Advertisment

ராங்-கால் : எம்.எல்.ஏக்களுக்கு ஜாக்பாட்! தக்கவைக்கும் சசி!

rangcall

"ஹலோ தலைவரே, எடப்பாடி அரசை அகற்றாமல் ஓயமாட்டோம்னு கோட்டைப் பக்கம் திரும்பியிருந்த தி.மு.க.வின் கோபப் பார்வை, இப்போது ராஜ்பவன் பக்கம் ஆவேசமாகத் திரும்பியிருக்கு''’

Advertisment

""ஆமாம்பா, 10 நாள் இடைவெளியில் 25-ந் தேதி சட்டமன்றம் கூடியபோதே, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கண்டனக் குரலை, தி.மு.க. எழுப்ப முயற்சி பண்ணுச்சே?''’

Advertisment

ttv

""உண்மைதாங்க தலைவரே, சபாநாயகர் அதற்கு அனுமதிக்கலை. இந்த நிலையில் நாமக்கல்லில் கவர்னர் ஆய்வுக்கு கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது, அதனைக் கண்டித்து சென்னையில் ஸ்டாலின் நடத்திய ஆர்ப்பாட்டம் இதெல்லாம் பரபரப்பாக, ராஜ்பவனிலிருந்து தி.மு.க.வின் போராட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியானது. 25ந் தேதி சட்டமன்றத்திலும் கவர்னர் விவகாரம் குறித்து பேச அனுமதி கிடைக்காததால், தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செஞ்சிடுச்சி. இதைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு எதிராக நடத்தப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. கவர்னரை மாற்றணும்ங்கிற கோரிக்கையையும் தி.மு.க. உரத்து முழங்கத் தயாராகுது. கோட்டைக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டம், இப்படித்தான் ராஜ்பவனுக்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கு. கவர்னர் மாளிகையின் அறிக்கை பல தரப்பிலும் எதிர்ப்பை சம்பாரிச்சிக்கிட்டு இருக்கு''’

""இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நம்ம நக்கீரன்கிட்டே தன்னோட கருத்தை அழுத்தமா தெரிவிச்சிருக்காருப்பா...''’

""ஆமாங்க தலைவரே.. "நக்கீரன்' இணையத்தில் நானும் படிச்சேன்.. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கவில்லை. தம

"ஹலோ தலைவரே, எடப்பாடி அரசை அகற்றாமல் ஓயமாட்டோம்னு கோட்டைப் பக்கம் திரும்பியிருந்த தி.மு.க.வின் கோபப் பார்வை, இப்போது ராஜ்பவன் பக்கம் ஆவேசமாகத் திரும்பியிருக்கு''’

Advertisment

""ஆமாம்பா, 10 நாள் இடைவெளியில் 25-ந் தேதி சட்டமன்றம் கூடியபோதே, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கண்டனக் குரலை, தி.மு.க. எழுப்ப முயற்சி பண்ணுச்சே?''’

Advertisment

ttv

""உண்மைதாங்க தலைவரே, சபாநாயகர் அதற்கு அனுமதிக்கலை. இந்த நிலையில் நாமக்கல்லில் கவர்னர் ஆய்வுக்கு கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது, அதனைக் கண்டித்து சென்னையில் ஸ்டாலின் நடத்திய ஆர்ப்பாட்டம் இதெல்லாம் பரபரப்பாக, ராஜ்பவனிலிருந்து தி.மு.க.வின் போராட்டத்தைக் கண்டித்து அறிக்கை வெளியானது. 25ந் தேதி சட்டமன்றத்திலும் கவர்னர் விவகாரம் குறித்து பேச அனுமதி கிடைக்காததால், தி.மு.க. உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் சபையில் இருந்து வெளிநடப்பு செஞ்சிடுச்சி. இதைத் தொடர்ந்து ராஜ்பவனுக்கு எதிராக நடத்தப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. கவர்னரை மாற்றணும்ங்கிற கோரிக்கையையும் தி.மு.க. உரத்து முழங்கத் தயாராகுது. கோட்டைக்கு எதிரான தி.மு.க.வின் போராட்டம், இப்படித்தான் ராஜ்பவனுக்கு எதிரான போராட்டமாக மாறியிருக்கு. கவர்னர் மாளிகையின் அறிக்கை பல தரப்பிலும் எதிர்ப்பை சம்பாரிச்சிக்கிட்டு இருக்கு''’

""இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் நம்ம நக்கீரன்கிட்டே தன்னோட கருத்தை அழுத்தமா தெரிவிச்சிருக்காருப்பா...''’

""ஆமாங்க தலைவரே.. "நக்கீரன்' இணையத்தில் நானும் படிச்சேன்.. தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கவில்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம் நடக்கிறது. எடப்பாடி அரசாங்கம் பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு. தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசின் ஒப்புதல் இல்லாமல், அனுமதி இல்லாமல் மாவட்டங்களுக்கு செல்வது, ஆய்வு மேற்கொள்வது என ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்கிறார். தவறான வழியை மேற்கொள்கிறார்னு முத்தரசன் சொல்லியிருக்காரே!''

