"ஹலோ தலைவரே, கஜாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக்கூட முழுசா பார்வையிடாத முதல்வர் எடப்பாடி, அவசரம் அவசரமாக பிரதமரிடம் நிதி கேட்கப் போறேன்னு 21-ந் தேதி டெல்லிக்குப் பறந்தாரே, அந்தப் பயண விவகாரமே இப்ப பலத்த சர்ச்சைகளை உருவாக்கிக்கிட்டு இருக்கு.''’
""ஆமாம்பா, அவர் ஏற்கனவே ஒத்துக்கிட்ட டெல்லி புரோகிராம் ஒன்றுக்காகத்தான் போனார்ங்கிறதுதான் அம்பலமாயிடுச்சே...''’
""உண்மைதாங்க தலைவரே, இந்தியா டுடே நாளிதழ், "ஸ்டேட் ஆஃப் ஸ்டேட்ஸ்' என்ற தலைப்பில், சிறந்த மாநிலங்களுக்கு விருது வழங்கும் விழாவை டெல்லியில் 22-ந் தேதி நடத்துச்சு. இதில் தமிழகத்துக்கு 4 விருதுகளையும் அது அறிவிச்சிருந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்று விருது பெற, ஒரு மாசத்துக்கு முன்பே முதல்வர் எடப்பாடி ஒப்புதல் கொடுத்திருந்தார் என்கிறது தலைமைச் செயலகத் தரப்பு.''’’
""விருது வாங்கப் போன இடத்தில் டெல்லியில் பிரதமரை சந்திச்சும் பெருசா தமிழகத்துக்கு நிவாரண நிதி எதையும் எடப்பாடி வாங்கிட்டு வரலையே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திச்சப்ப, "15

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திச்சப்ப, "15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத் தமிழகத்துக்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. எங்களுக்கு இருக்கும் நிதி நெருக்கடியில், அவசர உதவிகளைக் கூடச் செய்ய முடியலை. அதனால் முதலில் ஒரு 1000 கோடி ரூபாயையாவது எங்களுக்கு ரிலீஸ் செய்யுங்க'னு எடப்பாடி கேட்டார். முகத்தில் எந்தவித சலனத்தையும் காட்டாத பிரதமர் மோடியோ, "மத்தியக் குழு சேதப் பகுதிகளைப் பார்வையிட்டு, சேத மதிப்பு பற்றி அறிக்கை கொடுக்கும். அதனடிப்படையில் நிவாரண உதவி தமிழகத்துக்கு வழங்கப்படும்'னு சொல்லியிருக்கார். எடப்படியோ, "அப்படின்னா, ஒரு 500 கோடி ரூபாயாவது முதல்ல கொடுங்க'னு கெஞ்சாத குறையா கேட்டிருக்கார். அதுக்கும் மோடி பதில் சொல்லாததால், "நீங்களே நேர்ல ஒரு தடவை தமிழகத்துக்கு விசிட்டடிச்சி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாருங்க'னு எடப்பாடி வேண்டுகோள் வச்சிருக்கார். அப்போதும் இறுக்கம் குறையாத மோடி, மத்தியக் குழுவின் அறிக்கை வரட்டும்னு, கைகூப்பி வணக்கம் சொல்லி, எடப்பாடியை வெறுங்கையோடு அனுப்பிவச்சிட்டார்.''’
""அப்புறம்...?''’
""பிரதமர் நிதி தராமல் தன்னை அனுப்பியது பற்றி சீனியர் அமைச்சர்களிடம் எடப்பாடி புலம்பினார்னு சொன்னேனே... அப்ப மின்துறை அமைச்சர் தங்கமணி, முதல்வர் எடப்பாடிகிட்ட, கவலைப்படாதீங்க. இதை கேட்கிற வழியில் கேட்கணும்னு சொல்லிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சரும், தமிழக பா.ஜ.க. பார்வையாளருமான நிர்மலா சீதாராமனைத் தொடர்புகொண்டு பேசியிருக்காரு. அப்புறம்தான், மத்திய அரசு முதற்கட்டமா 200 கோடியை சேங்ஷன் பண்ணியிருக்கு.''
""ஹெலிகாப்டர் விசிட்டுக்கு கிடைத்த நிவாரணம் 200 கோடியா?''
""ஆமாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடிக்கு நோட் போட்டிருக்கும் உளவுத் துறை, "புயல் மிகக் கடுமையாகப் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டத்துக்குக் கூட நீங்க போகாததும், ஹெலிகாப்டர் விசிட்டும் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கு. அதனால் உரிய பாதுகாப்போடு தரை மார்க்கமாக புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு விசிட் அடிப்பது நல்லது'ன்னு குறிப்பிட்டிருக்கு. இதைத் தொடர்ந்தே முதல்வர் எடப்பாடி ரயில்மூலம் டெல்டா பகுதி விசிட்டுக்குத் தயாரானார்.''’‘
""சரிப்பா, புயல் பாதிக்கப்பட்ட பகுதிகள்ல அமைச்சர்கள் பலரும் களமிறங்கினாங்களே, அவங்க எதைச் சாதிச்சாங்க?''’
""தலைவரே... அமைச்சர் மணிகண்டன், தென் மாவட்டங்கள்ல தனி லாபியை உருவாக்கி, எம்.எல்.ஏ.க்களோடு நெருங்கிப் பழகிக்கிட்டிருக்கார். அந்த வகையில், சங்கரன்கோயில் எம்.எல்.ஏ.வும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமியும் அவர் அணியில் செயல்படுறாரு. அண்மையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, புயல் பாதித்த பகுதிகளுக்குப் போகும்போது ராஜலட்சுமியையும் அழைத்துச் சென்றார். டென்ஷனான அமைச்சர் மணிகண்டன், அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொண்டு சத்தம் போட்டிருக்கார். இந்த முட்டல் மோதல் மினி கஜாவா மாறி கட்சிக்குள்ள புயல் வீசுது.''’
""கஜா பாதிப்புக்கு தே.மு.தி.க. சார்பிலும் நிவாரண உதவிகள் தரப்பட்டிருக்கே?''’
""கட்சியின் பொருளாளர் பிரேமலதா, புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுகோட்டை மாவட்டப் பகுதிகளுக்கு விசிட் அடிச்சு, கட்சி சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினாரு. கேப்டனுக்கு உடல்நலம் சரியில்லை. அதனால்தான் அவர் சார்பில் நான் வந்திருக்கேன்னு உருக்கமா பேசி, மக்களை நெகிழவச்சிட்டார். அதேபோல் "இனி கட்சி சார்பில் வைக்கப்படும் கட் அவுட், போஸ்டர், அழைப்புகள்ல கேப்டன் படத்துடன் என் படமும் கட்டாயம் இருக்கணும்'னும், கட்சியினருக்கு உத்தரவு போட்டிருக்கார் பிரேமலதா.''
""தமிழக அரசை ஒரு அதிகாரம்மிக்க டீம் ஆட்டிப் படைக்குதுன்னு டாக் அடிபடுதே?''’’
""ஆமாங்க தலைவரே, கவர்னரின் கூடுதல் செயலாளரான ராஜகோபாலும் ஆடிட்டர் குருமூர்த்தியும்தான் இப்ப அரசையே விருப்பம்போல் ஆட்டி வைக்கிறாங்களாம். தலைமைச்செயலாளர் கிரிஜா, அண்மையில் மத்தியில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரியான டி.வி.சோமநாதன், வீட்டு வசதித் துறை செயலாளர் கிருஷ்ணன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை இவங்கதான் வழி நடத்துறாங்களாம். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் டீமோ, அவர்கள் விருப்பப்படி ஏனைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வழிநடத்துறாங்களாம். நினைச்சபடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பந்தாடுறாங்களாம்.''’
""நானும் ஒரு அதிகாரி பற்றிய தகவலைச் சொல்றேன். சென்னையில் இருக்கும் காவல்துறை உயரதிகாரிக்கு, ஒரு கல்வி நிறுவன அதிபர், அண்மையில் ஒரு சீக்ரெட் விருந்து ஏற்பாடு பண்ணியிருந்தாராம். அதில் அதிகாரிக்கு பல லட்சம் மதிப்புள்ள ஒரு காஸ்ட்லியான பரிசும் வழங்கப்பட்டதாம். இந்தத் தகவல் இப்ப கவர்னர் மாளிகைவரை போயிருக்குதாம்.''