Advertisment

ராங்-கால் : 7 பேர் விடுதலை? உறுப்பு தானத்தில் ஊழல்!

7persons

"ஹலோ தலைவரே, சட்டசபைக் கூட்டத்தொடர், விதவித பரபரப்பை சந்திச் சிருக்கே..''’

Advertisment

""ஆமாம்ப்பா சபாநாயகர் தனபால் மேலேயே குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் வைக்கிறார்களே...!.''’

Advertisment

vijayadarani""உண்மைதாங்க தலைவரே, விவசாயத்துறை மானியக் கோரிக்கையின்போது, விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, தன் தொகுதி பற்றிப் பேச எழுந்தார். அப்ப அவருக்கு அனுமதி தராமல் சபாநாயகர் உட்காரச்சொல்ல, விஜயதரணி அமரமறுத்து ஏதோ சொல்ல, அதைப் பார்த்த சபாநாயகர், கோபமாக விஜயதாரணியைப் பார்த்து நீங்கதான் அமைச்சரை சந்திச்சி கோரிக்கையை சொல்லி இருக்கீங்களே என்று சைகை காட்டிப் பேசினாரு. இதனால் விஜயதாரணி சபையில் கோபத்தை வெளிப்படுத்த அவரை பெண் மார்ஷல்கள் மூலம் வெளியேற்றிட்டாரு சபாநாயகர். வெளி யில் பேட்டி தந்த விஜயதாரணி, பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபையிலேயே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்குன்னு குமுறினார். இது சம்பந்தமா அவரிடமே விசாரிச்சப்ப, "நான் என் தொகுதி தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். அதுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் பதில் சொல்ல ரெடியா இருந்தார். ஆனால் என்னைப் பேசவிடாத சபாநாயகர், அமைச்சரோடு தொடர்புபடுத்தி ஆபாசமாக சைகை செய்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், அவமானத்தில் குன்றி விட்டேன். ஒரு சபாநாயகரே இப்படிப் பண்ணலாமா? இதை நான் சும்மாவிடப் போவதில்லை. சபாநாயகரை மாற்றியாகணும்னு முதல்வர் எடப்பாடியிடம் வலியுறுத்துவேன்'னு சொல்றார்.''’

""சட்டசபையில் தங்கள் கட்சி எம்.எல். ஏ.க்களின் நடத்தையைப் பார்த்து, முதல்வர் எடப்பாடியே கோபப்பட்டாராமே?’

""ஆம

""ஆமாங்க தலைவரே, சபையில் முக்கியமான விவாதங்கள் நடக்கும்போதும், அமைச்சர்கள் பேசும்போதும், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருப்பதில்லையாம். அவர்கள் கேண்டீனில் அரட்டையடிக் கிறார்களாம். இதனால் எரிச்சலான எடப்பாடி, தங்கள் கட்சியின் கொறடாவான தாமரை.ராஜேந்திரனைக் கூப்பிட்டு, சபை நடக்கும்போது நம்ம எம்.எல்.ஏ.க்கள் யாரும் கேண்டீனுக்குப் போகக்கூடாதுன்னு சொல்லுங்க. இடைவேளை யின் போது தான் அவங்க போக ணும்னு உத்தரவு போட்டார். இதை கொறடா ராஜேந்திரனும் எம்.எல். ஏ.க்களிடம் சொல்ல, பெரும் பாலான எம்.எல்.ஏ.க்கள் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிருக்காங்க. காரணம், அதிக நேரம் கேண்டீனில் இருப்பவரே கொறடா ராஜேந்திரன்தானாம்.''’

""தமிழ்நாட்டைப் போலவே சட்டசபையும் இருக்குன்னு 13-ந்தேதி எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் கமெண்ட் அடிச்சாங்களாமே?''’

""ஆமாங்க தலைவரே, அன்னைக்கு சட்டசபையில் குளிர்சாதனக்கருவிகள் வேலை செய்யலை. அதனால் சபையில் இருந்த அத்தனை பேரும் புழுக்கத்தில் தவிச்சாங்க. கையில் இருந்த புத்தகம், குறிப்பேடு போன்றவற்றால் விசிறியும் போதுமான காற்று இல்லையாம். பொறுமை இழந்த தி.மு.க. கொறடா சக்கரபாணி எழுந்து, புழுக்கம் தாளவில்லையேன்னு சபாநாயகரிடம் முறையிட, சபாவோ அருகே இருந்த சட்டப்பேரவைச் செயலாளர் சீனி வாசனைப் பார்த்து, என்னாச்சு?ன்னு கேட்டிருக்கார். சீனிவாசனோ, "குளிர்சாதனக் கருவிகளில் ஏதோ பழுது. அதை சரிபார்த்துக்கிட்டு இருக்காங்க. அதனால் கொஞ்ச நேரத்தில் சரியாகும்'ன்னு சொன்னார். எனினும், அன்று சபை முடியும்வரை கருவிகள் சீராகவில்லை. புழுங்கித் தவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து சில தி.மு.க. எம். எல்.ஏ.க்கள், தமிழகமே இப்படிப் புழுக்கத்தில்தான் இருக்குன்னு கிண்டலடிச்சிருக்காங்க.''’

