""ஹலோ தலைவரே, விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்குமாம்.''’’

""ஆமாம்பா, அது தொடர்பான தகவலால் அ.தி.மு.க.வில் பெரும் சலசலப்பு தொடங்கி இருக்கே?''

""உண்மைதாங்க தலைவரே, மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு இடம் ஒதுக்கப்படும்னு ஏற்கனவே எடப்பாடியிடம் மோடி உறுதி கொடுத்திருந்தார். எடப்பாடியும் அந்த பதவிகளைத் தங்கள் கட்சியின் சீனியர், ஜூனியர் எம்.பி.க்களான வைத்திலிங்கத்துக்கும், ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத்துக்கும் ஒதுக்கணும்னு பரிந்துரை செய்திருந்தார். இந்த நிலையில் வைத்திலிங்கத்துக்கு தர இருந்த மத்திய அமைச்சர் பதவியை, த.மா.கா. வாசனுக்கு மோடி கொடுக்க இருப்பதாகவும், ரவீந்திரநாத்துடன் வாசனும் மத்திய அமைச்சர் பதவியை ஏற்க இருக்கிறாருன்னும் டெல்லியில் இருந்து தகவல் வர, அதுதான் அ.தி.மு.க.வில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''

rr

Advertisment

""வைத்திலிங்கம் கடும் கோபத்தில் இருப்பாரே?''’

""டெல்லித் தகவலால் கடும் கோபத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கார் வைத்தி. தனது டெல்டா பகுதியைச் சேர்ந்த ஜி.கே.வாசன், தனக்குக் கிடைக்க வேண்டிய பவர்ஃபுல் பதவியை தட்டிப் பறிப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியலையாம். அவருடைய அப்செட்டை முன்கூட்டியே ஸ்மெல் செய்த எடப்பாடி, டெல்டா பகுதியில் அவருக்கு முக்கியத்துவத்தைக் கூடுதலாக்கும் விதமா, கட்சியின் டெல்டா பகுதி பொறுப்பாளராக வைத்திலிங்கத்தை அண்மையில் அறிவித்திருந்தார். இருந்தும் வைத்திய லிங்கமோ, மத்திய மந்திரி பதவி இல்லாமல், இந்தக் கட்சிப் பதவியை வச்சிக்கிட்டு நான் என்ன நாக்கு வழிக்கவான்னு கேட்கிறாராம்?''

""வைத்திலிங்கத்தை எடப்பாடி எப்படித்தான் சமாதானப்படுத்தப் போறாராம்?''

Advertisment

""இந்தக் கேள்வி எடப்பாடிக்கே இருக்கு. ஏன்னா, வைத்திலிங்கம் தரப்புக்கு, இன்னொரு ஆதங்கமும் இருக்குது. அதாவது மராமத்துப் பணிகளுக்கான டெண் டரை தன் மகன் பெயரில் எடுத்து, காவிரியில் தூர்வாரும் வேலைகளையும் மேற்கொண்டிருந்தார் வைத்தி. அந்தப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. ஆற்றில் தண்ணீர் இருப்பதால், தூர் வாரியதற்கான பில் தொகை பாஸாகவில்லை. இதுவும் வைத்தியை பெரும் அப்செட்டில் ஆழ்த்தி இருக்கு.''

""ஓ...''

""அது மட்டும் இல்லாமல், தனக்கு நெருக்கமான புதுக்கோட்டை எஸ்.ஆர்.குரூப் டெல்டா பகுதியில் மணல் எடுத்து வந்ததை, உரிய ‘கவனிப்பு’ இல்லைங்கிற எரிச்சலால், துறை அமைச்சரான சி.வி.சண்முகம் தடுத்துவிட்டார். இதுவும் எடப்பாடியை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கு. இப்படி வைத்தி, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் கோபத்தைத் தணிக்கனும்ன்னு நினைக்கும் எடப்பாடி, குடிமராமத்துப்பணி பார்வையிடல்ங்கிற பேர்ல, திருச்சி, முக்கொம்புன்னு டெல்டா பஞ்சாயத்துக்கு ரெடியானாரு.''’’

""சமாதானப் படலத்தை விரும்பும் எடப்பாடி, தலைமைச் செயலாளர் சண்முகம் மீது மட்டும் கோபமா இருக்காராமே?''

