"ஹலோ தலைவரே, ப.சி.க்கு ஏற்பட்ட நிலைமைதான் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஏற்படும்ன்னு ஹெச்.ராஜா பேசியதை கவனிச்சீங்களா?''’
""அதுமட்டும் இல்லேப்பா, சிவகங்கை, தூத்துக்குடி, நீலகிரி, மத்திய சென்னை இந்த நான்கு தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் வரும் என்றும் பா.ஜ.க.வின் தேசிய செயலாளரா இருக்கும் ராஜா பேசுறாரே?''
""எதிர்க்கட்சிகளையும் அதில் இருக்கும் முக்கிய தலைவர்களையும் குறிவச்சி பழிவாங்கும் படலத்தை தன் ஸ்பெஷல் பாலிஸியா பா.ஜ.க. கடைப்பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. தமிழகத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ப.சி.யையும், கர்நாடகத் தின் முன்னாள் அமைச்சரான டி.கே.சிவக்குமாரையும், ம.பி.யில் இருக்கும் கமல்நாத் குடும் பத்தினரையும் இப்படி அலைக்கழிக்கிது. அதேபோல் தமிழகத்தில் செல்வாக்கா இருக்கும் தி.மு.க.வை அட்டாக் செய்வதற்கான வியூகங்களையும் பா.ஜ.க. வகுக்குது.''
""ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் முக்கிய தலைவர்களின் சொத்து விபரங்களை எல்லாம் மத்திய அரசு எடுக்கத் தொடங்கிடிச்சின்னும் பேச்சு அடிபடுதே?''’
""எடுத்த எடுப்பிலேயே நேரா ஸ்டாலினைக் குறி வைப்பாங்களா, இல்லை அவரைச் சுற்றி இருப்பவர்களை மடக்கிவிட்டு, அவர்களிடம் வாக்குமூலத்தை வாங்கி, அதன்பிறகு ஸ்டாலின் கிட்ட வருவாங்களாங்கிற விவாதம் பா.ஜ.க. பிரமுகர்களிடம் ஓடிக்கிட்டிருக்கு. ஏற்கனவே அ.தி.மு.க. அமைச்சர்களின் டீட்டெய்ல்ஸை எல்லாம் கலெக்ட் பண்ணி வச்சிக்கிட்டு, ரெய்டுகளை நடத்தி, அவர்களை இஷ்டம்போல் பணியவச்ச மாதிரி, தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகளையும் மத்திய அரசு அரட்டி உருட்டப் பார்க்குதான்னு தெரியலை. தி.மு.க.வின் முக்கிய புள்ளி ஒருவர் மலேசியா அருகே இருக்கும் தீவில் 300 கோடி ரூபாய்க்கு ஒரு ஓட்டலை வாங்கியது தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை தேடி எடுத்திருக்குன்னும் டெல்லி பக்கம் இருந்து தகவல் பரவுது. எல்லாம் அமித்ஷா காட்டுற வேகமாம்.''’‘
""ப.சி. விவகாரத்திலேயே தெரிந்ததே?''’
""அது சம்பந்தமா நக்கீரன்ல ஒரு தனி ஸ்டோரியே வருது. இருந்தாலும் என் கவனத்துக்கு வந்த ஒருசில தகவல்களைச் சொல்றேன். ப.சி.யின் மனைவி நளினி சிதம்பரத்தின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்ட செங்கம்பள்ளி. இங்க இருந்த அவரது உறவினரான டாக்டர் ஆனந்த் என்பவர் அண்மையில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கிட்டு இறந்து போனார். அவருடைய தற்கொலை விவகாரம் தொடர்பாக நளினி சிதம்பரத்தின் சகோதரரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள், வாக்கு மூலத்தை வாங்கி இருக்காங்க. அதில் ப.சி. குடும்பம் பணப்பரிவர்த்தனை பற்றி சொல்லியிருக்காராம். இதில் டாக்டர் ஆனந்தும் சம்பந்தப்பட்டிருந்தார். இதைக் கண்டுபிடிச்ச வருமானவரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்புச்சு. அந்த நெருக்கடியில்தான் தற்கொலை பண்ணிக்கிட்டார்ன்னு வாக்குமூலம் கொடுத்திருக்காராம். அதனால் இந்த விவகாரத்திலும் ப.சி. குடும்பத்துக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டிருக்கு. அவங்க சொத்து பற்றிய தகவலும் முழுசா எடுக்கப்பட்டிருக்கு.''’
