லோ தலைவரே, காஷ்மீரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 48 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உயிர்த் தியாகத்துக்கு வீரவணக்கம் செலுத்துவோம்..''

""கொடூரமான நிகழ்வுப்பா...''

vijaykanth

Advertisment

""ஆமாங்க தலைவரே.. தமிழ்நாட்டு அரசியல் பக்கம் வர்றேன்.. அமெரிக்காவில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட விஜயகாந்த்தை, மேலும் 2 மாதம் அங்கே தங்கள் கண்காணிப்பி லேயே ஓய்வெடுக்கும்படி அங்குள்ள மருத்துவர்கள் சொல்லியிருக் காங்க. ஆனால் எம்.பி.தேர்தல் நெருங்கும் நேரம்ங்கிறதால், தமிழகம் திரும்பலாம்னு விஜயகாந்த்தும் பிரேமலதாவும் முடிவெடுத்துட் டாங்க. 16-ந் தேதி அதிகாலை 1.50-க்கு சென்னை ஏர்போர்ட் வந்திறங் கினார் விஜயகாந்த். அவரை வரவேற்பதற்காக பலரும் காத்திருக்க, மதியம் 12.50-க்குதான் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தார் விஜயகாந்த். கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைக்கக் கூட, அவர்கூட இருந்தவங்க உதவவேண்டி இருந்ததாம்.''

""ஏன் இத்தனை மணி நேரம் கழிச்சி வெளியே வந்தாராம்?''

""அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து சேர 48 மணி நேரம் ஆகியிருக்கு. விமானத்தில் இருந்து இறங்கும் போதே, தனக்கு மயக்கம் வருதுன்னு விஜயகாந்த் சொல்லியிருக்கார். உடனே அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதிச்சிருக்காங்க. அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமா இருந்திருக்கு. மியாட் டாக்டர்கள் டீம் வரவழைக்கப்பட்டு, அவரை தூங்க வைப்பதற்கான மருந்துகள் கொடுத்து, ரெஸ்ட் எடுத்தபிறகுதான், அழைச்சிட்டு வந்திருக்காங்க. வீட்டுக்குப் போன பிறகும் விஜயகாந்த்தின் அறிக்கைதான் வந்ததே தவிர, யாரையும் உடனடியா சந்திக்கலை.''

Advertisment

stalin

""தே.மு.தி.க.வின் தேர்தல் வியூகம் என்னவாம்?''

""சுதீஷ்தான் கூட்டணி பேச்சுகளில் கவனம் செலுத்துறாரு. கட்சி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுறாரு விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். அதேநேரத்தில், கூட்டணிப் பேச்சு நடத்துவதை பகிரங்கமா வெளிப்படுத்த வேண் டாம். கேப்டன் பாணியிலேயே ரகசியமா கையாளணும்னு பிரேம லதாகிட்டே விஜயபிரபாகரன் சொல்லியிருக்காரு.''

""தி.மு.க.வுக்கும் கமலுக்கும் முட்டல்-மோதல் அதிகமாகுதே?

kamal

""அ.தி.மு.க.வோடு சேர்த்து தி.மு.கவையும் ஊழல் கட்சின்னு கமல் சொன்னப்ப, முரசொலியில் அவரை எதிர்த்து கட்டுரை எழுதுனாங்க. அப்புறம், கமல் ஒரு நிகழ்வில் பேசுறப்ப, நான் சட்ட சபையில் சட்டை கிழிந்தால் அதோடு வெளியில் வரமாட்டேன், வேறு சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வருவேன்னு ஸ்டாலினை இன்டைரக்டா விமர்சித்ததோடு, என்னைப் பார்த்து காப்பியடித்துதான் கிராம சபைக் கூட்டங்களைத் தி.மு.க. நடத்திக்கிட்டு இருக்குன் னாரு. இது தி.மு.க.வினரை ஏகத்துக்கும் கொந்தளிக்கவச்சிருக்கு. புதுவை கவர்னருக்கு எதிராக முதல் வர் நாராயணசாமி நடத்திய போராட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு மாநில அரசின் உரிமை கள் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, கமலின் இந்த விமர்சனம் பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினாங்க. அதற்கு ஸ்டாலின், இங்க நான் அரசியல் பேசிக்கிட்டிருக்கேன்னு சொல்லி, கமலைக் கிண்டலடிச்சாரு. 96-ல் ஊராட்சித் தேர்தலை நடத்திய கலைஞரே, வாணியம்பாடி அருகே உள்ள விண்ணமங்கலத்தில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கெடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்தியிருக் கிறார். 2008-ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினும் கிராமசபை கூட்டங்களை நடத்தி யிருக்காருன்னு படங்களை முரசொலி வெளியிட்டிருக்கு. அதோடு, முரசொலியில் கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்’என்ற பெயரில், கமலுக்கு எதிரான இன்னொரு கட்டுரை வெளியானது.’