""தமிழகம், ஏதோ ஒரு மினி நெருக்கடி காலத்தை சந்திச்ச மாதிரி தெரியுதே?''’

bharathiraja""உண்மைதாங்க தலைவரே, கருத்துரிமைக்காகக் குரல் கொடுப்பவர்களையும், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடக்கூடியவர்களையும் குறிவைச்சு, அவர்களை ஒடுக்கும் முயற்சிகள் தீவிரமாக தொடங்கப்பட்டிருக்கு. குறிப்பா, ஐ.பி.எல். போராட்டத்தை எதிர்த்துப் போராடிய இயக்குநர் கௌதமன் மீது, சதித் திட்டம் தீட்டுதல், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், வன்முறையில் ஈடுபடுதல்னு 8 பிரிவுகள்ல வழக்குகளைப் பதிவு செய்த போலீஸ் டீம், 24-ந் தேதி மதியம், அவர் தன்னோட சூளைமேடு வீட்டில் சாப்பிட்டுக்கிட்டிருந்தப்ப, ஒரு தீவிரவாதியை வளைப்பதுபோல் சுற்றி வளைத்து, சாப்பிடக்கூட விடாமல் அவரைத் தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போய், எழும்பூர் மாஜிஸ்திரேட் மகேஸ்வரி வீட்டில் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்துவிட்டது. அதேபோல், இயக்குநர் அமீருக்கு ஆதரவாகப் பேசிய இயக்குநர் பாரதிராஜா, இங்கே நக்சல்களோ, மாவோயிஸ்ட்டுகளோ இல்லை. அப்படியொரு சூழலை இங்கே உருவாக்கிவிடாதீர்கள்னு பேசினார். இதை வைத்து அவர்மீதும் வழக்கைப் பதிவுசெய்த போலீஸ், பாரதிராஜாவைக் கைது செய்வதற்கான முகாந்திரத்தில் இறங்கியிருக்கு.''’

""ஆட்சிக்கு எதிராகக் கூட இல்லை. பா.ஜ.க.வுக்கு எதிராகப் பேசுவதும், போராடுவதும் கூட கடும் குற்றமா பார்க்கப்படுதே?''’

""சரியா சொன்னீங்க தலைவரே... மோடி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுத்திருக்கும் பா.ம.க.வினர் கூட, தங்களுக்கு எதிராகப் பேசக்கூடாதுன்னு பா.ஜ.க. நினைக்கிது. பா.ம.க. மத்திய மந்திரிகளா இருந்த அன்புமணியும், ஏ.கே.மூர்த்தியும் கூட தமிழகத்துக்கு ஒண்ணும் செய்யலைன்னு அண்மையில் தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசை விமர்சனம் பண்ணியிருந்தார். டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரையும் அவர் வசைபாடத் தவறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வித்திட்டதோடு பல்வேறு சாதனைகளைச் செய்தும் எங்களைப் பழிப்பதான்னு பா.ம.க.வினர் கொதிப்படைந்தனர். அன்புமணியும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பா.ம.க.வை விமர்சித்த தமிழிசையைக் கண்டித்து பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 25-ந் தேதி பா.ம.க.வினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை பா.ஜ.க.வினர் தாக்கியதாவும் சொல்லப்படுது. இருந்தும் காவல்துறை பா.ம.க.வினரைத்தான் கைது செஞ்சிருக்கு''

""18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கும், மூன்றாவது நீதிபதி என்ன தீர்ப்பு தரப்போறார்ங்கிற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க. வட்டாரத்தில் கூடிக்கிட்டே இருக்குதே?''

sasi

""தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தோட கதவையும் தட்டுறாங்க.. தினகரன் தரப்பைச் சேர்ந்த அந்த 18 பேரின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் என்ன முறையீடு வைக்கப்பட்டிருக்கு என்பது, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கே தெரியலை. அவங்க சார்பில் தினகரனின் வழக்கறிஞர்கள்தான், ஒரு முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவிடம் தாக்கல் செஞ்சிருக்காங்க. இதை அறிந்த அ.தி.மு.க. தரப்பு, தினகரன் தரப்பு என்ன மாதிரியான சட்டக் குடைச்சலைக் கொடுக்கப் போவுதோன்னு பரபரப்பாச்சு. அதோடு, 18-ல் 7 பேருக்கு திவாகரன் மூலம் வலைவிரிச்சிடிச்சி. இந்த நிலையில் அந்த 18 பேரின் ஊசலாட்டத்தைத் தெரிஞ்சிக்கிட்ட சசிகலா, அவங்களைக் கவனிக்கும்படி சிறையிலிருந்தபடியே தினகரனுக்குத் தகவல் அனுப்பினார். இதையொட்டி, தங்க தமிழ்ச்செல்வன் தவிர ஏனைய 17 பேருக்கும் தலா ஒரு "சி' வீதம் தினகரனால் விறுவிறுப்பா விநியோகிக்கப்பட்டிருக்கு. இது வெறும் டோக்கன் அட்வான்ஸ்தானாம். எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதற்காக இன்னும் பல ஜாக்பாட் திட்டங்களையும் ஜெயிலிலிருந்து சசிகலா ப்ளான் பண்ணிக் கொடுத்திருக்காராம். இதனால் அந்த எம்.எல்.ஏ.க்களின் ஊசலாட்டம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு.''’

