ராங் கால் : வாரிசு அரசியல்! அ.தி.மு.க. கர்... புர்...!

ff

"ஹலோ தலைவரே, ஒரு சீட்டு ஜெயிச்சாலும் மத்திய மந்திரி சபையில் இடம் பிடிக்க அ.தி.மு.க.வில் தீராத ஆசை இருக்கு.''’

""இருக்காதா.. சரியான தலைமை இல் லாமலேயே இரண்டு வருசமா மாநிலத்தில் ஆட்சியைக் காப்பாற்றி, பதவி சுகத்தின் பலாபலன்களை அனுபவிக்கிறாங்களே.''’

""உண்மைதாங்க தலைவரே, தேனியில் முழு அதிகார பலத்தைப் பயன்படுத்தி, தன் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி.யாக்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., எப்படியும் மத்திய இணை யமைச்சர் பதவியை வாங்கித் தந்திடணும்னு பெரும் முயற்சியில் இருக்காரு.""

ra

""அ.தி.மு.க அணி படு தோல்வியை சந்திச்சிருக்கிற நிலையில், தன் மகனை அமைச்சராக்குவதில் ஓ.பி.எஸ். காட்டுற ஆர்வம் சீனியர் களை கொதிப்பாக்கியிருக்காமே?''

""ஆமாங்க தலைவரே.. அ.தி.மு.க. வில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து தர்மயுத்தத்தை செஞ்சிட்டு, இப்ப தன்னோட வாரிசை வளர்க்குறா ருன்னா, இதுக்காகத்தான் சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து ஓ.பி.எஸ். காலி பண்ணினாரான்னு கேட்குறாங்க. எடப்பாடியுடனான உரசல்களை சகிச்சிக்கிட்டதுகூட, தன் மகன் ரவீந்திரநாத்துக்கு எம்.பி. சீட் வாங்கி மத்திய மந்திரியாக்குவதற்குத்தான் னும், ரிசல்ட்டுக்கு முன்னாடி வாரணாசிக்குப் போன தற்கும் வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கத்தான்னும் பேசுறாங்க. ஓ.பி.எஸ். முயற்சிக்கு பிரேக் போட, ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கமும், டெல்லியில் டேரா போட்டிருக்கார். தனக்குப் பதவி வேணும்னும், ஓ.பி.எஸ். மகனுக்குக் கொடுத்தால், வாரிசு அரசியலால், மறுபடியும் அ.தி.மு.க. ஒரு பலமான பிளவைச் சந்திக்க நேரும்ன்னும் சொந்தக் கட்சிக்கே எச்சரிக்கை விடுத்துக்கிட்டு இருக்காராம். இதை டெல்டா மாவட்டத்தில் இருக்கும் சசிகலா, டி.டி.வி. தினகரன் சொந்தங்களும் தூண்டி விடுறாங்களாம்.''’

""ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறிவைக்கும் அ.தி.மு.க. சீனியர்கள் சிலரும் மத்திய மந்திரி பதவிக்காக காய் நகர்த்தறாங்களாமே?''’

""ஆமாங்க தலைவரே, ஜூலை மாதம் 24- ந் தேதியோ

""ஆமாங்க தலைவரே, ஜூலை மாதம் 24- ந் தேதியோடு தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடியுது. தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. அதன்படி பார்த்தால், அ.தி.மு.க. 3 எம்.பி.க்களையும் தி.மு.க 3 எம்.பி.க்களையும் போட்டியில்லாம தேர்ந்தெடுக்க முடியும். அதனால் இந்த ராஜ்யசபா சீட்டைக் கேட்டு, மாஜி துணை சபாநாயகரான தம்பிதுரை, கே.பி.முனுசாமி, அன்வர்ராஜா, மைத்ரேயன், தமிழ்மகன் உசேன், கோகுல இந்திரா, வேணுகோபால்ன்னு ஒரு பெரிய டீமே பரபரக்குது. இதில் தம்பிதுரைக்காக எடப் பாடியே ஆர்வமா இருந்தாலும், பழைய நிகழ்வு களை வைத்து பா.ஜ.க. நிராகரிக்குதாம். மைத்ரேய னோ ஓ.பி.எஸ். மூலம் ராஜ்யசபாவுக்கும் மத்திய மந்திரி பதவிக்கும் முட்டி மோதறார். அதோடு தனக்கு அதிகப் பழக்கமுள்ள பா.ஜ.க. சீனியரான அருண்ஜெட்லியிடமும் முயற்சி செய்யறார். ம.பி.யிலிருந்து பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப் பட்ட இல.கணேசனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்னு டாக் அடிபடுது. மத்தவங் களும் அவரவர் சோர்ஸில் வரிஞ்சிக்கட்டி நிக்கி றாங்க. முதல்வர் எடப்பாடியைப் பொறுத்தவரை, ஓ.பி.எஸ். மகனைத் தவிர, யாருக்கு வேணும்னாலும் மத்திய மந்திரி பதவி கொடுங்க, ஓ.பி.எஸ். மகனுக்கு வேண்டாம்ங்கிறதுதான் ஒரே நோக்கம். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டுன்னு ஒப்பந்தம் இருப்பதால, தருமபுரியில் தோற்ற அன்புமணி ராமதாஸுக்கு ராஜ்யசபா பதவி கேட்குறாங்க. தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.க. சைடில் லேசான தடுமாற்றம் தெரியுதாம்.''