""காங்கிரஸ் கட்சியில் சிலர் மனப்புழுக்கத்தில் இருக்காங்கன்னு சொல்லப்படுதே?''’

raghul

""தன்னிடம் அப்பாயின்ட் மெண்ட் கேட்ட 250 பேரையும் போனவாரம் சந்தித்து, அவர்களின் கோரிக்கையை க்ளியர் செய்தார் ராகுல்காந்தி. அந்த வகையில் தமிழகத்தில் இருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்பைச் சேர்ந்த மாவட்ட தலைவர் ரங்கபாஷ்யம், சிவராமன், வசந்தராசன் ஆகியோர் ராகுலைச் சந்திச்சாங்க. அப்ப, அவங்க, திருநாவுக்கரசர் தலைமையில் கட்சி கலகலத்துக்கிட்டு இருக்குது. அவர் மீது நடவடிக்கை எடுங்க'ன்னு புகார்களை நீட்டியிருக்காங்க. அதை வாங்கிக்கிட்ட ராகுல், "அங்க நடக்குறது எல்லாமே எனக்குத் தெரியும். சரியான நேரத்தில் சரியாக முடிவெடுப்பேன். தைரியமாப் போய்ட்டுவாங்க'ன்னு நம்பிக்கையூட்டி அவர்களை அனுப்பிவச்சிருக்கார். அடுத்து திருநாவுக்கரசர் தரப்பைச் சேர்ந்த வட சென்னை மாவட்ட தலைவர் திரவியம் டீமையும் அழைத்தார் ராகுல். அவர்கள், "திருநாவுக்கரசர் சரியாகக் கட்சியை நடத்திச்செல்கிறார். ஆனால் அவருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட பலரும் இடைஞ்சல் செய் கிறார்கள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்'னு எதிர்த் தரப்பினர் மீது புகார்களைக் கொடுத்தனர். அதையும் வாங்கிக்கிட்ட ராகுல், "அங்க நடக்குறது எல்லாமே எனக்குத்தெரியும். உரிய நேரத்தில் சரியாக முடிவெடுப் பேன்'னு அதே டயலாக்கைப் பேசி, அவர்களுக்கும் நம்பிக்கையூட்டி அனுப்பிவச்சாராம். ராகுல் இப்படி இரு தரப்புக்கும் ஒரேபாணி டயலாக் கைத்தான் சொல்லியிருக்கார்ன்னு தெரிஞ்சதும், இருதரப்பும் இருண்டுபோய் நிக்கிது.''’

7persons

""ராஜீவ் வழக்கில் சிக்கியிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை கேட்டதா, டெல்லித் தகவல் சொல்லுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை, முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர், நவம் பரிலேயே நடத்திவிடலாமாங்கிற ஆலோசனையில் இருக்குது மோடி அரசு. அதனால், ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களிடம் இருக்கும் முக்கியப் பிரச்சினைகளை அறிந்து, அவற்றைத் தீர்த்து வைக்கவும் விரும்புது. அந்த வகையில் தமிழகத் தேர்தல் களத்தைப் பாதிக்கும் விவகாரமான ராஜீவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று, தண்டனைக் காலம் முடிந்த பின்னும், கடந்த 27 ஆண்டுகளாய் சிறையிலேயே வதைபட்டு வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவித்தால், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்களின் மதிப்பைப் பெறலாம்ன்னு டெல்லி நினைக்கிது. அதனால் தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியிருப்பவர்களின் உடல்நலம், குடும்பத்தின் சூழல், அவர்களின் பொருளாதார நிலைமை, அரசியல் பின்னணி பற்றியெல் லாம் உள்துறை மூலம் அறிக்கை கேட்டிருக்கு. தமிழக அரசும் இது தொடர்பான விவரங்களை சேகரிச்சிக்கிட்டு இருக்கு.''’

rang

""தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை செய்வதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதா அதிர்ச்சித் தகவல்கள் வருதேப்பா?''’

""இது அதிர்ச்சியிலும் அதிர்ச்சித் தகவல்தாங்க தலைவரே, அண்மையில் கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கார். அதில் "கேரளாவைச் சேர்ந்த இளைஞர் சேலத்தில் விபத்தில் சிக்கி மூளைச் சாவடைந்தார். அவரது உறுப்புகள் இந்திய நோயாளிகளுக்குப் பொருத்தப்படுவதற்கு பதில் இஸ்ரேல், உக்ரைன் நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்துங்க'ன்னு குறிப் பிட்டிருந்தார். இந்த நேரத்தில் சமத்துவத்துக்கான மருத்துவ சங்கப் பொதுச் செயலாளரான ரவீந்திரநாத், "உறுப்பு மாற்று விவகாரத்தில் முறைகேடுகளை செய்கிறார்கள். போன ஆண்டு 25 சத இதயமும் 33 சத நுரையீரல்களும் வெளி நாட்டினருக்கே பொருத்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்திய நோயாளிகள் 5,310 பேர் இந்த சிகிச்சைக்காகக் காத்திருந்தார்கள். சுகாதாரத் துறையே முறைகேடுகளுக்குக் காரணம். எனவே இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படவேண்டும்'னு குறிப்பிட்டிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் இந்த முறைகேடுகள் டெல்லிவரை பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''’

""எனக்கும் இது தொடர்பா ஒரு முக்கியத் தகவல் கிடைச்சிருக்குப்பா. தமிழ்நாடு அரசின் இந்த உறுப்பு மாற்று ஆணையத்தின் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த ஜெ. கைரேகை புகழ் டாக்டர் பாலாஜிக்கும், சுகா தாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கும் உரசல் இருந்திருக்கு. இந்த நிலையில், துறைச்செயலரான ராதாகிருஷ்ணனிடம் கேட்காமலேயே அவ ருக்குக் கீழ் ஏழு பேரை, பணி நியமனம் செய்துட்டாராம் பாலாஜி. இந்த உரசலின் தொடர்ச்சியாத்தான் உறுப்பு மாற்றில் முறை கேடுங்கிற விவகாரம் பாலாஜி தரப்பிட மிருந்து வெளி வந்திருக்கு. இதில் மேலும் பல வில்லங்க விவகாரம் வெடிக்கும்ன்னு சுகா தாரத் துறையினரே சொல்றாங்க.''’

nkn19.06.18 rangcall
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe