Skip to main content

ராங்-கால் : வேலூர் வழியில் அரவக்குறிச்சி! ஆளுங்கட்சி ஸ்கெட்ச்!

""ஹலோ தலைவரே, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை விடுவிப்பது குறித்து ஆளுநரே முடிவெடுப் பாருன்னு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கு.''’

""ஏழுபேர் விடுதலையை எதிர்த்து போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கு. ஆளுநர் மாளிகை வட்டாரம் என்ன சொல்லுது?''’

r""பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை எப்போதுங்கிறதை அற்புதம் அம்மாள் போலவே தமிழர்கள் எல்லோரும் எதிர்பார்த்துக்கிட்டிருக் காங்க. ராஜீவ் காந்தி கொலைங்கிறது சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்ட வழக்கு என்பதால், மத்திய உள்துறையின் கிளியரன்ஸ் இல்லாமல் கவர்னர் விடுவிக்க மாட்டார். மத்திய அரசு மனது வைத்தால்தான் அவர்களின் விடுதலைக்கு மார்க்கம் உண்டு. அக்கறையும் கருணையும் உள்ள மத்திய அரசும் கவர்னரும் கிடைக்கும்போது நடக்கும்னும், அது விரைவில் நடக்கும்னும் 7 பேர் விடுதலைக்காகப் போராடும் அமைப்பினர் எதிர்பார்ப்போடு இருக்காங்க..''’

""மே 19-ல் நடக்க இருக்கும் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. எப்படியாவது ஜெயிக்கணும்னு இங்கிருக்கும் உளவுத்துறை தீவிர அக்கறை காட்டுதாமே?''’

""ஆமாங்க தலைவரே, உளவுத்துறையைத் தமிழக ஆட்சியாளர்கள் தங்களுக்கான எடுபிடித் துறையாத்தான் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஜெ.’ முதல்வராக இருந்த காலத்தில் உளவுத்துறையின் 60% ஆற்றலை, சசிகலாவையும், அவர் உறவினர்களையும், மந்திரிகளையும், மா.செ.க்களையும் கண்காணிக்கவே பயன்படுத்தி னார். 30% ஆற்றலை எதிர்க்கட்சிகளை வேவு பார்க்கவும் மீதமுள்ள 10% ஆற்றலை சட்டம் ஒழுங்கை கவனிக்கவும் பயன்படுத்தினார்ன்னு அந்தத் துறையில் உள்ளவர்களே சொல்றாங்க. அதே பாணியில்தான் முதல்வர் எடப்பாடியும் உளவுத்துறையின் பெரும்பான்மையான ஆற்றலை ஓ.பி.எஸ். உள்ளிட்ட தன் அமைச்சர்களையும் கட்சியினரையும் கண்காணிக்கப் பயன்படுத்தறாராம்.''
bar
""ஜெ. போல எடப்பாடிக்கும் உளவுத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு தர்றாங்களா?''

""எடப்பாடிக்கு மிகவும் ஒத்தாசையா இருந்த உளவுத்துறைத் தலைவரான சத்தியமூர்த்தி, அண்மைக் காலமாக அரசுக்கு எதிரான நிலவரம் இருப்பதாக ரிப்போர்ட்டைத் தொடர்ந்து கொடுத்து வந்தாரு. இதனால் எடப்பாடிக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டி ருக்கு. இதில் அப்செட்டான சத்தியமூர்த்தி லீவு போட்டுட்டுப் போய்ட்டாராம். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி.யின் டி.ஜி.பியான ஜாபர் சேட், அறிவிக்கப்படாத உளவுத்துறைத் தலைவராகவே செயல்படுகிறாராம். அவர் உத்தரவின் பேரில் இடைத் தேர்தலில் உளவுத்துறை, எடப்பாடிக்கு எல்லா வகையிலும் சேவை செஞ்சிக்கிட்டு இருக்குதாம்.''’

""உளவுத்துறையின் விறுவிறுப்பான சேவை, நான்கில் ஒன்றான அரவக்குறிச்சியில் அதிகமா இருக்குன்னு சொல்றாங்களே?''’

