"ஹலோ தலைவரே, ஜெ. வின் 71-ஆவது பிறந்தநாள் விழாவில் மோடியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் ஜெயலலிதாவின் படத்தை தலைமைக் கழகத்தில் வச்சிருந்ததைக் கவனிச்சீங்களா?''’
""கவனிச்ச கட்சிக்காரங்களே அப்செட் ஆயிட்டாங்களாமே?''’’
""ஆமாங்க தலைவரே.. எடப்பாடிகிட்ட அவங்க கேட்டப்ப, கூட்டணியின் ஒற்றுமைக் காகத்தான் இதை வச்சோம். வேண் டாம்ன்னு எல்லோரும் ஃபீல் பண்ணினா, இதை எடுத்துட லாம்ன்னு சொல்லி, அவர்களை சமா தானப்படுத்தி இருக்கார். ஆனா, கட்சி யினருக்கு நம் பிக்கை வரலை.. காரணம், மதுரை சம்பவம். ராமேஸ் வரத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகி கள் கூட்டத்தில் பங் கேற்பதற்காக மதுரை ஏர்போர்ட்டுக்கு அமித்ஷா வந்த நேரத்தில், அந்த விமான நிலைய விரிவாக்கத் திட்ட விழாவிற்காக மத்திய அமைச்சர் பொன்னார்., ஓ.பி.எஸ். ஆகியோ ரும் விமான நிலையத்தில் இருந்தாங்க. ஓ.பி.எஸ்.சைப் பார்த்த அமித்ஷா, நான் ராமேஸ்வரம் கூட்டத்துக்குப் போயிட்டு திரும்பி வரும்வரை இங்கேயே வெயிட் பண்ணுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்குன்னு ஆர்டர் பண்ணுவது போல சொல்லிட்டாரு.''
""அமித்ஷா ஒரு கட்சியின் தலைவர்.. ஓ.பி.எஸ். ஒரு மாநிலத்தின் துணை முதல்வராச்சே!''
""ஓ.பி.எஸ். பக்கத்தில் இருந்த அ.தி.மு.க. எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இதே ஷாக்தான். பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரைத் தொடர்பு கொண்ட ஓ.பி.எஸ்., இது பற்றி சொன்னார். முதல்வர் வரை தகவல் போனது. ஆனாலும், அமித்ஷா ரிட்டனுக்காக ஓ.பி.எஸ். காத்திருந்து சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளீதரராவ், கோவையில் களமிறங்கப் போகி றார்ன்னு சொல்லப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோ ரோடு மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த அமித்ஷா எல்லோரும் உட்கார்ந்திருக்க, அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்.ஸுக்கு மட்டும்தான் உட்கார சீட் கிடைத்தது. மத்தவங்க நின்னுக்கிட்டி ருந்தாங்க.''’’
""எதற்காக இந்த சந்திப்பு?''’’
""தமிழகத்திலும் இது பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான். அ.தி. மு.க.வின் மெகா கூட்டணின்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லி அசரடித்த அமித்ஷா, கன்னியாகுமரிக்கு மோடி வர்றாருல்ல, அப்ப நீங்க எல்லாரும் மேடையேறி பலம் காட்டுவதோடு, நல்ல கூட்டத்தைக் கூட்டியாகணும். இதில் நீங்க அலட்சியமா இருந்திடாதீங்கன்னும் ஆர்ட
"ஹலோ தலைவரே, ஜெ. வின் 71-ஆவது பிறந்தநாள் விழாவில் மோடியிடம் கோரிக்கை மனு கொடுக்கும் ஜெயலலிதாவின் படத்தை தலைமைக் கழகத்தில் வச்சிருந்ததைக் கவனிச்சீங்களா?''’
""கவனிச்ச கட்சிக்காரங்களே அப்செட் ஆயிட்டாங்களாமே?''’’
""ஆமாங்க தலைவரே.. எடப்பாடிகிட்ட அவங்க கேட்டப்ப, கூட்டணியின் ஒற்றுமைக் காகத்தான் இதை வச்சோம். வேண் டாம்ன்னு எல்லோரும் ஃபீல் பண்ணினா, இதை எடுத்துட லாம்ன்னு சொல்லி, அவர்களை சமா தானப்படுத்தி இருக்கார். ஆனா, கட்சி யினருக்கு நம் பிக்கை வரலை.. காரணம், மதுரை சம்பவம். ராமேஸ் வரத்தில் பா.ஜ.க. பூத் கமிட்டி நிர்வாகி கள் கூட்டத்தில் பங் கேற்பதற்காக மதுரை ஏர்போர்ட்டுக்கு அமித்ஷா வந்த நேரத்தில், அந்த விமான நிலைய விரிவாக்கத் திட்ட விழாவிற்காக மத்திய அமைச்சர் பொன்னார்., ஓ.பி.எஸ். ஆகியோ ரும் விமான நிலையத்தில் இருந்தாங்க. ஓ.பி.எஸ்.சைப் பார்த்த அமித்ஷா, நான் ராமேஸ்வரம் கூட்டத்துக்குப் போயிட்டு திரும்பி வரும்வரை இங்கேயே வெயிட் பண்ணுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருக்குன்னு ஆர்டர் பண்ணுவது போல சொல்லிட்டாரு.''
""அமித்ஷா ஒரு கட்சியின் தலைவர்.. ஓ.பி.எஸ். ஒரு மாநிலத்தின் துணை முதல்வராச்சே!''
""ஓ.பி.எஸ். பக்கத்தில் இருந்த அ.தி.மு.க. எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் இதே ஷாக்தான். பா.ஜ.க.வுக்கு நெருக்கமான தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரைத் தொடர்பு கொண்ட ஓ.பி.எஸ்., இது பற்றி சொன்னார். முதல்வர் வரை தகவல் போனது. ஆனாலும், அமித்ஷா ரிட்டனுக்காக ஓ.பி.எஸ். காத்திருந்து சந்தித்தார். தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் முரளீதரராவ், கோவையில் களமிறங்கப் போகி றார்ன்னு சொல்லப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோ ரோடு மதுரை ஏர்போர்ட்டுக்கு வந்த அமித்ஷா எல்லோரும் உட்கார்ந்திருக்க, அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்.ஸுக்கு மட்டும்தான் உட்கார சீட் கிடைத்தது. மத்தவங்க நின்னுக்கிட்டி ருந்தாங்க.''’’
""எதற்காக இந்த சந்திப்பு?''’’
""தமிழகத்திலும் இது பா.ஜ.க. தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிதான். அ.தி. மு.க.வின் மெகா கூட்டணின்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லி அசரடித்த அமித்ஷா, கன்னியாகுமரிக்கு மோடி வர்றாருல்ல, அப்ப நீங்க எல்லாரும் மேடையேறி பலம் காட்டுவதோடு, நல்ல கூட்டத்தைக் கூட்டியாகணும். இதில் நீங்க அலட்சியமா இருந்திடாதீங்கன்னும் ஆர்டர் போட்டார். அப்ப அவர் காட்டிய பாடி லாங்வேஜைப் பார்த்து அ.தி.மு.க. தரப்பு திகைச்சுப் போயிடுச்சு. இப்படி ஓப்பனா மிரட்டினா, நிர்வாகிகள் எப்படி ஒத்துழைப்பாங்கன்னு அ.தி.மு.க. தரப்பு குமுறுது.''’
""தி.மு.க. நிலவரம் எப்படி இருக்கு?''’
""தமிழ்நாட்டில் இருக்கும் 12,617 உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தணும்னு வியூகம் வகுத்துக் களமிறங்கிய தி.மு.க. அதில் 90 சத கூட்டங்களை நடத்தி முடிச்சிருக்கு. இருந்தும் பூத் கமிட்டிகளை அமைக்கும் வேலையில்தான் தி.மு.க. தரப்பிடம் தொய்வு தெரியுது. 20 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டியில் 5 பெண்கள், 5 இளைஞர்கள் கட்டாயம் இருக்கணும் என்பது ஸ்டாலினின் கட்டளை. ஆனால் தினமும் தேர்தல் வேலையில் களமிறங்க போதுமான பெண் நிர்வாகிகள் கிடைக் காமல், பல இடங்களில் பூத் கமிட்டிகள் பலவீனமா இருக்கு. இதையெல்லாம் ஆளுங்கட்சி மோப்பம் பிடிக்கிது.''
""தி.மு.க. தன்னோட கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சி நிர்வாகிகளை வைத்து வாக்குச்சாவடிகளை சமாளிக்கலாமே!''’’
