ராங்-கால் : குட்கா...? தப்ப வைக்கும் எடப்பாடி! தினகரனுக்கு திகார்! பா.ஜ.க. வியூகம்!

rangcall

"ஹலோ தலைவரே, தமிழகத்தையே பரபரப்பாக்கிய குட்கா விவகாரத்தில், முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. அவசர அவசரமா தாக்கல் பண்ணியது, இப்ப பலத்த சர்ச்சையை எழுப்பிக்கிட்டிருக்கு.''’

eps,ttv,sasi

""ஆமாம்ப்பா, குட்கா விவகாரம் தொடர்பா கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்த முக்கியப் புள்ளிகளின் பெயர்களை எல்லாம் விட்டுட்டு, இந்த முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்குன்னு குற்றச்சாட்டை வைத்திருக்கும் மு.க.ஸ்டாலின், எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படாத விசாரணைக்காக நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாடவேண்டி இருக்கும்னும் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டிருக்காரே?''’

""உண்மைதாங்க தலைவரே, சட்டவிரோத குட்கா விவகாரத்தில் 40 கோடி ரூபாய் அளவிற்கு முக்கியப் புள்ளிகளுக்கு மாமூல் கொடுக்கப்பட்டாதாகத் தகவல் ஏற்கனவே வெளியாச்சு. இதில் சம்பந்தப்பட்ட மார்வாடியான மாதவராவிடம் கைப்பற்றப்பட்ட டைரி மற்றும் பென் டிரைவில் இருந்த மாமூல் பட்டியலில், ஹெச்.எம்.ன்னு குறிக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் தொடங்கி, காவல் துறையின் தற்போதைய டி.ஜி.பி., அன்றைய சிட்டி கமிஷனர் ஜார்ஜ், இப்போது விழுப்புரம் எஸ்.பி.யாக இருக்கும் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களின் பெயர்களும் சூசகமாக எழுதப்பட்டு இருந்துச்சு. குற்றம்சாட்டப்பட்ட இவர்கள் அத்தனை பேர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படணும்னு ஒட்டுமொத்தத் தமிழகமும் குரல் கொடுத்து வரும் நிலையில், சி.பி.ஐ.யின் முதல்கட்ட குற்றப்பத்திரிகையில் இவர்கள் யாருமே இல்லை. மாமூல் வாங்கிய வி.ஐ.பி.க்களைக் காப்பாற்றும் வகையிலேயே, இப்படியொரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்குதாம்.''’

""சி.பி.ஐ. விசாரணையிலும் நெருக்கடியா?''’

""இந்த விசயத்தில

""இந்த விசயத்தில் இ.பி.எஸ்.சின் ரோல் அதிகம் என்கிறது அதிகாரிகள் தரப்பே. ஏற்கனவே குட்கா விவகாரத்தை முழுமையாக விசாரித்துத் தெரிந்து வைத்திருந்த சி.பி.ஐ. இயக்குநர் அலோக்வர்மா மாற்றப்பட்டு, தற்காலிக இயக்குநராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டிருக்கார். இவர் சென்னையில் சி.பி.ஐ. துணை இயக்குநராக இருந்த போதே, அப்போது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.சை தலைமைச் செயலகத்திலேயே சந்திச்சி பெரும் சர்ச்சையில் சிக்கியவர். இவரோடு எடப்பாடியும் நல்ல லிங்கில் இருக்கிறாராம். இதற்கான லாபியில், டி.ஜி.பி. ரேஸில் இருக்கும் ஜாபர்சேட்டும் இருக்காராம். ஜாபர்சேட், நாகேஸ்வரராவின் பேட்ச் மேட்டாம். அதனால் அவர் மூலமும் பல மூவ்கள் நடந்திருக்கு. எல்லாம் சேர்ந்து, அந்த பலவீன குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கு. இதுக்குப் பிரதி உபகாரமாக டி.ஜி.பி. ஆஃப் .இண்டலிஜென்ஸ் என்ற பதவிக்கு, எடப்பாடி அரசால் பரிந்துரை செய்யப்பட்டிருக்காராம் ஜாபர்.''’

""குட்கா விவகாரத்தில் கண்ணா மூச்சி விளையாடும் சி.பி.ஐ., இப்ப டி.டிவி.தினகரனைச் சுற்றி வளைக்க வியூகம் வகுக்குதாமே?''’

