"ஹலோ தலைவரே, சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அடக்கி வாசிச்சாலும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோதல் பலமா இருக்கே...''

""வேலூரில் மறுபடியும் பணப்பட்டுவாடா புகார்களும் ரெய்டுகளும் தீவிரமாகியிருக்கே... இந்த முறையாவது தேர்தல் நடக்குமா?

""போன முறை மாதிரியே இப்பவும் தி.மு.க.வை குறி வச்சித்தான் ரெய்டு நடக்குது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தனக்கு அ.தி.மு.க. தரப்பு சரியா ஒத்துழைக்கலைங்கிறதை டெல்லி பா.ஜ.க.வரைக்கும் கொண்டு போக, அங்கிருந்து அ.தி.மு.க. தலைமைக்கு உத்தரவுகள் தரப்பட்டிருக்கு. ஆனா, அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.க்களை பா.ஜ.க. தன் பக்கம் இழுக்க நடத்திவரும் பேரங்களால் அப்செட்டாகியிருக்கும் எடப்பாடியோ ஏ.சி.எஸ்.ஸை சரியா கண்டுக்கலை. அதனால, டெல்லி பா.ஜ.க. தலைமையே ரெய்டு மூவ்களுக்கு வியூகம் வகுத்துக் கொடுத்திடிச்சாம்.''

""நெருக்கடிகளை சமாளிக்க தி.மு.க. என்ன வியூகம் வகுத்திருக்குதாம்?''

Advertisment

nn

""எம்.பி. தேர்தலில் கிடைச்ச வெற்றிங்கிறது வேலூர் மூலமாகத்தான் முழுமையடையும்னும் தி.மு.க. நினைக்குது. ஆளுந்தரப்பின் பணப்பட்டுவாடாவை கண்கொத்திப் பாம்பா கவனிப்பதோடு, மாவட்டத்தின் முக்கிய பிரமுகர்களை தி.மு.க. பக்கம் கொண்டுவரும் வேலைகளும் கச்சிதமா நடக்குது. வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசே கரன் காங்கிரஸில் செல்வாக்கோடு இருந்தவர். அப்புறம் த.மா.கா.வுக்குத் தாவி, அதன்பிறகு, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பாணியில் அ.தி.மு.க.வுக்கு வந்தாரு. ஆனா, ஜெ. அப்பல்லோவில் அட்மிட்டாயிட்ட தால பெருசா எதுவும் அமையலை. ஜெ. மரணத்துக்கப்புறம் அ.ம.மு.க.வுக் குப் போனவருக்கும் பெரிய பலனில்லை. இந்த நேரத்தில் வேலூர் தொகுதி வெற்றியில் கவனமா இருக்கும் தி.மு.க.வின் பார்வை அவர் பக்கம் திரும்புச்சு. தி.மு.க. சீனியர் துரைமுருகன் ஸ்கெட்ச் போட்டு ஞானசேகரனை தங்கள் பக்கம் கொண்டு வந்துட்டார். இயல்பிலேயே திராவிட இயக்கங்கள் மேல் கசப்புணர்ச்சி கொண்ட ஞானசேகரன், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் சேர்ந்ததை அவர் ஆதரவாளர்களாலேயே நம்ப முடியலையாம். ஆனாலும் தேர்தல் கள அரசியல்ங் கிறது இதையெல்லாம் கடந்ததாச்சே..''

Advertisment

rrr

""ஆமாப்பா.. அரசியல்ல எந்த மேஜிக் வேண்டுமானாலும் நடக்கும். பா.ஜ.க.வை காங்கிரசே கூட பாராட்டலாம்.''

""பாராட்டிட்டாங்க தலைவரே.. 11-ந்தேதி ராஜ்ய சபாவில் பேசிய காங்கிரஸ் சீனியரான ப.சி., நிர்மலா சீதாராமன் தாக்கல் செஞ்ச பட்ஜெட்டைக் கடுமையா விமர்சனம் செஞ்சு பல்வேறு கேள்விகளையும் எழுப்பினார். மறுநாள் இதுக்கு நிர்மலா சீதாராமன் பதில் சொல்ல இருந்த நிலையில், அவரிடம் ப.சி. நீங்கள் எனக்கு பதில் சொல்லும் நாளில் நான் அவையில் இருக்க மாட்டேன். வைரமுத்துவின் தமிழாற்றுப்படை வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்குப் போறேன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். ஆனாலும் மறுநாள் நிர்மலா சீதாராமன் தன் பேச்சில் ப.சி.யின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார். அப்ப, அவையில் இருந்த காங்கிரஸ் சீனியர்களான குலாம் நபி ஆசாத், மோதிலால் ஓரா, அகமது படேல் ஆகியோர் நிர்மலா சீதாராமனின் அறைக்கே போய்... மேடம் உங்க ஆர்க்யுமெண்ட் அபாரம்னு கைகொடுத்துப் பாராட்டி இருக்காங்க. இது காங்கிரஸுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''

""நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக் குப் பிறகு, மாலுமி இல்லாத கப்பலா காங்கிரஸ் தள்ளாடுதே?''

