"ஹலோ தலைவரே, எம்.பி. தேர்தலுக்கப்புறம் காங்கிரசால ஆளுங்கட்சியாக முடியல. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்கலை. இப்ப கட்சிக்குத் தலைமைகூட இல்லாம தவிக்குதே..''

""ஆமாம்பா, ‘காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம்ங்கிற பா.ஜ.க. அசைன்மெண்ட்டை காங்கிரஸே நிறைவேத்தப் பார்க்குதோ என்னவோ?''’

eps

""உங்க கிண்டலுக்கு அளவில்லீங்க தலைவரே, தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேத்துக்கிறேன்னு சொல்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை அதிரடியா ராஜினாமா செய்தார் ராகுல்காந்தி. அவரை சமாதானப்படுத்த முடியாத கட்சியின் சீனியர்கள், சோனியாவை தலைமையேற்கச் சொன்னப்ப அவரும் மறுத்துட்டாரு. காங்கிரஸ் கட்சியே நேரு குடும்பத்தின் சொத்தாயிடிச்சின்னு பா.ஜ.க. வைத்து வந்த குற்றச்சாட்டை, இந்த சமயத்திலாவது முறியடிக்கிற மாதிரி, நேரு குடும்பத்துக்கு வெளியில் இருந்து ஒருவரை கட்சித் தலைவராக்கலாம்ன்னு சோனியாவின் முடிவு. ராஜீவ் காலத் தில் இருந்து சோனியா குடும்பத்துக்கு நெருக்க மானவரா இருக்கும் மணிசங்கர அய்யரும், நேரு குடும்பம் தலைமை ஏற்கலைன்னா என்ன, கட்சியின் முக்கியப் பதவிகளில் இருந்து அவங்க கட்சியை வழிநடத் தட்டும்ன்னு ஒருவித காம்பரமைஸிங் வாய்ஸைக் கொடுத்திருக்கார்.''’’

Advertisment

""காங்கிரசுக்கு நேரு குடும்பத் தைத் தாண்டி இப்ப தலைமை யேற்க சரியான ஆளு யாரு இருக்கா?''

""ராஜீவ் கொல்லப்பட்ட சமயத்தில் மாற்றுத் தலைமைகள் உருவானாலும், சோனியா தலைமை ஏற்ற பிறகுதான் காங்கிரஸால் ஆட்சியைப் பிடிக்க முடிஞ்சிது. இருந்தாலும் இப்போதைய நிலையில், புதிய தலைவரைத் தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டுது. மன்மோகன்சிங்கை தலைவர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் கேட்டப்ப, கட்சி சுமையை சுமக்கும் வலிமை எனக்கில்லைன்னு நழுவிட்டார். இப்ப புதிய தலைவருக் கான ரேஸில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட், ம.பி. முதல்வர் கமல்நாத், மாஜி ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணி, கட்சியின் சீனியரான குலாம்நபி ஆசாத், ddfaதமிழ்நாட்டின் ப.சிதம்பரம் உள்ளிட்ட 11 பேர் இருக்காங்க. விரைவில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் மாநிலங் களுக்கான சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், அதற்குள் ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்து கட்சியை பலப்படுத்தணுங்கிற வேகம், காங்கிரஸ் சீனியர்கள்ட்ட தெரியுது.''’

""தமிழ்நாட்டு அரசியலில் என்ன விசேஷம்?''’

