பணப்பட்டுவாடா! மந்திரிகளை கண்காணிக்கும் எடப்பாடி!

""ஹலோ தலைவரே, பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் ஏவுகணை மூலமா பரபரப்பாக்கிட்டாரே?.''’

m""ஆமாம்பா.. டி.வி.-ரேடியோவில் பிரதமர் பேசப் போறாருன்னதும் நெருக்கடி நிலையை அறிவிக்கப் போறாரோ, தாவூத் இப்ராகிமை பிடிச்சிட்டு வந்துட்டாரோ, திரும்பவும் புது இந்தியாவை பிறக்க வச்சிட்டாரோன்னு தாறுமாறா சோஷியல் மீடியாக்களில் பரபரப்பு கூடுச்சி. கடைசியில், இந்தியாவின் ’பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் செய்த மகத்தான சாதனையான செயற்கைக்கோளைத் துல்லியமாக தாக்கும் ஏவுகணை தொடர்பான மிஷன் சக்தியின் வெற்றியை வழக்கம்போல தன்னோட சாதனை மாதிரி மோடி விளம்பரப்படுத்திட்டாரு.''

Advertisment

""5 ஆண்டுக்கு முன் மோடி கொடுத்த வாக்குறுதிகள் முழுசா நிறைவேற்றப்படல. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியா முழுமையும் இருக்கும் 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72ஆயிரம் ரூபாய் வழங்குவோம்ன்னு ராகுல் ஏவிய ராக்கெட், மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி யிருக்கு. அதனால்தான், மோடி பதிலுக்கு ஏவுகணையை விட்டிருக்காரு. ஆனாலும், மோடியின் இந்த ஏவுகணை அரசியலை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க, வழக்கம்போல ஆன்ட்டி இந்தியன் பட்டம் சூட்டுகிறது பா.ஜ.க.''’

""சரிப்பா மோடியின் தேர்தல் கணக்கு எப்படி இருக்கு?''’

""ஏற்கனவே கட்சிப் பிரமுகர்கள், தனியார் ஏஜென்ஸிகள் மற்றும் புலனாய்வுத்துறை மூலம் எடுக்கப்பட்ட கணிப்புகளை வச்சி, தாமரைச் சின்னம், இந்தியா முழுக்க 240 தொகுதிகளில் மலரும்னு பா.ஜ.க. கணக்குபோட்டு வச்சிருந்தது. ஆனா இப்ப, தாமரை 190 தொகுதிகளில் மட் டும் மலரும்னும், கூட்டணிக் கட்சிகள் மூலம் 40 தொகுதிகளும், தேர்த லுக்குப் பிறகு தங்களுக்கு கிடைக்கும் ஆதரவுகள் மூலம் 40 தொகுதிகளும் கிடைக்கும்னும் ரிப்போர்ட் வந்ததால், ஏவுகணை தாக்குனதுபோல பா.ஜ.க. தலைமை இருக்குதாம். எப்படியும் ஆட்சியைப் பிடிச்சிடணும்ங்கிற வேகம் மட்டும் பா.ஜ.க. தரப்பில் குறையலை. மோடியின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையில் முரண் பட்டவரான ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் காங்கிரஸ் அடிக்கடி ஆலோசனை செய்வதால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவருக்கு முக்கிய பதவி கொடுத்து பொருளாதார மாற்றங்களை செய்ய திட்டமிடுதோன்னும் பா.ஜ.க. யோசிக்குது.''’’

Advertisment

m

""மோடி மீண்டும் பிரச்சாரத் துக்காக தமிழகம் வரப்போகிறா ராமே?''’

""ஏப்ரல் முதல் வாரத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 5 தொகுதி களை மையமாக்கி 2 பொதுக்கூட் டங்களில் பேசுவதுங்கிறது மோடி யோட ப்ளான். ஆனால் பா.ம.க. போட்டியிடும் தருமபுரிக்கு வந்து அன்புமணி உள்ளிட்ட தங்கள் வேட்பாளர் களுக்காகவும் பிரச்சாரம் செய்யணும்னு அவங்க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கு. அதுபோல, அ.தி.மு.க.வும் தங்கள் வேட்பாளர் களுக்காக மோடி சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசணும்னு வலியுறுத்துது.''’

""தேர்தல் பிரச்சாரத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களை அரவணைத்துப் போகலைன்னு தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கூட்டணியிலும் முணுமுணுப்பு கேட்குதாமே?''’