""சோனியாகாந்திகிட்டயே கட்சியின் சீனியர்கள் இதைச் சொல்லியிருக்காங்க. 13-ந் தேதி சோனியாவை வீட்டில் சந் திச்ச கட்சியின் சீனியர் தலைவர்களான மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், அகமது படேல் உள்ளிட்டோர், கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செஞ்சதால, பல மாநிலங்களிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை இழந்து ராஜினாமா செய்றாங்க. கர்நாடகா, கோவான்னு நம்ம எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலை பேசி வளைச்சிடிச்சி. அதனால் நீங்களோ அல்லது ராகுலோ, பிரியங்காவோ கட்சித் தலை மையை ஏற்றால்தான் கட்சியை மறுபடியும் நிமிர்த்த முடியும்னு காரண காரியங்களோட எடுத்துச் சொல்லியிருக்காங்க. விரைவில் நல்ல முடிவைச் சொல்றேன்னு சோனியா சொல்லியிருக்காராம்.''’

""ஜெ.விடம் உதவியாளரா இருந்த பூங்குன்றனைத் தன் னோடு இருக்கும்படி முதல்வர் எடப்பாடி அழைக்கிறாராமே?''’

eps

""ஆமாங்க தலைவரே, ஜெ.’ மீது விசுவாசம் கொண்ட வர் பூங்குன்றன். ஜெ.’ இறந்தநாளை மனசில் வச்சி, காசிக்குப் போய் திதி கொடுத்தாராம். அவருக்கு எடப்பாடி பலமுறை அழைப்பு கொடுத்தும் பூங் குன்றனிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால் பூங்குன்றனுக்கு நெருக்கமானவரான திருக்கடையூர் கோவில் கணேஷ் குருக்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மூலம் அணுகியது எடப்பாடி தரப்பு. குருக்கள்கிட்டேயும் பூங்குன்றன், ஏற்கனவே சசிகலா என்னை தினகரனுக்கு உதவியாளராக இருன்னு அனுப்பிவச்சார். அதனால் தினகரனைப் பார்க்கப் போய், மூன்று மணி நேரம் காத்திருந்தும் பார்க்க முடியலை. கார்டனில் ஜெ.வுக்கு ஒரு பிள்ளைபோல் இருந்தேன். அப்படியே மனசில நினைச்சிக்கிட்டு இருந்திடுறேன். எந்தப் பக்கமும் போக விரும்பலைன்னு மறுத்துட்டாராம்.''’

""என்கிட்டேயும் ஒரு மறுப்புச் செய்தி இருக் குப்பா... தி.மு.க. இளைஞரணிச் செயலாளரான உதயநிதி தன்னோட அதிரடி நடவடிக்கையால மதுரை பாலாஜியை மாத்திட்டாருன்னு நாம பேசி யிருந்தோம். அது அப்படியில்லை. இளைஞரணி யில் பாலாஜி சிறப்பா செயல்பட்டதால், அவருக்கு மாவட்ட துணைச்செயலாளரா புரமோஷன் கொடுத் துட்டு, அவர் இடத்தில் மதன் குமாரை நியமிச்சிருக்காங்க. உதயநிதி பொறுப்பேற்றதும் இது அதிகாரப்பூர்வமா முர சொலியில் அறிவிக்கப்பட்டி ருக்கு. அவ்வளவுதான்... அடுத்த மேட்டருக்குப் போவோம்...''

""உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதைத் தள்ளிப்போடும் வகையில் அக்டோபர் மாசம் வரை கோர்ட்டில் அவகாசம் கேட்டிருக்குதே எடப்பாடி அரசாங்கம்?''’’

