"ஹலோ தலைவரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் தலைவரான நல்லகண்ணு குடியிருந்த வீட்டை, எடப்பாடி அரசு அதிரடியாகக் காலி செய்ய வைத்த விவகாரம் தமிழக அரசியலில் நல்லவங்களுக்கு இதுதான் நிலைமையான்னு பொதுமக்களை கோபப்பட வச்சிடிச்சே...''

""மூத்த தோழர் நல்லகண்ணு 94 வயதைக் கடந்திருக்கும் சீனியர் தலைவர். முன்னாள் சுதந்திரப் போராட்ட வீரரான அவர், நேர்மைக்கும் தூய்மைக்கும் உதாரணமா வாழ்ந்துக்கிட்டு இருக்கார். அவரை காலி செய்யச் சொன்னா யார்தான் ஏத்துக்குவாங்க?''’

n

Advertisment

""சொந்த வீடுகூட இல்லாத எளிமையான தலைவரான நல்லகண்ணுவுக்கு 2007 தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகை வீடு ஒதுக்கித்தந்தார் கலைஞர். குறைந்த வாடகை கொண்ட அந்த குடியிருப்பில்தான் முன்னாள் அமைச்சர் கக்கன் வாரிசுகளும் இன்னொரு வீட்டில் இருக்காங்க. குடியிருப்பு பழசாயிட்டதால, புதுசா கட்டணும்ங்கிற திட்டத்தின்படி, நல்லகண்ணு-கக்கன் குடும்பத்தினர் உள்பட எல்லோரையும் காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பியது வீ.வ.வாரியம். பலரும் கோர்ட் வரைக்கும் போய் எதுவும் நடக்கலை. நல்லகண்ணு அய்யாவோ எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு நோட்டீஸை மதிச்சி, வீட்டைக் காலி பண்ணிட்டாரு. இது தெரிஞ்சதும் தி.முக. தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் தோழர் நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கணும்னு அறிக்கை விட்டாங்க. துணை முதல்வர் ஓ.பி.எஸ்சும் நல்லகண்ணு அய்யாகிட்ட போனில் பேச, அவருக்கும் கக்கன் வாரிசுகளுக்கும் மாற்று வீடு ஒதுக்கப்படும்னு அரசாங்கம் அறிவிச்சிருக்கு.''

""அரசுக் குடியிருப்பைக் காலிசெய்யச் சொல்லும் போது அங்கே யார் யார் குடியிருக்காங்கன்னு தெரிஞ்சிக்க வேணாமா? அரசாங்க அதிகாரிகள் எந்திரம் போலவா செயல்படுவாங்க?''’

""அதிகாரிகள் எந்திரம் போல செயல்படுறாங்க.. அரசியல்வாதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் என்ன தீர்ப்பு பதிவாகியிருக்குங்கிற பதட்டம். ரிசல்ட் வருவதற்கு முன்னாடியே, மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை பா.ஜ.க.வும் காங்கிரசும் வகுத்திருப்பதை நம்ம நக்கீரன் டீடெய்லா எழுதியிருந்தது. காங்கிரசும் பா.ஜ.க.வும் இல்லாத ஃபெடரல் ஃப்ரண்ட்டுங்கிற மாநிலக் கட்சிகளின் மூன்றாவது அணியை உருவாக்க நினைக்கிற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பா.ஜ.க.வோட ஸ்லீப்பர் செல்னு பலரும் சந்தேகப்படுற நிலையில், 13-ந் தேதி சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்திச்சதை ஒட்டுமொத்த இந்திய அரசியலும் கூர்ந்து கவனிச்சிது.''

Advertisment

st

""ஏற்கனவே சந்திப்புக்கு டயம் கேட்டப்ப ஒப்புக்கொள்ளாத ஸ்டாலின், இப்ப எப்படி ஒப்புக்கொண்டாராம்? ராகுல்தான் பிரதமர் வேட்பாளர்னு அறிவித்த ஒரே தலைவர் ஸ்டாலின்தான். இப்ப தி.மு.க. ரூட் மாறுதா?''

""விவரமா சொல்றேங்க தலைவரே.. சந்திப்புக்காக சந்திரசேகர ராவ் தரப்பு, விடாம முயற்சி பண்ணி, ஸ்டாலின் மருமகன் சபரீசனைப் பிடித்து, வழக்கமான சந்திப்புதான்னு சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிடிச்சி. இருந்தாலும், தி.மு.க. தரப்பில் இது பற்றி காங்கிரஸ் மேலிடத்திடம் சொல்லியிருக்காங்க. அங்கேயிருந்தும் க்ரீன் சிக்னல் வந்திடிச்சாம். காரணம், சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் காங்கிரசுக்காக முயற்சிகள் எடுத்துட்டு வந்தாலும், சந்திரசேகரராவையும் ஆந்திராவின் ஜெகன்மோகன் ரெட்டியையும் சரிபண்ணி வச்சிக்கணும்ங்கிற அசைன்மெண்ட்டை ப.சிதம்பரம்கிட்ட காங்கிரஸ் தலைமை கொடுத்திருக்கு. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சலீல்ங்கிறவர் மூலமா சுப்பிரமணிய சாமி ஒரு சர்வே எடுக்கச்சொல்லியிருக்கிறார். அதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம்னு தெரிஞ்சுதாம். அதனால பா.ஜ.க. தலைமையிலிருந்து சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இவங்களை இழுக்க மூவ் நடக்க, அதைத் தடுப்பதற்காகத்தான் ப.சி.யிடம் புது அசைன்மெண்ட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. அதனால ஸ்டாலின்-ராவ் சந்திப்பில் காங்கிரசுக்கு நெருடல் இல்லைன்னு சொல்றாங்க.''’

