ராங்கால் : ஆட்சி மாறியதும் உள்ளாட்சித் தேர்தல்!

st

"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்து முடிஞ் சிருக்கும் நிலையில், இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் எப்ப வருமோங் கிற ஆவல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கு''’

""ஆமாம்பா... ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 2016 அக்டோபர்லயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்கணும். பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை முறையா வழங்கணும்னு தி.மு.க. போட்ட வழக்கை காட்டி இழுத்தடிச்சாங்க. தேர்தலை ஏன் நடத்தலைன்னு உயர்நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவிச்சும் கூட, ரெண்டரை வருசமா, இதோ அதோன்னு உள்ளாட்சித் தேர்தலை இழுத்தடிச்சிக்கிட்டே இருக்கு எடப்பாடி அரசு. தேர்தல் நடத்தாததால் எல்லாவிதத்திலும் பாதிப்பு மக்களுக்குத்தானே?''’

st

""சரியா சொன்னீங்க தலைவரே, ஒக்கி புயல், கஜா புயல்ன்னு இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனடி உதவிக்கு யாரும் இல்லை. கஜாவால் டெல்டா பகுதி பலத்த சேதத்தை சந்திச்சப்ப, அதையெல்லாம் தரை யிறங்கிப் பார்க்காமல் முதல்வர் எடப்பாடி ஹெலிகாப்டரிலேயே பறந்தார். பிரதமர் மோடியோ எட்டிக்கூட பார்க்கலை. நிவாரணமும் முழுமையா வந்து சேரலை. நமக்குன்னு ஒரு வார்டு கவுன்சிலரோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ இருந்திருந்தா, அத்யாவசிய உதவிகளை அவங்ளே உடனடியா செஞ்சிருப

"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்து முடிஞ் சிருக்கும் நிலையில், இதேபோல் உள்ளாட்சித் தேர்தல் எப்ப வருமோங் கிற ஆவல் அனைத்துத் தரப்பு மக்களிடமும் இருக்கு''’

""ஆமாம்பா... ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 2016 அக்டோபர்லயே உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்கணும். பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை முறையா வழங்கணும்னு தி.மு.க. போட்ட வழக்கை காட்டி இழுத்தடிச்சாங்க. தேர்தலை ஏன் நடத்தலைன்னு உயர்நீதிமன்றம் பலமுறை கண்டனம் தெரிவிச்சும் கூட, ரெண்டரை வருசமா, இதோ அதோன்னு உள்ளாட்சித் தேர்தலை இழுத்தடிச்சிக்கிட்டே இருக்கு எடப்பாடி அரசு. தேர்தல் நடத்தாததால் எல்லாவிதத்திலும் பாதிப்பு மக்களுக்குத்தானே?''’

st

""சரியா சொன்னீங்க தலைவரே, ஒக்கி புயல், கஜா புயல்ன்னு இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் உடனடி உதவிக்கு யாரும் இல்லை. கஜாவால் டெல்டா பகுதி பலத்த சேதத்தை சந்திச்சப்ப, அதையெல்லாம் தரை யிறங்கிப் பார்க்காமல் முதல்வர் எடப்பாடி ஹெலிகாப்டரிலேயே பறந்தார். பிரதமர் மோடியோ எட்டிக்கூட பார்க்கலை. நிவாரணமும் முழுமையா வந்து சேரலை. நமக்குன்னு ஒரு வார்டு கவுன்சிலரோ, உள்ளாட்சிப் பிரதிநிதிகளோ இருந்திருந்தா, அத்யாவசிய உதவிகளை அவங்ளே உடனடியா செஞ்சிருப்பாங்க. ஆனா, பாதிப்பு நேரத்தில் கஷ்டத்தை யார்கிட்ட சொல்றதுன்னு கூடத் தெரியாமல் பொதுமக்கள் பட்டபாடு பெரும்பாடு. அதனால் உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தையும் அதற்கான தேர்தலை நடத்த வேண்டிய அவசரத்தையும் மக்கள் உணர்ந்திருக் காங்க''’

""உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுபடியும் 3 மாச காலம் அவகாசம் தேவைன்னு உச்சநீதிமன்றத் தில் எடப்பாடி அரசு மனுத் தாக்கல் செஞ்சிருக்கே?''’

""உண்மைதாங்க தலைவரே, இது தொடர்பான வழக்கு பிப்ரவரியில் விசா ரணைக்கு வந்தப்ப, ஜூன் மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி விடுவோம்ன்னு உயர்நீதிமன்றத்திடம் உத்தரவாதம் கொடுத்திருந்தது எடப்பாடி அரசு. தேர்தல் ஆணையமும், நாங்க எப்ப சொன்னாலும் தேர்தலை நடத்தத் தயார்னு நீதிமன்றத்திடம் சொன்னது. இதுக்கிடையில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் வந்துடுச்சு. இந்த நிலையில்தான் இப்ப உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுபடியும் அவகாசம் கேட்டிருக்கு எடப்பாடி அரசு.''

""அவகாசம் கேட்க என்ன காரணம்?''

e

""இப்ப நடந்த தேர்தல்ல கடுமையா வேலைசெய்து களைத்துப் போயிருக்கும் தங்கள் கட்சித் தொண்டர்கள், மீண்டும் புத்துணர்ச்சியோடு களவேலை பார்க்கத்தான் இந்த அவகாசம்ன்னு எடப்பாடித் தரப்பு சொல்லுது. அதே நேரம் கட்சியின் சீனியர்களோ, இப்ப நடந்திருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்லயும் சட்டமன்ற இடைத் தேர்தல்லயும், நமக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோன்னு எடப்பாடி குழம்பிப் போயிருக்கார். அதனால்தான் கொஞ்சம் இடை வெளியை அவர் எதிர்பார்க்கிறார்ன்னு புன்னகைக் கிறாங்க. எதிர்க்கட்சிகளோ தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்ததும், உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்னு சொல்றாங்க.''’

