ராங்கால் : நித்தி எங்கே? வலை வீசும் பக்தர்கள்! உஷார் ரஜினி!

rajini

""ஹலோ தலைவரே, சாமியார் நித்தியானந்தாவைக் காணோம்ன்னு பெங்களூரு பிடதி ஆசிரமமே வலைவீசித் தேடிக்கிட்டிருக்கு.''’

""என்ன விவகாரம்? எங்கே போனாராம்?''’

nithy

""விவரமா சொல்றேங்க தலைவரே.. ஏற்கனவே 2010-ல் நித்தியானந்தா மேல் பதிவான பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகள் குறித்த தகவல்களை நக்கீரன் தொடர்ந்து விசாரித்து எழுத, அது பலத்த பரபரப்பை உண்டாக்குச்சு. இதைத் தொடர்ந்து நித்திக்கு, ஆண்மைப் பரிசோதனை எல்லாம் நடந்தது. இதனடிப்படையில் இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏ1 குற்றவாளியாக நித்தியானந்தாவும், ஏ 2 குற்றவாளியாக கோபால் ஷீலம் ரெட்டியும், ஏ 3 குற்றவாளியாக சிவ வல்லபனேனியும் குறிப்பிடப்பட்டிருந்தாங்க. ஏற்கனவே ஏ2, ஏ3 அக்யூஸ்ட்டுகள் தலைமறைவான நிலையில், தன்னைக் கைது செய்யக் கூடாதுன்னு நித்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். செப்டம்பர் 17-ந் தேதிவரை அவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாய்மொழியா தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. 16-ந் தேதி நித்தி தனது ஆசிரம சேனலில் லைவ்வாக பக்தர்களுக்கு ஆசி தருவார்ன்னு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று அவர் ஆசிரமத்தில் இல்லாததால், ஏற்கனவே பதிவான அவரது காட்சிகளை ஒளிபரப்பி, சமாளிச்சாங்க. நித்தியை அவரது நெருங்கிய வட்டாரத்தாலேயே தொடர்புகொள்ள முடியலையாம். ஆசிரமத் தரப்பிற்கே தெரியாமல் நித்தி அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆகியிருக்கலாம்னு நினைக்கிற அவரோட சீடர்களும் பக்தர்களும் அவரை வலை வீசி தேடிக்கிட்டிருக்காங்க.''

""ஆசிரம சேனல்ல நித்தி தரிசனம் தராதது பரபரப்பாயிடிச்சி.. டி.வி. சேனலில் இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி பரபரப்பாகியிருக்கே.''…’’

""உண்மைதாங்க தலைவரே, ஊடகங்களில் ராஜபக்ஷேவின் பேட்டியை ஒளிபரப்பினால், 2009 முள்ளிவாய்க்கால் கொடூரம் தமிழக மக்களுக்கு நினைவில் வருவதோடு, அப்ப ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதும் தி.மு.க. மீதும் ம

""ஹலோ தலைவரே, சாமியார் நித்தியானந்தாவைக் காணோம்ன்னு பெங்களூரு பிடதி ஆசிரமமே வலைவீசித் தேடிக்கிட்டிருக்கு.''’

""என்ன விவகாரம்? எங்கே போனாராம்?''’

