7 தமிழரை விடுதலை செய்தால் எத்தனை தொகுதி ஜெயிக்கலாம்? -மோடி
சீட்டு 10.. இருக்குற கோஷ்டிக்கு பத்துமா? -காங்கிரஸ்
இதயத்துல இடம்னு சொல்லிடாதீங்க -வைகோ
ஓட்டு முக்கியமில்ல.. அ.தி.மு.கவுல ஓட்டைய போடுறதுதான் முக்கியம்- டி.டி.வி. பேரம்!
"ஹலோ தலைவரே, போனமுறை நாம பேசிட்டு போனை வச்ச கொஞ்ச நேரத்தில் தேர்தல் கூட்டணி ஒப்பந்தங்கள் ஆரம்பிச்சிடுச்சி''’
""ஆமாம்பா, ஜெ.’ பாணியில் மற்ற கட்சிகளை முந்திக்கிட்டு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க., தங்கள் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளோடு கூட்டணிக்கான ஒப்பந்தம் முதலில் போட்டுக்கிட்டதை நேரலை யில் பார்த்தேம்பா''’
""நாம ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி, தி.மு.க.வோடும் பா.ம.க. பேசிக்கிட்டிருந்தது. ஸ்டாலினோ, பா.ம.கவுக்கு 4 சீட்டுதான்னு சொல்லிட்டாரு. தேர்தல் செலவு விஷயத்திலும் பிடிகொடுக்கலை. அதே நேரத்தில், தி.மு.க. பக்கம் பா.ம.க.வை விட்டுடக்கூடாதுன்னு அ.தி.மு.க சைடிலிருந்து டிமாண்டு அதிகமாயிடிச்சி. பா.ஜ.க.வும் இதில் ஆர்வம் காட்டியதால, ஒப்பந்தம் கையெழுத்தாகி, அரசியல் களம் விறுவிறுப் பாயிடிச்சி. மெகா கூட்டணி அமைத்து முந்து கிறதா அ.தி.மு.க.ன்னு சேனல்களில் விவாதங்கள் அனல் பறந்த நிலையில், தி.மு.க.வும் காங்கிரஸுடனான சீட் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதன்கிழமையன்னைக்கு போட்டுடிச்சி.''’
""காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்லதான் சீட்டுன்னு சொல்லி வந்த தி.மு.க., இப்ப 9+1ன்னு சீட்டுகளைக் கொடுக்க முன்வந்திருக்கே?''’
""காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட்டில் சீட். மற்ற தோழமைக் கட்சிகளுக்குத் தலா ஒரு சீட் என்பதுதான் தி.மு.க.வின் ஆரம்பகட்ட நிலைப்பாடா இருந்தது. இதுக்குப் பிறகு கனிமொழி டெல்லியில் காங்கிரஸ் தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்தியதை எல்லாம் நம்ம நக்கீரன்ல விரிவாவே எழுதியிருந்தாங்க. இதன் அடிப்படையில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9+ புதுவைன்னு மொத்தம் 10 சீட்டுகள் உறுதியாச்சு. காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப் படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்னு சொன்ன ஸ்டாலின், மற்ற தோழமைக் கட்சிகளோடு அடுத் தடுத்து உடன்பாடு நடக்கும்னும் அறிவிச்சார்''’
’10-ல் ஒண்ணு புதுச்சேரி.. மற்ற 9 தொகுதிகள் முடிவாகியிருக்குமே? '’
""9 தொகுதி எது எ

""9 தொகுதி எது எதுன்னு டெல்லியில் உள்ள ப.சி. வீட்டில், தமிழகத் தலைவர்கள் பலரும் கூடி விவாதிச்சாங்க . அப்ப, தங்களுக்குத் தோதான ஒரு 20 தொகுதிகளைப் பரிசீலனை செய்து, அதி லிருந்து 9-ஐத் தேர்வு செய்வது பற்றி ஆலோசிச் சாங்க. தங்களுக்கான அந்த 9 தொகுதியில் திருவள்ளூர் அல்லது காஞ்சிபுரம், விழுப்புரம் அல்லது தென்காசின்னு 2 ரிசர்வ் தொகுதியைக் கேட்கலாம்னும் தீர்மானிச்சிருக்காங்க. இதில் தென்காசி, கட்சியின் செயல் தலைவரான ஜெயக் குமாருக்காம். சிதம்பரம் ரிசர்வ் தொகுதி பற்றி பேச்சு வந்தப்ப, அதை வி.சி.க. தலைவர் திருமா வளவன் கேட்கலாம்னு விட்டுட்டாங்க. அப்புறம் கடலூரைப் பரிசீலிக்கலாம்னு மாஜி தலைவர் தங்கபாலு சொல்ல, அது யாருக்குன்னு ப.சி. கேட்டிருக்கார். உடனே, அது மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரிக்குன்னு தங்கபாலு சொல்ல, எம்.பி.சீட்டு கேட்கக் கூடாதுங்கிற டிமாண்டோடுதான் மாநிலத் தலைவர் பதவி அழகிரிக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. அப்படியிருக்க அவருக்கு நீங்க ஏன் வாய்ஸ் கொடுக்கறீங்கன்னு, தங்கபாலுவைக் கிண்டலடிச்சிருக்கார் ப.சி. 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் இருக்கிற கோஷ்டிகளுக்கு பத்தாதுங்கிறதுதான் காங்கிரஸ் நிலை.''’