""கர்நாடக முன்னாள் அமைச்சரான காங்கிரஸ் டி.கே.சிவக்குமார் விவகாரத்திலும் பல இடங்களில் முடிச்சு போடப்படுதே?''’
""ஆமாங்க தலைவரே, கர்நாடக காங்கிரஸின் சீனியர் தலைவரான டி.கே. சிவக்குமாரின் கைதை, அங்க இருக்கும் அவங்க கட்சிக்காரங்களே இன்னும் ஜீரணிக்க முடியாம இருக்காங்க. அண்மையில் வருமான வரித்துறை டார்ச்சர் தந்ததா எழுதிவச்சிட்டு தற்கொலை செய்துக்கிட்ட ’காஃபி டே’ உரிமையாளரான சித்தார்த்தின் விவகாரத்தை அதிகாரிகள் கிளறினாங்க. பல அரசியல் தலைவர்கள் அவர் மூலம் தங்கள் கருப்புப் பணத்தை முதலீடு செஞ்சிருப்பதையும் தோண்டித் துருவிக் கண்டுபிடிச்சாங்க. அங்கிருந்து கிடைச்ச நூலைப் பிடிச்சிக்கிட்டு போய்தான் டி.கே.சிவக்குமாரைக் கைது பண்ணியிருக்காங்க. அந்த நூல், கார்த்தி சிதம்பரம் வரை வருதாம்.''’
""இன்னும் எத்தனை நெருக்கடி களோ?''
""அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனனின் அக்காள் மகனான ஜெயப்பிரகாஷின் மகன் அக்னீஸ்வருக் கும் மு.க.ஸ்டாலினின் சகோதரியான செல்வியின் பேத்தி ஓவியாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் போன 1-ந் தேதி நடந்திருக்கு. இந்த விழாவுக்கு வந்த நடிகர் விஜய் தி.மு.க. தலைவர் ஸ்டாலினோடு கைகுலுக்க அது மீடியாவில் ஃப்ளாஷ் ஆயிடிச்சி. மணமகன் குடும்பம் தி.மு.க. பக்கம் வந்துட்டாலும் மதுசூதனன் வழி உறவுங்கிற பேர் மாறாதே... அதேபோல் முதல்வர் எடப்பாடியின் ரைட் ஹேண்டா இருக்கும் அவருடைய தனி உதவியாளர் கிரிதரனின் சொந்த மைத்துனர் ரமேஷ்குமார் தி.மு.க. தலைமையிடம் போராடி சிதம்பரத்தில் சீட் வாங்கி எம்.பி.யாகி இருக்கார்.''’
""ஓகோ''
""தி.மு.க.வுக்கு ஆலோசனை சொல்லும் ஓ.எம்.ஜி. குரூப்பின் சிபாரிசில் சீட் வாங்கியவர் களில் ஒருவராம். தன் மைத்துனருக்கு தி.மு.க.வில் சீட் வாங்கிக்கொடுத்ததே கிரிராஜன்னு சொல்லப்படுது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இரத்தினசபாபதியின் தம்பி, பரணி கார்த்திகேயன், ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் ஐக்கியமாகி இருக்கார். இப்படி ஒரே குடும்பத்தில் இருக்கும் நபர்களே எதிர் எதிர் கட்சிகளில் இருப்பதால், இரு தரப்பிலும் இருக்கும் பிரமுகர்கள், யார்ட்ட எப்படி பேசுறதுன்னு குழம்பிப் போறாங்க. எவர் மீதும் நம்பகத்தன்மை இல்லாமல் போகுது. போன வாரம் உடல் நலம் சரியில்லாமல் போனதால், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துவரும் மு.க.அழகிரி, தன்னைச் சந்திக்க வரும் கட்சியினரிடம் இப்படிப்பட்ட சிக்கல்களைப் பற்றிப் பேசி யிருக்கார்.''’
""அரசியலுக்கு ரஜினி வருவாருன்னு பேச்சு இருக்கே?''