""போன எம்.பி. தேர்தலில் தனித்து நின்று ஏறத்தாழ 4.5 சத வாக்குகளை வாங்கிய காங்கிரசுக்கு இந்த முறை 10 சீட் ஒதுக்கிய தால், அவங்க ஒத்துழைப்பு கிடைக்கும். மற்ற கட்சியினருக்கு சீட் எதிர்பார்ப்பு இருக்குதே. கம்யூனிஸ்ட் கட்சிகளும் விடுதலைச் சிறுத்தை களும் தலா இரண்டு சீட்டுகளைக் கேட்க றாங்க. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பேச்சுவார்த்தை நடத்திய கொங்கு மக்கள் தேசியக்கட்சியை, தங்கள் சின்னமான உதய சூரியனில் நிற்கச் சொல்லுது தி.மு.க. அந்தக் கட்சியின் தலைவரான ஈஸ்வரனுக்கு நாமக் கல் தொகுதி தரப்படும்னும் டாக் அடிபடுது. ம.தி.மு.க., தனக்கு 3 சீட் கொடுத்தால்தான் மரியாதையா இருக்கும்ன்னு நினைக்கிது.''’
""வைகோ போட்டியிடுவாரா?''’
""புரட்சிப் புயல் இப்போது அடிக்கடி திருச்சியில் மையம் கொள்ளுது. தி.மு.க. மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவா லயத்தில், கலைஞர் புகழாஞ்சலி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது ம.தி.மு.க. இந்த நிகழ்ச்சி தொடர்பாக ஒரு சின்ன சலசலப்பும் கூட ஏற்பட்டது. பொதுவா, தி.மு.க.வில் மாவட்ட கழகத்தின் அனுமதியைப் பெற்று, அவர்கள் மூலம்தான் தலைமையிடம் தேதி வாங்கணும். ஆனால் தி.மு.க. மா.செ.வான கே.என்.நேரு, அண்மையில் துபாய் போயிருந்த காலகட்டத் தில், ஸ்டாலின் பங்கேற்கும் இந்த புகழாஞ்சலி கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கு. அன்பில் மகேஷ் மூலம் ஸ்டாலினிடம் தேதி வாங்கிவிட்டது, ம.தி.மு.க. தரப்பு. துபாயிலிருந்து திருச்சி திரும்பிய நேரு ஆதங்கப்பட்டிருக்காரு. அதனால் விழாவுக்கு ஸ்டாலின் வருவாரா? என்ற சந்தேகம் இருந்தது. ஸ்டாலினோ தான் ஒத்துக்கொண்டபடி நிகழ்ச்சியில் பங்கேற்று வைகோவை நெகிழவச்சிட்டார்.''’
""ஆமாப்பா.. கலைஞர்கிட்ட வைகோ காட்டிய பாசத்தைப் பற்றி உணர்வுப்பூர்வமா பேசிய ஸ்டாலின், கலைஞரின் போர்வாளும் தளபதியும் ஒரே மேடையில் இருக்கிறது. அண்ணன் வைகோ அவர்களே, நீங்கள் எனக்கு துணையாக இருப்பது மட்டுமல்ல நான் உங்களுக்குத் துணையாகவும் இருப்பேன். இந்த வாக்குறுதியை வழங்குவதற் காகத்தான் இந்த விழாவுக்கே வந்திருக்கிறேன்னு சொன்னப்ப, வைகோ கண் கலங்கிட்டாரு.''’’
""விஜயகாந்த்தோட உடல்நலத்தை விசாரிக்கத் தான் போனேன்னு ஸ்டாலின் சொன்னார். பிரேமலதாவோ, அரசியல் பற்றிய பேச்சு வார்த்தையும் நடந்ததுங்குறாரே?''’