""தி.மு.க. என்ன நினைக்குது?''’
""காங்கிரஸ் வழக்கமா கேட்கும் சிவகங்கை, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, திருப்பூர், கரூர் போன்ற தொகுதிகளைத் தந்துட லாம்ன்னு நினைக்கும் தி.மு.க., மற்றபடி தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப் புள்ள தொகுதிகளை காங்கிரஸ் கேட்குமானால் அதைப் பேசித் தீர்த்துக்கலாம்ன்னு நினைக்கிது. அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் நிற்கும் தொகுதிகளில் காங்கிரஸ் நின்றால், அங்கே அ.தி.மு.க. கூட்டணி இவர்களை எளிதா டார்கெட் போட்டு வீழ்த்தி விடலாம்ன்னும் தி.மு.க. யோசிக்கிது. அதேசமயம் காங்கிரஸுக்கு 10 தொகுதி கொடுத்துதான் ஆகணுமாங்கிற ஆதங்கத்தில் இருக்கும் தி.மு.க. சீனியர்களை சரிப்படுத்தறதோட, அ.தி.மு.க. களமிறங்கும் பெரும்பாலான தொகுதி களில் நேருக்கு நேரா நாம மோதணும்ங்கிற கணக்கிலும் தி.மு.க. தலைமை இருக்கு. அதுக்கு அ.தி.மு.க. எத்தனை சீட்டில் நிக்கிதோ, அந்த எண்ணிக் கைக்குக் கொஞ்சமும் குறையாமல் நிக்கணும்ங்கிற உறுதியிலும் தி.மு.க. இருக்குது. இன்னும் அதிகாரப்பூர்வமா கூட்டணி உருவாகலைன்னா லும், தோழமைக் கட்சிகளுடன் தொடர்ந்து அதுபற்றி தி.மு.க. விவா திச்சிக்கிட்டே இருக்கு. தங்களோடு இருக்கும் தோழமைக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட்டுன்னு ஏற்கனவே தி.மு.க சொல்லியிருந்தாலும், இப்ப காங்கிரஸுக்கு டபிள் டிஜிட்டில் சீட்டை ஒதுக்கியதால், எங்களுக்கும் 2 சீட்டு வேணும்ன்னு சி.பி.எம். கேட்குது. அதேபோல் சி.பி.எம்.முக்கு ஒதுக்கும் அளவுக்கு தங்களுக்கும் ஒதுக்கணும்னு சி.பி.ஐ.யும் எதிர் பார்க்குது. இதே எதிர்பார்ப்பு ம.தி.மு.க.வுக்கும் இருக்கு. வழக்கம்போல இதயத்திலே இடம்னு சொல்லிடா தீங்கங்கிறதுதான் வைகோவின் மைண்டு வாய்ஸ். விடுதலைச் சிறுத் தைகள் கட்சியும் 2 என்ற தங்க ளோட விருப்பத்தை வெளிப்படுத் திக்கிட்டிருக்கு. இதுபோக முஸ் லிம் லீக், ம.ம.க. போன்ற கட்சி களுக்கும் தொகுதியை தி.மு.க. ஒதுக்கியாகணும். நமக்கு தண்ணி காட்றாங்களேங்கிறது ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்''
""ஊசலாடிக்கிட்டிருக்கிற த.மா.கா. எந்தப் பக்கமாம்?''’