""சந்திரபாபு நாயுடு முயற்சிகள்?''’

""அது இன்னொரு பக்கம் நடக்குது. ஏற்கனவே 21-ந் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியோ, ரிசல்ட் வராமல் யார்கிட்ட என்ன பேசி, உத்தரவாதம் வாங்க முடியும். அதனால, மே 23-க்குப் பிறகு கூடலாம்னு நாயுடுகிட்ட சொல்லிட்டாரு. நாயுடுவும் மம்தாகிட்ட, அடுத்த பிரதமர் தேர்வு உங்களை மையமா வச்சி நடக்கலாம். வேறு ரூட்டில் போயிடாதீங்கன்னு சொல்லியிருக்காரு.''’

sa

""நாடே அடுத்த ஆட்சிக்கான பரபரப்பில் இருக்கிறப்ப, காஞ்சி சங்கரமடத்துக்குள் கிடுகிடு எரிமலைகள் வெடிக்குதாமே?''’

""முதல்ல ஒரு சின்ன பிளாஷ் பேக்கைப் பார்க்கலாங்க தலைவரே, சங்கரமடத்தில் மகா பெரியவர்னு சொல்லப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு 90-களில் கனகாபிஷேக விழா நடந்தது. ஜெயேந்திரர் முன்னின்று நடத்திய இந்த விழாவில், சசிகலாவோடு ஜெ.வும் கலந்துக்கிட்டார். இதில் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் நிறைய முறைகேடுகள் செய்யறதா, மடத்துக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், பின்னாளில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஆகியோர் புகார் செஞ்சாங்க. விஜயேந்திரரும் ஆடிட்டர் குருமூர்த்தியும் விழா அன்னைக்கு ஒருமையிலே திட்டிக்கிட்டாங்க. அப்ப விஜயேந்திரருக்காக வரிஞ்சுகட்டியவர் ஜெயேந்திரர். ஆடிட்டர் குருமூர்த்தியைப் பார்த்து, ’முதல்ல நீ மடத்தை விட்டு வெளியே போ’ன்னு சத்தம் போட்டிருக்கார். இதனால் மேலும் கோபமடைந்த ஆடிட்டர் குருமூர்த்தி, விஜயேந்திரரைப் பார்த்து, ’உன் வண்டவாளம் முழுதையும் அம்பலமாக்குவேன்னு எச்சரிச்சாராம். இப்ப அந்த பவரைக் காட்டுறதாலதான், சங்கரமடத்தில் சங்கடம்னு சொல்றாங்க...''’

""என்ன சங்கடம்?''’

""பழைய சண்டைக்குப் பிறகு, மடத்துப் பக்கமே போகாம இருந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயேந்திரர் மரணத்துக்கு அப்புறம்தான் அங்கே போனாரு. இப்ப சங்கரமடத்தின் சர்வ அதிகாரங்களும் ஆடிட்டர் குருமூர்த்தி கையிலதான். மடத்தோட கணக்கு வழக்குகள் தொடங்கி எல்லாமும் அவர் பிடியிலே! விஜயேந்திரரையும் தன் விருப்பப்படி ஆடிட்டர் இப்ப ஆட்டிவைக்க ஆரம்பிச்சிட்டார்னு மடத்து ஆட்களே சொல்றாங்க. இதிலே இன்னொரு விவகாரமும் உண்டு.''’’

f

""தோண்டத் தோண்ட பூதம் கிளம்பும் போலத் தெரியுதே?''’

""கௌரி காமாட்சிங்கிற பெண்மணி, திருவனந்தபுரத்தில் மடத்துக்குச் சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்திக்கிட்டு வர்றாராம். இப்ப அந்தக் கல்லூரியை ஒப்படைக்கணும்னு ஆடிட்டர் தரப்பு அந்தப் பெண்மணியை மிரட்டியதாம். அந்த மிரட்டல்களை எல்லாம் அப்படியே ஆடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறாராம் கௌரி காமாட்சி. ஜெயேந்திரர்தான் கௌரியிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைத்தார்னு சொல்லும் மடத்து தரப்பு, கௌரிக்கு கல்யாணம் பண்ணி வைப்பதில் ஜெயேந்திரர் காட்டுன அக்கறையையும் ஞாபகப்படுத்துறாங்க. கௌரிக்கு இப்ப நெருக்கடியான சூழல்னு சொல்றாங்க.''’’

""த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க.வில் இணையப் போறார்ன்னு சொல்லி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பரபரப்பை உண்டாக்கிட்டாரே?''’