""இப்போதைய நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தினா எதிர்க்கட்சிகளோட பலம் மட்டுமில்லாமல், ஆளுங்கட்சித் தரப்பின் உள்குத்தே மண் கவ்வ வச்சிடும்னு எடப்பாடி தயங்குறாரு. எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. தோற்றதோடு, அதன் வாக்குவங்கியும் பெரியள வில் சரிஞ்சிடிச்சி. அதை மறைக்கத்தான், குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல, மக்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க. ஏமாத்தி ஜெயிச்சிடிச்சின்னு எடப்பாடியும் மற்ற அமைச்சர்களும் சபையிலும் வெளியிலும் திரும்பத் திரும்பப் பேசுறாங்க. ஆனாலும், தி.மு.க.வோட வாக்குறுதிகளின் வலிமை ஆளுந்தரப்பை ரொம்பவே யோசிக்க வச்சி, புது வியூகம் வகுக்க வச்சிருக்காம்.''’’

""என்ன வியூகம்?''’’

""தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில், 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்துங்கிற வாக்குறுதி கிராமப்பகுதிகளில் குறிப்பா பெண்கள்கிட்டே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒட்டுமொத்தமா ஜெயிச்சி, தி.மு.க. ggஆட்சியைப் பிடிச்சிருந்தா இந்த வாக்குறுதியை நிறைவேற்றி, பெண்கள் ஓட்டுகளை தக்க வச்சிருக்கும். இப்ப அதை அ.தி.மு.க. செய்ய நினைக்குது. கஜானா நிலைமை மோசம்னாலும், 5 பவுன் அல்லது 3 பவுன் வரையிலான கடன்களை ரத்து செய்தால், அது தேர்தலுக்கான ஜாக்பாட் திட்டமா அமையும்னு நினைக்கும் எடப்பாடி, அது சம்பந்தமா கூட்டுறவு வங்கிகளில் கணக்கு கேட்டிருக்காராம். அவரோட சேலம் மாவட்டத்திலும் பக்கத்திலுள்ள நாமக்கல் மாவட்டத்திலும் கணக்கெடுப்பு வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு.''’’

""காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டுற நேரத்தில் காஞ்சி சங்கரமடத்தில் சத்தமில்லாமல் பல விஷயங்கள் நடக்குதாமே?''’

""அதைப் பற்றி நான் சொல்றேன்.… ஜெயேந்திரர் உயிரோடு இருந்தபோது, அவரோட உதவியாளரான ஸ்ரீராம், ஏதோ ஒரு கோயில்ல இருந்த 10 மரகத லிங்கத்தை, சங்கரமடத்தில் இருந்த முக்கிய ஊழியரான காலடி விசுவநாதன் என்பவரிடம் ஒப்படைச்சி, கையெழுத்தையும் வாங்கியிருந் தாராம். அந்த சிலைகளில் ஒன்றைப் பாலில் போட்டு, அந்தப் பால் நீல நிறமானதைக் காட்டி, மடத்தில் இருந்தவர் களிடம் சிலையின் மகத்துவத் தை விளக்கினாராம் ஜெயேந் திரர். இப்போது அந்த 10 மரகத சிலையும் மடத்தில் இருந்து, மாயமாகிவிட்டதாம். அதே போல் 2005 முதல் 2014 வரை நடந்த மடத்தின் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கான டிரான்ஸ் சாக்சன்களில் பெரும் முறை கேடுகள் நடந்திருக்கிறதாம். இதற் கான ஆதாரங்களை எல்லாம் ஆடிட்டர் தரப்பு கையில் வைத் துக்கொண்டு, விஜயேந்திரர் வரை அனைவரையும் சிறைக்கு அனுப்புவேன்னு மிரட்டுதாம். அதேபோல் இப்போது சங்கர மடத்திற்குள் ராமகிருஷ்ணன், ஸ்ரீதர் ஜோஷி, ஆனந்த் சர்மா ஆகிய நபர்களின் ஆதிக்கம் தான் அதிகம்ன்னு மடத்துத் தரப்பே சொல்லுது. இந்த ஆனந்த் சர்மா யாருன்னா, காஞ்சி வரதராஜபெருமாள் கோவிலில் கொல்லப்பட்ட சங்கரராமனோட மகன். இந்த கொலை கேசில்தான் ஜெயேந் திரரும் விஜயேந்திரரும் ஜெயிலுக் குப் போனாங்க. இப்ப அந்த விஜயேந்திரரோடு அத்திவரதர் தரிசனத்துக்கு வரதராஜ பெரு மாள் கோவிலுக்குக் கூடவே வந்திருக்காரு சங்கரராமன் மகன் ஆனந்த்சர்மா.''