""கிராம சபை கூட்டங்கள் விஷயத்தில் தி.மு.க. ரொம்ப சீரியஸா இருக்குதோ?''’

senthilbalaji

""ஸ்டாலினைப் பொறுத்தவரை கிராமசபை கூட்டத்தையும் பூத் கமிட்டி கூட்டத்தையும் முக்கியமா நினைக்கிறார். தமிழகத்தில் இடைத் தேர்தல் நடக்க இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்குள் அடங்கும் ஊராட்சிப் பகுதிகளைக் குறிவைத்து, அவர் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவது தெரியும். அதோடு பூத் கமிட்டி கூட்டங்களையும் நடத்துறாரு. ஒரு வாக்குச்சாவடிக்கு 21 முகவர்கள் வீதம் நியமித்து, இவர்கள் ஒவ்வொருவரும் 20 வாக்காளர்களை அழைத்து வந்து வாக்கை பதிவு செய்யவைக்க வேண்டும் என்ற கணக்கில் பூத் கமிட்டிகளின் பணிகளை ஸ்டாலின் வரையறுத்திருக்கிறார். அவர் சொல்ற கணக்குப்படி தி.மு.க. நிர்வாகிகள் செயல் பட்டால்தான் எம்.பி. தேர்தலில் ஜெயிக்க முடியும். சுணக்கம் காட்டினால் ஆர்.கே.நகர்தான்.''’

""அ.தி.மு.க.வின் வியூகம் என்ன?''’

""பா.ஜ.க.வோடு கூட்டணி பேசுவதை இரட்டை இலையில் ஜெயித்த தமீமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் விரும்பலை. இவங்களை சமாதானப்படுத்துங்கன்னு பா.ஜ.க. மேலிடம் சொல்லியிருப்பதால், எடப்பாடி யோசிக்கிறாரு. சொந்த வேட்பாளர்கள், கூட்டணியினர் எல்லாரிடமும் தாராளமா நடந்துக்கணும்னு நினைக்கும் எடப்பாடி, தேர்தலுக்காகப் பெரும் பணத்தைத் திரட்டியாகணும்னு அமைச்சர்களிடம் சொல்லியிருக்காரு. அதனால அவரவர் துறைகளில் புதிய நியமனங்கள், இடமாறுதல்கள்னு புகுந்து விளையாடி கல் லாக் கட்டிக் கிட்டு இருக் காங்க.''’

""ம்…''’

""தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயி களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யுது அரசு. இதுக்காக இது வரை விவசாயிகளுக்கு இலவசமா கொடுக்கப்பட்ட நெல்லுக்கான சாக்கை, 25 ரூபா கொடுத்து வாங்கணும்னு சொல்லிட்டாங்க. லட்சக்கணக்கில் கொள்முதலாகும் நெல் மூட்டைகள் மூலம் கிடைக்கும் இந்தத் தொகை முழுதும் கமிஷ னாகப் போகப் போகுது. இப்படி யொரு ஐடியாவை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொடுத்ததால், அதை சிவியராகப் பின்பற்று கிறார்கள் வாணிபக் கழகத்தினர். இதை திருவாரூர் மாவட்ட அவலிவ நல்லூரில் நம் கண்ணாலேயே பார்க்க நேர்ந்தது. இப்படி ஒவ்வொரு அமைச்சரும் அவங்க துறைகளில் புதுவித கலெக்ஷன் வேலைகளில் மும்முரமா இருக்காங்க.''’

""தினகரன் தரப்பும் தேர்தலில் சரிக்கு சமமா செலவு பண்ணும்னு எதிர்பார்க்கப்படுதே?''’

