ராங் கால் : மோடியைத் தெறிக்க விட்ட ‘நேசமணி’ உதயநிதிக்கு இளைஞரணி!

vadivel

"ஹலோ தலைவரே, அசத்தலான பெரும்பான் மையோடு, ரெண்டாவது தடவையா மோடி பிரதமர் பதவியை ஏற்கிற நாளில் உலகளவில் அந்த ’நேசமணி ஹேஷ்டாக்’ ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிச்சு மிகப் பெரியளவில் கவனிக்க வச்சிடிச்சி.''

""ஆமாப்பா.. துபாய்ல வேலை பார்க்குற தூத்துக்குடி மாவட்ட இன்ஜினியர் விக்னேஷ் பிரபாகர் தன்னோட சமூகவலைத்தள குரூப்புல ஒரு சுத்தியல் படம் போட்டு இது என்னன்னு கேட்கப்பட்டிருந்ததை பார்த்துட்டு, அது சுத்தியல்னும் அதால அடிச்சா டங்கு டங்குன்னு கேட்கும் னும், ஜமீன் அரண்மனையில பெயிண்ட்டிங் வேலை எடுத்து செய்த காண்ட்ராக்டர் நேசமணி தலையில அவரோட சொந்தக்காரர் இதைப் போட்டதால ரொம்ப பாவமாயிடிச்சின்னும் ட்விட் பண்ணிருந்தாரு. அவரு நக்கலா சொன்னது, ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடியைத்தான். ஆனா, அதை அறியாத அவரோட வடஇந்திய நண்பர் ஒருவர், நேசமணி நலம் பெற பிரார்த்திக்கிறேன்னு ஹேஷ்டாக் போட, அது இந்தளவுக்கு வைரல் ஆகும்னு யாருமே எதிர்பார்க்கலை.''

vadivel

""ஆமாங்க தலைவரே.. மத்திய, மாநில அரசியல் நிலைமைக்கேற்ப நேசமணியை வச்சி பலரும் ஹேஷ்டேக் போட, அது மோடியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்பை மிஞ்சி ட்ரெண்டிங் ஆயிடிச்சி. நேசமணி யாருன்னு நக்கீரனிலிருந்து பி.பி.சி. வரை இணையத்துல கட்டுரை வர ஆரம்பிச்சிடிச்சி. நியூஸ் சேனல்களில் ஸ்பெஷல் செய்தித் தொகுப்பு போட ஆரம்பிச்சிட்டாங்க. மோடி பதவியேற்கும் நாளில் அதை தெறிக்க விடுற அளவுக்கு, 2000ஆம் வருடம் வடிவேலு நடிச்ச படத்தின் காமெடி ஹிட்டாக, பா.ஜ.க. தரப்பில் கடுப்பாயிட்டாங்க. அதனால ட்விட்டர்ல ரிப்போர்ட் பண்ணி நேசமணி ஹேஷ்டேக்ஸை டெலிட் பண்ணிட்டு மோடி பதவி ஏற்பை முதலிடத்திற்கு கொண்டு வந்தாங்க.''

""பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிற புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி யும் ஒரு பிரஸ் மீட்டில் தொடர்ச்சியா கேள்வி கேட்ட, நிருபர்களைப் பார்த்து கடுப்பாகி, சாதி என்ன, ஊரு என்னன்னு கேட்ட விவகாரமும் பரபரப்பாயிடிச்சே..''’

""அரசியல் களத்தில் எல்லாமே பர பரப்புதாங்க தலைவரே.. தி.முக. இளைஞ ரணிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு ஏற்கப் போறாருங்கிறது லேட்டஸ்ட் பரபரப்பு. எம்.பி. தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சளைக்காம எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய் தாரு. மற்ற சீனியர்கள் அந்தளவு போகலை. பெரும்பாலானவங்க எம்.பி. வேட்பாள ரானதால அவங்கவங்க தொகுதியைத் தான் பார்க்க முடிஞ்சுது. கூட்டணிக் கட்சிகளிலும் வைகோ தவிர வேறு யாரும்

"ஹலோ தலைவரே, அசத்தலான பெரும்பான் மையோடு, ரெண்டாவது தடவையா மோடி பிரதமர் பதவியை ஏற்கிற நாளில் உலகளவில் அந்த ’நேசமணி ஹேஷ்டாக்’ ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடிச்சு மிகப் பெரியளவில் கவனிக்க வச்சிடிச்சி.''

