லோ தலைவரே, கர்நாடகாவில் ஆட்சியைத் தக்கவச்சிக்கப் போராடிய ம.ஜ.த. குமாரசாமியை ஒருவழியா குப்புறத்தள்ளி, ஆட்சி லகானைக் கைப்பற்றுது பா.ஜ.க.''’

""ஆமாம்பா, தன் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமி அவகாசம் கேட்டும், காங்கிரசைச் சேர்ந்த சபாநாயகரான ரமேஷ் குமாரையே பா.ஜ.க. தன் ஸ்லீப்பர் செல்லாக்கி, அவகாசம் கொடுக்க மறுத்துடுச்சுன்னு பேச்சு அடிபடுதே?''’

rr

""காங்கிரஸ், ம.ஜ.த. தரப்பைச் சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா பண்ண வச்சி, அவங்களை பா.ஜ.க. தரப்பு பதுக்கிவச்சதால், வாக்கெடுப்புக்கு காங்கிரசும் ம.ஜ.த.வும் அவ காசம் கேட்டுச்சு. சபாநாயகரும் இதை ஏத்துக் கிட்டார். இருந்தும், உடனே பெரும்பான்மை யை நிரூபிக்கணும்னு 2 தடவை கர்நாடக ஆளுநர் வஜுபாய் சபாநாயகருக்குக் கடிதம் எழுதினார். அவர் அதை ஏற்கலை. இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை, கர்நாடக சபாநாயகருக்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் அனுப்புச்சு. அதில், ஆட்சி நிர்வாகத்தின் தலைவர் கவர்னர்தான். அப்படியிருக்கும் போது, அவர் உத்தரவை நீங்கள் எப்படி மீறலாம்?னு கடுமையா கேள்விகளை எழுப்புச்சு. இதைப் பார்த்து அப்செட்டான சபாநாயகர், மறுநாளே வாக் கெடுப்பை நடத்த அனுமதித்ததால, ஆட்சி யை பறிகொடுத்திருக்கார் குமாரசாமி.''’’

Advertisment

""அமைச்சர் பதவி தருவோம்ன்னு ஆசை காட்டித்தானே அங்க 15 எம்.எல்.ஏ.க் களையும் ராஜினாமா செய்யவச்சிது பா.ஜ.க.? அவங்க ஆசை இப்ப நிறைவேறுமா?''’

""எப்படியாவது நிறைவேற்றிடணும்னு, முதல்வராக நினைக்கும் எடியூரப்பா வியூகம் வகுக்குறாரு. அந்த 15 பேர் மீதும் கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கனும்ன்னு காங்கிரஸும், ம.ஜ.த.வும் தங்கள் கொறடாக் கள் மூலம் சபாநாயகர்ட்ட கடிதம் கொடுத் திருக்கு. அவங்களோட பதவி பறிக்கப்பட்டால், அமைச்சர்களாக ஆக முடியாது. எம்.எல்.ஏ. பதவி இல்லாமல் அமைச்சராகும் ஒருவர், அடுத்த 6 மாசத்தில் தேர்தலில் நின்று ஜெயிக்க லாம்ங்கிற சட்டவிதி, இது கட்சித் தாவல் சட் டத்தால் பதவி பறிக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக் குப் பொருந்தாது. இதனால், அவங்க பதவி யைப் பறிக்காமல் இருக்க முடியுமான்னு சட்ட வல்லுநர்கள்ட்ட விவாதிச்சிக்கிட்டு இருக்கு பா.ஜ.க. அதைப் பொறுத்து தான், பா.ஜ.க. அமைச்சரவை அமையும்.''

""கர்நாடக ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டு அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?''

Advertisment

""எல்லாத்தையும் மேலே இருக்கிறவங்க பார்த்துக்குவாங்கன்னு இ.பி.எஸ். ஆட்சி இருந்தாலும், கர்நாடக நிலவரத்தை சசிகலா தரப்பு உன்னிப்பாத்தான் கவனிக்குது. பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலாவுக்கு குமாரசாமி ஆட்சியில் ஏகப்பட்ட சலுகைகள் கிடைச்சுது. சசியின் கணவர் எம்.நடராஜனுக் கும் ம.ஜ.த. தலைவரான முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கும் இருந்த நட்பு காரணமாக இது ஈஸியா நடந்தது..''’

""பா.ஜ.க. ஆட்சி அமைந்தால் இதெல்லாம் தொடருமா?''

