"ஹலோ தலைவரே, ராஜ்யசபா தேர்தல்ல, தனக்கான 3 சீட்டிற்கு நான்காவது வேட்பாளரையும் தி.மு.க. வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தது பரபரப்பை உண்டாக்கிடிச்சே...''’

""ஆமாம்பா, 3 சீட்டுகளில் ஒன்றை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒதுக்கியது தி.மு.க.! அவர் மீது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தேசத்துரோக வழக்கில் இப்ப தண்டனைத் தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஜாமீனும் கிடைச்சிடிச்சி. இதனால வைகோவோட ராஜ்யசபா வேட்புமனுவுக்கு ஆபத்தில்லைன்னாலும், ஒரு செக்யூரிட்டிக்காக தி.மு.க. சார்பில் நாலாவது மனுதாக்கல் செய்யப்பட, அது பலவித யூகங்களை உருவாக்கிடிச்சி.’''

vv

Advertisment

""ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் அன்றைய மத்திய ஐ.மு.கூ. அரசு நடந்து கொண்ட விதம் பற்றி வைகோ குற்றம்சாட்டி எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில், புலிகளுக்கு ஆதரவா பேசியது தொடர்பாதான் தேச விரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது. வைகோ இந்த வழக்கை துணிச்சலா எதிர்கொண்டார். ஈழத்தமிழர் பிரச்சினையில் எப்போதும் உறுதியா இருப்பவர் வைகோ. புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்னு நாடாளுமன்றத்தில் முழங்கியவர். அதையே திருமங்கலம் மேடை யில் பேசியதற்காக இரண் டாண்டுகாலம் பொடா சிறையில் இருந்தவர். அப்போதும் தன் நிலையை மாற்றிக் கொள்ளாத வைகோ, இன்றுவரை ஈழப் பிரச்சினையில் புலிப்பாய்ச்ச லோடு செயல்படுகிறார். அதனால்தான், தேசத்துரோக வழக்கில் தண்டனை கிடைத் தாலும் கவலைப்படாமல், மனு தாக்கல் செய்தார்.''

""அப்புறம் எதற்கு நான்காவது மனுவை தி.மு.க. வக்கீல் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்தாரு?''

""வைகோவுக்கு கொடுக்கப் பட்ட சிறைத் தண்டனையை சுட்டிக்காட்டி, சட்டப் பேரவை செயலாளரும் ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான சீனிவாசன், மாநில தேர்தல் அதிகாரியான சத்யப்பிரதா சாகுவிடம் ஆலோசிச்சார். உடனே சாகு, இந்தியத் தேர்தல் ஆணையத் துக்கு ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருக்கார். சட்டச் சிக்கலை உருவாக்குறாங்களோங்கிற முன் னெச்சரிக்கையோடுதான், வைகோ கேட்டுக்கொண்டபடி தி.மு.க. சார்பில் என்.ஆர்.இளங்கோ மனுத்தாக்கல் செய்தாரு.''’

Advertisment

""வைகோவே, எனக்கு சட்டச் சிக்கல் எதுவும் இல்லை. அதனால் நான் நாடாளுமன் றத்துக்குப் போவேன்னு சொல்லி யிருக்காரே?''

""ஆமாங்க தலைவரே, வைகோவின் வேட்புமனு ஏற்கப்படும் நிலையில் தி.மு.க.வின் நான்காவது வேட்பாளரின் மனு வாபஸ் பெறப்படும். ஆனாலும், இந்த நான்காவது வேட்புமனுவால் ராஜ்யசபா தேர்தலில் போட்டி உண்டாகி, பா.ம.க. அன்புமணிக்கு சிக்கல் உண்டாகுமோன்னு ஒரு பதட்டம் உருவானது. வைகோவை தி.மு.க. புறக்கணிக்தோங்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளிப்பட்டன. போட்டி ஏற்பட்டால், அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் ஓட்டுக்களை எந்தப் பக்கம் போடுவாங்க, யாரை ஜெயிக்க வைப்பாங்கன்னு பரபரப்பு ஏற்பட்டது.''’

aa

""அ.தி.முக. தரப்பில் ராஜ்யசபா சீட்டுக்கு பலத்த போட்டி இருந்த நிலையில், எதிர்பாராத புள்ளிகளுக்கு சீட் கொடுக்கப்பட்டிருக்கே?''

