""ஹலோ தலைவரே, சசிகலாவுக்கு 68-வது பிறந்த நாளும் சிறையில்தான் நடந்தது. போன முறை, உள்ளே இருந்த வங்களுக்கு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடிய சசி இந்தமுறை மவுன விரதம் கடைப்பிடித்த படி, நாள் முழுக்க ஏதோ சிந்தனையிலேயே இருந்தா ராம்.''’’
""எப்போது ரிலீஸ்... இழந்த அதிகாரத்தை எப்படிப் பெறு வதுங்கிற சிந்தனையா?''’’
""ரிலீஸ் ஆகாமல் ஜெயிலில் இருந்தாலும், நேரடி அதிகாரம் கையை விட்டுப் போய்விட்டாலும், சசிகலாவுக்குன்னு இன்னமும் தமிழக அரசு அதிகாரத்தில் ஒரு பவர் இருக்குதுங்கிறதை அவர் பிறந்தநாளில் பார்க்க முடிந்ததுங்க தலைவரே... ஜெ.’ இருக்கும்போது, ஜெ-சசி ரெண்டு பேரின் பிறந்த நாளில் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான சைவ-வைணவத் திருக்கோயில்கள்ல சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்வார் சசி. அங்கங்கே இருக்கும் அதிகாரிகளும் அர்ச்சகர்களும் அதற்கான வேலைகளில் ஜரூரா களமிறங்கிடுவாங்க. 2016 செப்டம்பரில் ஜெ.’அப்பல்லோவில் அட்மிட் ஆன நேரத்திலும், சசிகலா உத்தரவுப்படி, தமிழகம் முழுக்க ஒரே நாள்ல அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள்லயும் காலை 6-ல் இருந்து 7 மணிக்குள் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடத்தப்பட்டுச்சு. அப்ப இருந்த அதே அர்ச்சகர்களும் இப்பவும் அதிகாரிகளும்தான் பெரும்பாலும் இருக்காங்க. அதனால் சசிகலா பிறந்தநாளான ஆகஸ்ட் 18 அன்று ஸ்பெஷலா வேத மந்திரங்கள் ஓதி பூஜை நடந்திருக்குது.''’’
""ஓஹோ...''’
""பவரில் இருந்தப்ப ஜெ-சசிக்கு ஸ்பெஷல் பூஜைகள் நடந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி, ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, சமயபுரம், மன்னார்குடின்னு பல இடங்களிலும் சசி குடும்பத் தார் சொன்னபடி சிறப்பு பூஜை செஞ்சிருக்காங்க. திரு வண்ணாமலை கோயில் பூஜை பற்றி மாவட்டத்தை சேர்ந்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கவனத்துக் குப் போயிருக்கு. அமைச் சர் தரப்போ வழக்கமா என்ன நடக்குமோ அதைச் செய்திடுங்கன்னு சொல் லிட்டாராம். சசிக்கான சிறப்பு பூஜைகளுக்கு எடப் பாடி அரசின் பூரண ஒத்துழைப்பு இருந்திருக்கு.''’’
""இத்தனை ஒத்துழைப்பு கிடைச்ச சசிகலா வுக்கு அத்திவரதரை தரிசிக்க வாய்ப்பு கிடைக் கலையே?''’
