"ஹலோ தலைவரே, தே.மு. தி.கவோட இழுபறி ஒருபக்கம்னாலும் மற்ற கட்சிகளெல்லாம் அவங்கவங்க கூட்டணியில் செட்டில் ஆயிடிச்சே''’
""ஆமாப்பா, தே.மு.தி.க.வையும் எப்படியாவது உள்ளே கொண்டு வந்து, மெகா கூட்டணின்னு காட்ட முயற்சித் தாலும் அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணியில் இன்னமும் பசை சரியா ஒட்டலை?''
""ஆமாங்க தலைவரே, 7-ந் தேதி பிரதமர் மோடி சென்னை வந்தப்ப, அவரை கூட்டணிக் கட்சிகள் சார்பில் வரவேற்க பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அ.தி.மு.க. சார்பில் அழைப்பு போயிருக்கு. போன எம்.பி. தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. இருந்து 1 சீட் ஜெயிச்சும் அமைச்சர் பதவி தர மோடி மறுத்துட்டார்ங்கிற கோபம் இன்னைக்கும் ராமதாசுக்கு இருப்பதால இப்பவும் கூட்டணிக்கு லேசில் பிடி கொடுக்கலை. கடைசியில் அன்புமணியிடம், இந்தமுறை ஜெயித்தால் பா.ம.க.வுக்கு 2 அமைச்சர் பதவி உறுதியாக உண்டுன்னு சமாதானம் பேசித்தான் பா.ம.க.வைக் கூட்டணிக்குள் கொண்டுவந்தாங்க. ஆனாலும், பழைய ஏமாற்றம் மாறாததால, மோடியை வரவேற்க வர மாட்டேன்னு ராமதாஸ் சொல்லிட்டாரு. கிளாம்பாக்கம் பிரச்சாரப் பொதுக் கூட்டத்துக்கும் அவர் வராமல் இருந்துவிடுவாரோங்கிற பயத்தில், அமைச்சர் சி.வி.சண்முகத்தை தைலாபுரத்துக்கு முதல்வர் எடப்பாடி அனுப்பிவைத்தார். அதற்கப்புறம்தான் மோடியின் கூட்டத்தில் ராமதாஸ் பங்கேற்றார்''.
""மேடையில் ராமதாஸும் மோடியும் கை குலுக்கியதை ஊடகங்கள்ல பார்த்தேனே?''
""அதோடு இன்னொரு செய்தியையும் சொல்றேன். அந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் த.மா.கா. வாசனையும் மேடை ஏற்றணும்ன்னு பா.ஜ.க. திட்டமிட்டது. முதல்நாள் ஜி.கே.வாசனை டெல்லியில் இருந்து தொடர்புகொண்ட பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, கூட்டத்தில் நீங்களும் பங்கேற்கணும்னு சொல்ல, ஜி.கே.வாசனோ நான் இரண்டு சீட்டு கேட்டேன். முதலில் ஒரு சீட்டு தான் என்று சொன்ன அ.தி.மு.க., அதுக்கப்புறம் எந்த உத்தரவாதமும் எனக்குத் தரலை. அதனால் எந்த நம்பிக்கையில் நான் அந்த மேடையில் ஏறுவதுன்னு கேட்டிருக்கார். எடப்பாடியிடம் பேசுறேன்னு சொல்லி போனை வச்சிட்டார் அமித்ஷா. ஆனாலும் வாசனைக் கண்டுகொள்ள வில்லை எடப்பாடி.''
""அதனாலதான் பொதுக்கூட்டத்தில் வாசன் மிஸ்ஸிங்கா?''
