்குது.''’
""டாக்டர் ராமதாசும் அன்புமணியும் பிரதமர் மோடியை சந்திச்சிருக்காங்களே''
""அன்புமணியின் பிறந்தநாளையொட்டி நடந்த இந்த சந்திப்பில் இட ஒதுக்கீடு, டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தல், 7 பேர் விடுதலை பற்றி வலியுறுத்தப்பட்டதா பா.ம.க. தரப்பில் சொல்லப்படுது. உள்வட்டத்தில் கூடுதலா விசாரித்ததில், இந்த கோரிக்கைகளோடு ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி பற்றியும் பேசப்பட்டதா சொல்றாங்க.''
""ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் குறித்தும் சலசலப்பு இருக் குதே?''’
""13 ஐ.ஏ.எஸ். அதி காரிகளுக்கு இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருக்கு. இவர்களில் சுற்றுலாத் துறையின் கூடுதல் தலை மைச் செயலாளரா இருந்த அபூர்வா ஐ.ஏ.எஸ்., சீன அதிபரை வரவேற்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டலையாம். அதனால்தான் அவரை நகர்ப்புற நிதி மேம்பாட்டுக் கழகத்துக்கு அனுப்பி வச்சிட்டாங்களாம். அதேபோல் போக்குவரத்துத் துறை செயலராக இருந்த ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சை, வருவாய் நிர்வாக ஆணையராக உட்காரவச்சிருக்காங்க. இவரை சுகாதாரத்துறை செயலாளரா அமர்த்த ஆசைப்பட்டிருக்கார் எடப்பாடி. ஆனால் சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரோ, "என் துறைக்கு இப்போது இருக்கும் பியூலாவே போதும். அவரை மாற்ற அனுமதிக்கமாட்டேன்'னு பிடிவாதம் பிடிச்சிருக்கார். இது தொடர்பாக எடப்பாடிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டபோது, "யாரும் செய்யாத தவறையா நான் செய்யறேன்'னு எடப்பாடிக்கு விஜயபாஸ்கர் அட்டாக் தொடுத்திருக்கார். அதனால் எடப் பாடியின் முயற்சி பலிக்கலையாம். அதேபோல், போக்குவரத்துத் துறைக்கு மின்பேருந்து திட் டத்துக்காக 5,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்குதாம். அதில் இஷ்டம் போல் விளையாட நினைக்கும் பவர் புள்ளிகள், அதுக்கு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சரிப்பட்டு வரமாட்டார்ன்னு நினைத்து தான் அவரை அங்கிருந்து தூக்கிவிட்டார்கள் என்ற உபரித் தகவலும் நம் காதுக்கு வந்தது.''’
""கார்த்தி சிதம்பரம் அம லாக்கத் துறையின் விசாரணைக்குப் போய்ட்டு வந்திருக்காரே?''’
""ஆமாங்க தலைவரே, ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேட்டு வழக்கில் கைதாகி திகாரில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சி. தொடர்பான வெளிநாட்டு சொத்து ஆவணங்கள் தற்போது கூடுதலாக அமலாக்கத்துறையின் கைக்குக் கிடைத்திருக்கிறதாம். இதுபற்றி கார்த்தி சிதம்பரத்திடம் வாக்குமூலம் வாங்க முயன்றிருக் கிறது அமலாக்கத்துறை. விசாரணைக்குப் போன கார்த்தி, கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் எனக்குத் தெரியாது, எனக்கு நினைவில்லை என்ற ரீதியிலேயே பதில் சொல்லியிருக்கிறார். அதோடு விசாரணையில் இருந்து வெளியே வந்து மீடியாக்களிடம் பேசிய கார்த்தி, "நான் விசாரணைக்காக வரவில்லை. அதிகாரிகளுக்கு ஆயுத பூஜை வாழ்த்து சொல்லவே வந்தேன்'னு கிண்டல் அடிச்சிருக்கார். இதில் எரிச்சலான அமலாக்கத்துறையினர் மீண்டும் கார்த்திக்கு சம்மன் அனுப்ப லாமா? இல்லை, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லைன்னு சொல்லி அவரைக் கைது செய்யலாமா?ன்னு சோழி உருட்டிக்கிட்டு இருக்காங்க.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். டிசம்பர் வாக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் மூடில் இருக்கும் தேர்தல் ஆணையம், மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கும் அதி காரிகளை இடமாறுதல் செய்யுங்கள்னு மாவட்ட ஆட்சியர்களுக்கு அண்மை யில் சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் சிலர், இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் எல்லாம் வராதுன்னு சொன்னதால், மாவட்ட ஆட்சியர்கள் பலரும் தேர்தல் ஆணையம் சொன்னதை செயல்படுத்தலை. இதைக்கண்ட மாநில தேர்தல் ஆணையர் பழனிச் சாமி, தேர்தல் ஆணையத்தை அரசுத் தரப்பு அலட்சியப்படுத்துதுங்கிற எரிச்சலில் இருக்கார்.''’