""உண்மைதாங்க தலைவரே, நான்கு தொகுதியிலும் எப்படியும் அ.தி.மு.க. ஜெயிச்சே ஆகணும்னு நினைக்கிறார் எடப்பாடி. அதிலும் தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சியில் களமிறங்கிய மாஜி மந்திரி செந்தில் பாலாஜியை வீழ்த்தியே ஆகணும்ன்னு அவர் துடிக்கிறார். இதில் அ.தி. மு.க.வோடு தினகரனின் அ.ம.மு.க.வும் கைகோத் திருக்கு. இரண்டு பேருக்கும் டஃப்பான எதிரியா செந்தில்பாலாஜி இருப்பதால, எப்படியாவது வேலூர் பாணி டெக்னிக்கைப் பயன்படுத்தி தி.மு.க. தரப்பை ரெய்டுக்கு ஆளாக்கி, பணத்தைப் பறிமுதல் செய்யணும்ங்கிறதுதான் அ.தி.மு.க. ஸ்கெட்ச். அ.தி.மு.க. தரப்பு, ஓட்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்துக்கிட்டிருக்க, அதைவிட ஆயிரம் ரூபாயைச் சேர்த்து செந்தில் பாலாஜி தரப்பு வாக்காளர்களை வசியம் பண்ணிக்கிட்டு இருக்கு. அதனால செந்தில் பாலாஜி தரப்பை கண்காணிக்க அங்கே உளவுத்துறை பரபரப்பா இயங்குது. அதிரடி ரெய்டு, பணக்கட்டுகள் பறிமுதல், தேர்தல் ரத்துக்குப் பரிந்துரைன்னு எப்ப வேணும்ன்னாலும் அங்கிருந்து செய்திகள் வந்தாலும் வரலாம்.''’

""இடைத் தேர்தல் தொகுதிகளில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் நேரடி வாக்குசேகரிப்பு, ஆளும்கட்சிப் பிரச்சாரத்தை விட மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு இருக்குன்னு செய்தி வருதே...''
r
""இது பற்றி எடப்பாடியிடம் அ.தி.மு.க. புள்ளிகள் பேசியதோடு, தங்கள் கூட்டணிக் கட்சிகளை, குறிப்பா தே.மு.தி.க.வை பிரச்சாரத்தில் இறக்கணும்னு கேட்டிருக்காங்க. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை விஜயகாந்த் மைத்துனர் சுதீஷைத் தொடர்பு கொண்டிருக்கு. அவர் பிரேமலதாவிடம் பேச, கேப்டனை பக்கத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியிருக்கே. சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைச்சிக்கிட்டுப் போயாகணுமேன்னு தயங்கிருக்காரு. அதைப் பார்த்த விஜயகாந்த், கூட்டணி தர்மப்படி அந்த நான்கு தொகுதிகளுக்கும் போய் பிரச்சாரம் செய்வதுதான் சரி. நான் நல்லாதான் இருக்கேன். நீ போய் பிரச்சாரம் பண்ணுன்னு பிரேமலதாவுக்கு உத்தரவு போட்டாராம். அதனால், தொகுதிக்கு ஒரு நாள் வீதம், மே 13-லிருந்து 4 நாட்கள், தனது அதிரடி பாணித் தேர்தல் பிரச்சாரத்துக்குக் கிளம்பறார் பிரேமலதா.''’

""பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய "பார்' நாகராஜை மடக்கிட் டாங்கன்னு 8ஆம் தேதி பரபரப்பு நிலவுச்சே.''’