""ஆமாப்பா.. துபாய்ல வேலை பார்க்குற தூத்துக்குடி மாவட்ட இன்ஜினியர் விக்னேஷ் பிரபாகர் தன்னோட சமூகவலைத்தள குரூப்புல ஒரு சுத்தியல் படம் போட்டு இது என்னன்னு கேட்கப்பட்டிருந்ததை பார்த்துட்டு, அது சுத்தியல்னும் அதால அடிச்சா டங்கு டங்குன்னு கேட்கும் னும், ஜமீன் அரண்மனையில பெயிண்ட்டிங் வேலை எடுத்து செய்த காண்ட்ராக்டர் நேசமணி தலையில அவரோட சொந்தக்காரர் இதைப் போட்டதால ரொம்ப பாவமாயிடிச்சின்னும் ட்விட் பண்ணிருந்தாரு. அவரு நக்கலா சொன்னது, ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வரும் வடிவேலு காமெடியைத்தான். ஆனா, அதை அறியாத அவரோட வடஇந்திய நண்பர் ஒருவர், நேசமணி நலம் பெற பிரார்த்திக்கிறேன்னு ஹேஷ்டாக் போட, அது இந்தளவுக்கு வைரல் ஆகும்னு யாருமே எதிர்பார்க்கலை.''

vadivel

""ஆமாங்க தலைவரே.. மத்திய, மாநில அரசியல் நிலைமைக்கேற்ப நேசமணியை வச்சி பலரும் ஹேஷ்டேக் போட, அது மோடியின் இரண்டாவது அமைச்சரவை பதவியேற்பை மிஞ்சி ட்ரெண்டிங் ஆயிடிச்சி. நேசமணி யாருன்னு நக்கீரனிலிருந்து பி.பி.சி. வரை இணையத்துல கட்டுரை வர ஆரம்பிச்சிடிச்சி. நியூஸ் சேனல்களில் ஸ்பெஷல் செய்தித் தொகுப்பு போட ஆரம்பிச்சிட்டாங்க. மோடி பதவியேற்கும் நாளில் அதை தெறிக்க விடுற அளவுக்கு, 2000ஆம் வருடம் வடிவேலு நடிச்ச படத்தின் காமெடி ஹிட்டாக, பா.ஜ.க. தரப்பில் கடுப்பாயிட்டாங்க. அதனால ட்விட்டர்ல ரிப்போர்ட் பண்ணி நேசமணி ஹேஷ்டேக்ஸை டெலிட் பண்ணிட்டு மோடி பதவி ஏற்பை முதலிடத்திற்கு கொண்டு வந்தாங்க.''

""பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிற புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி யும் ஒரு பிரஸ் மீட்டில் தொடர்ச்சியா கேள்வி கேட்ட, நிருபர்களைப் பார்த்து கடுப்பாகி, சாதி என்ன, ஊரு என்னன்னு கேட்ட விவகாரமும் பரபரப்பாயிடிச்சே..''’

""அரசியல் களத்தில் எல்லாமே பர பரப்புதாங்க தலைவரே.. தி.முக. இளைஞ ரணிக்கு உதயநிதி ஸ்டாலின் தலைமைப் பொறுப்பு ஏற்கப் போறாருங்கிறது லேட்டஸ்ட் பரபரப்பு. எம்.பி. தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சளைக்காம எல்லா தொகுதிகளிலும் பிரச்சாரம் செய் தாரு. மற்ற சீனியர்கள் அந்தளவு போகலை. பெரும்பாலானவங்க எம்.பி. வேட்பாள ரானதால அவங்கவங்க தொகுதியைத் தான் பார்க்க முடிஞ்சுது. கூட்டணிக் கட்சிகளிலும் வைகோ தவிர வேறு யாரும் பெருசா பிரச்சாரம் பண்ணமுடி யாதபடி அவங்கவங்களுக்கும் தொகுதி வேலைகள் இருந்தன. ஸ்டாலினுக்கு அடுத்தபடியா தி.மு.க. சார்பில் அதிகள வில் எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் பிரச் சாரம் செய்தவர் உதயநிதிதான். ஒவ் வொரு இடத்திலும் கூட்ட ஏற்பாடுகள் சிறப்பா இருந்தது. சினிமா நடிகர்ங் கிறதால பொதுமக்களும் ஆர்வமா வந்தாங்க. அவரும் ஆளுங்கட்சிக்கும் மத்தவங்களுக்கும் தனி ஸ்டைலில் பதிலடி கொடுத்து கூட்டத்தைக் கவர்ந்தாரு. தேர்தல் முடிவுகள், தி.மு.க.வுக்கு நம்பிக்கை தரும் வெற்றியைக் கொடுத்திருப்பதால, உதயநிதிக்கு இளைஞரணி தலை மைப் பதவி தரணும்ங்கிற வலியுறுத் தல் அதிகமாயிடிச்சி.''

stalin

""ஸ்டாலினாகிறார் உதய நிதின்னு சொல்லு''

""சித்தரஞ்சன் சாலை வீட்டி லிருந்துதான் இந்த ஆலோசனை தொடங்கியிருக்கு. உதயநிதிக்குப் பக்க பலமா இருக்கும் அன்பில் மகேஷ் இது தொடர்பா கட்சி நிர்வாகிகளின் கருத்தைக் கேட்டப்ப, பல மா.செ.க் களும் உதயநிதிக்கு இளைஞ ரணின்னு ஆதரவு தெரிவிச்சிருக் காங்க. டி.ஆர்.பாலு போன்ற சீனியர்களும் இதை வலியுறுத்த, ஸ்டாலினுக்கு மட்டும் கொஞ்சம் யோசனையா இருந்திருக்கு.''

""அவர் இளைஞரணி பொறுப் புக்கு வந்தப்ப கலைஞரும் ஆரம்பத்தில் யோசிச்சாரே?''

""ஆமாங்க தலைவரே.. ஸ்டா லினுக்கு இளைஞரணிப் பொறுப்பு கொடுக்கணும்னு, அப்ப கலைஞரிடம் ஆரம்பத்தில் பரிந்துரை செய்தவர், மறைந்த முன் னாள் அமைச்சர் தங்கபாண்டியன்தான். அதேபோல், இப்ப உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணிப் பொறுப்பைக் கொடுக்க ணும்னு தங்கம் தென்னரசு உள்ளிட்டோரின் ஆதரவுக் கோரிக்கை ஸ்டாலின் கவனத்துக்குப் போயிருக்கு. எந்த நேரத்தி லும் பொறுப்பு அறிவிக்கப்படலாம்ங்கிற எதிர்பார்ப்பு இருக்குது.''’

""தி.மு.க. தொண்டர்கள் என்ன சொல்றாங்க?''’