""உடல் நிலையை விசாரிக்கப் போனாலும், தேர்தல் நேரத்தில் அரசியல் பற்றி எப்படிப் பேசாமல் இருப்பாங்க? ஆனா, கூட்டணி பற்றியெல் லாம் உறுதியாகலை. ரஜினியும் விஜயகாந்த்தை சந்திச்சாரு. இதற்கிடையில் கும்பகோணத்தில் பேசிய விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன், எங்க அப்பாவுக்குதான் உடம்பு சரியில்லையே.. அப்புறம் ஏண்டா எங்க வீட்டு வாசல்ல வந்து நிக்கிறீங்கன்னு அநாகரிகமா ஒருமையில் பேசினார். இதை அவங்க கட்சிக்காரங்களே ரசிக்கலை. அ.தி.மு.க. இல்லேன்னா தி.மு.க. கூட்டணி தேவைப் படும். இடைத்தேர்தல் சீட்டும் கேட்டு வாங்கலாம்னு தே.மு.தி.க. மா.செக்கள் பலர் சுதீஷ்கிட்டே சொல்லியிருக்காங்க..''’
""தேர்தல் நேரத்தில் ஆளுக்கொரு கணக்கு இருக்கும்!''’
""உண்மைதாங்க தலைவரே, மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் சார்பில் ஜெ. பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடத்திய திவாகரன், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி எதையும் விமர்சிக்கலை. தினகரன் தரப்பை மட்டும் லேசா சீண்டியதோடு சரி. இப்பவும் ஓ.பி.எஸ். போன்றவர்களோடு நெருக்கமான நட்பில்தான் இருக்காரு திவாகரன். வர்ற எம்.பி. தேர்தலில் தன் மகன் ஜெய் ஆனந்துக்கு அ.தி.மு.க.வில் தஞ்சை தொகுதியைக் கேட்டு வாங்கிடனும்ன்னு நினைக்கிறார். இல்லைன்னா சட்டமன்றத் தேர்தலில் அவரை மன்னார்குடியில் அ.தி.மு.க. வேட்பாளரா நிறுத்திடணும்ங்கிறது திவாகரன் கணக்கு.''’
""கமலின் அரசியல் போக்கு எப்படி இருக்குது?''’
""திருவாரூருக்குப் போய், வாரிசு அரசியல் உருவான இடம்னு தி.மு.க.வை சாடிட்டு, நெல்லைக் குப் போய், நாங்க பி.ஜே.பி.யின் பி டீம் அல்ல. தமிழ்நாட்டின் ஏ டீம்னு அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிச்சாரு. தனியா களமிறங்கி தன் பலத்தைத் தெரிஞ்சிக்க விரும்பறார் கமல். 500 கல்லூரிகளைக் குறிவச்சி, ஒரு நெட் ஒர்க்கை உருவாக்கி, அதன் மூலம், இளைஞர்களையும், முதல் முதலா வாக்களிக்க வரும் புதிய வாக்காளர்களை யும் தன் பக்கம் இழுக்கத் திட்டமிடுறாரு.''’
""நாம் தமிழர் கட்சி சீமானும் தனியா வரிஞ்சி கட்டறாரே?''
""சீமானைப் பொறுத்த வரை 2011-ல் இலை மலர்ந்தா ஈழம் மலரும்னு பிரச்சாரம் செய்தாலும், நாம் தமிழர் கட்சி தேர்தல் களம் கண்ட பிறகு, தனியாத் தான் போட்டியிடுறாரு. தமிழ் உணர்வுள்ளவர் களின் ஓட்டுதான் அவரோட இலக்கு. அதே ஓட்டுகளை பா.ஜ.க.வும் குறி வைக்குது. பேரறி வாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை துருப்புச் சீட்டாக்கி தமிழ் உணர்வாளர்கள்- இளைஞர்களின் வாக்குகளைப் பெற தேர்தல் நேரத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட ஆலோசிக்குது. ஒவ்வொரு கூட்டணியிலும் உள்குத்துகள் தொடர்ந்தாலும், சின்னச் சின்ன கட்சிகள் பிரிக்கும் ஓட்டுகளால் வெற்றி பாதிக்கப்படக்கூடாதுங்கிறதில் பெரிய கட்சிகள் கவனமா இருக்குது.''
""சசிகலா தரப்பு மீண்டும் தலையெடுத்து விடக் கூடாதுங்கிறதிலேயும் பா.ஜ.க. சீரியஸா இருக்குதாமே?''’