""நேரில்தான் வர முடியலீங்க தலைவரே...… மத்தபடி, சசி தரப்பிலான சிறப்பு அலங்காரங்கள் பூசைகளுக்கு குறைவில்லை. கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 16-வரை கிடந்த கோலத் திலும் எழுந்த கோலத்திலும் காட்சி கொடுத்த அத்திவரதரை ஏறத்தாழ 1 கோடி பேர் தரிசனம் பண்ணியிருக்காங்க. இதைத் தொடர்ந்து 17-ந் தேதி நள்ளிரவு 11:55-க்கு அத்திவரதர் அங்குள்ள திருக்குளத்தில் பழையபடி நீருக்குள் கிடத்தப் பட்டிருக்கார். இனி 40 வருடம் கழித்து 2059-ல் தான் அவரைப் பார்க்க முடியுமாம். இந்த முறை தரிசனத்தின் கடைசி நாட்களில் செம கூட்டம் இருந்தது. அதனால் பக்தர்கள் நிழலில் நின்றபடி வரிசையா வருவதற்கு வசதியா 2 கி.மீ. தூரத்துக்குப் பந்தல் போடப்பட்டது. அதுவரை 3 வரிசையில் அனுப்பப்பட்ட பக்தர்கள், 5 வரிசையில் அனுமதிக்கப்பட்டாங்க. சாம்பிராணியை தைலம் போல காய்ச்சி அத்திவரதருக்குப் பூசி, நீல நிற பட்டாடையில் துளசி பட்டாடையுடன் அவர் காட்சியளித்தார். இந்தப் பந்தல், பட்டாடை, மற்ற அலங்காரங்கள் எல்லாமே சசிகலா செலவுதானாம். அத்திவரதருக்கு செய்த சிறப்பு அலங்காரம் மூலம் தனக்கு அனுக்கிரகம் கிடைத்து சீக்கிரம் ரிலீஸ் ஆயிடலாம்னு சசி நினைக்கிறாராம்.''
“""ஜெயில் நிலவரம் என்ன?''’’
""டிசம்பர் வாக்கில் ரிலீசாகலாம்னு நம்புறாங்க. டெல்லிதான் மனசு வைக்கணும். இதற்கிடையில், தினகரன் சந்திப்புக்கு சசி மனசு வைக்கலையாம். பிறந்தநாளில் எப்படியாவது பார்த்திடணும்னு நினைச்ச தினகரனின் முயற்சிகள் பலிக்கலை. ரிலீசுக்குப் பிறகு, தினகரனை சசி ஓரங்கட்டிடுவாருன்னும், எடப்பாடி தரப்பிலிருந்து சசிகலாவுக்கு தூது படலம் தொடருதுன்னும் சசி குடும்பத்தார் சொல்றாங்க.''’
""எடப்பாடியைத்தான் எதிர்க்கட்சிகளாலேயே ஒண்ணும் செய்ய முடிய லையே.. அவர் ஏன் சசிக்கு தூது விடணும்?''’’
""அரசியலில் உள்ளே வெளியேன்னு இரண்டு கோணம் இருக்கிறது உங்களுக்கு தெரியாதுங்களா தலைவரே... பா.ஜ.க. தலை மையைப் பொறுத்தவரை, தமிழக முதல்வரா ஓ.பி.எஸ். இருக்கணும்னு நினைக்கிது. ஆனால் எடப்பாடி கேப் விடமாட்டேங்குறாரு. பா.ஜ.க.வை பொறுத்தவரை, மற்ற கட்சிகளில் உள்ளுக் குள்ளிருந்து புது எதிரிகளை உருவாக்கி பிரச்சினை பண்ணுறது வழக்கம். எடப் பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி யையும் வேலுமணியையும் எதிரா தூண்டி ஆப்பு வைக் கும் வேலை வேகமாகியிருக்கு. அடுத்த முதல்வர் நீங்கள்தான்னு இந்த இருவரிடமும் தனித்தனியே டெல்லித் தரப்பு ஆசைகாட்டி வச்சிருக்குதாம். தங்கமணி, வேலுமணி இவங்க இரண்டு பேரும்தான் மோடி-அமித்ஷா மூலமா எடப் பாடிக்கு எச்சரிக்கை மணிகளாகியிருக்காங்களாம். இதில் வேலுமணிக்கு ஜக்கி வாசுதேவ் சப்போர்ட் இருக்கு.''’
""எடப்பாடியின் டூர் புரோகிராம் எப்படி?''’’
