""ஹலோ தலைவரே, எம்.பி. தேர்தலோடு 20 தொகுதிகளின் இடைத்தேர்தல் நடக்குமாங்கிற யோசனையோடு அரசியல் கட்சிகள், வியூகங்களை வகுத்துக்கிட்டு இருக்கு. அண்மையில் தி.மு.க. நியமித்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்புக் குழு 25-ந் தேதி அறிவாலயத்தில் கூட்டப்பட்டு ஜரூரா ஆலோசனைகள் நடத்தப்பட்டிருக்கு.''’
""ஆமாம்பா. அது தொடர்பான செய்திகளை ஊடகங்கள்ல நானும் பார்த்தேன். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மா.செ.க்களும் எம்.எல்.ஏ.க்களும்கூட கலந்துக்கிட்டாங்க போலிருக்கே?''’’
""உண்மைதாங்க தலைவரே, எல்லோருமாகச் சேர்ந்துதானே தேர்தல் வேலைகளைப் பார்த்தாகணும். அந்த நோக்கத்தில்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. கட்சித் தலைவரான ஸ்டாலின், கூட்டத்தில் கலந்துக்கிட்டவங்களோட கருத்துகளை கவனமா கேட்டுக்கிட்டார். கூட்டத்தில் பேசிய சீனியர் மா.செ.க்கள், "கலைஞர் இல்லாமல் நாம் எதிர்கொள்ளப் போகும் முதல் தேர்தல் இது. அதனால் ரொம்பவும் கவனமாவும் கச்சிதமாவும் நாம் வேலை செய்து வெற்றிகளைக் குவிச்சாகணும்'னு சொன்னாங்க. மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், "பொறுப்புக்குழு இருக்குன்னு மத்தவங்க சும்மா இருந்துடக்கூடாது. வழக்கம்போல் எப்படி வேலை செஞ்சோமோ, அதைவிட நாம எல்லோரும் தீவிரமா தேர்தல் வேலைகளைப் பார்க்கணும். அப்பதான் நாம் வெற்றியை முழுசா அறுவடை செய்யமுடியும்'னு சொன்னார். ஒரு தொகுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.வை, சம்பந்தமே இல்லாத வேறொரு தொகுதிக்குத் தேர்தல் பொறுப்பாளரா போட்டிருக்கீங்களேன்னு சிலர் கேள்வி எழுப்ப, ஸ்டாலின் இடைமறிச்சி, "இது முதல் கூட்டம்தான். அடுத்தடுத்த கூட்டங்கள்ல இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண்போம்'னு சொன்னார்.''’’
""வேற என்னென்ன சிக்கல்களை முன்வச்சாங்க

""வேற என்னென்ன சிக்கல்களை முன்வச்சாங்க?''
""வேலூர் மா.செ.வான காந்தி, "நாடாளுமன்றப் பொறுப்புக் குழுவைப் போடுறதுக்கு முன்பு, அது சம்பந்தமா மா.செ.க்களிடம் ஆலோசனை பண்ணியிருக்கலாமே?'னு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதுக்கு பதில் சொன்ன கட்சியின் பொருளாளர் துரைமுருகன், "கல்யாணத்துக்கு வாங்கன்னு சொன்னா, மண்டபம் பார்க்கக் கூப்பிட்டீங்களா? வாழை மரம் கட்டறது பத்தி சொன்னீங்களான்னு கேட்டுக்கிட்டு இருக்கக்கூடாது. வந்தமா தாலியை கட்டினாங்களா, கல்யாணம் நல்லபடியா நடந்துச்சான்னு நினைக்கணும். அதுபோல் தேர்தலுக்கு எந்தக் கமிட்டி போட்டா என்ன? தேர்தல்ல எப்படி ஓட்டு வாங்கறது? எப்படி ஜெயிக்கிறதுன்னு மட்டும்தான் பார்க்கணும்'னு.. எல்லோருக்குமான பதிலைச் சொல்லிக் கூட்டத்தைக் கலகலப்பாக்கினார். ஆனாலும் கூட்டத்தில் ஒருவித கலக்கம் இருந்தது. அண்ணா-கலைஞர் காலத்திலிருந்து கட்சிக்காக உழைத்த மகளிரணிப் புரவலரும் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவரும் சீனியர் கட்சிக்காரருமான நூர்ஜகான் பேகம் மரணம்தான் அதற்குக் காரணம். அவரோட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக கூட்டத்தை ஒருமணி நேரத்திலேயே முடிச்சிட்டாங்க.''’