""தங்க. தமிழ்ச்செல்வனை தினகரன் தரப்பு கவனிக்கலையா?''’

""அப்படி இல்லைங்க தலைவரே, தினகரன் தரப்பு கவனிக்க ரெடியாத்தான் இருக்கு. ஆனால் தங்க. தமிழ்ச்செல்வன் வேறு வியூகத்தில் இருப்பதால், அவர் தினகரன் தரப்புக்குப் பிடிகொடுக்கலை. காரணம், அண்மையில் சசிகலாவை சந்திக்க பரப்பன அக்ரஹார சிறைக்குப் போனார் தங்க. தமிழ்ச்செல்வன். ஆனால், அவர் பற்றி வந்த ஊசலாட்டச் செய்திகளால் அவர் மீது கோபத்தில் இருந்த சசிகலா, அவரைச் சந்திக்க மறுத்துட்டார். இதில் எரிச்சலான தங்க தமிழ்ச்செல்வன், அங்கிருந்து கோபமாகத் திரும்பிவிட்டார். இதைத் தொடர்ந்து, எக்ஸ் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, பெங்களூர் புகழேந்தி ஆகியோர் சகிதமாக தங்க. தமிழ்ச்செல்வன், விரைவில் பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கிறாராம். அப்போது, எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோர் இல்லாத அ.தி.மு.க.வை உருவாக்குவோம்ங்கிற அதிரடிக் குரலை அவர் எழுப்ப இருக்கிறாராம்''’

pujari""தமிழக காங்கிரஸ் மாணவரணி மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் அஸ்வத்தாமன். இவரைப்பற்றி கடந்த நக்கீரன் இதழில், வடசென்னை மாணவர் காங்கிரஸ் தலைவர்னு குறிப்பிடப்பட்டிருக்கு. இந்த அஸ்வத்தாமன், தாதா நாகேந்திரனின் மகன். புழல் ஜெயிலில் கொல்லப்பட்ட ரவுடி பாக்ஸர் முரளி கொலை தொடர்பாக அஸ்வத்தாமனை உளவுத்துறையோ வேறு போலீசோ கண்காணிக்கலைன்னு அவரோட வக்கீல் ஜான்பால் சொல்றாரு.''’’

""தலைவரே.. அஸ்வத்தாமன் தொடர்பா காங்கிரசில் ஒரே ரணகளம்.. காங்கிரஸின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநிலத் தலைவரான செல்வப்பெருந்தகையின் ’மிரட்டலான செல்வாக்குதான் அஸ்வத்தாமனை மாநில பொறுப்புக்கு கொண்டுவந்திருக்கிறதாம். இவரது பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்தி பவனில் நடந்தப்ப திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும், அவரது அப்பாவின் குற்றப் பின்னணி கண்டு ஒதுங்கிவிட்டனர். இந்த விழாவில் பங்கேற்க வேண்டாமென்று கார்த்தி சிதம்பரம், ப.சி.யிடம் கேட்டுக்கொண்டும், ப.சி. "எனக்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பலரும் அங்கே வந்துவிட்டார்கள். அதனால் நான் போய்த்தான் ஆகவேண்டும்' என்றபடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். விழா முடிந்து ப.சி. வீடு திரும்பியபோது, இது தொடர்பாக அவருக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் கடும் வாக்குவாதமே நடந்ததாகச் சொல்கிறார்கள்''’

""நானும் ஒரு முக்கிய தகவல் ஒன்றைச் சொல்றேன். இப்ப சி.பி.சி.ஐ.டி. பிரிவின் ஏ.டி.ஜி.பி.யாக இருக்கும் அம்ரேஷ் பூஜாரியும் கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த ரகசியம். அந்த வகையில், ராஜகோபாலிடம் அம்ரேஷ் பூஜாரி, "டெல்லி என்னை இங்கே உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக உட்காரவைத்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இங்கே 39 தொகுதியிலும் ஜெயிக்கும்படி செய்வேன்' என்று சொல்லியிருக்கிறார். இது மேலிடங்களுக்குப் போக, அவர் உளவுத்துறைக்கு மாற்றப்படலாம் என்கிற தகவல் கமுக்கமாகவே பரவி வருகிறது''

nkn29.06.18 sasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe