"ஹலோ தலைவரே, கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தலும், நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர் தல்களும் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் எரிச்சலில் இருக்காராம்.''’
""என்னவாம்? டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார்?''’
""உண்மைதாங்க தலைவரே, அதே சமயம் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சுக்கு கூடுதல் அதிகாரத்தையும் அதிகப்படியான மதிப்பையும் கொடுக்கணும்னு மோடி பலமுறை சொல்லியும் அதை எடப்பாடி பொருட்படுத்தவே இல்லையாம். அதனால் அவர்மேல் கடும் எரிச்சலில் இருக்கும் மோடி, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமனையும், பியூஷ் கோயலையும் கூப்பிட்டு, "இனி எக்காரணம் கொண்டும் எடப்பாடி தரப்புக்கு மதிப்பு கொடுக்காதீங்க. அவர் சார்பில் யார் வந்தாலும் சந்திக்காதீங்க'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு, ரொம்பவே ஆடிப்போன எடப்பாடி, "தேர்தல் முடிவுக்குப் பிறகு அமைச்சரவையை மாத்தியமைக்கப் போறேன். அப்ப, எல்லாத்தையும் சரி செஞ்சிடறேன்'னு கேரள கவர்னர் சதாசிவம் மூலம், மோடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்காராம்.''’
""தேர்தலுக்குப் பிறகு மொத்த ஆட்சியுமே மாறிடும்னும், புதிய அரசும் அமைச்சர்களும் பதவியேற்பாங்கன்னும் எதிர்க்கட்சிகள் கணக்குப் போடுதுப்பா.. போனமுறை நாம் பேசிக்கிட்ட காஞ்சி சங்கரமட விவகாரம், அந்த ஏரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, சங்கரமடத்தில் பவர்ஃபுல் நபராக ஆகிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி பத்தியும், அவருக்கும் திருவனந்தபுரத்தில் இருக்கும் கௌரி காமாட்சிக்கும் இடையில் உள்ள மோதல் பற்றியும் போனமுறை பேசிக்கிட்டோம். இப்ப அது தொடர்பா கிடைச்ச சில விறுவிறு
"ஹலோ தலைவரே, கடைசிக் கட்ட மக்களவைத் தேர்தலும், நான்கு தொகுதி களுக்கான இடைத்தேர் தல்களும் நடக்கும் இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி மீது பிரதமர் மோடி கடும் எரிச்சலில் இருக்காராம்.''’
""என்னவாம்? டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார்?''’
""உண்மைதாங்க தலைவரே, அதே சமயம் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.சுக்கு கூடுதல் அதிகாரத்தையும் அதிகப்படியான மதிப்பையும் கொடுக்கணும்னு மோடி பலமுறை சொல்லியும் அதை எடப்பாடி பொருட்படுத்தவே இல்லையாம். அதனால் அவர்மேல் கடும் எரிச்சலில் இருக்கும் மோடி, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமனையும், பியூஷ் கோயலையும் கூப்பிட்டு, "இனி எக்காரணம் கொண்டும் எடப்பாடி தரப்புக்கு மதிப்பு கொடுக்காதீங்க. அவர் சார்பில் யார் வந்தாலும் சந்திக்காதீங்க'ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாராம். இந்த விசயத்தைக் கேள்விப் பட்டு, ரொம்பவே ஆடிப்போன எடப்பாடி, "தேர்தல் முடிவுக்குப் பிறகு அமைச்சரவையை மாத்தியமைக்கப் போறேன். அப்ப, எல்லாத்தையும் சரி செஞ்சிடறேன்'னு கேரள கவர்னர் சதாசிவம் மூலம், மோடியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இருக்காராம்.''’
""தேர்தலுக்குப் பிறகு மொத்த ஆட்சியுமே மாறிடும்னும், புதிய அரசும் அமைச்சர்களும் பதவியேற்பாங்கன்னும் எதிர்க்கட்சிகள் கணக்குப் போடுதுப்பா.. போனமுறை நாம் பேசிக்கிட்ட காஞ்சி சங்கரமட விவகாரம், அந்த ஏரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?''’
""ஆமாங்க தலைவரே, சங்கரமடத்தில் பவர்ஃபுல் நபராக ஆகிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி பத்தியும், அவருக்கும் திருவனந்தபுரத்தில் இருக்கும் கௌரி காமாட்சிக்கும் இடையில் உள்ள மோதல் பற்றியும் போனமுறை பேசிக்கிட்டோம். இப்ப அது தொடர்பா கிடைச்ச சில விறுவிறு தகவல்களையும் சொல்றேன். ஜெயேந்திரர் உயிரோடு இருந்தப்ப, திருவனந்தபுரத்தில் இருக்கும் ’ஸ்ரீ உத்ராடம் திருநாள் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை, கௌரி காமாட்சி பொறுப்பில் கொடுத்துட்டாராம். துறவிகள் கையெழுத்து போடக் கூடாது என்பதால் இதற்கான ஆவணங்களில் ஜெயேந்திரர் கைரேகை வச்சி, ஒப்புதலைப் பதிவு செஞ்சிருந்தாராம். ஜெயேந்திரர் இறந்ததும், அவர் தம்பி விசுவநாதன், முறைப்படி அந்தக் கல்லூரியை கௌரிக்கே உரிமைன்னு எழுதிக்கொடுத்திருக்கார். ஆனால், ஜெயேந்திரருக்குப் பிறகு சங்கராச்சாரியாக பட்டம் கட்டிக்கொண்ட விஜயேந்திரரோ, அந்த மருத்துவக் கல்லூரியை ’கிம் ஆப்’ என்கிற ஒரு அறக்கட்டளையிடம் விற்க ஒப்பந்தம் போட்டிருந்தாராம்.''’
