"ஹலோ தலைவரே, தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து தலை மைச் செயலகம் பரபரப்பா இருக்குது. அனைத்துக் கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டம், அதிகாரிகளுடன் ஆலோசனை, தொழில்துறை யினருடன் கலந்தாய்வு, தன்னார்வலர்களுக்கு அழைப்புன்னு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதிய வியூகங்களோடு அணுகு முறைகள் மேற்கொள்ளப்படுதுன்னு அங்குள்ளவங்களே சொல்றாங்க.''”
"கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகிற மாதிரி, வெளி மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யத் தொடங்கி யிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்.''”
"ஆமாங்க தலைவரே.. அவரைப் பொறுத்த வரை, கொரோனாவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரணும்னு, இரவு பகல் பாராமல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள்ல இறங்கறார். ஆனாலும், தமிழகத்தின் கொரோனாப் பரவலின் அளவு ஒரு நாளைக்கு 33 ஆயிரத்தை கடக்குது. அதே போல், தினசரி ஏற்படும் மரண எண்ணிக்கையும் 350 -ஐ தாண்டுது. இந்த ரிப்போர்ட் மத்திய அரசை கவலைப்படுத்தி கோபப்பட வைத்திருக்கு தாம். இப்படி ஒரு நிலை ஏற்பட மேற்சொன்ன இரண்டு துறைகளின் மெத்தனம்தான் காரணம்ன்னு மத்திய அரசு கருதுது''”
"எந்தெந்த துறை?''”
"கடந்த 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்ட நிலையிலும், அதில் தமிழக காவல்துறை போதிய கவனம் செலுத்தலை. அதனால் எல்லா இடங்களிலும் மக்கள் ரொம்பவும் சுதந்திரமாகப் போய் வருவதோடு, கடை கண்ணிகளையும் நெரிசலால் திணற வைக்கிறாங்க. அதனால் தொற்றின் வேகம் குறைவதற்கு பதிலா அதிக மாகிவிட்டதுன்னு அரசுத் தரப்பிலேயே சொல்றாங்க, அதேபோல, தீவிரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இ-பாஸ் போன்றவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்து குழப்பங்களை உருவாக்கிட்டாங்க. இதனால விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறங்களுக்கும் பெரும் நெருக்கடியாயிடிச்சி.''”
"உண்மைதாம்ப்பா.. நானும் நேரடியா அனு பவிச்சேன்.''”
"ஊரடங்கை மீறுகிறவர்களை காவல்துறை எச்சரிக்குது. சில இடங்களில் அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் போடப்படுது. ஆனாலும், போலீஸின் முழுமையான கண்காணிப்பு இல்லாததால், மக்களிடம் பயம் இல்லாமல் போயிடிச்சி. இதை ஊடகங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், தன்னார்வலர்களும் கவலை யோடு சுட்டிக்காட்டறாங்க. இதே நிலை நீடித்தால், கொரோனாவின
"ஹலோ தலைவரே, தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்து தலை மைச் செயலகம் பரபரப்பா இருக்குது. அனைத்துக் கட்சி சட்டமன்றத் தலைவர்கள் கூட்டம், அதிகாரிகளுடன் ஆலோசனை, தொழில்துறை யினருடன் கலந்தாய்வு, தன்னார்வலர்களுக்கு அழைப்புன்னு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் புதிய வியூகங்களோடு அணுகு முறைகள் மேற்கொள்ளப்படுதுன்னு அங்குள்ளவங்களே சொல்றாங்க.''”
"கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகிற மாதிரி, வெளி மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யத் தொடங்கி யிருக்காரே முதல்வர் மு.க.ஸ்டாலின்.''”
"ஆமாங்க தலைவரே.. அவரைப் பொறுத்த வரை, கொரோனாவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரணும்னு, இரவு பகல் பாராமல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகள்ல இறங்கறார். ஆனாலும், தமிழகத்தின் கொரோனாப் பரவலின் அளவு ஒரு நாளைக்கு 33 ஆயிரத்தை கடக்குது. அதே போல், தினசரி ஏற்படும் மரண எண்ணிக்கையும் 350 -ஐ தாண்டுது. இந்த ரிப்போர்ட் மத்திய அரசை கவலைப்படுத்தி கோபப்பட வைத்திருக்கு தாம். இப்படி ஒரு நிலை ஏற்பட மேற்சொன்ன இரண்டு துறைகளின் மெத்தனம்தான் காரணம்ன்னு மத்திய அரசு கருதுது''”
"எந்தெந்த துறை?''”
"கடந்த 10 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்ட நிலையிலும், அதில் தமிழக காவல்துறை போதிய கவனம் செலுத்தலை. அதனால் எல்லா இடங்களிலும் மக்கள் ரொம்பவும் சுதந்திரமாகப் போய் வருவதோடு, கடை கண்ணிகளையும் நெரிசலால் திணற வைக்கிறாங்க. அதனால் தொற்றின் வேகம் குறைவதற்கு பதிலா அதிக மாகிவிட்டதுன்னு அரசுத் தரப்பிலேயே சொல்றாங்க, அதேபோல, தீவிரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இ-பாஸ் போன்றவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்து குழப்பங்களை உருவாக்கிட்டாங்க. இதனால விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறங்களுக்கும் பெரும் நெருக்கடியாயிடிச்சி.''”
"உண்மைதாம்ப்பா.. நானும் நேரடியா அனு பவிச்சேன்.''”
"ஊரடங்கை மீறுகிறவர்களை காவல்துறை எச்சரிக்குது. சில இடங்களில் அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் போடப்படுது. ஆனாலும், போலீஸின் முழுமையான கண்காணிப்பு இல்லாததால், மக்களிடம் பயம் இல்லாமல் போயிடிச்சி. இதை ஊடகங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும், தன்னார்வலர்களும் கவலை யோடு சுட்டிக்காட்டறாங்க. இதே நிலை நீடித்தால், கொரோனாவின் கோர தாண்டவம் இன்னும் பல மடங்காகும். அது பேரழிவை உண்டாக்கும்னு மருத்துவ நிபுணர்களே எச்சரிக்கிறாங்க.''”
"சரிப்பா, மக்கள் நல்வாழ்வுத்துறை வழக்கம் போல் ஆக்சிஜன் வரத்தை அதிகரித்தும், மருந்துத் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுத்தும், மருத் துவ உபகரணங்களை அதிகமாக ஏற்பாடு செய்தும் விறுவிறுப்பா இயங்கிக்கிட்டுதானே இருக்குது.''”
"அதெல்லாம் சரிதாங்க தலைவரே, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு., நேரம்காலம் பார்க்காமல் பம்பரமா களத்தில் சுழன்றுக் கிட்டுதான் இருக்கார். அவருக்கேற்ற வகையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஆக்ஸிஜன் உற்பத்தி -சப்ளைக்கான கருவிகளில் முழுமையா அக்கறை செலுத்துறாரு. மதுரையில் ஆக்சிஜன் சப்ளையில் பிரச்சினை வந்தப்ப, எம்.பி. வெங்கடேசனுடன் ஸ்பாட்டுக்கு சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரே முன்னின்று சரிப்படுத்தினார். ஆனால், தினசரி 3 லட்சம் கொரோனா சோதனைகளை நடத்தணும்னு டெல்லியால் அறிவுறுத்தப்பட்டிருக்கு. ஆனால் 1.5 லட்சம் பரிசோதனைகள்தான் இங்கே நடத்தப் படுதாம். இந்த பரிசோதனையிலேயே தினசரித் தொற்றாளர்கள்னு 33 ஆயிரம் பேரைக் கண்டுபிடிக்கும் மருத்துவத்துறை அதிகாரிகள், பரி சோதனையின் அளவை 3 லட்சம்னு ஆக்கி யிருந்தால், தினசரி 66 ஆயிரம் பேரை கண்டு பிடிக்கலாம்னு சொல்லப்படுது. ஆனால் மத்திய அரசோ, தமிழகத்தின் தினசரித் தொற்று 1 லட்சம் வரை இருக்கும்னு கணக்குப் போடுதாம்.''”
"பதற வைக்குதே...''”
"அதேபோல், அதிகாரிகள் சரியான புள்ளிவிபரங்களை அரசுக்குச் சொல்வதில்லை என்றும் சொல்கிறார்கள்.சென்னை உள்ளிட்ட ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் 10 ஆயிரம் படுக்கைகள், 12 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்குன்னு, துறை அமைச்சருக்கு தவறான புள்ளிவிபரங்களைக் கொடுக்கறாங்க. அதை அவர் அறிவிச்சிக்கிட்டு இருக்கும் போதே, அரசு மருத்துமனை வாசல்களில் பெட் கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே கொரோனா நோயாளிகள் உயிருக்குப் போராடறதைப் பார்க்க முடியுது. மருத்துவத்துறையில் முந்தைய எடப்பாடி அரசு நியமித்த அதிகாரிகளின் செட்டப், மாற்றப்படாமல் அப்படியே தொடர் வதால்தான் இந்த மாதிரியான நிலைமை என்கிறார்கள். தற்போது வார் ரூம் அமைக்கப் பட்டிருப்பதால், நிலைமை சீராகும்னு எதிர்பார்க்கப்பட்டது.''