Advertisment

""முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியும் ஒரே கொங்குமண்டலத் தைச் சேர்ந்தவர்களா இருந்தபோதும் தன்னை விட அமைச்சர் தங்கமணிக்குதான் எடப்பாடி அதிக முக்கியத் துவம் கொடுக்கறார்ன்னு நினைக்கிறார் வேலுமணி. இதுக்கிடையில், சென்னை மாநகராட்சியின் மூன்று மண்டலத்தைச் சேர்ந்த குப்பைகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று அள்ளுது. இதேபோல் சென்னையின் 15 மண்டலத்தின் குப்பைகளை அள்ளும் ஆறாயிரம் கோடி ரூபாய்க்கான காண்ட்ராக்ட்டை உள்ளாட்சித்துறை கையில் வச்சிருக்கு. இதைத் துறை அமைச்சரான தானே தன் ஆட்கள் மூலம் ரகசியமா எடுத்துச் செய்ய நினைச்சார் வேலுமணி. ஆனால் எடப்பாடி, அதுக்கு செக் வச்சுட்டார். காரணம், எடப்பாடி மீது மோடிக்கு நம்பிக்கை இல்லைங்கிறதைத் தெரிஞ்சிக்கிட்ட வேலுமணி, எடப்பாடிக்கு பதில் என்னை முதல்வராக் குங்கள்ன்னு ஜக்கி வாசுதேவை பா.ஜ.க. தரப்பிடம் தூது விட்டாராம். இது தெரிஞ்சதாலதான் காண்ட்ராக்ட் விஷயத் தில் எடப்பாடி கறார் காட்டினாராம். இதனால் எடப் பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தும் விதமா ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை வேலுமணி வாபஸ் வாங்கினாராம். அதேபோல் சர்வதேச குதிரைச்சவாரிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவையைச் சேர்ந்த வீரர்களான சரவணன், சபரி, அவந்திகா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடியை சந்திச்சி ஆசிபெற நினைச்சப்ப, அவங்களை அமைச்சர் தடுத்து விட்டதாகவும் டாக் அடிபடுது.''’

""சொந்தக்கட்சியிலேயே அதிருப்தி இருக்கிற நிலையில், பலமான எதிர்க்கட்சியை எப்படி பட்ஜெட் கூட்டத் தொடரில் எடப்பாடி மேனேஜ் பண்ணப் போறார்?''’

dd

"ஆளுங்கட்சி எம்.எல்.ஏக் களை குஷிப்படுத்திட்டா மிச்சமிருக்கிற காலத்துக்கு ஆட்சி வண்டி ஓடும்ங்கிறதுதான் எடப் பாடி கணக்கு. எம்.பி. தேர்தல் சம யத்தில், கவனிப்புகள் தொடர்பா கொடுத்த உறுதிமொழிகள் சரியா நிறைவேறலைன்னு எம்.எல்.ஏ.க் கள்கிட்ட அதிருப்தி இருக்குது. அவங்களை குடும்பத்தோடு வரவழைச்சி, வெயிட்டான கிஃப்ட்டுகளை தாராளமா வழங்குறதுன்னு எடப்பாடி திட்டமிட்டிருக்காரு. மக்களுக் கான திட்டங்களுக்கு பட்ஜெட் டில் நிதி இல்லை. கட்சி எம்.எல். ஏ.க்களைக் குஷிப்படுத்த கிஃப்ட் தரப்படுது.''’

""போனமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே சரியான முறையில் செயல்படுத்த லையாமே?''’

dd""ஆமாங்க தலைவரே, போன 2018-19 க்கான பட்ஜெட்டில் 220-க்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கு. ஆனால் அதில் முழுசா 15 திட்டங்களைக் கூட நிறைவேத்தலையாம். 50 சதவீத திட்டங்களுக்கு அரசாணையே போடப் படலையாம். இதை லேட்டா தெரிஞ்சிக்கிட்ட எடப்பாடி அப்செட்டாகி, 24-ந் தேதி அமைச்ச ரவைக் கூட்டத்தைக் கூட்டினாரு. அமைச்சர் களிடம் எரிஞ்சிவிழுந்திருக்காரு. அதேபோல, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 8-ல் ஓ.பி.எஸ். தாக்கல் செஞ்சார். அதில், மதுரை மாவட்ட திருமங்கலம், திருப் பரங்குன்றம், கள்ளிக்குடி ஆகிய 3 வட்டங்களை உள்ளடக்கி புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும்ன்னு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கும் இன்னும் அரசாணை போடப்படலை யாம். ஏன் இப்படின்னு எடப்பாடி கேட்க, தேர்தல் நடத்தை விதிகள் அமலானதால்தான் அப்படின்னு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சொல்லியிருக்கார். எடப்பாடியோ, தேர்தல் தேதி அறிவிக்கப்படுறதுக்கு முன்பே வெளியிடப்பட்ட அறிவிப்பு இது. அதனால், அது எப்படி இதைக் கட்டுப்படுத்தும்ன்னு அமைச்சருக்குக் கிடுக்கிப்பிடி போட்டிருக்காரு. துறையில் என்ன நடக்குதுன்னு அமைச்சர் களுக்குத் தெரியலை. அமைச்சர்கள் என்ன செய்றாங்கன்னு முதல்வருக்குத் தெரியலை. எல்லா இடத்திலும் கெக்கபிக்கேதான்.''’