""ஆமாங்க தலைவரே.. மேடையேறிய மோடி, தனக்கு வணக்கம் வைத்த தலைவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தபடியே, டாக்டர் ராமதாஸ் எங்கே இருக்கிறார்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டு அவர்கிட்ட வந்து, இரண்டு கைகளையும் பிடிச்சிக்கிட்டு நலம் விசாரிச்சாரு. அதேபோல் கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பும் போதும் ராமதாஸிடம் நம் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று மோடி கேட்க, 90 சத வெற்றி வாய்ப்பு நமக்கு இருக்குன்னாராம் ராம தாஸ். கூட்டத்தில் ராமதாஸ் பேசுறப்ப, கூட்டணிக்கு வாக்கு கேட்காமல், அ.தி.மு.க.விடம் தாங்கள் வைத்த 10 கோரிக்கைகளை மோடி முன்னிலையிலும் வைத்தது, அவருக்கு தனி இமேஜைக் கொடுத்தது. பா.ஜ.க. தரப்போ பா.ம.க.வை அரைக்கண்ணால் கவனித்துக்கொண்டே இருக்குது. கீழ்மட்டத்திலும் பா.ம.க.வினரோடு ஒட்டமுடி யாமல் அ.தி.மு.க.வினர் ஒதுங்கியே நிக்கிறாங்க. இதுவும் பா.ஜ.க.வை சங்கடப்படுத்துது''.
""தி.மு.க. சைடில் நிலைமை எப்படி இருக்கு?''
""தி.மு.க.வுக்கு 20, கூட்டணிக் கட்சிகளுக்கு 20ன்னு பாகம் பிரிச்சிக்கிட்டு, டேக் ஆஃப் ஆயி டிச்சி. விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப் பட்டுள்ள 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாமேன்னு தி.மு.க. கேட்டுச்சு. தனி சின்னம்னா போட்டி கடுமையா இருக்கும். சூரியன்னா, தி.மு.க. தரப்பில் வேகமா களமிறங்கி ஜெயிக்க வச்சிடுவாங்கன்னு சொல்லப்பட்டிருக்கு. சிறுத்தைகளோ உதயசூரியனில் நின்னா தனித் தன்மையை இழக்க நேரிடும்னு யோசிக்கிறாங்க. ம.தி.மு.க.வுக்கு ஒரு லோக் சபாவையும் ஒரு ராஜ்யசபாவையும் தி.மு.க. ஒதுக்கியதில், வைகோ ஆதரவாளர்களுக்கு கொஞ்சம் ஆதங்கம் இருந்தபோதும், ராஜ்யசபா சீட்டுங்கிறது நமக்கு கன்ஃபார்ம் ஆச்சேன்னு சமாதானம் ஆனாங்க. பம்பர சின்னம் இப்ப ம.தி.மு.க.கிட்ட இல்லை. அதனால உதயசூரியனில் நிற்கும்படி தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் ம.தி.மு.க.வும் அது சரியாக இருக்காதுன்னு தனக்குக் கிடைக்கிற சின்னத்தில் நிற்கும் முடிவில் இருக்குது. வைகோவைப் பொறுத்தவரை 40 தொகுதிகளிலும் பிரச்சாரத்துக்கு ரெடியாயிட்டாரு.''
""2016 ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து தி.மு.க.வை எதிர்த்த கட்சிகளெல்லாம் இந்த முறை தி.மு.க பக்கம் நிற்குது. சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுக்குச் சமமான சீட்டுக்கள் வேண்டும்ன்னு சொல்லி, தலா 2 சீட்டுகளை தி.மு.க.விடம் வாங்கிடுச்சே''.
""மக்கள் நலக் கூட்டணிக் கட்சி களுக்கு தி.மு.க. கொடுத்த அங்கீகா ரத்தை, 2014-லிலிருந்து கூடவே இருக்கிற தங்களுக்கு கொடுக்கலையேங்கிற வருத்தம் மனித நேய மக்கள் கட்சிகிட்டே இருக் குங்க தலைவரே.. இந்த முறை சீட் இல் லைன்னு அறிவாலயத்தில் சொல்லிட்ட தால, மனம் குமுறும் ம.ம.க.வினர், ஜவாஹிருல்லா தலைமையில் ஆலோசனை நடத்துனாங்க. தினகரனின் அ.ம.மு.க. வோடு கூட்டணி வைக்கலாமான்னு விவாதிக்கப்பட்டது. அங்கே ஏற்கனவே இன்னொரு முஸ்லிம் அமைப்பான எஸ்.டி.பி.ஐ. இருக்கு. இப்ப நாம் அங்கே போனால் யாருக்கு முன்னுரிமை கிடைக்கும்னும் யோசிக்கப்பட்டது. 9-ந் தேதி நிர்வாகக் குழுவைக் கூட்டி இது குறித்து முடிவெடுக்கலாம்ன்னு தீர் மானிச்சிருக்காங்க. ம.ம.க.வுக்கு மட்டும் ஏன் சீட் ஒதுக்கலைன்னு தி.மு.க. தரப்பில் கேட்டால், ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலிலும் 2014 நாடாளு மன்றத் தேர்தலிலும் சீட்டுக் களைக் கொடுத்தும் ம.ம.க. வெற்றி பெறவில்லை. கொங்கு ஈஸ்வரன், ஐ.ஜே.கே. பாரிவேந் தர் போல உதயசூரியனில் நிற்கவும் அவர்கள் விரும்பலை. ம.ம.க. மறுபடியும் தனிச் சின்னத்தில் நின்றால் வெற்றிவாய்ப்பு கிடைப்பது சந்தேகம். அதோடு 20 சீட்டுக்களை கூட்டணிக்குப் பகிர்ந்து கொடுத்துட்டோம். ஏற்கனவே முஸ்லிம் லீக்கிற்கு ஒரு சீட் கொடுத்திருக்கிறோம். அதோடு அன்சாரியின் மனித நேய ஜனநாயகக் கட்சியின் ஆதரவும் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. தி.மு.கவிலும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தணும்னு சொல்றாங்க.'’