""உண்மைதாங்க தலைவரே, சமீப நாட்களா தலைமைச் செயலாளர் சண்முகத்தை எடப்பாடி திட்டமிட்டுப் புறக்கணிக்கிறாராம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் உள்ளிட்ட எந்த முக்கிய முடிவு பற்றியும் அவரிடம் எடப்பாடி ஆலோசிப்பதே இல்லையாம். அதனால் அப்செட்டில் இருக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம், தன் சக அதிகாரிகளிடம், எனக்குப் பணி நீட்டிப்பு வேண்டாம்னு நான் சொன்னப்ப, நீங்க எங்களோட கொஞ்சநாள் இருங்கன்னு சொன்ன சி.எம்., இப்ப தொடர் புறக்கணிப்பின் மூலம் என்னை அவமதிக்கிறார்னு வேதனையை வெளிப் படுத்துறாராம்.''

""எடப்பாடிக்கு தலைமைச் செயலாளர் மேல் அப்படி என்ன எரிச்சல்?''

""இது சம்மந்தமா கோட்டை வட்டாரத்திலேயே விசாரிச்சேங்க. தலைவரே, அவங்க என்ன சொல்றாங்கன்னா, மத்திய அரசிடம் நெருக்கமான தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார் சண்முகம். டெல்லியும் அவர் மீது நம்பிக்கை வச்சிருக்குது. எடப்பாடி அரசு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள்லயும், நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட டெண்டர் விவகாரங்கள்லயும் செய்துவரும் அத்தனைக் குளறுபடிகளையும் உடனுக்குடன் டெல்லிக்கு சண்முகம் போட்டுக் கொடுத்துடறாராம். அண்மைக் காலத்தில் கொரோனா தொடர்பான உபகரணக் கொள்முதல்களில் நடக்கும் கோல்மால்களையும் கூட, அவர் தன்னுடைய சேஃப்டிக்காக அங்கே பகிர்ந்து கொண்டாராம். அது பிரதமர் மோடியின் காதுவரை போயிருக்கு. இதை எப்படியோ ஸ்மெல் செய்துவிட்ட எடப்பாடி, சண்முகம் மீதான கோபத்தைப் புறக்கணிப்பின் மூலம் காட்டறாராம்.''

""இதேபோல் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி மீதும் எடப்பாடி கடும் கோபத்தில் இருக்காராமே?''’

ff""அந்த செய்தியும் என் காதுக்கு வந்துச் சுங்க தலைவரே, முதல்வர் தரப்பின் கோபத்தைச் சம்பாதிச்சிருக்கும் அந்த அதிகாரி, திருச்சியில் இருக்கும் காவல்துறை மத் திய மண்டல ஐ.ஜி. அமல் ராஜ் தானாம். திருச்சி பகுதியில் இருக்கும் மதிப்பான ஒரு நில விவகாரத்தில், முதல்வர் எடப்பாடியின் மகனோடு ஐ.ஜி. மோதல் போக்கைக் கடைபிடித்தாராம். அதனால் எடப்பாடித் தரப்பு அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்குது. அதனால் ஐ.ஜி.யை முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவிக்கு அனுப்பும் முயற்சிகள் தொடங்கி யிருக்கு. இதையறிந்து திகைத்துப் போன ஐ.ஜி. அமல்ராஜ், முதல்வர் தரப்புக்கு நெருக்கமானவங்க மூலம் சமாதானத் தூது விட்டுக்கிட்டு இருக்காராம். ஆனாலும் மேலிடக் கோபம் கொஞ்சமும் குறையலையாம்.''

""அது இருக்கட்டும். அரசுக்கு எதிரான கோட்டை வட்டார முணுமுணுப்புகள் இன்னும் குறையலையேப்பா?''

""உண்மைதாங்க தலைவரே, அமைச்சர்கள் தொடங்கி அதிகாரிகள்வரை கொரோனா பரவும் வேகம் கோட்டை வட்டாரத்தையே மரண பீதியில் ஆழ்த்தியிருக்கு. ஆனால் இது பத்தி முதல்வர் எடப்பாடி பெருசா அக்கறை காட்டாதது பற்றியும் நாம் பலமுறை பேசியிருக்கோம். குறிப்பா 60 சதவீதப் பணியாளர்களைக் கட்டாயப்படுத்தி கோட்டைக்கு வரவழைப்பது பற்றிக் கூட போனமுறை நாம் பகிர்ந்துக்கிட்டோம். இதைத் தொடர்ந்து 33 சதவீத பணியாளர்கள் மட்டும் ஷிப்ட் அடிப்படையில் பணிக்கு வந்தால் போதும்ன்னு உத்தரவு போடப்பட்டது. ஆனாலும், தனது உத்தரவை தானே மதிக்காமல், பழைய படியே எல்லோரும் பணிக்கு வாங்கன்னு அரசு குடைச்சல் கொடுக்குதாம். அதனால் கோட்டை வட்டாரம் கொதிப்பில் இருக்குது.''

