""ஹலோ தலைவரே, தேர்தல் பணிகளை தி.மு.க.வும் விறு விறுன்னு ஆரம்பிச் சிருக்கே...''

""ஆமாம்பா, எந்தத் தேர்தல் களமாக இருந்தாலும் அதில் தி.மு.க.வின் தேர்தல் வியூகம் என்பது தமிழக அரசியல் களத்தை சூடாக்கிடும். கலைஞர் வெளியிடுற தேர்தல் அறிக்கை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும். 2006ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகனா இருந்தது. அதனால, இந்தமுறையும் கதாநாயகனை உரு வாக்குவதற்கான 8 பேர் கொண்ட குழுவை தி.மு.க. நியமிச்சிருக் கேப்பா?''

""ஆமாங்க தலை வரே, தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் குழுவில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி., திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி. ஆகியோரோடு பேரா சிரியர் அ.ராமசாமியையும் தி.மு.க. சேர்த்திருக்கு. அனுபவ சாலிகளான இவங்க தயா ரிக்கும் தேர்தல் அறிக்கை, எந்த அளவுக்கு பவர்ஃபுல்லா இருக்கப்போவுதுங்கிற எதிர்பார்ப்பு, எதிர்க்கட்சிகள் வட்டாரத்திலும் ஏற்பட்டிருக்கு.''

v""போனமுறை நாம பேசிக்கிட்ட ஐபேக் அறிக்கை, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு சூறாவளியை உண்டாக்கியிருக்கேப்பா?''

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, ஐபேக் அறிக்கையில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை தனிச்சின்னத்தில் நிறுத்தாமல், உதயசூரியன் சின்னத்தில் நிறுத்துவதே சாதகமான பலனைத் தரும்னு குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை கசிஞ்சதால, கூட்டணிக் கட்சிகளிலும் விவாதங்கள் ஓடியது. நம்ம கட்சி, தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தைப் பெறனும்னா, நாம் தனிச் சின்னத்தில்தான் நின்றாகனும். அதனால் இதை தி.மு.க.விடம் சொல்லி, மதிப்பான எண்ணிக்கையில் சீட்டை வாங்கனும்னு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நினைக்கிறாங்க. கம்யூனிஸ்டுக் கட்சி களுக்கோ, ஐபேக் அறிக்கையால் தங்களால் அதிக சீட்டை தி.மு.க.விடம் பெறமுடியாமல் போகுமோங்கிற கவலை இருக்குது. இதேபோன்ற தர்மசங்கட நிலையைத்தான் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் சந்திச்சிருக்கார்.''

""தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்னு வைகோ அறிவிச்சிருக்காரே?''

""தலைவரே, அவரது இந்த உடனடி அறிவிப் பிற்குக் காரணம், சமீபகாலமாக ம.தி.மு.க.வினர் தங்கள் அரசியல் எதிர்காலம் பற்றிய தெளிவை எதிர்பார்த்து இருக்காங்க. அவர்களில் பலருக்கும், நம்மால் அதிகாரப் பதவிகளில் இனியும் அமரமுடியாதோங்கிற கவலையும் இருக்கு. இந்த நிலையில், தி.மு.க. ஒதுக்கும் உதயசூரி யன் சின்னத்தில் நாம் நிற்பதைவிட, தி.மு.க.விலேயே ஐக்கியமாகி, அந்தக் கட்சியின் வேட்பாளராகவே நிற்பது மேல்னு நினைக்கிறாங்களாம். அவர்களின் சிந்தனை விபரீதமாகப் போவதைப் பார்த்து ஷாக் ஆனதால்தான் வைகோ, தனிச்சின்னத்தில் போட்டின்னு அவசர அவசரமா அறிவிச்சாராம். கட்சியின் தனித்துவத்தை நிலைநிறுத்திய அதே சமயம், நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றும் வைகோ அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.''’’

Advertisment

""காங்கிரஸ் கட்சியையும் ஐபேக் அறிக்கை அலறவச்சிருக்கேப்பா?''

""உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸுக்கு போனமுறை ஒதுக்கிய சீட்டில், பாதியளவுக்குக் கூட தி.மு.க. ஒதுக்கத் தேவையில்லைன்னு தனது சீக்ரெட்டான பரிந்துரை அறிக்கையில் ஐபேக் சொல்லியிருந்தது. இதைப் பார்த்து, காங்கிரஸ் தரப்பு ரொம்பவே வெல வெலத்துப் போயிடுச்சு. அதனால் அது கவலையோடு தி.மு.க.விடம் சீட்டுக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்குச்சு. அப்ப தி.மு.க. தரப்பு காங்கிரஸுக்கு 18 சீட்டுகளை ஒதுக்க விரும்பறோம்ன்னு சொல்ல, காங்கிரஸின் தொடர் வலியுறுத்தலால் அது இப்போதைக்கு 21 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கு. இதற்கு மேல் சோனியாவோ, ராகுலோ ஃபைனலா தலையிடும் போது இந்த எண்ணிக்கை 25 ஆகலாம் என்பதுதான் இப்போதைய நிலவரம்.''’’

""இப்பவே ’சீட் சீட்டிங்’ விவகாரங்களும் ஆரம்பிச்சிடுச்சேப்பா?''’’

""ஆமாங்க தலைவரே, ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சி களிலுமே, தலைமையிடம் பேசி, உங்களுக்கு சீட் வாங்கித் தர்றோம்னு சொல்லி, ஆளாளுக்கு ஆட்டையப் போட ஆரம்பிச்சிட்டாங்க. இப்படிப்பட்ட கோல்மால் பேர்வழிகள், ஈவு இரக்கம் கூட பார்க்கறதில்லை என்பதுதான் வேதனைங்க தலைவரே, கொரோனாவுக்குப் பலியான கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரின் மகனான நடிகர் விஜய் வசந்த்தை காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் முற்றுகை இட்டிருக்காங்க. அதில் சிட்டிங் எம்.பி.க்களில் இருவரும் அடக்கமாம். இவங்க விஜய் வசந்த்தைத் தனித்தனியா அப்ரோச் பண்ணி, உங்க அப்பா விட்டுட்டுப் போன பணியை நீங்கதான் தொடரனும். ராகுல்ஜியிடம் எம்.பி. சீட்டுக்குப் பேசிடறோம். கன்னியாகுமரி இடைத் தேர்தலில் நீங்கதான் தேர்தல்ல நிக்கறீங்கன்னு சொல்லிச் சொல்லியே, அவர்கள் ஏகத்துக்கும் ஆதாயம் அடைகிறார்களாம்.''

c

""ஆதாயம் இல்லாம அரசியல் ஏது? காங்கிரசைவிட்டு பா.ஜ.க.வு.க்கோ அ.தி.மு.கவுக்கோ போகப்போறாருன்னு எதிர்பார்க்கப்பட்ட நடிகை குஷ்பு, பாலியல் வன்முறைக்கு எதிராக சென்னையில் காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கிட்டாரே?''

""குஷ்புவுக்கு மற்ற கட்சிகளிலிருந்து வரும் ஆஃபர் பற்றி நம்ம நக்கீரன்தான் முதலில் சொன்னது. குஷ்புவை பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் சந்திச்சது பற்றியும், அப்ப இடைத் தேர்தலில் சீட் தருவோம்ங்கிற உத்தரவாதத்தோடு, அவருக்கு பா.ஜ.க.வில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது பற்றியும் ஏற்கனவே நாம் பேசியிருக்கோம். இருந்தும் பா.ஜ.க.வில் ஐக்கியமாவது பற்றி குஷ்பு எந்த முடிவுக்கும் வரலை. அதுக்குக் காரணம் குஷ்புவின் எதிர்பார்ப்பு, ராஜ்யசபா பதவி மற்றும் தேசிய அளவில் கட்சிப் பதவி என்பதாக இருந்தது. இது அமித்ஷாவுக்குத் தெரியப்படுத்தப்பட, அமித்ஷாவோ, இப்போதைக்கு ராஜ்யசபா சீட்டுக்கெல்லாம் வாய்ப்பில்லை. குஷ்பு வேண்டுமானால் கட்சியில் சேர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றட்டும். அவரது பாப்புலா ரிட்டியும் உழைப்பும் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் தாமரை யை மலர வைக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்கப்புறம் அவர் எதிர்பார்க்கறதைச் செய் வோம்னு சொல்லிட் டாராம். குஷ்பு போன்ற பிரபலங்கள் தமிழகத் தில் பா.ஜ.க.வை வளர்க்க தேவை என டெல்லி நினைப்ப தால் ஜே.பி. நட்டாவிடமிருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து ஞாயிறு அன்று டெல்லிக்குப் பறந்தார் குஷ்பு. அரசியல் வட் டாரம் பரபரப்பானது.''