nithy

""விவரமா சொல்றேங்க தலைவரே.. ஏற்கனவே 2010-ல் நித்தியானந்தா மேல் பதிவான பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகள் குறித்த தகவல்களை நக்கீரன் தொடர்ந்து விசாரித்து எழுத, அது பலத்த பரபரப்பை உண்டாக்குச்சு. இதைத் தொடர்ந்து நித்திக்கு, ஆண்மைப் பரிசோதனை எல்லாம் நடந்தது. இதனடிப்படையில் இந்த வழக்கில், கடந்த ஜூன் மாதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஏ1 குற்றவாளியாக நித்தியானந்தாவும், ஏ 2 குற்றவாளியாக கோபால் ஷீலம் ரெட்டியும், ஏ 3 குற்றவாளியாக சிவ வல்லபனேனியும் குறிப்பிடப்பட்டிருந்தாங்க. ஏற்கனவே ஏ2, ஏ3 அக்யூஸ்ட்டுகள் தலைமறைவான நிலையில், தன்னைக் கைது செய்யக் கூடாதுன்னு நித்தி, கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினார். செப்டம்பர் 17-ந் தேதிவரை அவரைக் கைது செய்ய நீதிமன்றம் வாய்மொழியா தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. 16-ந் தேதி நித்தி தனது ஆசிரம சேனலில் லைவ்வாக பக்தர்களுக்கு ஆசி தருவார்ன்னு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று அவர் ஆசிரமத்தில் இல்லாததால், ஏற்கனவே பதிவான அவரது காட்சிகளை ஒளிபரப்பி, சமாளிச்சாங்க. நித்தியை அவரது நெருங்கிய வட்டாரத்தாலேயே தொடர்புகொள்ள முடியலையாம். ஆசிரமத் தரப்பிற்கே தெரியாமல் நித்தி அமெரிக்காவுக்கு எஸ்கேப் ஆகியிருக்கலாம்னு நினைக்கிற அவரோட சீடர்களும் பக்தர்களும் அவரை வலை வீசி தேடிக்கிட்டிருக்காங்க.''

""ஆசிரம சேனல்ல நித்தி தரிசனம் தராதது பரபரப்பாயிடிச்சி.. டி.வி. சேனலில் இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டி பரபரப்பாகியிருக்கே.''…’’

""உண்மைதாங்க தலைவரே, ஊடகங்களில் ராஜபக்ஷேவின் பேட்டியை ஒளிபரப்பினால், 2009 முள்ளிவாய்க்கால் கொடூரம் தமிழக மக்களுக்கு நினைவில் வருவதோடு, அப்ப ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீதும் தி.மு.க. மீதும் மக்களுக்கு மீண்டும் தேர்தல் நேரத்தில் வெறுப்பு வரும்ன்னு கணக்குப் போட்ட, பா.ஜ.க. தலைமை, பிரதமர் அலுவலகம் மூலம், தமிழக rajapakseஊடகங்களைத் தொடர்புகொண்டு, பக்ஷே பேட்டியை ஒளிபரப்ப வலியுறுத்தியிருக்கு. அதில் ஒரு க்ளிக்தான் ராஜபக்ஷே கொடுத்த பேட்டி. அண்மையில் பிரதமர் மோடியை தமிழக ஊடகவியலாளர்கள் சந்தித்துவிட்டு வந்தபின், தமிழ் ஊடகங்கள் மீது பிரதமர் அலுவலகம் ஸ்பெஷல் அக்கறை காட்டுதாம். 2019 எம்.பி. தேர்தலுக்கு முன்னாடி, தமிழ்நாடு உள்பட எங்கெல்லாம் வீக்கா இருக்காங்களோ அங்கெல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமான செய்திகளைப் பரப்பும் முயற்சிகளும் டெல்லியால் ஜரூராக முடுக்கப்பட்டிருக்குதாம்.''’

""தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு தேர்தல் கூட்டணி வைப்பது தொடர்பாக பிரதமர் மோடி ஊசலாட்டத்தில் இருக்காருன்னும் தகவல் வருதே?''’

""அதுக்குக் காரணம் இருக்குங்க தலைவரே. அ.தி.மு.க. கூட்டணிபற்றி முடிவெடுக்க அருண்ஜெட்லி தலைமையில் ஒரு குழுவும் நிதின் கட்கரி தலைமையிலான ஒரு குழுவும் டீப்பா அலசியிருக்கு. நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வோடு நாம் கூட்டணி வைக்கலாம்ன்னு அருண் ஜெட்லி டீம் சொல்ல, நிதின் தலைமையிலான டீமோ, அ.தி.மு.க.வுக்கு கூட்டம் கூடுறது இல்லை. பழைய செல்வாக்கும் இல்லை. தினகரனின் அ.ம.மு.க.வுக்குதான் அதிக கூட்டம் கூடுதுன்னு உளவுத்துறை ரிப்போர்ட் சொல்லுது. அதனால் எடப்பாடிக்கு தினகரனே பெட்டர்ன்னு பிரதமர் மோடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கு. இதனால் மோடி இந்த விசயத்தில் என்ன முடிவெடுக்குறதுன்னு ஊசலாட்டத்தில் இருக்கார். அதேபோல் இன்னொரு பக்கம், எடப்பாடி சசியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கிட்டிருக்க, தினகரன் மட்டும் ஒதுங்கினார்ன்னா, சசிகலா தலைமையையே ஏத்துக்கலாம்னு அமைச்சர்கள் மத்தியிலும் ஆலோசனைகள் போய்க்கிட்டிருக்கு.''’’

