""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன்னு, ராம் லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை லட்சக்கணக்கில் அணிவகுத்துப் போனாங்க. அவங்களுக்கு பொதுமக்களும் மாணவர்களும் வழிநெடுக வாழ்த்துச் சொன்னாங்க. பேரணியில் நம்ம தமிழக விவசாயிகளும் அய்யாக்கண்ணு தலை மையில் கலந்துக்கிட்டாங்க. இந்தப் பேரணி மத்திய அரசை ஏகத்துக்கும் அதிர வச்சிருக்கு.''’
""ஆமாம்பா, ’எங்களுக்கு ராமர் கோயில் வேண்டாம். அதற்கு பதில் எங்கள் கடனைத் தள்ளுபடி செய்யின்னும் அவங்க அதிரடிக் குரலை எழுப்பியதால், மோடி அரசின் இதயம் ஹை டெசிபலில் துடிச்சதா அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்லுதே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே மார்ச் 18-ந் தேதி விவசாயிகளின் பேரணி மும்பையை உலுக்குச்சு. இப்ப டெல்லியில். அங்கெல்லாம் இருப்பது போல், மக்கள் தங்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடத்த சென்னையில் சரியான இடம் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இளைஞர்கள் அடையாளம் காட்டிய மெரினாவிலும், போராட்டம் நடத்தக் கூடாதுன்னு உச்சநீதிமன்றமும் தடைவிதிச்சிடிச்சி. தமிழக அரசும் போராட்டம்ன் னாலே மிரளுது. பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட போராட் டங்களை எப்படி ஒடுக்கலாம்ன்னுதான் இங்க இருக்கும் எடப்பாடி அரசு குறுக்கு வழிகளைத் தேடுது.''’
""இப்ப அறிவிக்கப்பட்ட, ஜாக்டோ ஜியோவின் அரசு ஊழியர் போராட்டமும், வாபஸ் வாங்கப்பட்டிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, பழைய பென்சன் முறையைப் பின்பற்றணும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு, தொடர்ந்து போராடும் ஜாக்டோ ஜியோ, 4-ந் தேதி கால வரையறை
""ஹலோ தலைவரே, 30-ந் தேதி விவசாயிகள் நடத்திய பேரணி டெல்லி யையே ஒரு குலுக்கு குலுக்கிடுச்சி. அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள், குடும்பம் குடும்பமா கலந்துக்கிட்டு "மத்திய அரசே, எங்கள் முதுகெலும்பை முறிக்கும் கடன்களைத் தள்ளுபடி செய், எங்கள் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பைக் கொடு'ன்னு, ராம் லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றம் வரை லட்சக்கணக்கில் அணிவகுத்துப் போனாங்க. அவங்களுக்கு பொதுமக்களும் மாணவர்களும் வழிநெடுக வாழ்த்துச் சொன்னாங்க. பேரணியில் நம்ம தமிழக விவசாயிகளும் அய்யாக்கண்ணு தலை மையில் கலந்துக்கிட்டாங்க. இந்தப் பேரணி மத்திய அரசை ஏகத்துக்கும் அதிர வச்சிருக்கு.''’
""ஆமாம்பா, ’எங்களுக்கு ராமர் கோயில் வேண்டாம். அதற்கு பதில் எங்கள் கடனைத் தள்ளுபடி செய்யின்னும் அவங்க அதிரடிக் குரலை எழுப்பியதால், மோடி அரசின் இதயம் ஹை டெசிபலில் துடிச்சதா அங்கிருந்து வரும் தகவல்கள் சொல்லுதே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே மார்ச் 18-ந் தேதி விவசாயிகளின் பேரணி மும்பையை உலுக்குச்சு. இப்ப டெல்லியில். அங்கெல்லாம் இருப்பது போல், மக்கள் தங்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை நடத்த சென்னையில் சரியான இடம் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் இளைஞர்கள் அடையாளம் காட்டிய மெரினாவிலும், போராட்டம் நடத்தக் கூடாதுன்னு உச்சநீதிமன்றமும் தடைவிதிச்சிடிச்சி. தமிழக அரசும் போராட்டம்ன் னாலே மிரளுது. பிரச்சினைகளைத் தீர்ப்பதைவிட போராட் டங்களை எப்படி ஒடுக்கலாம்ன்னுதான் இங்க இருக்கும் எடப்பாடி அரசு குறுக்கு வழிகளைத் தேடுது.''’
""இப்ப அறிவிக்கப்பட்ட, ஜாக்டோ ஜியோவின் அரசு ஊழியர் போராட்டமும், வாபஸ் வாங்கப்பட்டிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, பழைய பென்சன் முறையைப் பின்பற்றணும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளோடு, தொடர்ந்து போராடும் ஜாக்டோ ஜியோ, 4-ந் தேதி கால வரையறையற்ற போராட்டம் ஆரம்பம்னு அறிவிச்சிது. இதனால் ஷாக்கான எடப்பாடி அரசோ, இது தொடர்பான ஆய்வுக் குழுக்களின் ரிப்போர்ட் வந்துக்கிட்டு இருக்கு. விரைவில் ஒரு தீர்வை ஏற்படுத்தறோம்ன்னு சொன்னது. இதை ஏத்துக்கிட்டு, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கிடுச்சு. அங்கீகரிக் கப்படாத சில சங்கங்கள் மட்டும் போராட்டம் நடந்தே தீரும்ன்னு பிடிவாதமா இருந்துச்சு. இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், புயல் பாதித்த நேரத்தில் போராட்டம் வேண்டாம். தள்ளி வையுங்கள்ன்னு வேண்டுகோள் விடுத்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்ட நிலையில் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாகச் சொல்லி, 4-ஆம் தேதி தொடங்க இருந்த தொடர் போராட்டத்தை ஒத்தி வச்சிட் டாங்க..''’