""தி.மு.க.வை எப்படியாவது பஞ்சர் பண்ண னும்னு பா.ஜ.க. பரபரக்குதேப்பா?''

""உண்மை தாங்க தலைவரே, வரும் சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை முதல்வராக்க விடமாட்டோம்னு ஏற் கனவே முரளிதரராவ் ஓப்பனா சொன்னாரு. இப்ப எல்.முருகனும் அதையேதான் சொல்லியிருக்கார். தி.மு.க.வை தலையெடுக்க விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டி களமிறங்கி இருக்கு பா.ஜ.க.. அதுக்காக அது மு.க.அழகிரியைத் துருப்புச் சீட்டாக்கும் முயற்சியில் விறுவிறுக்குது. சமீபத்தில் சீக்ரெட்டாக ஸ்பெஷல் விமானத்தில் மோடியின் தூதராக வந்த ஒரு மத்திய அமைச்சர், அழகிரியை சந்திச்சிருப்பதா பா.ஜ.க. சைடில் சொல்றாங்க. அழகிரியிடம், நீங்க எங்க பா.ஜ.க.வில் ஐக்கியமாயிடுங்க. இது பிரதமரின் விருப்பம்னு டீலிங்கை ஆரம்பிச் சிருக்கார். அழகிரியோ, நான் கலைஞரின் மகன். அதனால் பா.ஜ.க.வில் சேரமுடி யாதுன்னு தீர்க்கமாச் சொல்லிட்டாராம். அடுத்ததா, சரி நீங்கள் எங்கள் கட்சியில் சேரவேண்டாம். தனியா, கலைஞர் தி.மு.க.ன்னு ஒரு கட்சியை ஆரம்பிங்க. தி.மு.க.வில் இருந்து 5 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் வரை, எங்கள் செலவில் உங்களிடம் அழைத்து வருகிறோம். கு.க.செல்வம் மூலமா இந்த ஆபரேஷனை சக்ஸஸ்ஃபுல்லா செய்யலாம்னு ஆசைகாட்டி யிருக்கிறார். அழகிரியோ, எனக்கு உடல்நிலை சரியில்லை. ஆளைவிடுங்கன்னு கும்பிடு போட்டிருக்கார். ஆனாலும் பா.ஜ.க. தரப்பு விடுவதாக இல்லையாம்.''

r

""என் உயரம் எனக்குத் தெரியும்னு சொன்னவரு கலைஞர். அழகிரிக்கும் அவரோட பலம் புரிஞ்சிருக்கும்.''

""எப்படியாவது தமிழ்நாட்டில் தாமரை யை மலர வச்சிடணும்ங்கிறதுதான் பா.ஜ.க. மேலிடத்தின் வியூகம். விரைவில் மத்திய மந்திரி சபையை மோடி விரிவுபடுத்த இருக் கிறாராம். அப்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் rஎம்.பி.யை மத்திய அமைச்சராக்க இருக்கிறாராம் மோடி. அப்படியே அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. வைத்திலிங்கத்தையும் மந்திரியாக்கிடுங்கன்னு எடப்பாடித் தரப்பு கேட்டுக்கிட்டு இருக்குது. இந்த நிலையில், மத்தியில் கூட்டணி அரசு அமைவதுபோல், தமிழகத்திலும் வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் அமையனும். அ.தி.மு.க.வுக்கு முதல்வர் பதவி என்பதுபோல், பா.ஜ.க.வுக்கு துணை முதல்வர் பதவியைக் கொடுத்துடனும்ன்னு டெல்லித் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். இது எடப்பாடியைத் திகைக்க வைத்திருக்கிறது.''’