""கூட்டணி பற்றி பா.ஜ.க.வில் குழப்பம் இருக்கிறது போலவே, தி.மு.க. காங்கிரஸ் உறவிலும் சலசலப்பு தெரியுதே?''’

""தலைவரே.. விழுப்புரத்தில் நடந்த முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுனப்ப, அ.தி.மு.க. அரசை வெளுத்த மாதிரியே, பா.ஜ.க.வையும் போட்டுத் தாக்குனாரு. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படணும்னா காங்கிரஸ் உள்பட எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வுக்கு எதிரா தெளிவான வியூகம் வகுக்கணும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. தங்களோடு பெருசா ஒத்துழைப்பதில்லைன்னு காங்கிரஸ் சைடில் அதிருப்தி இருக்கு.''

raghul

""பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான காங்கிரசின் பாரத் பந்தை தி.மு.க. ஆதரிச்சும்கூட முழு ஒத்துழைப்பு தரலைங்கிறது பற்றி நாம ஏற்கனவே பேசியிருந்தது ஞாபகமிருக்கும். தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர்களான முகுல் வாஷ்னிக், சஞ்சய் ரெட்டி ஆகியோரிடம் தமிழகக் கூட்டணி நிலவரம் குறித்து அண்மையில் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருக்கார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு 5 சீட்வரைதான் தரமுடியும்ங்கிற நிலையை தி.மு.க. எடுக்குது. இது கூட்டணியில் நெருக்கடியை உண்டாக்குதுன்னு சொல்ல, அதிர்ந்துபோன ராகுல், இது குறித்து ப.சி. குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட சீனியர்களிடம் விரைவில் விவாதிக்கப் போறாராம். ஒரு பக்கம் அ.தி.மு.க., பா.ஜ.க., ரஜினி, பா.ம.க.ன்னு கூட்டணிக் கணக்கு ஓடுது. காங்கிரஸ் தரப்பில் டி.டி.வி.யுடன் நெருக்கமானவங்க இருக்காங்க. ஓட்டுகள் சிதறாமல் இருக்கணும்னா இது எல்லாத்தையும் யோசிச்சுப் பார்த்துதானே தி.மு.க. காய் நகர்த்தணும்னு அரசியலை உன்னிப்பா கவனிக்கிறவங்க சொல்றாங்க.''’

""சரிப்பா தி.மு.க.வின் புதிய பொருளாளரா துரைமுருகன் ஆனதால், அவர்கிட்டே இருந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் பதவி மற்றொரு சீனியரான டி.ஆர்.பாலுவுக்குத் தரப்பட்டிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் குறிவச்சிருக்காங்கன்னு நக்கீரன் ஏற்கனவே சொல்லியிருந்தது. லிஸ்ட்டில் முதல் ஆளாக இருந்தவர் முக்குலத்தோர் சமூகத்தவரான டி.ஆர்.பாலு. அவரை முப்பெரும் விழாவுக்கு முதல்நாள் முதன்மைச் செயலாளரா நியமிச்சிட்டாரு ஸ்டாலின். அதேபோல் ஏற்கனவே தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரா இருக்குற ஐ.பெரியசாமியும், மா.செ.க்களில் 13 பேரும் முக்குலத்தோர் சமூகம்தான்.''

""ஓ...''…

rajini

""இன்னொரு தகவல் சொல்றேங்க தலைவரே.. தூத்துக்குடி மாவட்ட குலசேகரம்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுகணைத்தளம் அமைக்கணும்னு தி.மு.க., கனிமொழி, பா.ஜ.க., தமிழிசை இவர்களோடு தென்மாவட்ட நாடார் சமூக அமைப்பினர்னு பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், மத்திய அரசு அதை ஓ.கே. செய்திருக்கு. அதோட, அதற்கான இடத்தைத் தேர்வுசெய்ய, மத்திய பாதுகாப்புத் துறையும் களத்தில் இறங்கியிருக்கு. ஏவுகணைத் தளம் அமைந்தால், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருகும், தொழில் வளர்ச்சி உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுது. அது அரசியல் ரீதியான செல்வாக்கா மாறும்னு பா.ஜ.க.வும், தி.மு.க.வில் கனிமொழித் தரப்பும் தனித்தனியா கணக்கு போடுது.''