""அ.தி.மு.க. அணிகள் எல்லாமும் ஒன்றிணைய வேண்டும் என்ற தன் நீண்ட காலக் கனவை நனவாக்க, சசியின் நட்பை நாடுகிறது பா.ஜ.க. அதற்கு ஈடாகத் தனது விடுதலை முன்கூட்டியே அமையணும்ங்கிற எதிர்பார்ப்பு சசிகலாவிடம் இருக்கிறதாம். எனவே இது தொடர்பான பேச்சுவார்த்தை கள் நடந்துக்கிட்டிருக்கு. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடியும், சசிகலாவுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள தன் மனைவி ராதா மூலமான தூதுப் படலத்தைத் தொடர்கிறார். தனது முதல்வர் பதவிக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நிபந்தனை மட்டுமே அவரிடம் இருக்கிறது. ஆனா, ஓ.பி.எஸ்.சுக்கு, இவர்கள் இணைந்தால் நம்மை ஓரங்கட்டிடுவாங்கங்கிற பயம் இருக்குது. அதனால, டெல்லியின் அழைப்பில் சமீபத் தில் அங்கு பறந்த ஓ.பி.எஸ்., பா.ஜ.க. தலைமையிடம், "உங்களைத்தான் முழுமையாக நம்புகிறேன். அ.தி.மு.க.வின் அணிகள் இணைவதில் எனக்கு எந்தவித வெறுப்பும் இல்லை. அதேசமயம் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள். எடப்பாடியே முதல்வராக நீடிக்கட்டும். எனக்கு துணை முதல்வர் பதவி கூடத் தேவையில்லை. நான் கட்சிப்பொறுப்பில் மட்டும் இருந்துகொள் கிறேன். அதேபோல் என் மகன் ரவீந்திர நாத்துக்கு மத்திய அமைச்சரவையில் பா.ஜ.க. மனமுவந்து இடம் கொடுக்கவேண்டும்' என் றெல்லாம் கோரிக்கைகளை வைத்திருக்கிறா ராம். தனது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்னு ஓ.பி.எஸ். உறுதியா நம்புறாராம்.''’

mmm

""முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கோபத்தில் இருக்கிறாருன்னும் ஒரு தகவல் வந்ததே?''’

""ஆமாங்க தலைவரே, அது எத னாலன்னா, காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க அமித்ஷாவோடு மோடியும் 23, 24 தேதிகள்ல தமிழகம் வர்றதா இருந்தது. ஆனால் எடப்பாடி அரசோ, அத்திவரதருக்குத் திரளும் கூட்டத் தையே எங்களால் மேனேஜ் பண்ணமுடியலை. இந்த நிலையில் பிரதமர் உள்ளிட்ட தலைவர் கள் வந்தால் மேலும் நிலைமை மோசமாகும். உயிர்ப் பலிகள் ஏற்படக்கூடும்ன்னு மத்திய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பிடிச்சு. இதுதான் மோடியை ஏகத்துக்கும் எரிச்சல் படுத்தியிருக்கு. இதைத் தொடர்ந்து தமிழக அரசுத் தரப்பைத் தொடர்புகொண்ட நிர்மலா சீதாராமன், கூட்டத்தை நிர்வகிக்க முடியலைன்னு சொல்றது சரியா? கும்பமேளாவில் இதைவிடப் பலமடங்கு திரளும் மக்களை அங்கே மேனேஜ் பண்ணலையா? இது போன்ற கூட்டத்தை மேனேஜ் செய்ய போலீஸை மட்டுமே ஒரு அரசாங்கம் நம்பலாமா? தன்னார் வலர்களான வாலண்டியர்ஸையும் பயன்படுத்திக்க வேண்டாமா? அர சாங்கமே பொறுப்பைத் தட்டிக்கழிக் கிறது எப்படி சரின்னு கடுமையா டோஸ் விட்டிருக்கார். இதைத் தொடர்ந்து தலைமைச்செயலாளர் சண்முகமும் டி.ஜி.பி. திரிபாதியும் உடனடியாக காஞ்சிபுரத்துக்குப் போய், அங்கிருந்தபடியே வாலண் டியர்ஸை பாதுகாப்புப் பணிகளில் போலீஸோடு சேர்த்துக் களமிறக்கி இருக்காங்க. எனவே, நாடாளு மன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் மோடியும் அமித்ஷாவும் அத்தி வரதரை தரிசிக்க வருவாங்கன்னு இப்போ டெல்லியில் இருந்து தகவல் வருது.''’

