"ஹலோ தலைவரே, தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தொடர்ந்து சர்ச்சையில் மாட்டுறாரே?''
""போஸ்ட்மேனான்னு கோர்ட் கண்டிச்சிது. இப்ப ரிடையர்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் எழுதுன லெட்டர் பரபரப்பு ஆகியிருக்கு போல..''
""ஆமாங்க தலைவரே, நடந்துமுடிஞ்ச தேர் தல்ல லட்சக்கணக்கான பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதுபற்றித்தான் ரிடையர்டு ஐ.ஏ.எஸ். தேவ சகாயம், இங்குள்ள மாநிலத் தேர்தல் அதிகாரிக்கு ஹாட்டாவே கடிதம் எழுதியிருக்காரு. ‘எங்க குமரி மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ 10 ஆயிரம் வாக்காளர்களின் ஓட்டுக்கள் காணாமல் போயிருக்கு. வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் அவங்க வாக்குகள் ஒரே மாதத்திற்குள் முறைகேடா நீக்கப்பட்டிருக்கு. தமிழகம் முழுக்க இதே போன்ற புகார்கள் எழுந்தும், தேர்தல் ஆணையம் துறை ரீதியிலான விசாரணையைக் கூட இதுவரை நடத்தலைன்னு கொஞ்சம் கடுமையான தொனியிலேயே அவர் கேள்விகள் எழுப்பி இருக்காராம்.''’
""நியாயம்தானேப்பா. இதுக்கெல்லாம் யார் காரணமாம்?''’
""மத்தியிலும

""மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கிறவங்க, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளைப் பட்டியல் எடுக்கச் சொன்ன உள்ளாட்சித் துறை மந்திரி வேலுமணி, அதிலுள்ள பலரையும் நீக்கும் பொறுப்பைத் தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யப்பிரதா சாகுவிடம் ஒப்படைச்சாராம். சாகுவோ இந்தப் பொறுப்பை, தேர்தல் ஆணையத்திலேயே உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டரான அசோக்குமாரிடம் ஒப்படைச்சிருக்காரு. அந்த அசோக்குமார்தான், மாவட்டம்தோறும் உள்ள வாக்காளர் பட்டியலைத் தனக்கு அனுப்பச் செய்து, அதில் விருப்பம் போல் வாக்காளர்களை வேட்டையாடிட்டாராம். இதனால் தான் தமிழகம் முழுக்க, ’"ஓட்டைக் காணோம்'ங்கிற கூக்குரல் இந்த முறை அதிக அளவுக்கு எழுந்திருக்கு. 2016 தேர்தலில் ஜெ. இதே டெக்னிக்கைப் பயன்படுத்தியதால்தான் பல தொகுதிகளில் பார்டரில் கரையேறி, அ.தி.மு.க. ஆட்சி யைப் பிடிச்சிதாம்.''’
""இந்த கோல்மால் டெக்னிக் எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுதுங்கிறது மே 23-ல் தெரிஞ்சிடும்பா. தேர்தல் முடிவு பற்றி கோட்டை அதிகாரிகள் பலரும் சோழி உருட்டிப் பார்த் துக்கிட்டு இருக்காங்களாமே?''’
""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே தேர்தல் முடிவு யாருக்கு சாதகமா இருக்கும்ன்னு கோட்டையில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெட்டிங் நடந்தது பற்றி நாம பேசியிருக்கோம். அந்த பெட்டிங் இப்ப வேகமானதால, வாக்கு எண்ணப்படும் நாள் வரை ரிசல்ட்டுக்குக் காத்திருக்க முடியாத அதிகாரிகள் பலரும், பல இடங்களிலும் தொடர்புகொண்டு ரிசல்ட் எப்படி வரும்ன்னு விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. தி.மு.க.வுக்கு எதிரான மன நிலையில் உள்ள அதிகாரிகள் தான் ஏழெட்டு வருசமா கோட்டையில் செல்வாக்கோடு இருக்காங்க. ரிசல்ட் விஷயத்தில் அவங்க கவலையா இருக்காங்களாம். கடந்த சில வருசங்களா ஓரங்கட்டப்பட்டிருக்கும் அதிகாரிகளோ, ஆட்சி மாற்றம் பற்றிய எதிர்பார்ப்போடு சந்தோசமா இருக்காங்களாம். இதுதான் பெட்டிங் நிலவரம்.''
""ஓ''’’
""எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து வருமானவரித்துறை நிறைய ரெய்டு நடத்தியது. தமிழ்நாட்டில் அதிகம். மற்ற மாநிலங்களிலும் குறி வைக்கப்பட்டது. இந்த ரெய்டுகளைத் தலைமை ஏற்று நடத்தியவர் வருமானவரித்துறையோட தலைமைப் புலனாய்வு அதிகாரியான முரளிகுமாராம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும் மற்ற மாநிலங்களிலும் ரெய்டு நின்னுடிச்சி..''
""ம்.. .. தேர்தல் ரிசல்ட் வந்ததும், தேர்தல் பிரிவு டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட அசுதோஷ் சுக்லா, பழைய இடத்துக்கே மாற்றப்பட்டு விடுவாரு. அதே நேரம் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யான டி.கே. ராஜேந்திரனின் பதவிக் காலமும் முடியப்போகுதே?''’’
""புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட இருப்பவர், இன்னும் ஒரு வருட காலமாவது பதவியில் இருக்கக் கூடியவராக இருக்கணும்ங்கிறது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு. அந்த வகையில் பார்த்தால், திரிபாதி, லஷ்மி பிரசாத், எம்.கே.ஜா, ஜாபர்சேட், தமிழ்ச்செல்வன், கரன்சின்ஹா, விஜயகுமார், பிரதீப் பிலிப் ஆகியோரின் பதவிக் காலம் ஒரு வருட காலத்துக்கு மேல் இருக்கிறது. இவர்களில் ஜாபர்சேட் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானவர் என்பதால், அவரைத் தவிர்த்துவிட்டு மற்றவர்களின் பெயர்கள் டெல்லிக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம்ன்னு சொல்லப்படுது. அதேநேரம் இந்தப் பதவி சம்பந்தமா ஜாபர்சேட், டெல்லியில் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்காராம்.''’
""நானும் அதிகாரி தரப்புத் தகவலை உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் நில சீர்திருத்தத் துறை ஆணையராக இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஜக் மோகன் ராஜு, 2009 முதல் 2014 வரை, மத்திய அரசுப் பணியில் இருந்தவர். அந்தக் காலகட்டத்தில் தனக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வை 4 அதிகாரிகள் தடுத்துவிட்டார்கள் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்மையில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு அதிரடிப் புகாரைக் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கார். இதை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், எஃப்.ஐ. ஆரைப் பதிவு செய்யாமல், வெறும் சி.எஸ்.ஆர். ரசீது மட்டுமே கொடுத்திருக்காங்க. கோபமான ஜக் மோகன் ராஜு, நீதிமன்றம் மூலமா ஆர்டர் வாங்குறேன்னு சொல்லிட்டுப் போயிருக்காரு.''