""வெற்றி கிடைச்சிருக்கிற நேரத்துல, அதுக்காக உழைச்சவ ருக்கு பரிசா பதவி தரலாம்ங்கிறது ஒரு தரப்பின் கருத்து. உள் ளாட்சித் தேர்தல் வரும்போது அது கட்சிக்கு உதவும்ங்கிறாங்க. இன்னொரு தரப்போ, தி.மு.க.வில் பெரிய பதவி எல்லாமே கலைஞர் குடும்பத்துக்கு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எடப் பாடி தொடங்கி அ.தி.மு.க.வில் அத்தனை பேரும் விமர்சனம் பண்ணுற நேரத்தில், உதயநிதிக்கு உடனடியா பதவி கொடுத்தால், அது தேவையில்லாத விவாதங்களை உருவாக்கும். ஆட்சியை தி.மு.க. பிடிக்கிற வரை, இப்ப கடைப்பிடிச்ச நிதானத்தை ஸ்டாலின் கடைப்பிடிக்கலாம்னு சொல்றாங்க. தி.மு.க.வைப் பொறுத்தவரை ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் ஸ்டாலின் கையில் இளைஞரணி இருந்தது. வலுவான கூட்டணி வச்சிருந்தாரு. அப்புறம், வெள்ளக்கோவில் சாமிநாதன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சப்ப, நிர்வாகிகள் ஒத்துழைப்பு சரியா கிடைக்கல. இப்ப தமிழக அரசியலில் இளம் வாக்காளர்களை குறிவச்சி புதுப்புதுக் கட்சிகள் வருவதால் தி.மு.க. இளைஞர் களை ஈர்க்க உதயநிதி போன்ற முகம் தேவைப்படுதாம்.''’

ragul

""மோடி பதவியேற்பு விழாவுக்கு நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வுக்கு அழைப்பு வரலைன்னு விமர்சனம் வருதே?''’

""தி.மு.க. எம்.பிக்களுக்கு அழைப்பு வந்தது. ஆனா, கட்சித் தலைவரான ஸ்டாலினுக்கு அழைப்பு வரலை. அதனால, தி.மு.க. எம்.பிக்களும் பதவியேற்பு விழாவை புறக்கணிச் சிட்டாங்க. ஸ்டாலினோ அதே நாளில் ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி பதவி யேற்பு விழாவில் கலந்துக்கிட் டாரு. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவும் கலந்துகிட்ட தால் தென்னிந்திய தலைவர்களிண் திடீர் கூட்டணி போல அந்த நிகழ்வு இருந்தது. அதேநேரத்தில் இன்னும் கட்சி தொடங்காத ரஜினிக்கு சிறப்பு அழைப்பு வந்த தால மோடி விழாவில் அவர் கலந்துக்கிட்டாரு. ம.நீ.ம. தலைவர் கமலுக்கு அழைப்பு அனுப்பப் பட்டதா தகவல் வந்தது. அப்படி யார் சொன்னதுன்னு பா.ஜ.க. பிரமுகர் நாராயணன் ட்வீட் பண்ணியிருந்தாரு. ம.நீ.ம. தரப்பி லோ முறையான அழைப்பிதழ் இல்லை, போனில் மட்டும்தான் அழைத்தாங்க. ஆனா, பா.ஜ.க. பி டீம்ங்கிற இமேஜை தவிர்க்க, எங்க தலைவர் போகலைன்னு சொல்றாங்க. பா.ஜ.க. தமிழகக் கூட் டணியில் இருக்கும் தே.மு.தி.க. விஜயகாந்த்துக்கு அழைப்பு இல்லாததால, பிரேமலதாவும், சுதீசும் ரொம்பவே அப்செட்.''’

""மத்திய மந்திரி பதவி தொடர்பா அ.தி.மு.க.வில் ஓ.பி. எஸ். மகன் ரவீந்திரநாத் பெயரும், ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கம் பெயரும் அடிபட்டதே?''