""எப்படியாவது காங்கிரசோடு கைகோத்து உள் ஒதுக்கீட்டில் சீட்டை வாங்கிடணும்ங்கிற வியூகத்தில் ஜி.கே. வாசன் இருந்தார். ஆனால் அதுக்கு ராகுலிடமிருந்து சரியான சிக்னல் கிடைக்கலை. இருப்பினும் ஸ்டாலின் மூலமாவது டெல்லியிடம் மூவ் பண்ண காய் நகர்த்தினார். எதுவும் முடிவாகாத நிலையில், பா.ம.க.வைப் போலவே அ.தி.மு.க.வோடும் த.மா.கா. பேசிக் கொண்டிருந்தது. அங்கு ஒரே ஒரு சீட்டுன்னு சொல்லப்பட்டதும், நாங்க அதிகாரப்பூர்வமா பேச்சுவார்த்தை நடத்தலைன்னு த.மா.கா. அங்கிருந்து ஜகா வாங்குனிச்சி. இங்கிட்டோ அங்கிட்டோ 2 சீட்டை எதிர்பார்க்கிற த.மா.கா.வுக்கு ஒரு சீட்டுதான்னு அ.தி.மு.க. தரப்பு சொல்லுது.''
""5 சீட்டு வாங்கியிருக்கும் பா.ஜ.க. தமிழகத் தேர்தல் களத்தை எப்படி பார்க்குதாம்?''
''தன்னோட வெற்றி முன்னே பின்னே இருந்தாலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றியைத் தடுக்கணும்ங்கிறதுதான் பா.ஜ.க.வோட ப்ளான். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்னாடி, 7 தமிழர்களை விடுதலை செய்தால் அது எத்தனை தொகுதியில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வெற்றியைத் தரும்னு மோடியும் அமித்ஷாவும் ஆலோசனை பண்ணியிருக்காங்க. இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.கிட்டேயும் பேசப்பட்டிருக்கு. 2014 எம்.பி. தேர்தலுக்கு முன்னாடி 7 பேரையும் விடுவிப்பதா ஜெ. தீர்மானம் போட்டார். 5 வருசமாகியும் இந்தத் தேர்தலுக்கும் அதே போன்ற யோசனை நடக்குது.''
""பா.ஜ.க., பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததை விமர்சிக்கும் டி.டி.வி.தினகரனோட தேர்தல் வியூகம் என்னவாம்?''
""தினகரனைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலை விட , இடைத் தேர்தலுக்காகக் காத்திருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளின் மீதுதான் அதிக கவனத்தைக் குவிச்சிருக்கார். அவரோட எம்.எல்.ஏக்கள் 19 பேர் பதவி பறிக்கப்பட்டதாலதான் இந்த இடைத்தேர்தல் முக்கியமாயிடிச்சி. அதனால இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களையும் கூட அவர் தயாரா பட்டியலிட்டு வச்சிருக்காராம். பண நெருக்கடிதான் இப்ப பிரச்சினையா இருக்கு.''
""என்னது சசிகலா குடும்பத்தில் பண நெருக்கடியா? பாமரர்கள் கூட நம்ப மாட்டாங்களே?''
""எல்லாம் முடங்கிக் கிடக்குதாம். சசிகலாவும் விவேக்கும் பண நெருக்கடியைத் தீர்க்க முன்வரலைங்கிற எரிச்சல் தினகரன்கிட்ட இருக்கு. அதே நேரத்தில், அ.ம.மு.க. வாங்குற ஓட்டுகளைவிட, அ.தி. மு.க.வில் ஓட்டையைப் போடுறதுதான் முக்கியம்னு நினைக்கிறாரு. பா.ம.க.வோடு கூட்டணி வச்சதை விரும்பாத அ.தி.மு.க.வினரை தன் கட்சியில் இருக்கும் வெற்றிவேல், பழனியப்பன், செந்தமிழன் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலம் வளைப்பதற்கான வியூகங்களில் தீவிரமா இருக்காரு. அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணிகளில் கேட்ட சீட் கிடைக்காமல் அதிருப்தியாகி வரும் கட்சிகளை வளைக்கவும் ரெடியாக இருக்கும் தினகரன், கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு செய்திருக்கும் கமலின் மக்கள் நீதி மய்யத்தோடு எப்படியாவது கூட்டணி வச்சிக்கணும்னு ரூட்டு போட்டுக்கிட்டு இருக்கார். இதுக்கிடையில் இரட்டை இலை தொடர்பாக தினகரன் தொடுத்திருக்கும் வழக்கை சீக்கிரம் முடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. ஆனா, எடப்பாடி தரப்பு இதை இழுத்தடிக்குது. தேர்தலுக்குள் வழக்கு முடியாவிட்டால், தினகரனுக்கு குக்கர் சின்னத்தை நிரந்தர சின்னமா அறிவிக்கணும்னும் சுப்ரீம் கோர்ட் சொல்லியிருப்பது தினகரன் தரப்பை தெம்பாக்கியிருக்கு''’
"பா.ம.க.வோடு கூட்டணி வைத்ததை அ.தி.மு.க.வில் இருக்கும் அமைச்சர்கள் சிலர்கூடத்தான் விரும்பலைங்கிறாங்க. அவங்க தினகரன் பக்கம் போவாங்களா?''’