"அதேபோல் தி,மு.க.வுக்கு எதிராகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளும் இப்போது முக்கியத்துவம் பெற்றிருப்பது குறித்து, நாம், கடந்த ராங்கால் பகுதியில் பேசிக்கிட்டது முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குப் போக, இது குறித்தெல்லாம் அவர் தலைமைச்செயலாளர் இறையன்புவிடம் கவலை தெரிவித்தாராம்பா. அதனால் மாற்றங்கள் இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது.''”
"ஆமாங்க தலைவரே, சமீபத்தில் 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டாங்க. இவர்களில் தர்மபுரி கலெக்டர் கார்த்திகாவின் மாற்றம், அதிகாரிகள் தரப்பால் பெரிதாக விமர்சிக்கப் படுகிறது. கார்த்திகா, அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை, தனக்கு தெரிந்த தனிநபர் ஒருவருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். அதற்கான தொகையை அந்த நபர், வங்கி ஒன்றில் கடனாகப் பெற முயன்ற போது, அவருக்கு சூரிட்டி இல்லா மல் கடன் கொடுக்கும்படியும் அவர் வலியுறுத்தி னாராம். இது தொடர்பான புகார், தலைமைச் செயலகம் வரை போன நிலையில்தான், கார்த்திகா மாற்றப்பட்டிருக்கிறார். இப்போது அவருக்குப் பதில், திருச்சி கலெக்டராக இருந்த திவ்யதர்ஷினி தர்மபுரியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.''”
"நேர்மையான கெடுபிடி அதிகாரிகள் என்று பெயரெடுத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரும், முக்கியமான துறைகளுக்கு நியமிக்கப் பட்டு இருக்காங்களேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, லஞ்ச ஒழிப்புத் துறையான விஜிலென்சுக்கு இயக்குநராக, அமித்ஷாவைக் கைது செய்த கந்தசாமி ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டது போலவே, இணை இயக்குநரா வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட் டிருக்கிறார். இவர், மாஜி ’சுகாதாரம்’ விஜய பாஸ்கரின் வண்டவாளம் முழுவதையும் அறிந்த வராம். அதனால் பதவி ஏற்றவுடனே குல்கர்னி, விஜயபாஸ்கர் தொடர்பான கோப்புகளைத்தான் தன் மேஜைக்குக் கொண்டுவரச் செய்தாராம். அதேபோல், எடப்பாடி மற்றும் ஓ.பி. எஸ்.சால் பழிவாங்கப்பட்டு ஆவணக் காப்பகத்துக்கு அனுப் பப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி யான ராஜேஷ் லக்கானி, இப்போது பவர்ஃபுல்லான மின்வாரியத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்படிப்பட்ட அதிகாரிகள் அதிரடி கிளப்புவார்கள்னு எதிர்பார்க்கப்படுது.''”
"தமிழக அரசின் ஆலோ சகராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக்வரதன் ஷெட்டியைக் கொண்டுவரும் முயற்சி நடக்குதே?''”
"கடந்த தி.மு.க. ஆட்சி யில் செல்வாக்காக இருந்த அசோக்வரதன் ஷெட்டி, ஓய் வுக்குப் பின் கனடாவில் செட் டில் ஆகிவிட்டார். முருகன் பெயர் கொண்டவர் உட்பட அவரது ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் இப்போது கோட்டையில் ஆதிக்கம் செலுத்தி வர்றாங்க. அவங்க தான் ஷெட்டியைக் கோட் டைக்குள் கொண்டுவரும் முயற்சியில் இருக்காங்க. ஆனால், ஷெட்டி தமிழகத் திற்கு எப்போது வந்தாலும், அவர்மீதும் அவரது சிஷ்யர் கள் மீதும் உள்ள, பழைய கோப்புகளை தூசிதட்டக் காத்திருக்கிறதாம் சி.பி.ஐ. ஆட்சி மாற்றத்தினாலும் ஓய்வு பெற்று விட்டதாலும் கனடா வில் ஷெட்டி ரிலாக்ஸ் ஆகி விட்டாராம். அதேபோல், மத்திய அரசு பணியில் இருக் கும் தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவ்தாஸ் மீனாவும் தமிழகத்துக்கு வர விரும் புகிறாராம். அவருக்காகவும் மெனக் கெடுகிறாராம் முருகன் பெயர் கொண்ட அந்த அதிகாரி.''”