""அண்மையில் டெல்லிக்குப் போயிருந்தார் வாசன். அப்பப் பார்த்து இப்படியொரு வதந்தி பரவ, அதை நம்பிய தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ். அழகிரி, த.மா.கா. தொண்டர்கள் எல்லோரும் தாய்க் கட்சியான காங்கிரசுக்கு வரணும்னு அறிக்கை விட்டார். கடுப்பான த.மா.கா. இளைஞரணியினர் அழகிரியின் கொடும்பாவியை அங்கங்கே கொளுத்த ஆரம்பிச்சிட்டாங்க. வாசனோ, அழகிரியையெல்லாம் பொருட்படுத்தாதீங்க.. நான் பா.ஜ.க. நிழல்ல கூட நிக்கமாட்டேன். அ.தி.மு.க.வோடு கூட்டணி வச்சபிறகும்கூட, அதே கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வை நாம ஒரு பொருட்டா எடுத்துக்கலை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசையைக் கூட சந்திக்கலைன்னு த.மா.கா.வினருக்கு விளக்கம் கொடுத்து சமாதானப்படுத்தியிருக்காரு.''’

""தேர்தல் ரிசல்ட் வரும் வரைக்கும் பரபரப்பு, சமாதானம் எல்லாம் தொடர்ந்துக்கிட்டிருக்கும்''’

f

""வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சிகள் தொடங்கிடிச்சி.. அனைத்துக் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளையும் அழைத்து, தொகுதி தேர்தல் அதிகாரிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விறுவிறுப்பா கூட்டங்களை நடத்தறாங்க. அதில் அரசியல் கட்சிகளின் சார்பில் கலந்துக்கும் பூத் ஏஜண்டுகள், அதிகாரிகளின் அடாவடிகளையும் குளறுபடிகளையும் கண்டிச்சி குரல் எழுப்பறாங்க. இது எல்லாப் பக்கமும் தொடருது. உதாரணத்துக்கு மத்திய சென்னை தேர்தல் அதிகாரியான ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ், செனாய் நகர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் போட்டார். அப்ப, வாக்கு எண்ணும் நாளின் போது, முதல் ஒரு மணி நேரம் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும்ன்னு அவர் சொன்னதும், பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு ஓட்டே கொடுக்கப்படலை. இது ஜனநாயக விரோதச் செயல்ன்னு பூத் ஏஜெண்டுகள் எல்லோரும் குரல் எழுப்பினாங்க. விசாரிக்கிறேன்னு அதிகாரி சொன்னார். அடுத்து ஏஜெண்டுகள் செல்போன், லேப்டாப் போன்றவற்றை எடுத்துக்கிட்டு வரக்கூடாது. இங்கு ஒவ்வொரு ரவுண்டும் எண்ணிமுடித்து கவுண்டிங் தெரிவிக்கப்படும்போது, அதை வெளியே யாரும் பாஸ் பண்ணக் கூடாது. தேர்தல் அதிகாரியின் கையெழுத்துடன் கூடிய ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் எண்ணிக்கையை வெளிப்படுத்தணும்னு ஸ்ரீதர் சொன்னார். தி.மு.க. ஏஜெண்ட்டுகளோ, நாங்கள் செல்போன் கொண்டுவரக் கூடாதுன்னா அதிகாரிகள் தொடங்கி, காவல்துறையினர் வரை யாரும் அங்கே செல்போனைக் கொண்டு வரக்கூடாது. அதுக்கு சம்மதமான்னு கேட்டாங்க. திணறிப்போன அதிகாரி, அதிகாரிகளுக்கும் இதுபற்றி அறிவுறுத்தப்படும்னு நழுவினாராம். பெரும்பாலான கூட்டங்களில் எதிர்ப்புக் குரல் கிளம்பியிருக்கு.''’

""குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ., விரைவில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப் போகுதாமே?''’

""ஆமாங்க தலைவரே, இந்த விவகாரத்தில் தேர்தல் பாதுகாப்புப் பிரிவு டி.ஜி.பி.யான அசுதேஷ் சுக்லா உட்பட, காவல்துறையின் மிக முக்கிய அதிகாரிகள் அனைவரும் விசாரிக்கப்பட்டிருக்கிற நிலையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பி.யான ஜாபர்சேட் மூலம் சரிபண்ணியிருக்காம் ஆளுந்தரப்பு. அதனால் சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகும் குற்றப்பத்திரிகை, எடப்பாடி அரசுக்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாதுன்னு காவல்துறை தரப்பில் நம்பிக்கையா சொல்றாங்க.''’

""நானும் அதிகாரிகள் தரப்பு செய்தி ஒன்றைப் பகிர்ந்துக்கறேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் தொடர்பான ஒரு பெரிய பட்டியல் எடுக்கப்பட்டிருக்கு. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கித்தான் வெளியிடமுடியும்ங்கிறதால, ஆணையத்துக்கு அனுப்பி அனுமதியும் வாங்கியாச்சாம். விரைவில் ஒரு பெரிய டிரான்ஸ்பர் மேளாவை நாம் பார்க்கலாம்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க.’’