""அரசு ஊழியர்கள் போராட்டத்தை தள்ளிவைக்கச் சொன்ன ஸ்டாலின், திருச்சியில் தன் தோழமைக் கட்சிகளுடனான போராட்டத்துக்கு நாள் குறிச்சிருந்தாரே?''’
""விவசாயிகள் மேகதாது அணைத் திட்டத்தால் மேலும் பாதிக்கப்படக் கூடாதுன்னு தான், திருச்சியின் மையப் பகுதியான உழவர் சந்தையில், தோழமைக் கட்சித் தலைவர்களோட கைகோத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் முடிவானது. ஆர்ப்பாட்ட தேதிக்கு முன்னாடியே திருச்சி தி.மு.க. மா.செ.வான கே.என். நேரு, லோக்கல்ல இருக்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க.வினர், சிறுத்தை கள், முஸ்லிம் லீக்குன்னு தோழமைக் கட்சிப் பிரமுகர்களை எல்லாம் அழைத்துக் கூட்டம் போட்டார்.''’
""என்ன பேசினாங்க?''’
""எடுத்த எடுப்பிலேயே நேரு, வரும் தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். மீண்டும் பா.ஜ.க. மெஜாரிட்டியோடு வராதுன்னு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கிது. அதனால் தீவிரமாகக் களமிறங்கி நாம் ஒத்துமையா வேலை செய்தாகணும். யாருக்கு சீட் கொடுத் தாலும் பரவால்லன்னு பெருந்தன்மையா வேலை செய்து, நாம் ஜெயிச்சாகணும். தமிழகத் தில் 40 தொகுதியிலும் நாம்தான் ஜெயிக்கணும். இப்ப இங்கே பர்சன்டேஜ் ஆட்சி நடக்குது. 10 ஆயிரம் கோடியில் 8 வழிச்சாலை, உடைந்த முக்கொம்பு அணையை சீர்செய்ய 400 கோடின்னு அறிவிச்சி, அதில் கமிஷன் வாங்குவதிலேயே ஆர்வம் காட்டறாங்க. இவர்களுக்குப் பாடம் புகட்ட நாம் ஒன்னா சேர்ந்து நிக்கணும். இந்த போராட்டத்துக்கு அதிகக் கூட்டத்தைக் கூட்டணும்னு சொன்னவர், ஒவ்வொரு வார்டி லிருந்தும் ஆட்களைத் திரட்டி வருவதற்கான அனைத்தையும் அவரே பார்த்துக்கிட்டார்.''’
""கூட்டணி வேற, தோழமை வேறன்னு துரைமுருகன் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலி யுறுத்தி ம.தி.மு.க. நடத்திய ராஜ்பவன் முற்றுகைப் போராட் டத்தில் தி.மு.க. பிரமுகர்களும் கை கோத்து நின்னாங் களே?''’
""ஆனாலும், ம.தி.மு.க. தொண்டர் களின் கூட்டணி சந்தேகம் முழுசா தீரலை. ஸ்டாலின் ஓப்பனா பேசணும்னு எதிர்பார்க்குறாங்க. அறிவிக்கலைன்னு கேட்கறாங்க. கூட்டணியில் இல்லைன்னு இப்பவே அறிவிச்சால், நாங்க தோழமை எல்லையைத் தாண்டிப் போய், அவங்களுக்கு எதிரான அரசியல் யுத்தத்தை ஆரம்பிச்சிடுவோம்ன்னு கணக்குப் போட்டு, தேர்தல்வரை எங்களை இப்படியே கொண்டு போகப் பார்க்கறாங்களோன்னு டவுட்டா இருக்கு. வைகோ பெருந்தன்மை காரணமா இதை வெளியே காட்டிக்கலைன்னு சொல்றாங்க. தி.மு.க.தரப்போ, தேர்தலுக்கான சூழல் இன்னும் வரலையே, இப்பவே கூட்டணி, தொகுதி ஒதுக்கீடுன்னு ஆரம்பிச்சா குழப்பம்தான் வரும். இனமொழித் தளத்தில் வீறுநடை போடும் வைகோவை நாங்கள் ரொம்பவே மதிக் கிறோம்ன்னு சொல்லுது.''’
""சரிதான். 7 பேர் விடுதலையை வலியுறுத்தி வைகோ முன்னெடுத்த ராஜ்பவன் போராட் டத்துக்கு முதல்நாள், ராஜீவ் கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைன்னு விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளி யானதே?''’