""ஆளும்கட்சி அதிகாரப் புள்ளிகளிடம் செல்வாக்கு பெற்ற "பார்' நாகராஜை, லோக்கல் போலீஸ் விசாரிக்காம காப்பாத்திக்கிட்டிருந்தது. மே 8-ந் தேதி காலை 8.30 மணியிலிருந்து அவரைக் காணோம்ன்னு அவர் குடும்பத்தினரும் நண்பர் களும் பரபரப்பா தேடினாங்க. அப்புறம் 11 மணியளவில் அவர் வீட்டுக்கு வந்திருக்காரு. வீட்டுக்கிட்ட உள்ள தியேட்டர் வாசலில் அவர் நின்னுக்கிட்டிருந்தப்ப, அங்கு வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய், 3 மணிநேரம் விசாரிச்சிட்டு, 11 மணிவாக்கில் கொண்டுவந்து விட்டுட்டுப் போயிட்டதா அதிகாரிகள் தரப்பிலிருந்து செய்தி லீக் ஆகுது. ஆனால் பார் நாகராஜோ, நான் என் மாமியார் வீட்ட்டுக்குத்தான் போயிருந்தேன்… வேற மாதிரி கிளப்பி விட்டிருக்காங்கன்னு சொல்றாராம். மாமியார் வீடான்னு பலருக்கும் ஆச்சரியம். பொள்ளாச்சி விவகா ரத்தை சி.பி.ஐ.யாவது சரியா கையாளுமா, அல் லது குற்றவாளிகளை விட்டுட்டு பாலியல் வன் கொடூரத்தை அம்பலப் படுத்தியவங்களை குறி வைக்குமான்னு போகப் போகத்தான் பார்க்கணும்.''’

""ரஜினி கட்சி ஆரம்பிப் பாராங்கிறதையும் போகப் போகத் தான் பார்க்கணும்னு ரசிகர்கள் சொல்றாங் களே..''’’

""டெல்லி வரைக்கும் இந்தப் பேச்சுதான். … காங்கிரஸ் கட்சி சீனியர்களிடம் தமிழக நிலவரம் பற்றி ராகுல் விசாரிச்சிருக்காரு. அப்ப, சட்டமன்றத் தேர்தலுக்குதான் நான் அரசியலுக்கு வருவேன்னு சொன்ன ரஜினி, நடந்துமுடிந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படி தன் மக்கள் மன்றத்தினருக்கு ரகசியமாக உத்தரவு போட்டிருக்கிறார். ரஜினியைப் பொறுத்தவரை அவர் மனதளவில் பா.ஜ.க. ஆதரவாளர்தான்னு சொல்லியிருக்காங்க. எந்த ரியாக்ஷனும் இல்லாமல் அமைதியாகக் கேட்டுக் கிட்டாராம் ராகுல்.''’’

""உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி சம்பந்தப்பட்ட இரண்டு வழக்கு பரபரப்பை உண்டாக்கிடிச்கே..?''’

""ஆமாங்க தலைவரே, ரபேல் ஊழல் தொடர்பான வழக்கில், மோடியை திருடன்னு நீதிபதிகள் சொன்னதா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி சொன்னது சர்ச்சையாகி, பா.ஜ.க.வின் மீனாட்சி லேகி சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. இதற்கு ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வருத்தத்தை ஏற்காமல், அழுத்தமான மன்னிப்பை கேட்கச் சொன்னது சுப்ரீம்கோர்ட், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ராகுல் தெரிவித்தார். ராகுலுக்கு எதிரான இன்னொரு வழக்கில், இங்கிலாந்திலும் அவர் குடியுரிமை பெற்றிருக் கிறார்னும், இரட்டைக் குடியுரிமை பெற்ற அவர் தேர்தலில் போட்டியிட முடியாதுன்னும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தி ருப்பதை காங்கிரஸ் பெரும் வெற்றியாகப் பார்க்குது.''

""தேர்தல் களச் சூழல்களை ராகுல் எப்படி பார்க்குறாரு?''

""கட்சி சீனியர் களோடு தேர்தல் முடிவு கள் குறித்து விவாதித் திருக்கிறார் ராகுல். நாடாளுமன்றத் தேர் தலில் போட்டியிட்ட அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் ஜெயித்தால், அமேதி தொகுதியை ராஜினாமா செய்யப்போவதாகவும், அங்கே தன் சகோதரி பிரியங்கா காந்தியை நிறுத்தலாம்னு இருக் கிறதாகவும் சொல்லியிருக்காரு.''’


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...
 
×