""எடப்பாடியைத்தான் அவர் அமைச்சரவையில் இருக்கும் கொங்கு மந்திரிகளே திகைக்க வைக்கிறாங்களே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தமிழக முதல்வரா எடப்பாடி இருந்தாலும், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தை ஆக்டிங் முதல்வரா இருந்து ஆட்டிவைக்கிறவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிதானாம். அந்தப் பகுதியில் இருக்கும் ஆளும்கட்சிப் புள்ளிகளைத் தன் கைவசம் வைத்திருக்கும் அவர், நீங்க கோவைப் பகுதிக்கே வரத் தேவையில்லைன்னு எடப்பாடிக்கே பிரேக் பிடிக்க முனைகிறாராம். இருந்தும், அவ்வப்போது கோவைப் பகுதிக்கு விசிட்டடித்து, தன் பவரை ரீஃப்ரஷ் செய்துகொண்டு வருகிறாராம் எடப்பாடி. அதேபோல் தனது கணக்கு வழக்குகளை கவனிக்க வேலுமணி 40 பேரை பி.ஏ. லெவலில் வைத்திருக் கிறார் என்ற தகவலைக் கேட்டும் கிறுத்துகிறுத்துப் போயிருக்கிறாராம் எடப்பாடி. இதேபோல், பவர் துறை மந்திரி, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யை நியமித்தது தொடங்கி டாஸ்மாக் எம்.டி.யாக மோகன் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது வரை அனைத் திலும் தன் பவரைக் காட்டி, அனைவரையும் பயமுறுத்துகிறாராம்.''

""ஓ...''

""தலைவரே... தி.மு.க சைடில் விவாதமாகி யிருக்கும் ஒரு நியூஸ் பற்றி சொல்றேன். சட்டமன்றத் தேர்த லில், எதிரில் போட்டி யாளரே இல்லாத ஒரே முதல்வர் வேட்பாளர்ங்கிற முத்திரையோடு, மு.க.ஸ்டாலினை முன்னெடுக்க நினைக்குது அறிவாலயம். அ.தி.மு.க. ஐ.டி. விங்கோ, தங்கள் முதல்வர் வேட்பாளரான எடப்பாடியோடு, மு.க.ஸ்டாலினை ஒப்பிட்டு விமர்சித்து சில பஞ்ச் டயலாக்குகளை வெளியிட்டது. இதற்கு பதிலடி கொடுக்க நினைத்த தி.மு.க.வின் ஐ.டி.விங்க், அவர்கள் பாணியிலேயே எடப்பாடியையும் ஸ்டாலினையும் ஒப்பிட்டு பஞ்ச் டயலாக்குகளை சரமாரியாக வெளியிட்டது. அதே rrபாணியில் சமூக வலைத் தளத்தில் உள்ள தி.மு.கவினரும் புகுந்து விளையாடிட்டாங்க. இதைக்கண்ட அறிவாலயம், ஸ்டாலினுக்கு இணையா யாருமில்லைங்கிற கருத்தைப் பரப்பவேண்டிய நேரத்தில், அவருக்கு போட்டியாளர் எடப்பாடி என்பது போல் நாமே இப்படி, கருத்துக்களைப் பரப்பலாமா? அ.தி.மு.க ஐ.டி. விங்கோட வலையிலே விழலாமான்னு அப்செட்டாம்.''

""ம்...''

""முன்னாள் காங்கிரஸ் பிரமுகரும் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவாருங்கிறதை அடிக்கடி அறிவிப்பவருமான கராத்தே தியாகராஜனோட 56வது பிறந்தநாளுக்கு ரஜினியும், அவரோட காங்கிரஸ் நட்பு வட்டாரத்தினரும் வாழ்த்து சொன்னாங்க. அதோடு, முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோரும் வாழ்த்து சொல்லியிருக்காங்க. கராத்தே தியாகராஜன் மூலம் சென்னையில் தி.மு.க.வுக்கு எந்த விதத்திலாவது இலைத் தரப்பு செக் வைக்கத் திட்டமிடுதாம். அதற்கான முன்னோட்டம்தான் இப்படிப்பட்ட வாழ்த்துக்கள்ன்னு சொல்றாங்க.''

""நான் ஒரு தகவலைச் சொல்றேன்... எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்னு அறிவித்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ். திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். கொரோனாவால 10 வயதுக்குட்பட்டவர்களையும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களையும் திருப்பதி தேவஸ்தானம் அனுமதிக்கிறதில்லை. 69 வயதாகும் ஓ.பி.எஸ் இந்த விதியை ஜம்ப் பண்ணி ஏழுமலையானைத் தரிசிச்சிட்டு வந்திருக்காரு.''