""பாதுகாப்பைப் பத்தி நாம் பேசும் நேரத்தில், பாதுகாப்புத் துறையான ராணுவத் துறையையே தனியார் மயமாக்கும் ஐடியாவில் பா.ஜ.க., இருக்குதாமே?''

statt

""பொதுத்துறைகளை எல்லாம் தனியார் மயமாக்கும் திட்டத்தை மோடி அரசு ரொம்பவும் ரகசிய மாக செய்து வருது. இந்தவகையில் ராணுவத்தையும் அது விட்டுவைக்கலை. பாதுகாப்புத் துறையின் கீழ் இந்தியா முழுக்க 41 ராணுவத் தொழிற்சாலைகள் இருக்கு. இதற்கு சொந்தமா ஒரு லட்சம் ஏக்கர் நிலம் இருக்குது. இவற்றின் மீது மோடி அரசுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் பார்வை பட்டிருக்கு. இதைத் தொடர்ந்து இவற்றை முதல் கட்டமாக பொதுத்துறை நிறுவனமாக்கி, பிறகு தனியார்ட்ட ஒப்படைக்கலாம்ங் கிற கருத்தாக்கத்தை உருவாக்குது ராணுவ தொழிற்சாலை வாரியம். இதனால் பாதுகாப்புத் துறையின் நம்பகத் தன்மையும் ரகசியங்களும் கேள்விக்குறியாய் ஆகுது.''’’

""நாட்டின் பாதுகாப்பு இருக்கட்டும். எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆளும்கட்சித் தரப்பு எச்சரிக்கை விடுக்குதாமே?''’

""ஜெ. ஆட்சியில் அமைச்சராக இருந்து, அப்புறம் தினகரன் தரப்புக்குப் போய், அங்கிருந்து தி.மு.க.வில் ஐக்கியமாகி, எம்.எல்.ஏ.வாகவும் ஆகியிருக்கார் செந்தில் பாலாஜி. அவரோட ஆதிக்கம் கட்சியில் மட்டுமல்லாது ஸ்டாலினின் சித்தரஞ்சன் சாலை இல்லத்திலும் அதி கரிச்சிருக்குதாம். இது தி.மு.க.வின் சீனியர்களுக்கே எரிச் சலை ஏற்படுத்திக்கிட்டிருக்கு. இந்த நிலையில், சட்ட மன்ற வளாகத்தில் தி.மு.க. மாஜி மந்திரி ஒருத்தரை சந்திச்ச போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியின் முந்தைய குண நலன்களை அவரிடம் விவரித்துவிட்டு, உங்க தலைவரை அவர்கிட்ட எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்னு சொல்லியிருக்கார். அதுக்கு அந்த மாஜி, இப்ப சீனியர் களான நாங்களே எங்க தலைவர்கிட்ட அப்பாயிண்ட் மெண்ட் வாங்கித்தான் பேசவேண்டியிருக்கு. அப்பவும் எதையும் எடுத்துச் சொல்ல நேரம் வாய்ப்பதில் லைன்னு கவலையா சொல்லியிருக்கார். உடனே அமைச்சரோ, சரி, முதல்வர் மூலமா செந்தில் பாலாஜி பற்றிய எச்சரிக்கையை எதிர்க்கட்சித் தலைவரான உங்க தலைவருக்கு அனுப்பறோம்னு சொல்லியிருக்கார். அதாவது, தி.மு.க. உள் விவ காரத்தைப் பற்றி அ.தி. மு.க. கவலைப்படுது.''’

""அதுசரிப்பா, ஆளுங்கட்சியிலேயே ஒரு அசகாய மந்திரி வேலூர் இடைத்தேர்தலை சாக்காக்கி ஏகத்துக்கும் கல்லா கட்டறார்ன்னு சொல்றாங்களே?''’