""தேர்தல் பரபரப்பில் தி.மு.க. இருக்கும்போது, காங்கிரஸ் தரப்பு டி.ஜி.பி.யை அணுகியிருக்கே?''’
""காங்கிரஸ் பிரமுகர்களான ஜே.எம்.ஆரூண், காஞ்சிபுரம் விசுவநாதன் மற்றும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் பலரும் 24-ந் தேதி தமிழக டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரனை சந்திச்சி ஒரு மனுவைக் கொடுத்திருக்காங்க. அதில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான திருநாவுக்கரசரின் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவருக்கு காவல்துறை உரிய பாதுகாப்பைத் தரணும்னு கேட்டிருக்காங்க. இதைப் பார்த்துத் திகைத்த டி.ஜி.பி., "அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரியலையே'ன்னு சொல்ல, "போனமுறை எங்க கட்சிக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தப்ப, அவரைக் குறிவச்சிக் கல் வீசப்பட்டதுன்னு காங்கிரஸ் தரப்பு சொல்லுச்சு. டி.ஜி.பி.யோ, இது உங்க உள்கட்சி விவகாரமாச்சே.. அதுக்கு நாங்க எப்படி பாதுகாப்புக் கொடுக்குறதுன்னு யோசிச்சிட்டு, சரி, இருந்தாலும் உங்க கோரிக்கை பரிசீலிக்கப்படும்'னு அவங்களை அனுப்பிவச்சார்.''’
""உண்மையிலேயே திருநாவுக்கரசர் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்குதா?''’
""திருநாவுக்கரசரிடம் பேசிய காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், "மு.க.ஸ்டாலின் தொடங்கி, பா.ஜ.க. ஹெச்.ராஜா, எஸ்.வீ.சேகர்னு பலருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கு. அவங்கள்லாம் போலீஸ் பாதுகாப்போடு படுபந்தாவா போகும்போது, நீங்க மட்டும் வெறுமனே போறது சரியில்லை. அதனால் நாமும் உங்களுக்குப் பாதுகாப்பு கேட்போம்'னு எடுத்துச் சொல்லியிருக்காங்க. "அப்படின்னா நீங்களே டி.ஜி.பி.யைப் பாருங்க'ன்னு சொன்னாராம் திருநாவுக்கரசர். இது எப்படி இருக்கு?''’
""அது இருக்குறபடி இருக்கட்டும். தே.மு.தி.க. பொருளாளரா பிரேமலதா ஆனதில் இருந்து அந்தக் கட்சியில் புதுசா விறுவிறுப்பு தெரியுதேப்பா.''’
""உண்மைதாங்க தலைவரே, கட்சியின் பொருளாளர் பதவிங்கிற லகானைப் பிடிச்ச பிரேமலதா, அதே கெத்தோட கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தையும் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டத்தையும் விறுவிறுப்பா நடத்தியிருக்காரு. அதில் கலந்துக்கிட்ட பலரும், "நீங்க ஜெயலலிதா மாதிரி அதிரடி நடவடிக்கைகளை எடுக்கணும். அதேபோல் கலைஞர் மாதிரி ஜனநாயக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளணும். இந்த ரெண்டுபேரின் கலவையா நீங்க செயல்பட்டாதான் நம்ம கட்சி, பரபரப்பா பேசப்படும்'னு சொல்லியிருக்காங்க. கூடவே இளைஞரணி பொறுப்பாளரா இருக்கும் அவர் தம்பி சுதீஷின் தலையீடுகள் பத்தியும், அவரிடம் புகாரா வச்சிருக்காங்க. இதுக்கிடையில் பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரான அமித் ஷா, தே.மு.தி.க.வின் பொருளாளரா ஆனதற்கு பிரேமலதாவுக்கு வாழ்த்து தெரிவிச்சி, புது உற்சாகத்தைக் கொடுத்திருக்கார்.''’