""டெல்லியில் அதற் கான லாபி ரொம்ப தீவி ரமா நடந்தது. பா.ஜ.க. சைடிலோ, தமிழகத்தில் காலியாகும் ராஜ்ய சபா தொகுதிகளில், அ.தி.மு.க. வுக்கு கிடைக்கக்கூடிய மூன்றில் ஒன்றை பா.ஜ.க.வுக்குத் தரணும்னு சொல்லப்பட்டதாம். அ.தி.மு.க. தரப்போ, ஏற்கனவே பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்னு ஒப்பந்தம் போட்டிருக்கோம். தர்மபுரியில் தோற்ற அன்புமணி, ராஜ்யசபா உத்தரவாதத்தால் டெல்லியில் அமைச்சர் பதவிக்கு முட்டி மோதிக்கிட்டிருந்தாரு. நமக்கு மோடி அமைச்சரவையில் கிடைக் கிற மரியாதையைப் பொறுத்து பா.ஜ.க.வுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்குவோம்னு ஆலோசிச் சிருக்கு. இதுக்கிடையில் பா.ம.க. விலோ, தொடர்ந்து அன்பு மணிக்கே சீட் கொடுக்காமல், கட்சியில் உள்ள மத்தவங்களை யும் கவனிங்கன்னு ராமதாஸிடம் நிர்வாகிகள் வலியுறுத்துறாங் களாம். பா.ம.க. பிரமுகர்கள் முரண்டு பிடிக்கிறாங்களாம்.''

rajini

""பா.ஜ.க. யாருக்காக தமிழ் நாட்டில் ராஜ்யசபா சீட் கேட்குது?''

""கோவையில் தோற்ற சி.பி. ராதாகிருஷ்ணனை ராஜ்யசபா எம்.பி.யாக்கி அடுத்த விரிவாக்கத் தில் மத்திய அமைச்சர் பதவி தரணும்னு மோடி ஆசைப்படு றாராம். இரண்டு பேரும் ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஒண்ணா வேலைத்திட்டங்களை கவனிச் சவங்க. இந்த முறை அ.தி.மு.க. அமைச்சர் வேலுமணியோட உள்குத்தாலதான் நான் தோற் றேன்னு பா.ஜ.க. மேலிடத்திடம் சொல்லியிருக்காரு சி.பி.ராதா கிருஷ்ணன். பொள்ளாச்சி இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுமையால சரிஞ்ச அ.தி.மு.க. செல்வாக்கை தூக்கி நிறுத்தி ஜெயிக்க வைக்கணும்னு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெய ராமனோடு சேர்ந்து, வேலுமணி கவனம் செலுத்தியிருக்காரு. அவர் தயவால இரண்டாவது முறையா சீட் வாங்கி தோற்றுப் போன பொள்ளாச்சி வேட் பாளர் மகேந்திரனுக்கு காட்டிய அக்கறையை கோவையில் தனக்கு வேலுமணி காட்டலைங்கிறது தான் சி.பி.ஆரின் புகார். 2014-ல் அ.தி.மு.க. துணை இல்லாமல் சி.பி.ஆர். வாங்குன ஓட்டைவிட இந்த முறை 10ஆயிரம் ஓட்டு குறைஞ்சிடிச்சின்னு லோக்கல் பா.ஜ.க.வினர் சொல்றாங்க. சூலூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்க ரொம்பவே மெனக்கெட்ட வேலுமணி, கோவை எம்.பி. தொகுதியை அலட்சியத்தால தோற்கடிச் சிட்டாருங்கிறதுதான் குற்றச் சாட்டு. அதனால சி.பி.ஆரை ராஜ்யசபா எம்.பியாக்கி மந்திரி பதவி தர வாய்ப்பிருக்காம்.''’

""தமிழ்நாட்டில் இன் னொரு இடைத்தேர்தல் களம் ரெடியாகுதே?''