dee

""தி.மு.க.விலும் ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறிவைத்து விறுவிறு வியூகங்கள் நடக்குது போலிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, தனக்கு இருக்கும் 3 ராஜ்யசபா சீட்டில் ஒன்றை, ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோவிற்கு கொடுக்கும் எண்ணத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதியாக இருக்கார். இதற் கிடையில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கிற்கு ஒரு சீட்டை தி.மு.க.விடம் எதிர்பார்க்கிறதாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையாத நிலையில், தி.மு.க. யோசிக்குதாம். அப்புறம், தனக்கு நம்பிக்கைக்குரிய ஒருவர் டெல்லிக்குப் போகணும்ன்னு ஸ்டாலின் நினைப்பதால், அவர் மருமகன் சபரீசனுக்கு ராஜ்யசபா யோகம் அடிக்கலாம்ன்னும் ஒரு பேச்சு அடிபடுது. ஏற்கனவே கனிமொழி, தயாநிதின்னு கலைஞர் குடும்பத்தினர் லோக்சபா எம்.பி.யாகி யிருக்கிற நிலையில், ராஜ்யசபாவுக்கு ஸ்டாலின் குடும்பத்து ஆளாங்கிற விவாதத்தை உருவாக்கணு மாங்கிற ஆலோசனையும் நடந்திருக்குது.''’

""லோக்சபா, ராஜ்யசபா பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவிச்சிருக்கே?''’

""கனிமொழியை மக்களவைத் தி.மு.க. தலை வரா ஆக்கிட்டு, துணை சபாநாயகர் பொறுப்புக்கு டி.ஆர்.பாலுவை தி.மு.க. தலைமை பரிந்துரைக்க லாம்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தி.மு.க. தலைமையோ நாடாளுமன்ற தி.மு.க. தலைவரா டி.ஆர்.பாலுவையும், துணைத் தலைவரா கனி மொழியையும், கொறடாவா ஆ.ராசாவையும், பொருளாளரா பழனிமாணிக்கத்தையும் அறிவிச் சிருக்கு. அதேபோல் ராஜ்யசபா தி.மு.க. தலைவரா திருச்சி சிவா நியமிக்கப்பட்டிருக்கார். டி.கே.எஸ். இளங்கோவன் கொறடாவா அறிவிக்கப்பட்டிருக் காரு. ஆலந்தூர் பாரதிக்கு எந்தப் பொறுப்பும் கிடைக்கலை. இதில் முக்குலத்தோர் லாபி இருக்குன்னும் ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ்னு ஸ்டாலினிடம் நெருக்கமாக இருப்பவங்க சாதிச்சிட்டாங்கன்னும் சொல்றாங்க தலைவரே..''’

""துணை சபாநாயகர் பதவியை ஏற்பது குறித்தும் தி.மு.க.விடம் தயக்கம் இருக்குதாமே?''’

""போன முறைபோல் இந்த முறையும் காங் கிரஸ், தனக்கு துணை சபாநாயகர் பதவி வேண் டாம்ன்னு மறுத்திட்டா, நாடாளுமன்றத்தின் மூன் றாவது பெரிய கட்சியான தி.மு.க.வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைக்கும் பட்சத்தில், சபாநாயகராக ஸ்மிருதி இரானி போன்ற பா.ஜ.க.வின் பெண் பிரபலம் அமர்த்தப்பட்டால், துணை சபாநாயகராக டி.ஆர்.பாலுவை தி.மு.க. உட்காரவைக்கும் என்றும், சபாநாயகர் பதவியில் ஆண் அமர்த்தப்பட்டால் தி.மு.க. வின் பெண் எம்.பி.யான கனிமொழிக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்கும்னும் டெல்லியில் பரபரப்பா பேசிக்கிறாங்க. ஆனா, தி.மு.க.வில் வேற விதமா யோசிக்கிறாங்க. பாலுவும் கனிமொழியும் வலிமையாக வாதங்களை அவையில் எடுத்து வைக்கக் கூடியவர்கள். துணை சபாநாயகராயிட்டா, நடுநிலையா நடக்கணும்ங்கிற பேரில், தமிழக நலனுக்கு எதிரான திட்டங்கள் ilதொடர்பான விவாதங்களில் தங்கள் உணர்வைப் பதிவுசெய்ய முடியாது. இப்போதைக்கு மக்கள் பிரச்சினைகளில்தான் தி.மு.க. கவனம் செலுத்தணும்னு ஆலோசிக்கப்பட்டிருக்கு. அதனால, துணை சபாநாயகர் பதவி தொடர்பா ஸ்டாலின் அவசரமா எந்த முடிவும் எடுக்க ரெடியா இல்லையாம்.''’