""ஆமாங்க தலைவரே, முன்னாள் மந்திரி முகமதுஜானும் மேட்டூர் சந்திரசேகரும் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா வேட்பாளர்களா அறிவிக்கப்பட்டு, அவங்க வேட்புமனுக்களையும் தாக்கல் செய்துட்டாங்க. ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிப்படி உட்கட்சி எதிர்ப்பையும் மீறி அ.தி.மு.க தனது ஒரு ராஜ்யசபா சீட்டை பா.ம.க.வுக்கு ஒதுக்கப் போவுதுன்னு நாம் முன்னதாகவே பேசியிருக்கோம். அதன்படிதான் நடந்திருக்கு. இன்னொரு விசயம் என்னன்னா, தி.மு.க., கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த வழக்கறி ஞர் வில்சனை ராஜ்யசபா வேட்பாளராக்கிடிச்சி. அங்கே இந்த முறை முஸ்லிம் பிரதிநிதி இல்லை. அதை அ.தி.மு.க தரப்பில் ஈடுகட்ட, அன்வர் ராஜாவுக்கு வாய்ப்பளிக்கலாம்ன்னு ஓ.பி.எஸ். சொல்லியிருக்கார். எடப்பாடியோ, அவர் வேண்டாம். தமிழ்மகன் உசேனுக்கு வாய்ப்பளிக்க லாம்ன்னு சொல்லியிருக்காரு. சீனியர் அமைச்சர்களோ, இந்த ரெண்டு பேருமே வேணாம். இதுவரை நாடாளுமன்றம் போகாத ஒரு முஸ்லிம் பிரமுகருக்கு வாய்ப்பு கொடுப்போம்ன்னு சொன்னாங்க. எடப்பாடியோ, முன்னாள் அமைச்சர் முகமது ஜானை ராஜ்யசபாவுக்கு அனுப்புவோமேன்னு சொல்ல, அதுக்கு எல்லோரும் தலையாட்டிட்டாங்களாம். முகமதுஜான், சமீபத்தில் முதல்வர் எடப்பாடியை வெயிட்டா கவனிச்சார்ன்னு அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே பேச்சு அடிபடுது. இதேபோல் இன்னொரு சீட்டில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்தவரான மேட்டூர் சந்திரசேகரனை ராஜ்யசபாவுக்கு அனுப்பு வோம்ன்னு, தன் அமைச்சரவை சகாக்களிடம் எடப்பாடி ஓகே. வாங்கினாராம். எடப்பாடிக்கு பர்சனல் உதவிகள் பலவற்றையும் செய்பவர் சந்திரசேகரன் என்பதால் அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது.''’

""மேட்டூர் சந்திரசேகருக்கு சீட் கொடுத்த எடப்பாடி மேலே அதே சேலம் மாவட்டத்திலேயே அதிருப்தி வெளிப்படுதாமே?''’

rr""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடியின் வலது கரம்போல் செயல்படும் சேலம் இளங் கோவன், அவரது டெல்லி தொடர்புகளையும் கவனித்துக்கொள்பவர். அதனால் அவர் தனக்கு ராஜ்யசபா பதவி கிடைக்கும்ன்னு பெரிதும் நம்பியிருந்தாராம். ஆனால், பழம் நழுவி சந்திரசேகர் மடியில் போய் விழுந்து விட்டதை ஜீரணிக்கமுடியாத இளங்கோவன், எடப்பாடிக்கு எதிராக எரிமலையாய் குமுறி வெடித்துக்கொண்டிருக்கிறார். அவர் தொடங்கிவைத்த கோப நெருப்பு, வாய்ப்பு கிடைக்காத முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரையும் கொதிக்க வச்சிருக்கு.''’

""பா.ம.க.வில் அந்தப் பிரச்சினையில்லையே.. ஒரே செலக்ஷன் அன்புமணிதான்..''’’

""அங்கேயும் சில குரல்கள் கேட்டிருக்கு. தாமரை இலைத் தண்ணீர் போல் அ.தி. மு.க.வோடு ஏற்படுத்திக்கொண்ட தேர்தல் கூட்டணியால் உண்டான அதிருப்தியே இன்னும் கட்சித் தொண்டர்களிடம் குறைய வில்லை. இதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் கவனத்துக்குக் கொண்டுபோன, பா.ம.க. ஆதரவு உயர் அதிகாரிகள் சிலர், மக்களிடமும் கட்சியினரிடமும் பா.ம.க. மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை குறைக்க முயற்சி செய்யுங்கள். பா.ம.க.வுக்குக் கிடைக்கும் பதவியும் அதிகாரமும் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கே போய்ச் சேர்வதை பா.ம.க.வின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் கூட ரசிக்கவில்லை. அதனால் உங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவருக்கு ராஜ்யசபா சீட்டைக் கொடுங்கள். குறிப்பாக கட்சித் தலைவரான ஜி.கே.மணியை ராஜ்யசபாவுக்கு அனுப்புங்கன்னு ஆலோசனை செய்தார்களாம். இதைக் கேட்ட ராமதாஸ், நானும் அதைத்தான் செய்ய நினைக்கிறேன்னு சொல்லியிருக்கார். இந்தத் தகவல் ஜி.கே.மணியின் காதுக்குப் போக, அவரும் டெல்லி போகும் மூடுக்கு வந்துவிட்டாராம். கடைசியில் குடும்பத்தினரும் அன்புமணியும் கொடுத்த நெருக்கடியால், அன்புமணியையே ராஜ்யசபா வேட்பாளராக்கிவிட்டார் ராமதாஸ். இதனால் ’எங்கள் உழைப்பின் பலன் முழுதையும் தைலாபுரம் குடும்பம் மட்டுமே அனுபவிக்கணுமா? என பா.ம.க.வினர் அதிருப்தியில் இருக்க, டாக்டர் ராமதாஸோ சங்கடத்தில் இருக்கிறாராம். இதையறிந்த பா.ஜ.க. தலைமை, பா.ம.க.வில் நடப்பதைக் கூர்ந்து கவனிக்கிறதாம்.''’

""எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்கும் பா.ஜ.க. கர்நாடக அரசியலிலும் தன் ஆட்டத்தைக் கச்சிதமா நடத்துதே?''’

rrr

""சரியா சொன்னீங்க தலைவரே, காங்கிரஸ் ஆதரவோடு கர்நாடகாவை ஆளும் குமாரசாமி தலைமையிலான மதச் சார்பற்ற ஜனதா தளத்துக்கு 116 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாங்க. அங்கே பா.ஜ.க. நுழைந்து குட்டையைக் குழப்பியதால் 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்திட்டாங்க. இந்த 17 பேரில் 6 பேர், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கணும்னு குரல் கொடுக்க 4 பேர் காங்கிரஸின் இன்னொரு சீனியரான மல்லிகார்ஜுன கார்கே முதல்வராகட்டும்ன்னு கொடி பிடிக்கிறாங்க. இந்த நிலையில் அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர பா.ஜ.க. தீவிரமா இருக்குது. குமாரசாமி தன் பலத்தை நிரூபிக்க, கர்நாடக கவர்னர் வாஜ்பாயி வாலா விரைவில் அழைப்பார். இதன் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறும் நிலை ஏற்பட்டிருக்கு. பதவியில் உட்கார்ந்து ஒரு வருடம் ஆவதற்குள் பரிதாப நிலையில் இருக்கார் குமாரசாமி. காங்கிரஸ் மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்வதால், எம்.எல்.ஏ.க்களைத் தக்கவைக்க அவர்களுக்கு வாரிக்கொடுத்த வாரியப் பதவிகளும் அள்ளிக் கொடுத்த அன்பளிப்புகளும் இந்த நெருக்கடிக்கு உதவுவது போல் தெரியலை..''’

""மோடியின் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளில் ஒருவரான சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநர் நாகேஸ்வரராவை, மோடி அரசே அதிகாரம் குறைந்த தீயணைப்புத் துறைக்கு மாற்றியிருக்கே?''’

rr

""ஆமாங்க தலைவரே, ஏற்கனவே சி.பி.ஐ.யின் பொறுப்பு இயக்குநரா நாகேஸ்வரராவை மோடி அரசு நியமித்தது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிச்சதால், மோடி அரசு நாகேஸ்வரராவை பழையபடி சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநர் பதவியில உட்காரவச்சிட்டு, துறையின் இயக்குநரா ரிஷிகுமார் சுக்லாவை அமர்த்தியது. தன் சீட்டில் உட்கார்ந்த ரிஷிகுமார் சுக்லா, தேங்கியிருந்த நாகேஸ்வரராவ் மீதான புகார்களை எல்லாம், மோடியின் பார்வைக்கு அனுப்பினார். அதைப் பார்த்து சங்கடமான மோடி, வேறு வழியில்லாமல் நாகேஸ்வரராவை தீயணைப்புத் துறைக்கு அனுப்பிவச்சிட்டார். தனக்கு நெருக்கமான நாகேஸ்வரராவ், பவர் குறைப்புக்கு ஆளானதில் அதிகம் ஷாக்கானவர் எடப்பாடிதானாம். காரணம் குட்கா வழக்கு உள்ளிட்டவற்றில் எடப்பாடியின் மனம் கோணாமல் நடந்துகொண்டவராம் இந்த நாகேஸ்வரராவ்.''’

""எடப்பாடிக்கு அதிர்ச்சிதரும் வகையில் அ.தி.மு.க. தலைமைக் கழக வாசலில் திங்கட்கிழமையன்னைக்கு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செஞ்சிருக்காங்களே?''

rr

""அந்த விவரத்தை நான் சொல்றேன்.… அ.தி.மு.க. தென் சென்னை வடக்கு மாவட்டத் தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் பதவியைப் பிடுங்கிவிட்டு, தனக்கு நெருக்கமான நபர்களுக்குப் பதவிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறாராம் தி.நகர் எம்.எல்.ஏ.வான சத்யா. குறிப்பா 53 வட்டச் செயலாளர்களில் 43 பேரை அவர் மாற்றிவிட்டாராம். கட்சியில் பதவிகளைப் போட கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழு இருந்தும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் தன் விருப்பப்படி புகுந்து விளையாடறாராம் சத்யா. இதை எடப்பாடி கவனத்துக்குக் கொண்டுபோயும் அவர் கண்டுக்கலை. இதனால் கோபமான அ.தி.மு.க. வினர், எடப்பாடி எப்படி நடவடிக்கை எடுப் பார்? அவருக்கு ஈ.சி.ஆரில் பங்களா கட்டிக் கொடுத்த சத்யாவை அவர் எப்படி தட்டிக் கேட்பார்ன்னு கோபக்குரல் எழுப்பிய படியே கட்சியின் தலைமைக் கழகத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டு முற்றுகை யிட்டாங்க. இது எடப்பாடியை அதிர வச்சிருக்கு.''’’