""நடிகர் சரத்குமாரின் ’சமத்துவ மக்கள் கட்சியும் ஊசலாடுதே?''.
""ஆரம்பத்தில் எடப்பாடி தரப்பு, சரத்தைத் தொடர்பு கொண்டு, தூத்துக்குடியில் தி.மு.க. சைடில் கனிமொழியை நிறுத்தினால் நீங்களோ அல்லது உங்கள் மனைவி நடிகை ராதிகாவோ எதிர்த்து நிற்கவேண்டும். சம்மதம் என்றால் உங்களுக்கு சீட்டு தருகிறோம்னு சொல்லியிருக்கு. சரத்தோ, எங்களுக்கு 2 சீட்டுகள் தந்தால் பரிசீலிக்கிறோம்ன்னு சொல்லியிருக்கிறார். இதன்பின் அவரை எடப்பாடி தரப்பு தொடர்பு கொள்ளவில்லை. சரத் முயன்றும் அவர்களைச் சந்திக்க முடியவில்லையாம். தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்திருக்கும் அவருக்கு, அங்கும் எந்த சிக்னலும் இல்லை. மனம்வெறுத்துப் போன சரத், தே.மு.தி.க.வோடு பேசிப் பார்த்தார். ஒன்றும் சரிப்பட்டு வரலை. அதனால் 40 தொகுதியிலும் தனித்து நிற்போம்னு அறிவித்திருக்கும் சரத், இப்போது தினகரன் தரப்பில் இருந்தாவது கூட்டணிக்கான அழைப்பு வருமான்னு காத்துக்கிட்டு இருக்கார்''.
""இரண்டு அமைச்சர்களால் சக அமைச்சர்கள் மத்தியில் பலத்த சலசலப்பும் அதிருப்தியும் நிலவுதாமே?''
""ஆமாங்க தலைவரே, அண்மைக் காலமாக கொங்கு அமைச்சர்களான வேலுமணியும் தங்கமணியும், உச்சகட்ட அதிகாரத்தோடு நடந்துக்குறாங்களாம். பல துறைகளில் அந்தத் துறைகளின் அமைச்சர்களுக்கே தெரியாமல் நினைத் ததைச் சாதிக்கிறார்களாம். உதாரணமாக அறநிலையத்துறை அமைச்சரான சேவூர் ராமச்சந்திரனுக்கே தெரியாமல், துறை ஆணையரான பனீந்திர ரெட்டி மூலம், அந்தத் துறையின் 3 இணை ஆணையர்களை அதிரடியாக டிரான்ஸ்பர் செய்திருக்காங்களாம். அதிலும் மாற்றலில் அனுப்பப்பட்ட இடத்தில் அன்றே பொறுப்பேற்க வேண்டும்னு கடும் உத்தர வோடு அந்த டிரான்ஸ்பர் ஆர்டர் பிறப்பிக்கப்பட்டதாம். அதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் விருப்பம்போல் அவர் கள் ஆட்டி வைக்கிறார்களாம். சக அமைச்சர்கள் மட்டு மல்லாது சபாநாயகர் தனபாலும் இந்த இரு அமைச்சர்களும் தன்னை மதிப்பதில்லைன்னு புலம்புறாராம். இவர்களைப் பற்றி போகும் புகார்களை முதல்வர் எடப்பாடி கண்டுகொள்வதே இல்லைங்குறாங்க.''
""தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு காவல்துறை மூலம் செக் வைக்கவும் முயற்சி நடக்கிறதாமே?''
""அ.தி.மு.க. ஓட்டைப் பிரிக்கும் தினகரனைக் குறிவைத்த எடப்பாடி அரசு, அவர் பிரச்சாரத்துக்குப் போகும் ஊர்களில் எல்லாம் அவர் மீது வழக்கு போடுவது பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கோம். அதேபோல் தி.மு.க.வையும் நீதிமன்றங்களுக்கு இழுத்தடிக்கும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. யாக இருந்த அம்ரேஸ் பூஜாரியை அழைத்து, குட்கா வழக்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் மாமூல் போனதுன்னு வழக்கைப் பதிவு செய்து அவர் மீது கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சி.பி.சி.ஐ.டி.யில் கிடப்பில் இருக்கும் தி.மு.க.வினர் மீதான வழக்குகளை எல்லாம் தூசி தட்டி, எடுத்து, அவர்களை எல்லாம் கைது செய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்னு முதல்வர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக் கிறது. அம்ரேஸ் பூஜாரியோ, இதற்கு உடன்பட மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் அகடமியின் ஏ.டி.ஜி.பி.யாக உட்கார வைத்துவிட்டார்கள்.''
""அந்த இடத்துக்குத்தான் ஜாபர் சேட்டை நியமிச்சிருக்காங்களா?''
""குட்கா விவகாரத்தில் ஆளுந்தரப்பின் விருப்பப்படி டெல்லி வரை சென்று சில காரியங் களைச் செய்து கொடுத்தவர்தான் போலீஸ் அகடமியின் டி.ஜி.பி.யாக இருந்த ஜாபர்சேட்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க. அவருக்குத் தான் சி.பி.சி.ஐ.டி. பிரிவின் டி.ஜி.பி. போஸ்ட் கிடைச்சிருக்கு. எடப்பாடி இதை கிஃப்ட்டா கொடுத்திருப்பதா ஆளுந்தரப்பு சொல்லுது. இந்த நியமனத்தை தலைமைச் செயலாளர் கிரிஜாவும் உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்ட்டியும் எதிர்த்த போதும், எடப்பாடி பிடிவாதம் காட்டி சாதிச்சிட்டாராம். இதைத் தொடர்ந்து தி.மு.க.வைக் குறிவைக்கும் அசைன்மெண்ட்டை ஜாபர்சேட் டிடம் முதல்வர் எடப்பாடியும், டி.ஜி.பி.யும் ஒப்படைச்சிருக் காங்களாம். ஆனால் அமைச் சர்கள் சிலரோ, அவர் தி.மு.க. ஆட்சியில் கலைஞர் குடும்பத் துடன் நெருக்கம் பாராட்டிய அதிகாரியாச்சே. இவர் எப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்?’ என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்களாம்''.
""நானும் இது தொடர்பாக என் காதுக்கு வந்த செய்தியைச் சொல்றேம்பா. ஜாபர் சேட் தேர்தல் களத்தில் நன்கு வேலைபார்க்கக் கூடிய அதிகாரி. ஆளும் தரப்பு தேர்தலுக்காக வினியோ கிக்கும் பணம் சரியாகப் போய்ச் சேருகிறதா? மக்கள் மனநிலை என்ன? கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி? தொண்டர்களின் ஒத்து ழைப்பு எப்படி? என்பது பற்றியெல்லாம் உடனுக் குடன் ரிப்போர்ட் கொடுக்கும் பொறுப்பு அவ ரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். அதேபோல் விரைவில் ஜாமீனில் வெளியே வரக்கூடிய வாய்ப்புள்ள பேராசிரியர் நிர்மலாதேவியை, எவரிடமும் வாய் திறக்கவிடாமல் வைத்திருக்கும் பொறுப்பும் கூடுதலாக அவரிடம் ஒப்படைக் கப்பட்டிருக்கிறதா சொல்றாங்க.''’