___________
இறுதிச் சுற்று!
"108' மோசடி! நக்கீரன் ஆக்ஷன்!
விபத்து மற்றும் நோயினால் உயிருக்குப் போராடுபவர்களை கமிஷனுக்காக குளோபல் மருத்துவ மனைக்கு கொண்டு போய் உட லுறுப்புகளைத் திருடுவதற்கு ஒத்துழைக்கும் மோசடி குறித்து 2019 செப்.28-அக்.01 தேதியிட்ட இதழில் "உறுப்பு திருடும் தனியார் மருத்துவ மனைகள்! துணைபோகும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள்' என்ற தலைப்பில் ஆதாரப்பூர்வமாக அம் பலப்படுத்தினோம். இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விசாரணைக்கு உத்தரவிட் டார். இந்நிலையில், நக்கீரன் கொடுத்த ஆதாரங்களை வைத்து விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 108 ஊழியர்கள் 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக நம் மிடம் தெரிவித்தார் 108 ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் தலைவர் செல்வக் குமார்.
-மனோசௌந்தர்
கொள்ளையன் சரண்டரில் சாதிப்பாசம்!
திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை டீமின் முக்கிய குற்றவாளியான முருகனின் அக்கா மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைய வைத் துள்ளனர்.
இதுபற்றி திருவண்ணாமலை யின் முக்கிய காவல்துறை அதிகாரி கள் சிலரிடம் பேசியபோது, ""சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைய போகி றான் என்கிற தக வல் கிடைத்ததுமே அலர்ட்டானோம். தீவிரமாக வாகன சோதனை நடத்தி னோம். அதனையும் மீறி வழக்கறிஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஹெல் மெட் போட்டபடி நகருக்குள் வந்தபின் காருக்கு மாறியுள்ளான். போக்கு காட்டிவிட்டு செங்கம் நீதிமன்றத்தில் சரணடைய வைத் துள்ளார்கள். அங்கு சரணடைய வைத்துள்ளதன் பின்னால் சாதிப் பாசமும், சில முக்கியமானவர்களின் கைங்கர்யமும் உள்ளது. சுரேஷ் இரண்டு தினங்களுக்கு முன்பே திருவண்ணாமலை வந்து இங்குள்ள ஒரு கிராமத்தில் தங்கியதாக கூறப்படுகிறது'' என்றவர்கள், ""இதில் சாதிப்பாசம் உள்ளது. அதனடிப் படையில் அரசியல் செல்வாக்கும் சட்ட உதவிகளும் கிடைக்கின்றன.
குட்டி தாதாக்களுக்கு அரசி யல் செல்வாக்கு உள்ளதால் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்க முடிய வில்லை. இருந் தும் அத்தனையும் நோட் செய்தே வருகிறோம். தேவையான நேரத்தில், சரி யான அதிகாரி வந்தால் கை, கால்கள் பாத் ரூமில் முறியும்'' என்றார்கள். நீதிமன்றத்தில் சரண்டரான சுரேஷை கஸ்டடியில் எடுக்க திருச்சி துணைஆணையர் மயில்வாகனன் டீம், அதற்கான பணிகளை வெள்ளியன்று மேற்கொண்டது.
இதனிடையே கொள்ளை டீம் கேப்டன் முருகன், திருச்சி திருவரம்பூரை அடுத்த நருங்குழி நகர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு எஸ்கேப் ஆகியிருப்ப தாக போலீசுக்கு புதுத்தகவல் கிடைத்துள்ளது.
-து.ராஜா, ஜெ.டி.ஆர்.
விசாரணைக்குத் தடைபோடும் அமைச்சர்
தமிழாய்வுக்காக உருவாக்கப்பட்ட தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-2018 காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களில் பலர் முறைகேடாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கெதிராக வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான நெடுஞ்செழியன் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினார்.
முறைகேடுகளைக் கண்டுபிடிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதிதர சிண்டிகேட்டின் ஒப்புதல் தேவையாக உள்ளது. தற்போதைய துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சிண்டிகேட்டை கூட்டமுயற்சித்தார். சென்னை தலைமைச் செயலகத் தில் சிண்டிகேட் கூடியநிலையில், மரபை மீறி அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் கலந்துகொண்டு, விஜிலன்ஸ் விசாரணைக்கு அனுமதி தரலாமா என சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறவேண்டுமென கூட்டத்தை 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார். இது பலரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி நீதிமன்ற விசாரணை வருகிற நிலையில், எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-செம்பருத்தி