""இப்படிப்பட்ட சூழல்ல சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரப் போகுதே. இதை எப்படி எடப்பாடி சமாளிக்கப்போறார்?''

""இது சம்பந்தமாவும் அதே அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஆலோச்சிருக்கார் எடப் பாடி. அமைச்சர்கள் பலரும், நம்பிக்கையில் லாத் தீர்மானத்தில் தி.மு.க. நமக்கு பெரிய அழுத்தத்தைக் கொடுக்காது. அந்தத் தீர்மானத்தை அவங்க வாபஸ் பெற்றாலும் ஆச்சரியமில்லை. அதேபோல் இடைத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள். ஆட்சிக் கவிழ்ப்பை விரும்ப மாட்டாங்க என்பதையும் தி.மு.க. தலைமை புரிஞ்சி வச்சிருக்கு. அதனால் நாம் பயமில்லா மல் பயணிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க.''

""எடப்பாடி என்ன சொன்னாராம்?''’’

""குடிநீர்ப் பிரச்சினை போன்ற அடிப்படை பிரச்சினைக்காக தி.மு.க சபையில் கூச்சல் எழுப்பும் பட்சத்தில், அதற்குரிய மூத்த அமைச் சர்கள் பேசினால் போதும். சபையில் எந்த சூழலிலும் நம் கட்சி உறுப்பினர்கள் குந்தகம் ஏற்படுத்தாமல் பார்த்துக்கங்கன்னு அமைச்சர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார் எடப்பாடி. ஆனாலும் 100-ஐத் தாண்டிய எம்.எல்.ஏ.க்களின் பலத்தோடு தி.மு.க. இருக்கிறது. அதோடு, அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் கவனமாகவே இருக்கவேண்டும் என்று எடப்பாடி ஒவ்வொரு நிமிடமும் பரிதவிப்போடும் குழப்பத்தோடும்தான் இருக்காராம். அதனால்தான் அவருக்கு அப்பல்லோ போய் ட்ரீட்மெண்ட் எடுக்கும் அளவுக்கு பிரஷராம்.''’’

""தினகரன் கட்சியிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் அ.தி.மு.க.வுக்குப் போகப் போகிறார்ன்னு பேச்சு இருக்கே?''’

""தங்க தமிழ்ச் செல்வன் கோபமா பேசுனதா சொல்லி, வாட்ஸ்ஆப்பில் ஒரு ஆடியோ கூட கேட்டிருப்பீங்க தலைவரே.. அவர், அ.தி.மு.க.வுக்குப் போகும் முடிவில் தெளிவா இருக்காராம். அண்மையில் தினகரனின் அடையாறு வீட்டில் ரெண்டு பேரும் சந்திச்சிருக்காங்க. தி.மு.க.வுக்குப் போகப் போறதா செய்தி வருவது பற்றி தினகரன் கேட்க, போனால்தான் என்ன? செந்தில் பாலாஜி என்னை கூப்பிடறார்ன்னு தங்க தமிழ்ச்செல்வன் சொல்லியிருக்கார். இந்தத் தகவல் சசிகலா காதுக்குப் போக, போனால் போகட்டும் என்று கடுப்பாகச் சொல்லி யிருக்கார். இந்த நிலையில் அமைச்சர் சி.வி.சண் முகத்தை தங்க தமிழ்ச்செல்வன் சந்தித்திருக் கிறார். அப்போது ஓ.பி.எஸ்., தன் மகனை எம்.பி.யாக ஆக்கிவிட்டார். தேனி மாவட்டத்தில் அவர் ஆதிக்கத்தை எதிர்கொள்ளணும்னா, ராஜ்யசபா எம்.பி.ங்கிற பதவியோடு எனக்கு கட்சியில் வாய்ப்பு கொடுங்கன்னு தங்கதமிழ்ச் செல்வன் கேட்டிருக்காரு. இது எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டுபோகப்பட்டிருக்கு. இந்தத் தகவல் ஓ.பி.எஸ். காதுக்கும்போக, தமிழ்ச்செல்வனைக் கட்சியில் சேர்க்கக் கூடாது என கறார் குரல் எழுப்பியிருக்கிறாராம் ஓபி.எஸ்.''’