""ஆமாங்க தலைவரே, இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்கமுயன்ற விவகாரத்தில், தினகரன் மீது வழக்கைப் பதிவுசெய்து விசாரணை நடத்தணும்னு டெல்லி பாட்டியாலாவில் இருக்கும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கு. இதையொட்டி வழக்கை வேகமா விசாரிச்சி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னாடியே தினகரனை திகார் சிறைக்கு அனுப்பும் முடிவில் இருக்குதாம் சி.பி.ஐ. இது டெல்லி பா.ஜ.க. கொடுத்திருக்கும் அசைன்மென்ட்டாம். சசிகலா அணி, எடப்பாடி அணியோடு இணையாமல் இருக்க, தினகரன் ஏகப்பட்ட தடைக்கல்லை அடுக்குவதால்தான், பா.ஜ.க.வுக்கு அவர்மேல் இவ்வளவு எரிச்சலாம். தினகரனோ, என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பெயில்ல வந்து, நாடாளுமன்றத் தேர்தல்ல பா.ஜ.க.வைத் தமிழகத்தில் தோற் கடிப்பேன்னு சவால் விட்டுக்கிட்டிருக்கார்.''’

""இடைத்தேர்தலுக்கே கூட்டணிக் காய்களை நகர்த்தியவராச்சே!''’

""பா.ம.க.வோடு தினகரன் கூட்டணி அமைக்க விரும்பறார்ன்னு சமீபத்துல நாம பேசிக்கிட்டோம். அன்புமணியும் தினகரனும் அடிக்கடி பேசுறவங்கதான். சமீபத்தில் சசிகலாவை சிறையில் சந்திச்ச தினகரன், பா.ம.க.வுடன் கூட்டணி பற்றி பேசி வருவதைச் சொல்லியிருக்கார். அதுக்கு சசிகலா, நல்ல முடிவுதான். அதேபோல் தே.மு.தி.க.வோடும் நாம் கூட்டணி வச்சா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்லியிருக்கார். அதோடு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், மேல்முறையீடு வேண்டாம்ன்னு நீ முடிவெடுத்தது சரிதான். அதே சமயம் எந்த முடிவெடுத்தாலும் அதுக்கு முன்னாடி என்னோடு கலந்து பேசக் கத்துக்கன்னும் தினகரனை கடிஞ்சிக்கிட்டாராம். இந்த நிலையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இளவரசியின் வீட்டில் 8-ந் தேதி பீரோவில் இருந்த 750 பவுன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா 17-ந் தேதிதான் புகார் கொடுத்திருக்காங்க. அந்த வீட்டில் செக்யூரிட்டியாக இருந்த அசாமைச் சேர்ந்த கோனாக்கையும் அன்னையில் இருந்து காணோமாம். கொள்ளை போன பொருட்கள் இன்னும் அதிகமா இருக் கும்ன்னும் பேச்சு அடிபடுது.''’

rangcall

""ஓ...''’

""தலைவரே, பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி முயற்சியில் இருக்கும் சந்திரபாபு நாயுடுவிடம் பேசிய ராகுல்காந்தி, தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைய, காங்கிரஸ் எதையும் விட்டுக் கொடுக்கத் தயார்ன்னு சொன்னதை, அவர் ஸ்டாலினிடமும் சொல்லியிருந்தார். 15-ந் தேதி ஸ்டாலினைத் திருநாவுக்கரசர் சந்திச்சிருக்கார். அதே நாளில் கட்சியின் சென்னை மாவட்ட கிழக்கு, மேற்கு நிர்வாகிகளை அழைத் துப் பேசிய திருநாவுக் கரசர், 2006-ல் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சி களின் ஆதரவில்தான் கலைஞர் ஆட்சி அமைச்சார். அப்போதே கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு அமைஞ்சும், நம் டெல்லித் தலைமை அதை விரும்பலை. வரும் காலத்தில் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு உருவாகலாம். எப்படி இருந்தாலும் நாம் தி.மு.க. கூட்டணியில் தீவிரமா செயல்படணும்னு முழு மனதோடு சொல்லியிருக்காரு.''’’