""தி.மு.க.வைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு. அவங்க கூட்டணியில் இருக்கிற ம.தி.மு.க. வைகோவும் தீவிரமா பிரச்சாரம் பண்றாரு. காங்கிரஸின் ஸ்டார் பேச்சாளரான ப.சி. தன் மகன் களத்தில் இருப்பதால் சிவகங்கையில் கவனம் செலுத்தறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் வேட்பாளரா தேனியைக் கலக்க ஆரம்பிச்சிருக்கார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவும் அவர் போட்டியிடுற சிதம்பரத்தில் பிஸி. இவங்களை எல்லாம் ஒருங்கிணைப்பதில் சிக்கல் இருப்பதால் தேர்தல் நெருக்கத்தில்தான் ஒரே மேடையில் ஏறுவாங்களாம். அ.தி.மு.க. கூட் டணியைப் பொறுத்தவரை முதல்வர் எடப்பாடி ஒருபக்கமும் துணை முதல்வர் ஓ.பி.எஸ். இன் னொரு பக்கமும் பிரச்சாரத்தில் விறுவிறுப்பா இருக்காங்க. இந்த நிலையில் அ.தி.மு.க. வேட் பாளர்கள் சிலர், தங்களுக்குப் பிரச்சாரம் செய்ய தே.மு.தி.க. பிரேமலதா வந்தால் நல்லா இருக் கும்ன்னு அமைச்சர்கள் மூலம் எடப்பாடியிடம் கேட்டாங்க. அவரோ, அந்தம்மா உணர்ச்சி வசப்படறவங்க. பிரச்சார வேகத்தில் மறந்துபோய் அவங்க நம்ம அம்மாவையும் நம்மையும் தாக்கினாலும் தாக்குவாங்க. அவசரப்படாதீங்க.. வெயிட் பண்ணுங்கன்னு சொல்லியிருக்காராம்.'

""ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்காக தேனியில் பிரச்சாரம் செய்த மு.க.ஸ்டாலின் அங்கே எதிர்த்து நிற்கிற ஓ.பி.எஸ். மகனை பற்றி சரமாரியா விமர்சிச்சிருக்காரே?''’

""தேனியில் ஸ்டாலின் பேச்சில் ஆவேசம் இருந்தது உண்மைதாங்க தலைவரே.. அதே நேரத்தில், தமிழக காங்கிரஸின் விருப்பத் தொகுதி களின் பட்டியலில் முதலில் தேனி இல்லையாம். காங்கிரஸ் எக்ஸ் எம்.பி.யான ஜே.எம்.ஆரூண்தான் டெல்லி வரை முயற்சி எடுத்து தனக்கு பழைய தொகுதியான தேனி வேணும்னு கேட்டிருக்காரு. இதனால் ராகுலும் அதை காங்கிரசின் விருப்ப லிஸ்ட்டில் சேர்த்திருக்காரு. தி.மு.க.வும் தேனியை காங்கிரஸ் கேட்டதும் கொடுத்துடுச்சு. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் ரெடியாகும் நேரத்தில், தனக்கு உடல் நிலை சரியில்லாததை சுட்டிக்காட்டி, தேனியில் போட்டியிடலைன்னு சொல்லிட்டாரு ஆரூண்.''

""ம்..''

""காங்கிரஸ் தலைமையிடம் ஈரோடு, திருப்பூர்ன்னு சீட் கேட்டுக்கிட்டிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தேனி சீட்டை கொடுத்திடிச்சி காங்கிரஸ் தலைமை. இதை எதிர்பார்க்காத இளங் கோவன், எனக்கு தேனியில் கிழக்கும் தெரியாது மேற்கும் தெரியாதேன்னு கட்சிக்காரங்ககிட்டேயே சொல்லியிருக்காரு. ஆனாலும், தேர்தல் ரேஸில் வேகமா ஓட ஆரம்பிச்சிட்டார். தேனியில் தி.மு.க. நிற்காமல், அது காங்கிரஸ் கைக்குப் போகக் காரணமே தேனியில் தன் மகன் ரவீந்திரநாத்தை அ.தி.மு.க. வேட்பாளரா நிற்கவைத்திருக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான்னு அவங்க தரப்பில் சந்தோசமா பேசிக்கிறாங்க.''’

""தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட சித்து விளையாட்டுகள் சகஜமாச்சே!''’