""உண்மைதாங்க தலைவரே, வேலூர் இடைத் தேர்தல் செலவை முதல்வர் எடப் பாடி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சரான கே.சி.வீரமணியின் தலையில் கட்டினாராம். இதனால் உற்சாகமான வீரமணி, இதுதான் சாக்குன்னு ஜரூரா களமிறங்கி, போஸ்டிங், டிரான்ஸ்பர்ன்னு ஒவ்வொன்னுத்துக்கும் தனித்தனி ரேட்டை நிர்ணயம் பண்ணிட்டா ராம். இதன்படி பதிவாளர் போஸ்டில் உட்கார விரும்புகிறவர்கள் 40 ’லகரம்’வரை மொய் எழுதணுமாம், அதிலும் வருமானம் கொழிக்கும் பெருநகரங்களில் இந்தப் பதவியில் உட்காரணும்ன்னா அதுக்கு ஒரு ’சி’வரை அள்ளிக்கொடுக்கணுமாம். இப்படி டீலிங் பேசி கலெக்ஷன் பண்ண அண்ணாநகர் ஸ்ரீராம் என்பவர் தலைமையில் ஒரு டீமே பரபரப்பா செயல்படுதாம். இந்தத் துறையின் ஐ.ஜி.யா இருந்த குமரகுருபரன், குற்றச்சாட்டு களுக்கு ஆளான பலரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தா ராம். இப்படிப்பட்ட ஒதுக்கிவைக்கப்பட்ட நபர்களிடமும் வாங்க வேண்டியதை வாங்கிக் கிட்டு, அவங்களையும் பணியில் உட்கார வைச்சிட்டாங்களாம். நிலைமை எல்லை மீறிப் போறதைக் கேள்விப்பட்டு முதல்வர் எடப்பாடியே அமைச்சரிடம் இது பத்திக் கேட்க, நீங்க செலவு வச்சா, நாங்க அதுக்கான வரவை ஏற்படுத்தித்தானே ஆகணும்ன்னு அதிரடி விளக்கம் கொடுத்து அவரைக் கப்சிப் ஆக்கிட்டாராம் கே.சி.வீரமணி.''’

rra

""எம்.பி. தேர்தல் களத்தில் இத்தனை ரணகளமா? ராஜ்யசபாவில் தமிழ்நாட்டின் 6 எம்.பி.க்கள் பிரியா விடைபெற்றிருக்காங்க. வைகோ உள்ளிட்டவர்கள் உற்சாகமா பதவியேற்றிருக்காங்க..''’

""ஆமாங்க தலைவரே, தமிழகத்தி லிருந்து தேர்வு செய்யப்பட்ட 6 ராஜ்யசபா உறுப்பினர்களில் அன்புமணியை தவிர மற்றவர்களான தி.மு.க.வின் வில்சன், சண்முகம், அ.தி.மு.க.வின் முகமது ஜான், சந்திரசேகர் இவர்களோடு ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோவும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். 23 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் கர்ஜனைக்குரல் மீண்டும் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க ஆரம்பிச்சிருக்கு. இதற்காக 2 நாள் முன்னதாகவே டெல்லி சென்ற வைகோ, தன் நெருங்கிய நண்பரான மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ்பெர்னான்டஸ் வீட்டிற்குப் போய், அவர் படத்துக்கு நெகிழ்வாக அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பா.ஜ.க.வின் சீனியர் மோஸ்ட் லீடரான அத்வானியையும் சந்திச்ச வைகோ, 23 வருசத்துக்கு பிறகு மீண்டும் நான் ராஜ்ய சபாவுக்கு நுழையக் காரணமானவர் ஸ்டாலின்னு பெருமிதமா சொல்லியிருக்காரு.''’

""போன 24-ந்தேதியோடு தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.க்களான மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், செல்வ ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா ஆகி யோரின் பதவிக் காலம் முடிஞ்சிது. மீண்டும் நாடாளுமன்றம் வர வாய்ப்பு கிடைக்காத மைத்ரேயன் பேசும்போது, எனது பாராளுமன்ற சகாப்தம் முடியுது. ஆனால் இனிமேல் மாநில அரசியலில் என் சூர்யோதயம் ஆரம்பிக் கிதுன்னு கண்ணீரோடு விடைபெற்றுக்கிட்டார். ஜெ.’வின் கடைசி நாள்வரை அப்பல்லோவில் இருந்து அனைத்தையும் கவனித்தவரான துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு ராஜ்யசபா தலைவரின் இருக்கையிலிருந்து மைத்ரேயனின் பேச்சைக் கூர்ந்து கவனித்தார். அதை கவனிச்சியா?''

""எல்லாரும் எல்லாத்தையும் கவனிச்சிக் கிட்டிருக்காங்க.… ஆகஸ்ட் 7, கலைஞரின் முதலாமாண்டு நினைவுநாள். அன்னைக்கு முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் சிலையை மம்தா திறந்து வைக்கிறார். அதற்கு ரஜினி, கமல் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கு. யார் யார் வருவாங்கன்னு அரசியல் வட்டாரம் கவனிக்குது.''