""ரஜினியின் அரசியல் பிரவேசம் வரும் மார்ச், ஏப்ரலில் இருக்கும்ன்னு பா.ஜ.க. சீனியர் ராம்மாதவ் பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிச்சது பத்தி போன முறையே நாம பேசிக்கிட்டோம். ரஜினியை எப்படியாவது கட்சிக்குள் கொண்டுவரணும், இல்லன்னா அவரையே தனிக் கட்சி தொடங்கவச்சி, அதோட கூட்டணி அமைக்கணும்னு அது கோடு போட்டுக்கிட்டு ரூட்டைப் போடத் தவிக்கிது. சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் உரசல் வந்தப்பவும், ஓ.பி.எஸ்.சுக்கு இ.பி.எஸ்.சோடு மோதல் ஏற்பட்டப்பவும், நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் ரஜினி யோடு அமித்ஷா பேசினார். இந்தத் தடவையும், அ.தி.மு.க. ஆட்சியைக் கலைச்சிடுறோம். நீங்கள் கட்சியைத் தொடங்கி தமிழகம் முழுக்க ஒருதடவை டூர் அடிங்க. ஒரு வருசத்துக்குள் தேர்தலைக் கொண்டு வர்றோம். நாம் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம். தேர்தலுக்கான எல்லா உதவிகளையும் செய்யறோம்'னு அமித்ஷா வலியுறுத்தினாராம். ரஜினி பிடி கொடுக்கலையாம். அடுத்து எங்க பக்கம் வாங்க. தமிழக பா.ஜ.க.வுக்கு தலைமை தாங்குங்கன்னும் வலைவீசினார் அமித்ஷா. ரஜினியோ, "ஒரு கட்சித் தலைவரா பொறுப்பேற்கணும்னா அது சாதாரண வேலை யில்லை. முழுசா நம்மை அர்ப்பணிச்சாகணும்; அதனால் நல்லா பேசக்கூடிய ஒருத்தரை தலைவராக்குங்க'ன்னு நழுவிட்டார். ஆனாலும் இப்பவும் விடாம, "தனிக்கட்சியையாவது தொடங்குங்க. நம்ம கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நீங்கதான்'னு இப்ப பா.ஜ.க. ரஜினியைத் துரத்திக்கிட்டு இருக்கு. ரஜினி இன்னமும் உறுதி தரலையாம்.''’
""பா.ஜ.க. தமிழிசை கவர்னராகிறார். அடுத்த பாஜ.க. தலைவர் யாராம்?''’
""புதிய தலைவரை உடனடியாக நியமிக்க லாமா? இல்லை உட்கட்சித் தேர்தல் முடிஞ்சி, டிசம்பர்ல தேர்தல் மூலமா புதிய தலைவரை தேர்ந்தெடுக்கலாமான்னு விவாதிக்கப் போறாங் களாம். பா.ஜ.க.வின் தேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரான ஏ.பி.முருகானந் தத்துக்கிட்ட அமித்ஷா இது சம்பந்தமா விவாதிச்சிருக்கார். மாநில பொறுப் பாளர்களில் ஒருவரான நரேந்திரனையும் இது சம்பந்தமா விவாதிக்க கட்சித் தலைமை டெல்லிக்குக் கூப் பிட்டிருக்கு. இதுக்கிடை யில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான முரளிதரராவ், வானதி சீனிவாசனை தலைவர் நாற்காலியை நோக்கி நகர்த்த துடிக்கிறார். ஏற்கனவே இங்க இருக்கும் பிரமுகர்களைப் பற்றி ரிப்போர்ட் எடுத்த பா.ஜ.க. தலைமை யார் மீதும் நம்பிக்கை வைக்க முடியாமல் இருக்கு. அதனால், புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கலாமா? என்றும் பா.ஜ.க. தலைமை யோசிக்கிதாம்.''’
""எடப்பாடி ஃபாரின் போனதும் அடுத்தடுத்து அமைச்சர்களின் டூர் புரோகிராம் செய்தி வருதே?''’