""தேர்தல் செலவுக்கான பணத்தை வச்சி சித்து விளையாட்டு காட்டுறதா அ.தி.மு.க. வட்டாரத்தில் ஏகப்பட்ட குமுறல். அதனால் அமைச்சர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும்படி உளவுத் துறையிடம் சொல்லியிருந்தார் எடப்பாடி. அப்ப அவங்க கொடுத்த ரிப்போர்ட்டில் டெல்டா மாவட்ட அமைச்சர்களான காமராஜ், ஓ.எஸ். மணியன், துரைக் கண்ணு தரப்பு, தினகரனுடன் நல்ல டீலிங்கில் இருக்குங்கிறதை தெரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, இதை எப்படி மேனேஜ் செய்வதுன்னு குழம்பிப் போயிருக்காரு.''’

""தமிழகத் தேர்தல் நிலவரம் பற்றி, இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டம் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன். தமிழக தொகுதிகளில் -குறிப்பா இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், தினகரன் தரப்பும் போட்டி போட்டுக் கிட்டு பணத்தை இறைப்பது குறித்துதான் அந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் தீவிரமா ஆலோசிச்சிருக் காங்க. அதி.மு.க. பணப் பட்டுவாடாவுக்கு நியூஸ் ஜெ. சேனலின் கட்டமைப்பை பயன்படுத்துவது குறித்தும் விவாதிச்சிருக்காங்க. தி.மு.க. தரப்பு இன்னும் பணத்தை இறைக்கலைங்கிறதையும், அவங்க இந்த வேலையை ஆரம்பிப்பதற்குள், பண மழையைத் தடுத்து நிறுத்தி, தேர்தலை சரியாக நடத்த, இங்கிருக்கும் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உளவுத்துறை அதிகாரிகள் உள் ளிட்ட பலரையும் டிரான்ஸ்பர் செய்யலாமான்னு டிஸ் கஷன் செய்திருக்காங்க. விரைவில் ஒரு அதிரடி ஆக்ஷ னுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் ரெடியாகுதுன்னு டெல்லி வட்டாரம் சொல்லுது.''

_______________

இறுதிச் சுற்று

ஊக்கம் தந்த முதல் ரவுண்டு! இரண்டு தொகுதி பட்டுவாடா!

ijkபெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் கட்சிக்காரர்களுக்கு அதிரடியாக 3 ரவுண்ட் கவனிப்பு நடந்துள்ளதால் பெரிய சந்தோ ஷத்தை ஏற் படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.க. வேட் பாளர் சிவபதி இப்போதுதான் முதல் கட்ட ரவுண்ட் பட்டுவாடா கொடுத்துள்ளதால் அடுத்தகட்ட ரவுண்டுக்காக காத்திருக்கிறார்கள். அ.ம.மு.க. தொட்டியம் ராஜசேக ரனோ "எல்லாவற்றிலும் கறாரா இருக்கிறார். எண்ணி எண்ணி தலைக்கு பட்டுவாடா செய்வதால், இப்படி ஒட்டஒட்ட தருகிறாரே' என்கிற புலம்பல் இருக்கிறது.

th

திருச்சி எம்.பி. தொகுதியை பொறுத்தவரையில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா தொண்டை மான் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே மா.செ. சீனிவாசன் துணை யோடு ஒரு ரவுண்ட் கவனித்ததால் கட்சியினர் படு உற்சாகமாக இருக் கிறார்கள். பிரச்சாரத்திலும் 3 சட்ட மன்றத் தொகுதி களில் புகுந்து வெளியே வந்து விட்டார். தி.மு.க. கூட்டணியில் திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டு தற்போது செயல்வீரர்கள் கூட்டம் நடந் திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தற் போது தான் ஒரு ரவுண்ட் பட்டுவாடா முடிந்திருக்கிறது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. கட்சி யினருக்கு நேரு வேட்புமனுவுக்கு முந்தினநாள் ஒரு ரவுண்ட் முடித்து விட்டார். எனினும் சொந்தக் கட்சி யினரைக் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார் திரு நாவுக்கரசர். அ.தி.மு.க. கூட்டணி யில் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனிடம் அனைத்துக் கட்சியினரும் நெருக்கடி கொடுக்க, ""உங்கள் அமைச்சர், மா.செ.வை பாருங்க, பிரச்சாரம் வரும்போது மட்டும்தான் நான் தருவேன்'' என ஓப்பனாகப் பேசியதால், அமைச்ச ரும், மா.செ.வும் தங்களுக்கு உண் டான முதல் கட்ட ரவுண்டை கொடுத்து, முணுமுணுத்த கட்சி யினரின் வாயைக் கொஞ்சம் அடைத் திருக்கிறார்கள்.

-ஜெ.டி.ஆர்.