""தெற்கே நாடார் சமூக இளைஞர்களுக்கு உற்சாக செய்தின்னா, வடக்கே வன்னியர் சமூக மக்களை மகிழ வைக்கும் வகையில் டாக்டர் ராமதாசு ஒரு சிலை திறப்பு விழாவை நடத்தியிருக்காரு. வன்னியர் அறக்கட்டளை சார்பில் ‘"கல்விக் கோயில்'‘ என்கிற பெயரில் திண்டிவனம் பக்கத்தில் உள்ள கோனேரிபாளையத்தில் ஒரு சட்டப் பல்கலைக் கழகம் இயங்கிவருது. இது அமைவதற்காக அதிகம் உழைச்சவரு காடுவெட்டி குரு. அவர் மறைவு வன்னிய சமூகத்துக்கு பெரிய இழப்பா உள்ள நிலையில், போன 16-ந் தேதி அந்த கல்விக் கோயில் வளாகத்துக்கு காடுவெட்டி குருவின் பெயரை வைத்து, குருவின் சிலையையும் ராமதாசு திறந்து வச்சாரு.''’

""நான் ஒரு தகவல் சொல்றேன்.. ரஜினியோட புதுப் படம் "பேட்ட', மதுரை பாணி கதையம்சம் கொண்டது. பெரும்பாலான மதுரை காட்சிகளை சென்னையிலேயே ஸ்டுடியோவில் செட் போட்டு எடுத்துக்கிட்டிருக்காங்க. சில காட்சிகளாவது நேரடியா மதுரை வீதிகளில் ரஜினி கலக்குற மாதிரி இருக்கணும்னு டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் எதிர்பார்த்திருக்காரு. ரஜினிகிட்ட இதைப்பற்றி சொல்ல, மதுரைன்னதும் ரஜினி யோசிச்சாராம். அங்கே போனால் அழகிரியும் அவரோட ஆட்களும் சந்திக்கணும்பாங்க. சந்திச்சாலும் சந்திக்காட்டாலும் அது அரசியல் ஏரியாவில் சேட்டையாயிடும். அதனால மதுரை "பேட்ட' காட்சிகளை லக்னோ பக்கத்தில் இருக்கிற ஊரில் எடுத்துக்கலாம்னு உஷாரா சொல்லிட்டாராம் ரஜினி.''’’

_________________

இறுதிச்சுற்று

திருப்பரங்குன்றம் சிக்கல்!

"ஜெ. அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸின் விண்ணப்ப படிவத்தில் இருந்த ஜெ.வின் கைநாட்டு, அவருடையது அல்ல, எனவே திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றிக்கு தடை விதிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் தி.மு.க. மருத்துவரணி துணைச் செயலாளர் சரவணன். வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில்தான், எம்.எல்.ஏ. போஸ் இயற்கை எய்தினார். இந்நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் செப்.04-ஆம் தேதி ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார் சரவணன். இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான தமிழ்நாடு அரசு கெஜட்டில் ஒரு அறிவிப்பு வெளியானது. "எம்.எல்.ஏ. போஸ் மரணமடைந்துவிட்ட நிலையில், அவரது தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கை போஸ் இடத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்'’ என்பது தான் அந்த அறிவிப்பு. போஸ் தரப்பில் யாரேனும் மனு தாக்கல் செய்தால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை, திருப்பரங்குன்றம் தொகுதிக்கு தேர்தல் நடத்தக் கூடாது என ஸ்டே வாங்கலாமா என ஆலோசித்து வருகிறது டாக்டர் சரவணன் தரப்பு. v -ஈ.பா.பரமேஷ்

படம்: குமரேஷ்

nkn210918
இதையும் படியுங்கள்
Subscribe