"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம்னு பேச்சு அடிபடுது.''”
"ஆமாம்பா, ஒதுக்கப்பட்ட துறையில் திருப்தி இல்லாத அமைச்சர்களையும், கொடுக்கப்பட்ட துறையில் திருப்தியாகச் செயல்படாத அமைச்சர்களையும் குறிவச்சி, இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்லப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே பவர்ஃபுல் அமைச்சராக இருந்தவர். அவருக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டதை அவரால் ஏத்துக்க முடியலை. அதனால் அவர் அப்செட் மூடிலேயே இருக்கிறார். ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முதல்வர் முழு மூச்சா இருப்பதால, அமைச்சரவை இலாகா மாற்றங்கள் எப்ப இருக்கும்னு உறுதியாகலை.''”
"சரிப்பா, சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்திச்சிப் பேசியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, 5-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவைக் கூட்டம், முன்றே நாளில் முடிந்தது. தி.மு.க. அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையில், ஒன்றிய அரசை நேரடியாகக் குற்றம்சாட்டும் வார்த் தைகள் இல்லாவிட்டாலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஆளுநர் உரையிலேயே இடம் பெறச் செய்திருந்தது ஸ்டாலின் அரசு. அதுபோல இந்திய அளவிலான முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் முதன்மை பெற்றிருப்பது பற்றிய செய்தியும் ஆளுநர் உரையில் இடம்பெற்றி ருந்தது. ஆளுநர் உரை முடிந்ததும், அவரை 10 நிமிடம் சந்திக்க விரும்பினார். இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரி விக்கப்பட்டதால், அவருக்கென ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் அவரை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் துரைமுருகனும் சந்திச்சாங்க. அப்ப, ஆளுந ரிடம் அ
"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடக்கலாம்னு பேச்சு அடிபடுது.''”
"ஆமாம்பா, ஒதுக்கப்பட்ட துறையில் திருப்தி இல்லாத அமைச்சர்களையும், கொடுக்கப்பட்ட துறையில் திருப்தியாகச் செயல்படாத அமைச்சர்களையும் குறிவச்சி, இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு சொல்லப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, கலைஞர் ஆட்சிக் காலத்திலேயே பவர்ஃபுல் அமைச்சராக இருந்தவர். அவருக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டதை அவரால் ஏத்துக்க முடியலை. அதனால் அவர் அப்செட் மூடிலேயே இருக்கிறார். ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதில் முதல்வர் முழு மூச்சா இருப்பதால, அமைச்சரவை இலாகா மாற்றங்கள் எப்ப இருக்கும்னு உறுதியாகலை.''”
"சரிப்பா, சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்திச்சிப் பேசியிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, 5-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப் பேரவைக் கூட்டம், முன்றே நாளில் முடிந்தது. தி.மு.க. அரசு தயாரித்துக் கொடுத்த ஆளுநர் உரையில், ஒன்றிய அரசை நேரடியாகக் குற்றம்சாட்டும் வார்த் தைகள் இல்லாவிட்டாலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை ஆளுநர் உரையிலேயே இடம் பெறச் செய்திருந்தது ஸ்டாலின் அரசு. அதுபோல இந்திய அளவிலான முதல்வர்களில் மு.க.ஸ்டாலின் முதன்மை பெற்றிருப்பது பற்றிய செய்தியும் ஆளுநர் உரையில் இடம்பெற்றி ருந்தது. ஆளுநர் உரை முடிந்ததும், அவரை 10 நிமிடம் சந்திக்க விரும்பினார். இது குறித்து முன்கூட்டியே தகவல் தெரி விக்கப்பட்டதால், அவருக்கென ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் அவரை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் துரைமுருகனும் சந்திச்சாங்க. அப்ப, ஆளுந ரிடம் அவரது உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வர், நீட் தேர்வு விலக்கு குறித்த சட்ட மசோதாவை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண் டும்னு கேட்டுக்கொண் டார்.''”
"ஆளுநரின் ரியாக்ஷன் என்னவாம்?''”
"எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட ஆளுநர், அதற்கு எந்த பதிலையும் சொல்லவில்லையாம். இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, கவர்னர் உரையைக் கண்டித்து வெளி நடப்பு செய்திருந்த அ.தி.மு.க. மாஜிக்களான ஓ.பி.எஸ்.ஸும் வேலுமணியும் கவர்னரை சந்திக்கணும்னு சட்டசபை வளாகத்திலேயே காத்திருந் தாங்க. ஆனால், கவர்னர்- முதல்வர் சந்திப்பு முடிந்ததும், கவர்னர் விறுவிறுன்னு கிளம்பி லிப்ட் அருகே செல்ல, வேகமாக ஓடிவந்த ஓ.பி.எஸ்., தான் கொண்டுவந்த பொக் கேவை கவர்னரிடம் கொடுத்தார். "உங்களிடம் கொஞ்சம் பேசணும்'னு சொல்ல, கவர்னரோ, "ராஜ்பவனுக்கு வந்து பாருங்க'ன்னு லிஃப்ட்டில் ஏறிட்டாராம்.''”
"ம்...''”
"இதையெல்லாம் கேள்விப் பட்ட எடப்பாடி, நம்மிடம் சொல்லாமலே கவர்னரை இவங்க எதுக்குத் தனியாக சந்திக்கணும்னு குழம்பிப்போயிட்டாராம். உடனே அவர் வேலு மணியை தொடர்புகொண்டு இதுபற்றிச் கேட்க, "கவர்னர் உரைக்கு எதிராக வெளிநடப்பு பண்ணிட்டோம் இல்லையா? அதுக்கு அவர் எதேனும் வருத் தப்படலாம்னு நினைச்சிதான், கவர்னரை சந்திக்க விரும்பினார் ஓ.பி.எஸ். என்னையும் அழைத்ததால் போனேன். வேறு எந்த முக்கியத்துவமும் அதில் இல்லை'ன்னு அவரை கூல் படுத்தினாராம் வேலுமணி. ஆனாலும் எடப்படியோ, "சரி, இதை எங்கிட்ட சொன்னால் நானும் இருந்திருப்பேனே'ன்னு சொல்லியிருக்கார்.''”
"மின் சாதனப் பொருள் களுக்கு ஜி.எஸ்.டி வரியை வசூலிப்பதா தி.மு.க. அரசு மீது அ.தி.மு.க. குற்றம்சாட்டுதே?''”
"உண்மையில் இந்த விவ காரத்தில் என்னதான் நடக்கு துன்னு விசாரிச்சோம். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில், 2017-ல் டெல்லியில் கூடியபோது, மின் சேவை கட்டணங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. உண்டுன்னு முடிவெடுத்துச்சாம். அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலை யாம். அதேநேரம், ஜி.எஸ்.டி வசூ லிப்பதை அவர் தள்ளிப் போட்டுக் கிட்டே இருந்தாராம். இந்த நிலையில், நிலுவையில் உள்ள ஜி. எஸ்.டி. வரியை வசூலிங்கன்னு தமிழக மின் வாரியத்துக்கு இப்ப வந்து நெருக்கடி கொடுக்குது ஜி.எஸ்.டி. கவுன்சில். இதனால் தற்போ தைய தி.மு.க. அரசு, அதை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்குதுன்னு மின்வாரிய வட்டாரம் சொல்லுது.''”
"சென்னை காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்ட பின் எப்படி இருக்குது?''”
"சென்னை மாநகர காவல்துறை ஆணைய ரகத்தை, ஆவடி காவல்துறை ஆணையரகம், தாம் பரம் காவல்துறை ஆணையரகம்ன்னு மூன்றாகப் பிரித்து அறிவித்தது தி.மு.க. அரசு. அதன்படி சென்னை காவல்துறை ஆணையராக சங்கர் ஜிவால் இருக்கும் நிலையில், ஆவடி கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோரும், தாம்பரம் கமிஷனராக ரவியும் நியமனம் செய்யப்பட்டாங்க. இந்த காவல்துறை பிரிப்பு தொடர்பான அறிவிப்புகளும் முறைப்படி சட்டமன்றக் கூட்டத்தில் வைக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த மூன்று மாநகர எல்லைக்கான ஜே.சி. ஏ.சி. உளவுத்துறை அதிகாரிகள் பற்றிய நியமனங்கள், உள்துறை யால் சரியாக அறிவிக்கப்பட லையாம். அதனால் நிறைய குழப்பமாம். குறிப்பா, சென்னை மேற்கு மண்டல ஜே.சி.யான ராஜேஸ்வரி, சென்னை மற்றும் ஆவடி கமி ஷனர்களின் கீழுள்ள பகுதிகளையும் கவ னிப்பதால் யாரிடம் ரிப்போர்ட் தருவ துன்னு அடிக்கடி குழம்பிப் போயிடறாராம். இதேபோல் ஆவடி -சென்னை லிமிட்டிலும் குழப்பங்கள் நீடிக்குதாம்.''”
"தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில், தமிழக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அப்பாயின்மெண்ட் கேட்டும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து சந்திக்க மறுக்கிறாரே?''”
"டி.ஆர்.பியே இதை வெளிப்படையா சொல்லிக் கொந்தளிச்சாரு. முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் உரையில் கடுமையா சொல்லி யிருந்தாரு. இதையறிந்த பா.ஜ.க. பிரமுகர்களே, எதுக்கு தேவை யற்ற சர்ச்சைகள்? அவங்களை சந்திச்சிடுங்களேன்னு சொல்லியிருக்காக்க. அதுக்கு அமித்ஷா, "நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாதுன்னு நாம் பலமுறை சொல்லியும், அவங்க அதையே வலியுறுத்துறாங்க. நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எதிரான தீர் மானங்களோடுதான் எப்பவும் வர்றாங்க. புதிய கல்விக் கொள்கையையும் எதிர்க்கறாங்க. அதனால்தான் அவங்களுக்கு நேரம் ஒதுக்கலை'ன்னு சொல்லி யிருக்கார்.''”
"தமிழக எம்.பி.க் களை சந்திக்காத அமித் ஷா, ஜனவரி 5-ந் தேதி தி.மு.க.வின் நாடாளு மன்ற குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி.க்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருக் காரே?''”
"இது ஒருவிதத்தில் சர்ச்சையாகணும்னு பா.ஜ.க.வில் சிலர் எதிர்பார்க்குறாங்க. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கருணாநிதிக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுவில் உரிய முக்கியத்துவம் தரப்படலைன்னு அவரோட மகளிரணி யினரிடம் ஆதங்கம் இருக்கு. அதுபோல தி.மு.க.வில் புதிதாக உறுப்பினர் களாகச் சேர்க்கப்படும் 30 வயதுக்கு குறைந்த பெண்கள் மகளிரணியா, இளைஞரணியாங்கிற குழப்பமும் இருக்குது. இது பற்றி தி.மு.க. தலை மை இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், முன்பு அழகிரிக்கு வலை விரித்தது போல, கனிமொழிக்கு பா.ஜ.க. வலை விரிக்குதுன்னும், அதற்காகத்தான் கனிமொழியைத் தொடர்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார் உள்துறை அமைச்சரான அமித்ஷான் னும் சொல்றாங்க. கனிமொழி தரப்பில் கேட்டால், "டெல்லி அரசியலில் சோனியாவுக்குகூட மோடி வாழ்த்து சொல்வது வழக்கம்தானே! கனிமொழி, கலைஞர் மகள்'னு பளிச்சுன்னு பதில் வருது.”
"ம்...''”
"தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரி ஒன்றின் டீன் அவர். அவரது மனைவி சட்டத்திற்கு புறம்பான சில காரியங்களில் ஈடுபடுவதாக தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்திருக்கு. ஆனால், துறையின் உயரதிகாரிக்கும் டீனின் குடும்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கும் நல்ல நட்பு இருப்பதால் புகார்களை கண்டுக்காம இருக்காங்களாம்.''”
"திருச்சி சிறையிலிருந்து கிடைச்ச தகவலோடு நான் லைனில் இருக்கேன். வேலை மோசடி வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் நம்பிக்கை, சுப்ரீம் கோர்ட்தான். அவரோட முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்னதாக, கைது செய்யப்பட்டாரு. மறுநாள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெஞ்ச், தமிழக அரசு தரப்பை நோக்கி கடுமையான கேள்விகளைக் கேட்டது. ஒருநாள் பொறுத்திருக்க முடியாமல், இத்தனை அவசரமாக கைது செய்யாவிட்டால் வானமா இடிந்து விழும்னு கேட்டதோடு, ராஜேந்திர பாலாஜியின் வக்கீலை போலீஸ் தொந்தரவு செய்தது சம்பந்தமாகவும் கண்டித்திருந்தது. இதனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவால், எந்த நேரத்திலும் தனக்கு ரிலீஸ் ஆர்டர் கிடைக்கலாம்ங்கிற ஹேப்பியில் சிறையில் சனி, ஞாயிறு நாட்களைக் கடத்தியிருக்காரு ராஜேந்திரபாலாஜி.''