""ஜெ. மறைவுக்குப் பிறகு தமிழக அமைச்சர்கள் பலரும் சொகுசுக்காகவும், பேரம், டிரான் ஸக்ஷன் தொடர்பாவும் அடிக்கடி வெளிநாடு களுக்குப் போய்வந்துக்கிட்டுதான் இருக்காங்க. அதெல்லாம் பெருசா யாருக்கும் தெரியறதில்லை. இப்பக் கூட அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் எகிப்து போறார். அமைச்சர் சி.வி.சண்முகம் சிங்கப்பூர் பயணம் இதுக்கெல்லாம் கிடைக்காத முக்கியத்துவம், முதல்வராக இருப்பதால் எடப்பாடியின் டூருக்குக் கிடைச்சிருக்கு. இப்ப முதல்வர் எடப்பாடி தமிழகத்தில் இல்லைன்ன தும், விடுப்பே எடுக்காத அதிகாரிகள் கூட விடுப்பெடுத்துக்கிட்டு குடும்பத்தோடு ஊர் சுற்றிக்கிட்டு இருக்காங்க. அதனால் கோட்டையின் பெரும்பாலான பகுதி காத்து வாங்குது.''’
""வெளிநாடு போன எடப்பாடி, போகிற போக்கில் ஜெ. விசுவாசிகளின் எரிச்சலை சம்பாதிச்சிட்டுப் போயிருக்காரே?''’
""உண்மைதாங்க தலைவரே, 29-ந் தேதி வெளிநாட்டு டூருக்குக் கிளம்பினப்ப, அவர் நேரா ஜெ.வின் நினைவிடத்துக்குப் போய் அஞ்சலி செலுத்திட்டுத்தான் ஏர்போர்ட்டுக்குப் போவார்ன்னு அமைச்சர்களும் அதிகாரிகளும் நினைச்சாங்க. ஆனால் எடப்பாடியோ காரை நேரா ஏர்போர்ட்டுக்கு விடச் சொல்லிட்டார். இதுபற்றி தயக்கத்தோடு அவரிடம் அமைச்சர்கள் கேட்டபோது, "நான் முதல்வரான பிறகு இப்பதான் முதன்முதலா வெளிநாடு போறேன். அதனால் சமாதிக்குப் போய்ட்டுப் போறது சரியாக இருக்காது. அதே சமயம் சின்னம்மா உருவத்தில் அம்மா இருக்கார். அதனால் அவருக்குத் தகவல் அனுப்பி மானசீகமா ஆசி வாங்கிட்டேன்'னு சொல்லி எடப்பாடி திகைக்க வச்சிருக்கார். இது அ.தி.மு.க.வில் இருக்கும் ஜெ. விசுவாசிகளைக் கடுப்பேத்தி இருக்கு.''’
""ம்...''
""தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பா விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் தன் இடைக்கால ரிப்போர்ட் டை ரெடிபண்ணிவிட்டது. அது இன்னும் சமர்ப்பிக்காத நிலையில், நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கு. கமிஷனின் இடைக்கால அறிக் கையை சமர்ப்பிக்க முதல்வரிடம் அப்பாயின்ட் மெண்ட் கேட்டு காத்துக்கிடக்குறாங்க. வெளிநாடு சுற்றுலாவில் தீவிரமா இருக்கிற எடப்பாடி திரும்பி வந்து அப்பாயின்ட்மெண்ட் கொடுப்பாரான்னு தெரியாம காத்துக்கிட்டிருக்காங்க.''
""நானும் ஒரு தகவலைச் சொல்றேம்பா. அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரான கோகுல இந்திரா, கட்சியில் முக்கிய பதவி எதுவும் கிடைக்கலையேங்கிற கடுப்பில் இருந்தார். அதனால் தி.மு.க.வுக்குப் போக முடிவெடுத்தார். இது சம்பந்தமா நக்கீரனும் செய்தி வெளியிட்டுது. இந்தத் தகவல் லண்டன்ல இருந்த எடப்பாடி காதுக்குப் போக, ஷாக்கான அவர், அங்கிருந்தே கோகுல இந்திராவைத் தொடர்புகொண்டு, "அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க. உங்க தேவைகள் நிறைவேற்றப்படும். வர்ற உள்ளாட்சித் தேர்தல்ல சென்னை மேயருக்கு உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும்'னு சமாதானப்படுத்தியிருக்கார். இதைத் தொடர்ந்து "என் உயிருள்ளவரை நான் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன்'னு, கோகுல இந்திரா அறிக்கைவிட்டு, அதைச் சமூக ஊடகங்களில் நண்பர்கள் டீம் மூலம் பரபரப்பாக்கிக்கிட்டு இருக்கார்.''’