""சசிகலா தரப்பால் தேர்தல் செலவுக்கு பணத்தை வெளியே எடுக்க முடியலை. வருமான வரித்துறை தீவிரமா கண்காணிக்குது. அதனால் மோடிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக் கும் நெருக்கமான திரிவேணி எர்த் மூவர்ஸ் நிறு வனத்தினர் மூலம், சசி தரப்பு டெல்லியின் உதவியை நாடுச்சு. சிக்னல் கிடைக்கலை. வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தரப்பை சசி தரப்பு அணுகியது. இந்தத் தகவல் டெல்லிக்கு போனதால், மணலி லிருந்து கதிரியக்கத் தனிமங்களை பிரித்தெடுக்கும் உரிமம் இனி தனியார்களுக்கு இல்லை என்று அதிரடியாக அண்மையில் ஒரு ஆணையைப் பிறப் பித்துவிட்டது டெல்லி. இதில் தாது உற்பத்தியில் 80 சத பங்கு வகிக்கும் வி.வி.மினரல்ஸ் உள்பட 8 நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்பட்டிருக்கு. இந்த அரசாணை மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்னு வைகுண்டராஜன் தரப்பு சொல்ல, இல்லை இல்லை இதனால் வருடத்துக்கு 2 லட்சம் கோடி வருமான இழப்பு அரசுக்கு என்று டெல்லித் தரப்பு சொல்கிறது.''’
""நிதி நெருக்கடியில் தினகரனின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்?''’
""40 எம்.பி. தொகுதிகளுக்கு எக்கச்சக்கமா செலவிடணும்ங்கிறதால, சட்டமன்ற இடைத்தேர் தல் நடக்கும் 21 தொகுதிகளில் குறி வைத்து, அ.தி. மு.க.வை அட் டாக் பண்ண லாம்ங்கிறது தான் தினரகன் திட்டம். பா.ம.க.வோடு கூட்டணி வைத்ததை இன்னும் ஜீரணித்துக் கொள்ளமுடியாத வடமாவட்ட அ.தி.மு.க. சீனியர்கள் பலரும் தினகரனோடு டச் சில் இருக்காங்களாம். பா.ஜ.கவோடு பயணித்த புதிய தமிழகம் எதிர்பார்ப்பது 2 தொகுதிகள். அதோடு ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியும் கேட்டி ருக்கு. அ.தி.மு.க. ஒப்புக் கொள்ளலை. பா.ஜ.க.வும் சப்போர்ட் பண்ணல. இதற்கிடையில், ஜான்பாண்டி யன் தரப்பிலிருந்து பா.ஜ.க. + அ.தி.மு.க. தரப்பிடம் தங்களுக்கான வலிமையைக் காட்டும் புள்ளி விவரங்களை எடுத்து வச்சிருக்காங்களாம்.''’
""தேர்தல் தேதி அறிவிப்பு வரும் முன்பே தேர்தல் ஆணையத்துக்குப் புகார்கள் போகத் தொடங்கியிருக்கே?''’
""புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்டவைகளை 23, 24 ஆகிய தேதிகளில் செய்து கொள்ளலாம்ன்னு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை மந்திரிகள், மா.செ.க்கள் மூலம் தனக்குச் சாதகமாக அ.தி.மு.க. பயன்படுத்திக் கொண்டு, போலி வாக்காளர்கள்-டபுள் என்டரின்னு விளையாடியிருக்கு. லேட்டா இதைக் கண்டுபிடிச்ச, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்குப் புகார்களை அனுப்பியது. இதைத் தொடர்ந்து தவறுகளை சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.''’
""நானும் தேர்தல் தொடர்பான ஒரு தகவலைச் சொல்றேன்.. தேர்தலைக் காரணம் காட்டி அமைச்சர்கள் பலரும், தங்களுக்கு ஒத்துவரமாட்டார்கள் என்று கருதுகிற அதிகாரிகளை மாற்றுவதும், தங்களுக்குத் தோதான அதிகாரிகளை தங்கள் பகுதியில் அமர வைத்துக் கொள்வதுமான நடவடிக்கைகளில் இறங்கி, டிரான்ஸ்பர் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக இருந்த பாலகிருஷ்ண னை தூக்கிவிட்டு பவானியை உட்காரவைத்தார்கள். இப்போது அவரையும் தூக்கிவிட்டு அவருக்கு பதில் ஜெயகவுரியை அந்தப் பதவியில் உட்காரவைத்திருக் கிறார்கள். டிரான்ஸ்பர் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை.''
படங்கள் : ஸ்டாலின், ராம்குமார்