""இடைத்தேர்தலில் 13 எம்.எல்.ஏ.க்களை வென்றிருக்கும் தி.மு.க. சட்டமன்றத்தில் என்ன வியூகம் வகுக்கப்போகுதாம்?''

""எதிர்பார்த்த சில தொகுதிகளில் வெற்றி கை நழுவிப் போனது பற்றி ஸ்டாலினிடம் ரிப்போர்ட் போயிருக்குது. சாத்தூரில் வெறும் 456 ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க தன் வெற்றியை அ.தி.மு.க.விடம் பறிகொடுத்திருக்கு. அதேபோல் பரமக்குடியிலும் மானாமதுரையிலும் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கு. கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, செலவு செய்வார்ங்கிற நம்பிக்கையில்தான் கட்சியின் சீனியரான பொங்கலூர் பழனிச்சாமி சூலூரில் நிறுத்தப்பட்டார். ஆனால் அவ ரும் பத்தாயிரத்துச் சொச்ச ஓட்டில் தோல்வியைத் தழுவிட்டார். இது பற்றி தீவிரமா விசாரிச்சி, தவறு செய்த கட்சிப் பொறுப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை கட்சித் தலைமை எடுக்கணும்ங்கிற எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு. அப்பதான் தி.மு.க.வால் அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியும்ங்கிற பேச்சு இப்பவே எழுந்திருக்கு.''’

""ராகுல் தலைமையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும், தனக்குக் கிடைச்ச மோசமான படு தோல்வி பற்றி விவாதிச்சிருக்கே?''’

""25 ந் தேதி காங்கிரஸின் காரியக் கமிட்டி டெல்லியில் கூடுச்சு. அதில் சிறப்பு அழைப்பாளரா கலந்துக்கிட்ட பிரியங்கா காந்தி, நானும் ராகுலும் கடுமையா பிரச்சாரம் செய்தோம். ஆனால் சீனியர் தலைவர்கள் யாரும் இது போன்ற அக்கறையைக் காட்டலை. பா.ஜ.க. நம் மீது வைத்த புகார்களுக்கும் கூட நம் தலைவர்கள் பதில் சொல்ல வாயைத் திறக்கலைன்னு பொரிஞ்சி தள்ளிட்டார். அதேபோல் மன வேதனையோடு பேசிய ராகுலும், கட்சிக்கு உழைப்பதைவிட, நம் சீனியர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் வாங்கறதிலேயே குறியா இருந்தாங்க. வலியுறுத்தியும் மிரட்டியும் சீட் வாங்கினாங்கன்னு ப.சி., கமல்நாத் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றி சுட்டிக் காட்டியதோடு, தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்றேன்னு ரிசைன் லெட்ட ரையும் எடுத்து நீட்டினார். ஆனால் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்தான், "உங்கள் முடிவு பெருந்தன்மையைக் காட்டினாலும், நீங்க இப்படி யொரு முடிவை எடுக்கத் தேவையில்லை. இந்த நேரத்தில் கட்சியை வழிநடத்திச் செல்ல உங்களால்தான் முடியும்'ன்னு சொல்லி, ராகுலின் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துட்டார். காங்கிரஸ் கட்சி, தன் தோல்விக் கான காரணத்தைத் தேட ஆரம்பிச்சிருக்கு.''’

""நானும் ஒரு ரிப் போட்டால் நிகழப்போகும் நியமனம் பத்தின தகவலைச் சொல்றேன். விரைவில் ஓய்வுபெறப் போகும் தமிழக டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திர னுக்கு பதில், அவர் நாற்காலி யில் யார் உட்காரப் போறாங் கன்னு ஏற்கனவே நாம் பேசி யிருக்கோம். இந்தப் பதவியைக் குறிவச்சி பலத்த போட்டி நடக்கும் நிலையில், சி.பி .சி.ஐ.டி., டி.ஜி.பி.யான ஜாபர் சேட்டை அதில் அமரவைக்க முதல்வர் எடப்பாடி தீவிரமா ரூட் போட்டுக்கிட்டு இருக்கா ராம். காரணம், 22 தொகுதிக் கான இடைத் தேர்தலில் தேவேந்திர குல வேளாளர்கள் நிறைந்துள்ள பகுதிகளில் தி.மு.க. போதுமான அக்கறைகாட்டா தது குறித்து உரிய நேரத்தில் நோட் போட்டு, உஷார் படுத்தி, மெஜாரிட்டிக்குத் தேவையான அளவு இடங்களை ஜெயிக்க ஜாபர் சேட் உதவினா ராம். அதற்கான பரிசா அவருக்கு டி.ஜி.பி. பதவியைக் கொடுக்க நினைக்கிறாராம் எடப்பாடி.''

nkn310519
இதையும் படியுங்கள்
Subscribe