""தி.மு.க. மீதான பா.ஜ.க.வின் பார்வை இப்ப கனிவா மாறியிருக்குன்னு சொல்லப் படுதே?''’

""தங்களோடு கூட்டணி போடாவிட் டாலும், காங்கிரசோடு தி.மு.க. சேரக் கூடாதுன்னு தேர்தலுக்கு முனனாடி பா.ஜ.க. வகுத்த வியூகம் ஒர்க் அவுட் ஆகலை. தமிழ் நாட்டில் காங்கிரஸ் நல்ல வெற்றி பெற, பா.ஜ.கவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கலை. இப்ப உள்ளாட் சித் தேர்தல் தொடர்பா தி.மு.க.-காங்கிரசிடையே விவ காரமாகியிருப்பதால், . பா.ஜ.க. வின் பார்வை தி.மு.க. மீது கனிவாய் விழத் தொடங்கி யிருக்கு. டெல்லியில் தி.மு.க .வுக்கு வழக்கு உள்பட பல வேலைகள் இருக்கு. நம்ம தயவு தேவைப் படும். இப்போதைக்கு அவங்களை சீண்டவேண் டாம்னு இங்குள்ள பா.ஜ. க.வினருக்கு சொல்லப் பட்டிருக்காம்.''’

""மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலின், பிக்பாஸ் சீசன் 3 எப்படி?''’

""அதை டி.வி.ரசிகர்கள் பார்த்துக்குவாங்க. அவரோட கட்சிக்காரங்க என்ன பார்க் குறாங்கன்னு நான் சொல் றேன். தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளில், வரும் 28-ந்தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடக்கப் போகுது. பெரிய கட்சிகளே இதில் ஆர்வம் காட்டாத நிலையில், கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றுத் தங்கள் கருத்துக்களைத் தவறாமல் பதிவு செய்யுமாறு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருக்கார் கமல். குடிநீர் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் விவகாரம்னு பற்றி எரியும் பிரச் சினைகளில் கமல் ஒதுங்கி இருந்த நிலையில், கிராமத்தையாவது கவனிச்சாரேன்னு அவர் கட்சி நிர்வாகிகள் ஆறுதல் அடையு றாங்க.''’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா. பா.ம.க.வின் சார்பு அமைப்பான தமிழ்ப் படைப்பாளர் பேரவையின் சார்பில் சென்னையில் கடந்த 22-ந் தேதி நடத்தப்பட்ட வெறுப்பு அரசியலுக்கு எதிரான கருத்தரங்கத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவர் தன்னிடம், "நீங்கள் மரம் வெட்டினீர்களா' என்று கேட்டார் எனச் சொல்லிவிட்டு, அந்த நிருபரை அவன் இவன் என்று ஒருமையில் விளித்ததோடு, மிக மோசமான வசவு வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்தார். "இனி வெட்டியது பற்றி கேள்வி எழுப்புகிறவனை வெட்டுவோம்'னும் டாக்டர் கொந்தளிச்சாரு. சமீபத்திய தேர்தலில் பா.ம.க. சந்தித்த அதிர்ச்சித் தோல்வியாலும், தன்னுடைய வயது முதிர்ச்சியின் அடிப்படையிலும் டாக்டர் வெளிப்படுத்திய ஒருமையிலான வார்த்தைகள் ஊடகத்துறையினரை கொந்தளிக்க வச்சிடிச்சி. வெறுப்பு அரசியலுக்கு எதிரான கருத்தரங்கத்தில் இத்தனை வெறுப்போடு ஊடகத்துறையினரை டாக்டர் பேசியதற்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் பதிவாகுது..