""ஹலோ தலைவரே... முதல்வரும் துணை முதல்வரும் பிரதமர் மோடி-சீன அதிபர் வருகைக்கு பேனர் வைப்பதில் பிஸியாமே?''

""ஆயுத பூஜைக் காக அரசு விடுமுறைன் னாலும், இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் மாமல்ல புரத்திற்கு பிரதமரும் சீன அதிபரும் வரும் நிகழ்வுக்காக முழு கவனம் செலுத்தி, அவங்க மனசை குளிர் விக்கணும்னு நினைச்ச தால, கோட்டை அதி காரிகளும் லீவு நாளில் பரபரப்பா வேலை பார்த்திருக்காங் களாமே?''

rrr

""திபெத்துக்கும் சீனாவுக்கும் இப்போதும் உரிமைப் பிரச்சினை தான். அதனால, இங்கே இருக்கிற திபெத் மாண வர்கள் சீன அதிபருக்கு எதிரா போஸ்டர் ஒட்ட, உடனடியா அவங்க மேலே போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. போலீஸ் துறை அமைச்சரான முதல்வர் இதில் ரொம்ப தீவிரமா இருக்காராம். ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் அடையாள அட்டை இல்லாம வந்த நைஜீரியா நாட்டுக்காரர் ஒருவரை லோக்கல் போலீஸ் மடக்கியிருக்கு. அவரை விசாரிச் சிட்டு, அடையாள அட்டை யைக் கொண்டு வரச்சொல்லி அனுப்பியிருக்காங்க. போன ஆள் திரும்பி வரலை. இந்த விஷயம் கமிஷனர் வரை போக, சம்பந்தப்பட்ட போலீசாரை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைஞ்சிருக்கு மேலிடம். இந்திய பிரதமர்-சீன அதிபர் வந்து போகும்வரை எல்லா விஷயத்தையும் நேரடிப் பார்வையில் கவனிக்கிறாராம் முதல்வர்.''’’

Advertisment

""நாங்குநேரி, விக்கிர வாண்டி இடைத்தேர்தல் களத்துக்கும் ரெடியாகணுமே? விக்கிரவாண்டி பிரச்சாரத்துக்கு கிளம்புறதுக்கு முன்னாடி, தொகுதியின் வாக்கு வங்கியை மனசிலே வச்சி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர் களுக்கு உள்ஒதுக்கீடுன்னு ஸ்டாலின் அறிவிச்சிருக்காரே!''

""ஆமாங்க தலைவரே... அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்குது. 2016 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று 41 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி, தன் பலத்தைக் காட்டியிருக்குது. அதை மனதிலே வச்சித்தான் மு.க.ஸ்டாலின்கிட்டேயிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்குது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இது நிறைவேற்றப்படுமாம். அதோடு, வன்னியர் இடஒதுக்கீட்டுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபம்னும் அறிவிச் சிருக்காரு.''

rr""தி.மு.க.வின் மூத்த தலைவரும், 1952லேயே தனித்து தேர்தல்களம் கண்டு, உதய சூரியன் சின்னத்தில் முதன் முதலில் வெற்றி பெற்றவரு மான மறைந்த ஏ.கோவிந்த சாமிக்கு நினைவு மண்டபம் கட்டப்படும்னும் ஸ்டாலின் அறிவிச்சிருக்காரே...''

Advertisment

""அண்ணா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரான ஏ.கோவிந்தசாமி இறந்தபோது, ஸ்டாலின் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க.ங்கிற அமைப்பை நடத்திக்கிட்டிருந்தாரு. ஏ.கோவிந்தசாமி குடும்பத்துக்கு நிதி திரட்டும் வகையில், எம்.ஜி.ஆர். நடித்த "தெய்வத்தாய்' படத்தை சென்னையில் ஸ்பெஷல் ஷோ திரையிட்டு, அதில் வசூலான பணத்தை நிதியா கொடுத்தாரு. இது நெடுநாள் பந்தம். ஆனாலும், விழுப்புரம் மாவட்ட அரசியலில் பொன்முடிக்கும் ஏ.கோவிந்தசாமி மகன் ஏ.ஜி.சம்பத்துக்கும் நடந்த முட்டல் மோதலால், ஏ.கோவிந்தசாமியின் நூற்றாண்டு விழாவைக்கூட தி.மு.க. சரியா கொண்டாடலை. அந்த முணுமுணுப்பு கட்சிக்குள் அடங்காமல் இருந்தது. இப்ப மணிமண்டபம் அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டதும், ஏ.கோவிந்தசாமி குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவிச்சாங்க.''’’