""தேர்தல் கமிஷன் மேல எதிர்க்கட்சிகளுக்கு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போலிருக்கே?''’’

""உண்மைதாங்க தலைவரே, தேர்தல் கமிஷன் மேல் துளியும் நம்பிக்கை இல்லாததால்தான், தி.மு.க.வின் வெற்றியை, தேர்தல் கமிஷன் உதவி யோட ஆளும் அ.தி.மு.க. களவாடி விடாமல், தி.மு.க. தொண்டர்கள் விழிப்போட இருக்கணும்னு அந்தக் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டா லின் அறிக்கை வெளியிட்டிருக்கார். தி.மு.க. மட்டுமல்ல, மத்தியிலும் மாநிலங்களிலும் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் அனைத்து எதிர்க் கட்சிகளும் நம்பிக்கை இழந்திருக்கு. அதனால்தான் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷனைக் கண்டிச்சி, அங்கே பலமான போராட்டத்தை நடத்தியிருக்கார். அதேபோல் ஆந்திர முதல்வ ரான சந்திரபாபு நாயுடுவும், ஆந்திராவில், தேர்தல் கமிஷனுக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்துக்கும் எதிரா வழக்குப் போட்டிருக்கார். அதோட தேர்தலுக்கு முன்பே அறிவாலயம் வந்து, ஓட்டுப்பதிவு எந்திரத்திடம் ரொம்ப கவனமா இருங்கன் னும் எச்சரிக்கை செஞ்சிட்டுப் போயிருக்கார். அதனால்தான் தேர்தல் கமிஷன் செய்த குளறுபடிகள் பத்தியும், ஆளும்கட்சியின் அத்து மீறல்கள் பத்தியும் தி.மு.க. அவ்வப்போது புகாரைக் கொடுத்து வந்திருக்கு. இந்த நிலையில் தமிழகத் தேர்தல் அதிகாரியான rசத்தியப்பிரதா சாகு, தி.மு.க. மாஜி மந்திரியான எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்ங்கிற தகவல் ஒன்னு தி.மு.க. தரப்பிலேயே பரபரப்பா பரவிக்கிட்டு இருக்கு. திருவண்ணாமலை கலெக்டரா சாகு இருந்தப்ப, அப்ப நடந்த தேர்தல் முறைகேடு தொடர்பா வேலு சம்பந்தப்பட்ட சர்ச்சையின்போது, சாகுதான் அவரை சிக்கலில் இருந்து விடுவிச் சாருன்னும் அதனால்தான் அவர்கள் நட்பு நெருக்கமாச்சுதுன்னும் உபரித் தகவலும் கூடப் பரவுது.''

""மறுபடியும் எட்டுவழிச் சாலை பத்தின ஆலோசனை கோட்டையில் நடந்திருக்குன்னு டாக் அடிபடுதே''’

""ஆமாங்க தலைவரே, சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெறலைங்கிற காரணத்தை காட்டி, எட்டுவழிச் சாலை திட்டத் தைத் தற்காலிகமா நிறுத்திவச்சிருக்கு சென்னை உயர்நீதிமன்றம். 8 வழிச் சாலையை எதிர்த்து வழக்குப்போட்ட பா.ம.க.வோ, இந்த விசயத்தில் அரசு மேல்முறையீட்டுக்குப் போகாதபடி, தன்னுடைய கூட்டணி உறவால் தடுக்கும்ன்னு அறிவிச்சிது. இதைத் தொடர்ந்து மேல்முறை யீட்டுக்குப் போகமாட்டோம்ன்னு முதல்வர் எடப்பாடியும் தேர்தலுக்கு முன்பு அறிவிச்சார். இதை விவசாயிகள் நம்பியிருந்த நிலையில்தான், நான்கு நாட்களுக்கு முன்பு, கோட்டையில் அதிகாரிகளை அழைத்து, எட்டுவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஆலோசிச் சிருக்கார். எடப்பாடி. அப்ப அதிகாரிகள், மே 19-ல் நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் இருக்கும் போது, இது தொடர்பான முயற்சியில் இறங்கினால் மக்களின் எதிர்ப்பு பலமாகத் தேர்தலில் வெளிப்படும். அதனால், தேர்தல் முடிந்தபிறகு மேல்முறையீடு தொடர்பான முயற்சியில் இறங்குவோம்னு சொல்லியிருக்காங்க. இதைக்கேட்ட எடப்பாடி, அதுவும் சரிதான்னு தலையை ஆட்டியிருக்காரு''’

""நானும் ஒரு முக்கியமான தகவலை உங்கிட்டப் பகிர்ந்துக்கறேன். இடைத் தேர்தலில், தங்கள் சமூக வாக்குகளை நம்பி திருப்பரங்குன்றம் தொகுதி மீது தீவிரமா பார்வை பதிச்சிருக்கார் அ.ம.மு.க. தினகரன். அங்கே மு.க.அழகிரி ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதால், தினகரன் அழகிரி தரப்பைத் தொடர்பு கொண்டு, உங்க ஆதரவு எங்களுக்குத் தேவைன்னு கேட்டிருக்கார். அழகிரியோ, வெயிட் பண்ணுங்கன்னு சொல்லி விட்டாராம். இந்த சஸ்பென்ஸ் தகவல் கூட தினகரன் தரப்புக்கு உற்சாகத்தைத் தந்திருக்கு.''

nkn300619
இதையும் படியுங்கள்
Subscribe