""துறவிகள் ஏரியாவிலும் அதிகாரச் சண்டையா? சுவாரஸ்ய மான வில்லங்கமா இருக்கே! விபரமா சொல்லுப்பா?''’
""திருவிதாங்கூர் இளவரசர்களில் ஒருவரும், பூபதி என்பவரும் சேர்ந்துதான் "கிம் ஆப்' அறக்கட்டளைக்காக 150 கோடிக்கு அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை விலைபேசி, அதற்காக 9 கோடி ரூபாயை விஜயேந்திரரிடம் அட்வான்ஸாகக் கொடுத்திருக்கிறார்களாம். ஆனால் கௌரி காமாட்சியோ "ஜெயேந்திரர் என்னிடம் ஒப்படைச்ச அந்த மருத்துவக் கல்லூரியை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்கமாட்டேன்'னு பிடிவாதமா இருக்காராம். இந்த நிலையில்தான் மடத்தில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்திருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி, கௌரி காமாட்சியைத் தன் தரப்பு மூலம், ஒழுங்கா மருத்துவக் கல்லூரியை ஒப்படைச்சிட்டுப் போகச் சொல்லி பல வகையிலும் அழுத்தம் கொடுக்கறாராம். இதையெல்லாம் தனக்கு வரும் மிரட்டல்களா ரெக்கார்டு பண்ணிக்கொண்டு இருக்கிறார் கௌரி காமாட்சி.''
""ஆடிட்டர் தரப்புக்குத்தான் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகார செல்வாக்கு இருக்குதே?''’’
""ஆமாங்க தலைவரே.. தமிழக அரசின் தலைமைச் செய லாளரான கிரிஜா வைத்தியநாதன் உதவியோடு உளவுத்துறை மூலம் கௌரி காமாட்சியைத் தீவிரமாகக் கண்காணிச்சிக்கிட்டும் இருக்காராம் ஆடிட்டர். மீண் டும் பா.ஜ.க. ஆட்சி மத்தியில் வந்தால், கௌரி காமாட்சி துரத்தியடிக்கப்படுவாருன்னும், ஆடிட்டர் அந்தக் கல்லூரியை அதிரடியா மீட்பாருன்னும், விரைவில் சங்கரமடத்தில் ஆடிட்டருக்கு அதிகாரப்பூர்வ மான பதவி ஒன்று கொடுக்கப் படும்னும், சங்கரமட ஆட்கள் அழுத்தமா சொல்றாங்க. ஆனா லும், சங்கரமட மேனேஜரான சுந்தரேசன் மூலம், மடத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை. எல்லாமே வதந்தி என்ற ரீதியில், ஒரு அறிக்கை தயாராகிக்கிட்டு இருக்குதாம்.''’
""மக்களவைத் தேர்தல், 18 தொகுதி இடைத்தேர்தலில் ஏராளமான புகார் கிளம்பியது. ஆனா நான்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா பற்றிய புகார் எதுவும் கிளம்பலையே?''’
""அந்த நான்கு தொகுதி யிலும் களத்தில் இருக்கும் தி.மு.க. அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்குள், யார் வேண்டுமானாலும் பணப் பட்டுவாடா பண்ணிக்கலாம். யாரும், யாரையும் தடுக்கவோ போட்டுக்கொடுக்கவோ கூடாது. பணத்தை வாங்கும் மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் அவங்க விருப்பப்படி வாக்களிக் கட்டும்னு, எழுதப்படாத ஒப்பந்தம் போட்டுக்கிட்டாங்களாம். அதனால் புகார்கள் பெருசா வரலை. இந்த வகையில் அ.தி.மு.க. தரப்பு ஓட்டுக்கு 3 ஆயிரம் வரை எதிர்ப்பே இல்லாம கொடுத்ததுடன், அது உரிய முறையில் உரியவர்களுக்குப் போய்ச் சேர்ந் துடுச்சான்னு நான்கடுக்கு விசாரணை மூலம் உறுதிப்படுத்தி இருக்கு. தினகரனின் அ.ம.மு.க.வும் முடிந்தவரை பட்டுவாடாவை நடத்திவிட்டது. கடைசிக் கட்டத்தில் தி.மு.க.வும் தங்களை கவனிக்கும்னு வாக்காளர்கள் நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா, பிரதான எதிர்க்கட்சி சைடில் தேர்தல் பணி ரொம்ப டல்னு அறிவாலயத்துக்கு ரிப்போர்ட் போயிருக்கு.''’
""வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவில் கவனம் செலுத்தும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ’உள்நாட்டுப் போரில்’ குதிச்சிருக்காங்களாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, மாதந்தோறும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மாவட்ட மந்திரிகள் மூலம் ’கட்டிங்’ போறது வழக்கம். ஆனா கடந்த மூணுமாசமா இது போகலையாம். அதிருப்தியடைஞ்ச எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் எடப்பாடியிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு போயி, மாத மாமூல் எங்கேன்னு கேட்டு போர்க் கொடி தூக்கியிருக்காங்க. அவரோ, இது தொடர்பா மந்திரிகளிடம் கேட்க, "தேர்தலுக்கு நிறைய செலவு செஞ்சதால், அவங்களை கவனிக்க முடியலை'ன்னு சொல்லியிருக்காங்க. இதை எம்.எல். ஏ.க்களுக்கு கன்வே செஞ்ச எடப் பாடி, "கவலைப்படாதீங்க. உங்களுக்கு உரியது வந்தே தீரும்'னு சீக்ரெட்டா சமாதானப்படுத்தியிருக்கார்.''’
""நானும் தேர்தல் தொடர்பான சீக்ரெட் தகவல்களை சீக்ரெட் டாவே பகிர்ந்துக்கறேன். அ.தி.மு.க. வோடு தேர்தல் உடன்பாடு கொண்டு, அதுக்காக விருந்து வச்சி மகிழ்ந்த ஒரு பெரிய கட்சி, நட்புக்கு வெகுமதியா கிடைச்ச பெருந் தொகையில் ஒரு பகுதியைச் செலவிட்டு, கர்நாடக மாநில கூர்க் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டி ருக்கு. அதே அணியிலிருக்கும் இன்னொரு கட்சியோ, கூட்டணிக்கு பேசப்பட்ட தொகையில் 50 "சி'யை மட்டும் அட்வான்ஸாக வாங்கிய நிலையில், அதன் பவர்ஃபுல் பெண் தலைவியோ, பேசியபடி மிச்சத் தொகை வருமோ, வராதோங்கிற பரிதவிப்பில் கை பிசைஞ்சிக்கிட்டு இருக்காராம்.''’
________________
இறுதிச்சுற்று
100% கொடுத்தால்தான் ஓட்டு!
அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. -தி.மு.க. -அ.ம.மு.க. இடையே கடுமையான தேர்தல் போட்டி நடைபெறுகிறது. வீட்டில் இருப்பவர் களுக்கு தினமும் ரூ.100 தி.மு.க. கொடுத்தால் அ.தி.மு.க. ரூ.150, அ.ம.மு.க. 200 ரூபாய் கொடுக்கிறார்கள். ஆனாலும் 100% பணப் பட்டுவாடா நடந்தால்தான் களம் சாதகமாக அமையும் என பெரிய கட்சிகள் பதற்றத்திலேயே இருக்கின்றன. குட்டக்கடை, பசுபதிபாளையம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பூத் நம்பர் 79-ல் 1145 ஓட்டுகள் உள்ளன. இதில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் 80 சதவீத ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டார்கள். இதுதான் கட்சி மேலிடங்களின் கணக்கு. ஆனால் இந்தப் பகுதியில் உள்ள கிராமத்தில் இரண்டு கட்சிகளில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களும் 100 சதவீதம் பணம் கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று பிரச்சினை பண்ணி யிருக்கிறார்கள். இதனால் 3 நாட்களாக எந்தப் பணியும் நடக்கவில்லை. தி.மு.க. தரப்பில் பொறுப்பாளர்களாக கோபிசெட்டிபாளையம், திருப்பூர் உள்ளிட்ட நகரச் செயலாளர்கள் இருக்கிறார்கள்
கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒருவர் "மீதி 12 இலட்சம்தானே கொடுக்க வேண்டும் நான் 4 இலட்சம் தருகிறேன். மீதி இரண்டு பேரும் கொடுங்கள்' என்று கேட்க... "இந்த பூத்துக்கு கொடுத்திட்டா மற்ற பூத்துக்கும் கொடுக்க வேண்டியது வரும்' என்று மறுத்துவிடவும், அ.தி.மு.க.விலும் இதே கதைதான். இதற்கிடையே, இளம்வயது பெண்ணும், பையனும் சேர்ந்து அ.ம.மு.க. சார்பில் பணப்பட்டுவாடாவில் இறங்கி, ஒரு வீட்டுக்கு கொடுத்துவிட்டு, நான்கு வீடு தள்ளி பட்டுவாடா செய்ததுடன், வீட்டுக்குள்ளும் தாறுமாறாக நுழைந்ததால், கிராமத்து மக்கள் அந்தப் பையனை பிடித்து கட்டிவைத்து அடித்து பணம் கொடுக்கவிடாமல் விரட்டி விட்டார்கள்.
-ஜெ.டி.ஆர்.