""கவர்னர் மாளிகைக்கு பக்கத்தில் இருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலான பார்க் ஹயாத், கவர்னர் மாளிகைக்கு சமீபகாலம் வரை நெருக்கமான ஓட்டலா இருந்தது. நிர்மலா தேவி விவகாரத்தில் கூட சில கேமராப் பதிவுகளை நீக்கி, மாளிகைப் புள்ளிகளுக்கு ஓட்டல் தரப்பு ஒத்துழைப்பு கொடுத்தது. அப்படிப்பட்ட ஓட்டல் மீதே இப்ப கவர்னர் மாளிகைத் தரப்பு தன் கோபத்தை வெளி யிட்டிருக்கே?''’

""அந்த பார்க் ஹயாத் ஓட்டல் மீது, கவர்னரின் செயலாளருக்கு என்ன கோபமோ? அந்த ஓட்டல்ல இசைக்கப்படும் மியூசிக், தங்களுக்கு இடையூறாக இருக்குன்னு புகார் கொடுக்கச் சொல்லிட்டார். இதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை சார்பில் அந்த ஓட்டல் மீது, காவல் துறையிலும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் புகார் கொடுக்கப்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் அசராத ஓட்டல் தரப்பு, புகாருக்கு மறுப்பும் விளக்கமும் கொடுத்திருக்கு.''’

""கவர்னர் மாளி கையைக் காட்டி, முதல்வர் எடப்பாடி உத்தரவையே ஒரு அதிகாரி அலட்சியப் படுத்தறாராமே?''’’

""உண்மைதாங்க தலைவரே, வீட்டுவசதித் துறையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டு, இப்ப டேமேஜ் கண்டிஷனில் இருக்கும் பல குடியிருப்புகள் இடிச்சி, புதுப்பிக்கப்படுது. இதன்படி இடிக்கப்படும் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படுது. அதற்கான ஒப்புதலைத் துறை அமைச்சரான ஓ.பி.எஸ். வழங்கினாலும், துறைச் செயலாளரான கிருஷ்ணன், அந்த ஃபைல்களைக் கிடப்பிலேயே போட்டு வச்சிடுறாராம். இது தொடர்பான புகார்கள் குவிஞ்சதால், சம்பந்தப் பட்ட ஃபைல்களைக் கிளியர் பண்ணுங்கன்னு முதல்வர் எடப்பாடியே கேட்டும், கிருஷ்ணன் அசைஞ்சி கொடுக்கலையாம். இது தொடர்பா, கோட்டைத் தரப்பிலேயே நாம் விசாரிச்சப்ப, தலைமைச் செயலாளர் கிரிஜா, கவர்னரின் செயலர் ராஜகோபால் ஆகிய இருவரின் நட்பில் இருப்பவர் கிருஷ்ணன். இவர்கள் மூவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ப தோடு, பிராமண சமூக அதிகாரிகளை எல்லாம் ஒருங் கிணைத்து தனியாகச் செயல்படுகிறார் களாம். அதனால்தான் எடப்பாடியால் எது வும் செய்ய முடியாம அப்செட் ஆயிட்டா ராம்.''

""எடப்பாடியை அப்செட்டாக்கிய இன்னொரு தகவலையும் சொல்றேன். எடப்பாடி அணியில் இருக்கும் எம்.பி.க்களான திருச்சி குமாரும், திருத்தணி ஹரியும் சமீபத்தில் தினகரன் தரப்பைச் சேர்ந்த செந்தில் பாலாஜியைத் திருச்சி ஏர்போர்ட்டில் சந்திச்சி தனியாப் பேசிக்கிட்டு இருந்தாங்களாம். இந்தத் தகவல் ஓ.பி.எஸ். காதுக்குப் போக, அவர் எடப்பாடியைத் தொடர்புகொண்டு, இந்த ரெண்டு எம்.பி.க்களும் தினகரன் அணிக்குத் தாவப்போறதா சொல்லியிருக்கார். இதைக்கேட்டு அப்செட்டான எடப்பாடி, கட்சி எம்.பி.க்களான வைத்திலிங்கம், நாடாளுமன்றத் துணை சபா தம்பிதுரைன்னு பலரையும் விசாரிக்கச் சொல்லியிருக்காரு. சந்திப்பு உண்மைதான்ங்கிறதால எடப்பாடி அப்செட்.''’

nkn211118
இதையும் படியுங்கள்
Subscribe