""கரூர் செந்தில் பாலாஜி, தி.மு.க.வில் இணைந்து விட்டாலும், சசிகலா தரப்போடு கூடிய பணப் பரிவர்த்தனைத் தொடர்பு அப்படியே நீடிக்கிறதாம். அவரை அண்மையில் அணு கிய தினகரன் தரப்பு பெரும் அமௌண்ட் வேண்டும்னு சொல்லியிருக்கு. செந்தில் பாலாஜியோ அதைக் கேட்க நீங்க யாரு? அதைக் கேட்க வேண்டியவர் கேட்கட்டும்ன்னு கை விரித்துவிட்டாராம். படு அப்செட்டில் இருக்கிறாராம் தினகரன். செந்தில்பாலாஜி தி.மு.க.வுக்கு வந்தபிறகு, தன்னால் தாக்குப்பிடிக்க முடியாதுன்னு சீனியரான கே.சி.பழனிச்சாமி, சொந்த ஊரான பொள்ளாச்சிகே இடம்பெயர்ந்து விட்டாராம். அதுபோக, தொழில் நஷ்டத்தால் ரொம்பவே அவதிப் படுறாராம் கே.சி.பழனிச்சாமி''’

""தேர்தல் விதியைக் காரணம் காட்டி, அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்காங்களே?''’‘

""மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியில் நீடிக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளில், தேர்தல் பணியில் ஈடுபட வாய்ப்புள்ளவர்களை டிரான்ஸ்பர் செய்யுங்கள் என தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைப் பற்றி ஏற்கனவே நாம பேசியிருக்கிறோம். அந்த உத்தரவைக் காட்டி, தேர்தல் பணியில் ஈடுபடாத அதிகாரிகளையும், வெவ்வேறு காரணங்களுக்காக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஜெ.’மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி கமிஷனில், தங்கள் கருத்துக்கு மாறாக வாக்கு மூலம் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண னை போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளரா நியமிச்சிட்டாங்க. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக இருந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ்., கண்டுபிடித்த தேர்வுக் குளறுபடி களால் சிக்கிய அதிகாரிகள், அவரைப் பற்றி முதல்வரிடம் புகார் செய்ததால், அதிலிருந்து மாற்றப்பட்டார். ஆனாலும், துறை அமைச்சரின் நன்மதிப்பைப் பெற்ற அதிகாரி என்பதால் பாட நூல் கழக எம்.டி.யாக்கப்பட்டிருக்காரு. பத்திரப் பதிவுத்துறை ஐ.ஜி.யான குமரகுருபரன், ஆன்லைனில் பத்திரப் பதிவைக் கொண்டுவந்ததால் புரோக்கர்களின் நடமாட்டம் குறைந்தது. அமைச்சர் வரை போன கமிஷனும் நின்றுவிட்டது. அதனால அவரும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநராக மாற்றப் பட்டிருக்கிறார். அதே நேரத்தில், சென்னை மாநகராட்சி கமிஷன ரான கார்த்திகேயனை, பிற துறைக்கு அனுப்ப விரும்பாத உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, தன் துறையிலேயே நகராட்சி நிர்வாகத்துறை ஆணையராக உட்கார வச்சிட்டாரு. கோட்டையில் ஆளாளுக்கு விளையாடுகிறார்கள்''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேம்பா. அமெரிக்காவைச் சேர்ந்த காக்னிசென்ட் நிறுவனம் 2014-ல் தமிழகத்தில் அப்போதைய வீட்டுவசதித் துறை அமைச்சரான வைத்திலிங்கம் மூலம் அப்போதைய முதல்வர் ஜெ.வின் கருணையால் தன்னை விஸ்தரித்துக் கொண்டதாம். இந்த காக்னிசென்ட் விவகாரம் பற்றிய வழக்கொன்றை விசாரித்த அமெரிக்க வர்த்தக விசாரணை அமைப்பான ‘"யுனைடெட் ஸ்டேட் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்சேஞ்ச் கமிஷன்', இந்தத் தமிழக விஸ்தரிப்புக்காக 25 மில்லியன் டாலர் வரை ஜெ.’தரப்புக்கு லஞ்சமாகக் கொடுத்ததை கண்டுபிடித்துக் கடுமையாகக் கண்டித்திருந்தது. இப்ப இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பூதாகரமாகுது.