"ம்... அதிகாரிகள் பற்றிப் பேசியதும் ஒரு செய்தி ஞாபகத்துக்கு வருதுப்பா. போனமுறை நாம பேசுறப்ப, தமிழகத்தின் மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த ஜெயராமன், மறைந்த அ.தி.மு.க. அமைச்சர் துரைக் கண்ணு தொடர்பான பண விவகாரத்தில் எடப்பாடிக்கு உதவியதாகவும், தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வின் பரிவர்த்தனை களுக்கு உறுதுணையாக இருந்த தாகவும் சொன்னோம். அந்தத் தகவல் நம்ம நக்கீரனில் வந்ததும், ஐ,பி.எஸ். அதிகாரியான ஜெயராமன் கடுமையா மறுத்திருக்காரு. தன் மீது சொல் லப்பட்டிருப்பவை எல்லாமே உண்மைக்கு மாறான துன்னு சொல்றாரு.''”
"நான் அடுத்த மேட்டரை சொல்றேங்க தலைவரே.. மகளிர் சுயநிதிக் குழுக்கள், கொரோனா நெருக்கடியால் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிப்பதும் ஸ்டாலின் கவனத் துக்குப் போயிருக்கு. அதனால், குறைந்தபட்சம் 3 மாத கால மாவது தவணை கட்டுவதி லிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கணும்னு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதத் திட்டமிட்டி ருக்காராம். அதே போல், தனது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, இல்லத் தரசிகளுக்கு மாதம் ரூ 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தையும், கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ல் தொடங்கும் எண்ணமும் அவருக்கு இருக்கிறதாம். அதனால் இதுகுறித்த புள்ளி விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களாம்.''
"பிரதமர் மோடிக்கு எதி ராக மத்திய பா.ஜ.க. அமைச் சர்களே குரல் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்களே?''”
"அது பற்றி நான் சொல்றேன்... கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா முழுவதும் மோசமான சூழலில் இருக்கும்போது பிரதமர் மோடி மௌனம் காப்பது, பா.ஜ.க. சீனியர்களையும் ஆர்.எஸ். எஸ். தலைவர்களையும் எரிச்சலடைய வைத்திருக்கிறதாம். இந்தநிலையில், மத்திய நெடுஞ் சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி, கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் தான் இப்படிப் பட்ட நிலை. ஒவ்வொரு மாநிலத்திலும் 10-க்கும் மேற் பட்ட மருந்து தொழிற் சாலைகள் இருக்கும் போது, அவற் றுக்கு தடுப்பூசியைத் தயாரிக்கும் அனுமதியைக் கொடுக்காமல், 2 கம்பெனிகளுக்கு மட்டும் ஆர்டர் கொடுப்பது ஏன்? என்று பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியிருக்கிறார். இது மோடி தரப்பை ஏகத்துக்கும் அதிர வைத்திருக்கிறதாம்.''”
_____________
இறுதிச்சுற்று!
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சி யிலிருந்து வரிசையாக விலகுபவர் களில் லேட்டஸ்ட், அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முரு கானந்தம். திருச்சியில் செய்தியாளர் களை சந்தித்துப் பேசிய அவர், “"கட்சியில் இணைந்தபொழுது எனக் கான சுதந்திரமும், ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாய கம் அற்றுப் போய்விட்டது. கட்சிக் குள் ஜனநாயகம் காணமல் போய் சர்வாதிகாரம் தலைதூக்கி விட்டது. கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை, நமது கட்சி என்பதை மறந்து, அது என்னு டைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.சட்டமன்றத் தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீன மான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணிக் கட்சி களுக்கு ஒதுக்கியதுதான் தோல் வியடையக் காரணம். தோல்வியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பிவிட்டார். மக்கள் நீதி மய்யம் தோல்வி அடைந்ததற்கு முழுகாரணம் கமல்ஹாசன் தான்''’என சரமாரியாகப் போட்டு தாக்கினார்.