""சென்னை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குப் போடப்பட்டிருக்கும் முழு ஊரடங்கால், ஆளுங்கட்சிப் புள்ளிகளின் காட்டில் அடை மழையாமே?''

rr

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 19-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை ஊரடங்குன்னு 15-ந் தேதியே அறி விச்சார் எடப்பாடி. இடைபட்ட அந்த 4 நாள் அவகாசத்தில் இந்த 4 மாவட்ட ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரும், டாஸ்மாக் சரக்கை ஏகத்துக்கும் பெட்டி பெட்டியாக பர்சேஸ் செஞ்சி, ஸ்டாக் வச்சிக்கிட்டாங்க. அதையெல்லாம் தங்கள் ஆட்கள் மூலம் முழு ஊரடங்கு நாட்களில் பலமடங்கு விலைக்கு விற்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த வகையில் சென் னைக்குள் மட்டும் ஏறத்தாழ 500 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் நுழைஞ்சிருக்கு. இதை ஏறுக்கு மாறாவித்த வகையில் ஆளும் கட்சிப் புள்ளிகளுக்கு 1,500 கோடி ரூபாய் அளவுக்கு லாபமான லாபமாம். இதுக்கு ஒத்து ழைப்பா இருந்த டிபார்ட் மெண்ட் ஆளுங்களுக்கும் கணிசமா கட்டிங் போயிருக்கு.''

""சென்னை, மதுரையைத் தொடர்ந்து தேனியிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டி ருக்கே?''’’

""ஆமாங்க தலைவரே, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைப் போலவே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் இப்ப கொரோனாத் தொற்று, கைமீறிப் போய்க்கிட்டு இருக்கு. அதனால் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் 24-ந் தேதி எடப்பாடி காணொலியில் ஆலோசனையை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு முன்பாகவே, தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்குன்னு அங்குள்ள கலெக்டர் பல்லவி பல்தேவ் அறிவிச்சிட்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர்கள் பலரும் எங்கள் மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 10 நாட்களுக்காவது முழு ஊரடங்கை அமல்படுத்துங்கள்னு கோரிக்கை வச்சி, எடப்பாடியைத் திகைக்க வச்சிருக்காங்க.''

""கொரோனா பீதி பிரதமர் மோடியையும் விட்டுவைக்கலை போலிருக்கே?''

""உண்மைதாங்க தலைவரே, தொற்று பயம் மோடியையும் தொற்றி இருப்பதால் அவருடைய 99 சத சந்திப்புகள். குறைக்கப்பட்டுவிட்டது. கொரோனா பற்றிய ஆலோசனை, பொருளாதாரம் தொடர்பான விவாதம், சீனப் பிரச்சினை குறித்த வியூகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களுக்கான சந்திப்புகளுக்கு மட்டுமே மோடி நேரம் ஒதுக்கறார். இந்த சந்திப்பில் பங்கேற்கும் அமைச்சர்கள், அதிகாரிகள்னு அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படுவதோடு, மீட்டிங் ஹாலும் கவனமாகக் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்தப்படுதாம். அப்படி இருந்தும் பீதி விலகாத மோடி, தினசரி 2 தடவை பரிசோதனை பண்ணிக்கிறாராம். அவர் பயத்தைப் புரிஞ்சிக்கிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகள், முக்கிய கோப்பு களைக் கூட காகித வடிவில் இல்லாமல், டிஜிட் டல் வடிவில் அவர் பார்வைக்குக் கொண்டுபோங்கன்னு மத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்காங்களாம்.''

""நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன்.''

""சுகாதாரத்துறையின் முன்னாள் செயலாளர் பீலா ராஜேஷ் கட்டியிருக்கும் ஆடம்பர பங்களா பற்றிய எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோரியை நம்ம நக்கீரன் அண்மையில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்துச்சு. அந்த பங்களாவைப் பார்த்து அவரின் சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே திகைச்சிப் போய்ட்டாங்க. இந்த நிலையில், பீலா ராஜேஷ் மற்றும் அவரது கணவரான ராஜேஷ்தாஸ் ஐ.பி.எஸ். ஆகியோரின் வருமானத்துக்கு மீறிய சொத்துக்கள் பற்றி விசாரிக்கனும்னு உள்துறைச் செயலாளருக்கும் விஜிலென்ஸ் கமிஷனருக்கும் புகார்கள் போயிருக்கு.''