""விடுதலைப் புலிகள், ராஜீவை நாங்கள் கொல்லவில்லைன்னு ஏற்கனவே அறிவிச்சிட் டாங்க. இருந்தும் 7 பேர் விடுதலையை தடுக்க இதையே ஒரு சிலர் ஆயுதமா எடுக்கறதால, இந்த அறிக்கை வந் தது. அதை மீடியாக் களின் மூலம் கொண்டு சேர்ப்பதில் வைகோ அக்கறை காட்டுறாரு. புலிகள் பெயரில் வெளியான அந்த அறிக்கையில்..’ உள் நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே ராஜீவ் படுகொலை’ எனக் குறிப்பிடப் பட்டிருக்கு.''’
""திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூக ஒற்றுமைக்கான கூட்டணி தேவைன்னு அறிவிச்சிருக்காரே?''’
""டிசம்பர் 2-ல் தி.க.தலைவர் வீரமணி, தன் 86 ஆவது வயதில் அடி எடுத்துவச்சிருக்கார். பிறந்தநாளை யொட்டி ஸ்டாலின், முத்தரசன், திருமா வளவன், ஈவி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினாங்க. பெரியார் திடலில் நடந்த அந்த விழாவில் பேசிய வீரமணி, அரசியல் கூட்டணியை விட வும் சமுக அநீதிக்கு எதிரான கூட்டணி தான் இப்போது முக்கியம்னு வலியுறுத் தினார். பெரியார் திடலின் வழிகாட்டு தலில்தான் தி.மு.க. நடக்குதுன்னு ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ரொம்ப கவனிக்கப்பட்டிருக்கு.''’
""அ.தி.மு.க. தரப்பில் என்ன நடக்குது?''’
""முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, சிகிச்சை களுக்காகக் கொடுத்து வந்த உதவித் தொகைக்கான விளிம்பை, 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி இருப்பதாக அண்மையில் எடப்பாடி அறிவிச்சிருந்தார். இதில் கடுப்பான பா.ஜ.க.தரப்பு, இந்தக் காப்பீட்டுத் திட்டமே மத்திய அரசின் திட்டம். இதற்கான 2 லட்சத்தை 5 லட்சமாக உயர்த்தியவர் மோடிதான். இதை தனது சாதனையா எடப்பாடி காட்டிக்கலாமான்னு, கோபமா விமர்சிக்கிறாங்க.''’
""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா. புயல்நிவாரண நிதியா மத்திய அரசிடம் எடப்பாடி அரசு 15 ஆயிரம் கோடி கேட்டி ருந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு, யானைப் பசிக்கு சோளப் பொறிங்கிற மாதிரி, வெறும் 353 கோடியை மட்டுமே ஒதுக்கி, எடப் பாடி அரசின் தலையில் கல்லைப் போட்டிருக்கு. ஏற்கனவே மின்வாரிய புனரமைப்புக்காக மத்திய அரசு தர்றதா சொன்ன 200 கோடியையும், தர வாய்ப்பில் லைன்னு கை விரிச்சிடுச்சாம். இப்ப அறிவிக்கப் பட்டிருக்கும் சொற்ப நிதியும் வர்றதுக்குள்ளயே சுகாதாரத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறைன்னு சகல துறை அமைச்சர்களும், எங்களுக்கே அதிக நிதி ஒதுக்கணும்னு எடப்பாடியைத் துரத்துறாங் களாம். பலமான நிதி நெருக்கடியில் சிக்கி, கண்ணெல்லாம் இருண்டுபோய்த் தட்டாமாலை சுற்றிக்கிட்டு இருக்கு எடப்பாடி அரசு.''
இறுதிச் சுற்று
ரத்து... சித்து... மொத்து...!
ஜெ. மறைவுக்குப் பின் ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தல் நடந்தபோது அமைச்சர்கள் உள்ளிட்டோர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு விசாரணை செய்ய அபிராமபுரம் காவல் நிலையத்துக்குப் பரிந்துரை செய்தது. இவ்வழக்கில் முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டுமென வைரக்கண்ணன் மனுத் தாக்கல் செய் திருந்தார். இந்நிலையில், நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்திய நாராயணன் அமர்வுமுன் இவ்வழக்கின் விசாரணை 2018, டிசம்பர் 3-ஆம் தேதியன்று தொடங்கியது. நீதிபதிகளிடம் நரசிம்மன் என்பவரது மனுவை ஏற்று, தனி நீதிபதி ரமேஷ் உத்தரவுபடி இந்த வழக்கின் முதல் தகவலறிக்கை ரத்துசெய்யப்பட்டதாகத் தெரிவித்தார் அரசு வழக்கறிஞர். "வருமான வரிச் சோதனை நடத்தி ஓராண்டான நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையென்ன, விசாரணைக்கு உத்தரவிட்டும் போலீஸ் இணை ஆணையர் ஏன் விசாரிக்கவில்லை, இந்த வழக்கு ரத்து உத்தரவை எதிர்த்து ஏன் அரசு மேல்முறையீடு செய்யவில்லை' என அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியதுடன் வரும் டிசம்பர் 17-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
-மணி