""பவர் இருக்கிற அரசியல்வாதி எப்படி மாறுவார்? தினகரன் கணக்குப் போடுவது அடுத்தகட்ட நிர்வாகிகளைத்தான். அதே நேரத் தில், பா.ம.க.வின் சகவாசம் நமக்கு வேணாம்ன்னு எடப்பாடியிடம் ஆரம்பத்திலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிச்சவர் அமைச்சர் சி.வி.சண் முகம். அவர், தனக்கும் பா.ம.க.வுக்கும் 2006-ல் திண்டிவனத்தில் நடந்த மோதலை மறக்கவே இல்லை. அப்போது ஒரு கும்பல் தன் வீட்டை முற்றுகையிட்டுத் தாக்கியதையும் அதில் தன் ஆதரவாளர் முருகானந்தம் கொல்லப்பட்டதையும், தான் காருக்கடியில் பதுங்கி உயிர் தப்பித்ததையும் நினைவிலேயே வைத்திருக்கிறார். தன்னையும் மீறி பா.ம.க.வோடு அ.தி.மு.க தேர்தல் உடன்பாடு கொண்டதைக் கண்டு கொதிச்சிப்போயிருக்கார். அதனால்தான், கடந்த 19-ந் தேதி பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் ஒப்பந்தம் போட்டுக்கொண்ட அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டல் பக்கமே அவர் தலைகாட் டலை. வடமாவட்ட வன்னிய சமூக மக்களிடம் நல்ல தொடர்பில் இருக்கும் சி.வி.சண்முகத்தை எப்படி சமாதானப்படுத்துவதுன்னு தெரியாமல் எடப்பாடி கை பிசைஞ்சிக்கிட்டு இருக்கார்.''
""ரெய்டுக்குள்ளான அமைச்சர் கே.சி.வீரமணியும் பா.ம.க. கூட்டணியை ஏத்துக்கலையாமே?''
""பா.ம.க.வோடு கூட்டணி வைத்தால் வட மாவட்டங்களில் இருக் கும் பெரும்பாலான தொகுதிகளை அந்தக் கட்சி கேட்கும். கொடுத் தால், நமக்குத்தான் இழப்பு. நான் தேர்தல் நிதியெல்லாம் திரட்டி தரமுடியாதுன்னு நேருக்கு நேராகவே முதல்வர் எடப்பாடி யிடம் சொல்லியிருக்காரு வீரமணி. இது எடப்பாடி மூலமா டெல்லி கவனத்துக்குப் போனதாலதான் ரெய்டுன்னு சொல்றாங்க.''’’
""நானும் ஒரு தகவலைச் சொல் றேம்பா. கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க.வின் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்னும் பின்னும், கே.பி. முனுசாமி, வைத்தி லிங்கம் போன்ற சீனியர்கள், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணி உருவாகும் இந்த நேரத்தில், மெரினாவில் இருக்கும் அம்மா நினைவிடத்துக்குப் போய் அஞ்சலி செலுத்தினால், மனசுக்குத் தெம்பாக இருக்கும்ன்னு முதல்வர் எடப்பாடியிடம் சொல்லியிருக்காங்க. ஓ.பி.எஸ்.சும் ஆமாமான்னு தலையாட்டியிருக்கார். எடப்பாடியோ, அதெல்லாம் வேணாம். நான் சொல்றதை மட்டும் செஞ்சா போதும்ன்னு ஜெ.வுக்கு அஞ்சலி செய்யும் முடிவைத் தவிர்த்துவிட்டாராம். இதுவும் அ.தி.மு.க. சீனியர்களிடம் கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கு.''’