""கன்னியாகுமரி எம்.பியான வசந்தகுமார், தன்னோட நாங்குனேரி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா பண்ணிட்டாரு. இடைத்தேர்தலை சந்திக்கப் போகும் நாங்குனேரியை பீட்டர் அல்போன்ஸ், ராணி வெங்க டேசன்னு காங்கிரஸ் பிரமுகர்கள் குறி வைக்கிறாங்க. ஒருவேளை, பொதுத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சோளிங்கரை இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது போல நாங்குனேரியிலும் நடக்கலாம். தி.மு.க. சைடில் ஆரோக்கிய எட்வின் பெயர் அடிபடுது. களக்காடு மாஜி பேரூராட்சித் தலைவர் பி.சி.ராஜனும் சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். தமிழக காங்கிரஸ் பிரமுகர்களோ, நாங்குனேரியை தி.மு.க.விடம் விட்டுக் கொடுத்துடாதீங்கன்னு ராகுலை வலியுறுத்தத் திட்ட மிட்டிருக்காங்க. பணப்பட்டு வாடாவால் நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதி யோடு சேர்ந்து விரைவில் இடைத் தேர்தலைச் சந்திக்க இருக்கும் நாங்குனேரியில் நிற்கப்போவது தி.மு.க.வா, காங்கிரசான்னு ரெண்டு கட்சித் தலைமையும் ஆலோசிச்சி முடிவெடுக்கும்.'’

""டெல்லி காங்கிரஸ் தலைமை என்ன யோசிக்குது?''’

""காங்கிரஸின் படு தோல்வியை ராகுலால் உடனடியா ஜீரணிக்க முடியலை. அதனால்தான் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்றதா கட்சியின் காரிய கமிட்டியில் அறிவிச்சி, அதில் உறுதி காட்டினாரு. அவரோட முடிவை மாத்திக்கணும்னு சொல்லி சென்னை, பெங்களூருன்னு பல நகரங்களிலும் காங்கிரசார் ஊர்வலம் விட்டாங்க. தீக்குளிக்க முயற்சித்தவர்களும் உண்டு. இதற்கிடையில், நாடாளுமன்றத் தில் பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரசோடு ஒத்துப் போகக்கூடிய கட்சிகளின் கூட்டத்தை 31-ந் தேதி அகமது படேல் தலைமையில் கூட்டு வதுன்னு 29-ந் தேதி முடிவானது. தி.மு.க. தலைமைக்கு உடனடியா தெரிவிக்கப்பட்டது. அதோடு, மம்தாவின் திரிணாமுல் காங் கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், 22 எம்.பி.க்களைக் கொண்டிருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங் கிரஸ்னு எல்லாக் கட்சிகளையும் ஒன்று கூட்டறது பத்தி ஆலோசிக் கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர், காங் கிரஸை சேர்த்துக்கிட்டா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் அதை ஜீரணிச்சிக்கு மான்னு ராகுல் பல விதத்திலும் கணக்குப் போட்டார். அதுக்கு முன்னாடி, தங்கள் கட்சியைச் சேர்ந்த வெற்றி பெற்ற 52 எம்.பி.க்களையும் சந்திக்க ஆயத்தமானாரு.''

""நானும் ஒரு தகவல் சொல் றேன். தமிழகத்தில் இருந்து ஒருவர் விரைவில் மிஸோரம் மாநிலத்தின் கவர்னராகப் போகிறார்ன்னு டெல்லியில் இருந்து தகவல் வருது. அது வேறு யாருமல்ல. குமரியில் தோல்வியைத் தழுவிய முன் னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். தமிழக பா.ஜ.க.வின் சீனியரும் மேல்மட்டத்துடன் நல்ல தொடர்பில் இருப்பவருமான அவருக்கு தரப்படும் மரியாதை யாம் இது. அதேபோல், கேரள கவர்னராக இருக்கும் நீதிபதி சதாசிவம், மத்திய அமைச்ச ரவையில் இடம்பெறுவார் என்ற செய்தியும் பரவியது. அடுத்தடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க லாம்னு தெரியுது. நிர்மலா சீதா ராமன், ஜெய்சங்கர்னு தமிழ் நாட்டைப் பூர்வீகமா கொண்ட வங்க புதிய அமைச்சரவையில் இருந்தாலும், தமிழ்நாட்டோடு தொடர்புடையவர்ங்கிற முறை யில் சதாசிவத்துக்கு அடுத்த கட்டமா சான்ஸ் தரப்பட லாமாம்.''

nkn040619
இதையும் படியுங்கள்
Subscribe