""அ.தி.மு.க. கூட்டணியில் வெயிட்டான பா.ம.க. இருந்தும்கூட சென்டிமென்ட்டான முணுமுணுப்பு கேட்குதே''

""உங்களுக்கும் கேட்டுடிச்சா.. அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி அமைந்து, தைலாபுரத்தில் முதல்வர் தொடங்கி அமைச்சர் வரை பலருக்கும் விருந்து வைபவம் நடந்தது. அரசியல் ரீதியா இது பலம்னாலும், மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் பைக் ரேஸ் விபத்தில் சிக்கி, கால்கள் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரிலே சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்காரு. இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் லோகேஷ் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திடிச்சி. அமைச்சரின் வளர்ப்பு மகன் போல அத்தனை செல்லமா செல்வாக்கா இருந்த லோகேஷ் தற்கொலை, கட்சி கடந்த அனுதாபத்தை உருவாக்கியதால அ.தி.மு.க., தி.மு.க., வி.சி.க., பா.ம.க.ன்னு பலரும் போய் ஆறுதல் சொன்னாங்க. அமைச்சர் குடும்பத்திலோ வரிசையா ஏற்படுற தாக்குதல்களால் சென்ட்டிமென்ட்டா நொறுங்கி யிருக்காங்களாம்.''

""இழப்பின் வலி இருக்கத்தானே செய்யும்.''’’

""லோகேஷின் அம்மா, அதாவது அமைச்சரின் தங்கை ஏற்கனவே இறந்துட்டாரு. தாயில்லாத பிள்ளைங் கிற குறை தெரியாம மருமகனை, மறு மகன் போல வளர்த்தவர் சண்முகம் தான். அதனால, இந்த தற்கொலையை அவரால ஜீரணிக்க முடியலை. ஆறுதல் சொல்ல வந்தவங்ககிட்ட மனசு விட்டு அழுதிருக்காரு. அதே நேரத்தில், இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இருவரும் சென்னையில் இருந்தும், இரண்டரை மணி நேரப் பயண தூரமான விழுப்புரத்துக்கு வரலைங்கிறதில் அமைச்சருக்கு ரொம்பவே வருத்தமாம். தன் பொறுப்பில் உள்ள இடைத்தேர்தல் களத்தில்கூட அவரும் ஆதரவாளர் களும் கொஞ்சம் டல்லாத்தான் இருக்காங்க.''

rrr

""தேர்தல் நாள் நெருங்கும்போது வேகம் தானா வந்துடும்ப்பா..''’’

""சி.வி.சண்முகத்தைப் பொறுத்த வரை, பா.ம.க. தயவில் ஜெயிப்பதைவிட, மாவட்டத்தில் தனக்குள்ள சமுதாய வாக்குகளால் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்கணும்னு நினைக்கிறாராம். வெற்றிக்கு பா.ம.க. உரிமை கொண்டாடக்கூடாதுன்னு கணக்குப் போட்டு, பா.ம.க.வைவிட, தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கேப்டன் கட்சிக்கு முதல் மரியாதை தர்றாராம். விஜயகாந்த் உடல்நிலை நல்லா இருந்திருந்தா, மு.க.ஸ்டாலின் காணாமல் போயிருப் பாருன்னு சண்முகம் பேசியிருந்தார். இது கட்சி நிர்வாகிக்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு, ஸ்டாலினை எதிர்ப்பதற்காக விஜயகாந்த்தை இந்தளவு தூக்கலாமா? நம்ம அம்மா ஜெ.வே விஜயகாந்த்தை கடுமையா விமர்சிச்சி, ஓரங்கட்டி யிருப்பதை அமைச்சர் மறந்துட் டாரான்னு முதல்வர் வரை விஷயத்தைக் கொண்டு போயிருக்காங்க. சண்முகமோ, "நான் விஜயகாந்த்தைப் பாராட்டியது தப்புன்னா, அம்மாவே முறித்த அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியை மீண்டும் விஜயகாந்த்தோட வீட்டுக்குப் போய் உருவாக்கியது தப்பில்லையா'ன்னு கேட்டிருக்காரு. அதோடு, சூழலுக்கேற்ப முடிவெடுப்பதுதானே அரசியல்னும் சொன்னாராம். ஆனாலும் பா.ம.க. தலைமையுடன் அட்ஜஸ்ட் பண்ணிப்போகும்படி இ.பி.எஸ். அட்வைஸ் பண்ணியிருக்காரு.''

""இடைத்தேர்தலில் என்ன சூழல் இருக்குது, என்னென்ன முடிவு எடுக்குறாங்களாம்?''’’