""அமித் ஷா தமிழக பா.ஜ.க.வினருக்குப் புதுக்கட்டளை ஒன்றையும் பிறப்பிச்சிருக்காராமே?''
""ஆமாங்க தலைவரே, கூட்டணிபற்றி இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படாததால், நாங்கள் யாரை ஆதரிச்சிப் பேசுறது? யாரை எதிர்த்துப் பேசுறதுன்னு தெரியாமக் குழம்பிக்கிட்டு இருக்கோம்னு தமிழக பா.ஜ.க.வினர் டெல்லி தலைமைக்கு தங்கள் மனஉணர்வை தெரிவிச்சிருந்தாங்க. இதைத்தொடர்ந்து, "தி.மு.க.வையும் தினகரன் தரப்பையும் மட்டுமே இப்போது அரசியல் ரீதியாக நீங்கள் கடுமையாக விமர்சிக்கலாம்'ன்னு தமிழக பா.ஜ.க. தலைவரான தமிழிசைக்கு அமித் ஷா, உத்தரவு பிறப்பிச்சிருக்காராம்.''’
""நானும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்றேன். 25-ந் தேதி வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் தொடர்புடைய 100 இடங்கள்ல வருமான வரித்துறை, அதிரடி ரெய்டை நடத்தி அவர் தரப்பை அதிர வச்சிருக்கு. சமீபத்தில் இலங்கைக்குப் போன அமைச்சர் செங்கோட்டையனுடன், வைகுண்டராஜனின் மகனும் போயிருக்கார். யாருக்கும் தகவல் சொல்லாமல் அங்க இருக்கும் ஒரு மந்திரியை தன் தொழில் பார்ட்னராக்கி, அங்கு பினாமி பேரில் பிஸினஸைத் தொடங்குவதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருக்கார். இது டெல்லிக்குத் தெரிஞ்சதால், எதுக்கு இந்திய அரசின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இப்படி செய்யணும்னு டெல்லி கோபமாயிடிச்சாம். அதனால், வைகுண்டராஜன் தரப்பை கூர்ந்து கவனிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவு போயிருக்கு. அப்படி வருமானவரித்துறை கவனிச்சப்ப, தகுதி நீக்கப்பட்ட தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களுக்கான செலவை, வைகுண்டராஜன் தரப்பு செய்து வந்ததை பார்த்திருக்காங்க. அவர்களுக்கு பெரிய அளவில் எதுவும் கைமாறிடக் கூடாதுன்னுதான் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.''’
_____________
"அ.தி.மு.க. அரசுக்கு சங்கு''
சசிகலாவின் தம்பியும், அண்ணா திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான திவாகரன், மன்னார்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ""தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க. தொண்டர்கள் வெடிவெடித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். புரியாமல் செய்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க. அரசுக்கு ஊதிய சங்கு என்று இவர்களுக்கு தெரியவில்லை. திராவிடத் தலைவர்கள் கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. இங்கே காலூன்ற நினைக்கிறது. தனது பதவி ஆசைக்காக, சசிகலாவை சிறைக்கு அனுப்பிய மகா உத்தமன் தினகரனை நம்பி, 18 அப்பாவி எம்.எல்.ஏ.க்கள் பலிகடாக்கள் ஆகிவிட்டார்கள்'' வேதனையோடு சொன்னார்.
-பகத்
இறுதிச் சுற்று!
தமிழிசை மீது வழக்கு!
தூத்துக்குடி விமான நிலையத்தில் ""பாசிச பா.ஜ.க. ஒழிக'' என்று கோஷமிட்டதற்காக பா.ஜ.க. தலைவர் தமிழிசை புகாரின் பெயரில் மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார். இந்த நிலையில் சோஃபியாவை அவதூறாக பேசியதற்காக சோஃபியாவின் தந்தை சாமி தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய கோரி இருந்தார். இதையடுத்து தமிழிசை உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது குறித்த அறிக்கையை நவம்பர் 20 ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
-சி.ஜீவாபாரதி