""தலைவரே... வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய, முதல் கட்டமாக ஒரு ஓட்டுக்கு 2,000 என முடிவு செய்திருக்கிறது அ.தி.மு.க. கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இந்த முறை பணப்பட்டுவாடாவை கட்சி நிர்வாகிகளிடம் கொடுப்பதில் எடப்பாடிக்கு விருப்பமில்லையாம். இரு தொகுதிகளின் பொறுப்பாளர்களாக இருக்கும் அமைச்சர்கள்தான் வெற்றிக்கு பொறுப்புங்கிற நிலையில், செலவாகும் தொகையில் 50 சதவீதத்தை தாங்கள் ஏற்பாடு செய்துகொள்வதாகவும், மீதி 50 சதவீதத்தை கட்சி தலைமை தர வேண்டும்னும் எடப்பாடிகிட்டே கேட்டிருக்காங்க. சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் மொத்த தொகையும் தரப்பட்டாலும் வாக்காளர் களுக்கான பணப் பட்டுவாடாவை மட்டும் கட்சி நிர்வாகிகளை வைத்து செய்யாமல் அதற்கென தனியாக ஆட்களை தேர்வு செய்து விநியோகிக்க யோசனை தெரிவித்துள்ளார் எடப்பாடி. இதற்காக அரசியல் சாராத இளைஞர்களை வளைத்துக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள்.''

""நாங்குநேரி நிலவரம்?''’’

""வெற்றி பெறலைன்னா, அரசியலில் இனி தனக்கு வளர்ச்சியில்லைன்னு நினைக்கிறா ராம் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிமனோகரன். அதனால், 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகளை பர்ச்சேஸ் செய்ய அவரது தரப்பில் திட்டமிடப்பட்டி ருக்கிறது. ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என 1 லட் சத்து 50 ஆயிரம் வாக்கு களுக்காக 15 கோடி ரூபாயும், பூத் மற்றும் நிர்வாகிகளின் தினசரி செலவுகளுக்காக 5 கோடி யும் என கணக்கிட்டு 20 கோடி ரூபாயை தி.மு.க. தரப்பிடம் கொடுத்துள்ளாராம் ரூபி. தி.மு.க.தான் தன்னை ஜெயிக்க வைக்க முடியும்ங்கிறதால பணப் பட்டுவாடாவையும் தி.மு.க.விடமே ஒப்படைத் திருக்கிறார் என்கிறார்கள் மாவட்ட கதர் சட்டை யினர். காங்கிரஸ் தரப்பை பொறுத்தவரை பூத் கமிட்டிகளுக்கும், தினசரி நிர்வாக செலவுகளுக்கும் தனியாக பட்ஜெட் போட்டுள்ளார் ரூபி.''’’

""இடைத்தேர்தல் நேரத்தில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான "முரசொலி'யில் ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு, ஒழுங்கு நடவடிக்கை ரத்து அறிவிப்பு எல்லாம் வரிசையா வந்துக்கிட்டி ருக்குதே?''’’

""எல்லாத்திலும் உள்குத்து இருக்குன்னு அறிவாலயம் ஏரியாவில் சொல்றாங்க. தி.மு.க.வின் கொள்கைப்பரப்பு மாநில துணைச்செயலாளராக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் குமரனை சமீபத்தில் அப்பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது தி.மு.க. தலைமை. அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கும் துரைமுருகனின் மகனும் புது எம்.பி.யுமான கதிர் ஆனந்துக்கும் மாவட்டத்தில் ஏழாம் பொருத்தம். கதிர் ஆனந்த் குடும்பத்தார்கூட தெனாவெட்டா பேசுறதை நந்தகுமார் தரப்பு விரும்பலை. இந்த நிலை யில்தான், நந்தகுமாருக்கு ஆதரவா இருந்த குமரனை கட்டம் கட்டியிருக்குது தலைமை. இரவு நேரத்தில் கட்சி விவகாரமா நந்தகுமார் தரப்பு ஆலோசிக்கிறப்ப, துரைமுருகன் ஆதிக்கம் பற்றி விமர்சனம் செஞ்சிருக்காங்க. அதில் குமரன் வெளிப்படுத்திய கோபமான வார்த்தையை ரெகார்ட் பண்ணி, யாரோ கதிர்ஆனந்துக்கு அனுப்ப, அது தலைமை வரை போய், பதவியைப் பறிச்சிடிச்சி.''

""நான் ஒரு தகவல் சொல்றேன்... அக்டோபர் 2-ந் தேதியிட்ட நம்ம இதழில் "பந்தாடப்படும் அதிகாரி -உளவுத்துறை ரிப்போர்ட்'னு ஒரு செய்தி வெளியிட்டிருந் தோம். அதில் குறிப்பிடப்பட்டிருந்த இன்ஸ் பெக்டர் பரத்சீனிவாசன் என்னைத் தொடர்பு கொண்டு, "ஓய்வுபெற்ற அதிகாரிகள் பற்றியும் என்னைப் பற்றியும் நக்கீரனில் வந்த செய்தியில், என் கருத்து கேட்கப்படலை. அது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கு'ன்னு வருத்தத்தோடு சொன்னாரு. அவர் விளக்கத்தை அப்படியே பதிவு பண்ணிட்டேன்.''