""சரியா திட்டமிடமுடியாம இருக்காராம். மக்கள்தொடர்புத் துறையில் இருந்து எந்த அதிகாரியை அழைத்துச் செல்வதுன்னு கூட முடிவுக்கு வரமுடியாமல் குழம்பறாராம். இதுக்கிடையில் எடப் பாடியின் முதல்வர் பதவியையும், துறை பொறுப்புகளையும் தற் காலிகமாக ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைத்துவிட்டுப் போகும்படி டெல்லியி லிருந்து அதிக நெருக்கடி. ஓ.பி.எஸ், தங்கமணி, வேலுமணி உள்பட எவரையும் நம்பமுடியாத நிலையிலிருக்கும் எடப் பாடி, என் பதவியையோ பொறுப்புகளையோ எவரிடமும் ஒப்படைக்க மாட்டேன். எந்த நாட்டில் இருந்தாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிர்வாகத்தை என்னால் கவனிக்க முடியும்னு சொல்லிக் கொண்டிருக்கிறாராம். கட்சியிலும், தன் வலிமையை அதிகரிச்சிக்கணும்னு நினைக்கிறார் எடப்பாடி. அதனால் பல டெக்னிக்குகளைக் கையில் எடுக்கறார்.''’
""என்ன டெக்னிக்?''’
""தமிழகம் முழுக்க இருக்கும் நீர் நிலைகளைத் தூர் வாருவதற்கான ஏறத்தாழ 1000 கோடி ரூபாய் அளவுக்கான திட்டம் எடப்பாடி அரசின் கையில் இருக்கு. அதற்கான காண்ட்ராக்டுகளை, மாஜி மந்திரிகளின் வாரிசுகளுக்குக் கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அதனால் அவர்களை ’கிளாஸ் ஒன்’ காண்ட்ராக்டர்களாக ஆகச் செய்து, அவர்கள் காட்டில் கனமழை பெய்ய வைக்கப் போகிறாராம். இப்ப உள்ள மந்திரிங்க எதிரா திரும்பினாலும், மாஜிக்களின் ஆதரவு தனக்கு இருக்கும்ங்கிறதுதான் அவரோட வியூகம்.''’
""டெல்லிக்கு தகுந்தபடி எடப்பாடி வியூகம் வகுக்கிறாரு. காஷ்மீர் விவகாரம் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஒன்றிணைத்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்குதே?''’
""தலைவரே.. .. மாநில சுயாட்சி தீர்மானத்தை முதன்முதலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய கட்சி தி.மு.க.தான். கலைஞர் இங்கே நிறைவேற்றியதற்கு அப்புறம்தான், காஷ்மீர் சட்டமன்றத்தில் பரூக் அப்துல்லா நிறைவேற்றினார். அந்த வகையில், காஷ்மீர் விவகாரத்தை மாநில சுயாட்சி அதிகார பறிப்பா தி.மு.க. பார்க்குது. அதற்கேற்ப வியூகம் வகுக்குது. அதே நேரத்தில், ரிபப்ளிக் ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகிட்ட, சட்டதிட்டத் திருத்தக் குழுவின் இணைச்செயலாளரான வழக்கறிஞர் சரவணன், காஷ்மீர் இந்தியாவின் பகுதி இல்லைங்கிற தொனியில் பேச, டி.வி. நெறி யாளரான அர்னாப் கோஸ்வாமி எதிர்வாதம் செய்ய, எழுந்த காரசார உரையாடல்களால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளிநடப்பு செய்துவிட்டார் சரவணன். இதைத் தொடர்ந்து தி.மு.க. பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுதுன்னு இந்துத்வா தரப்பில் சர்ச்சை கிளம்பியது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவுத் தலைவர் நிர்மல்குமாரும் ‘இது தி.மு.க.வின் தேச விரோதக் கருத்து’ என்று கண்டன அறிக்கை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கும் வழக்கறிஞர் சரவணன், ""என்னை முழுமையாகப் பேசவிடாமல், அர்னாப் கோஸ்வாமி, சர்ச்சைக்கு வழி வகுத்துட்டார். இந்தியா சுதந்திரம் பெறும்போது காஷ்மீர் இந்தியாவோடு இணைந்திருக்கவில்லை. இதன்பின் சிறப்பு சலுகைகளைப் பெற்றுக் கொண்டு இணைந்தது என்று சொல்வதற்குள் அர்னாப் வேணும்னே, சுதந்திரத்திற்கு முன் என்ற சொல்லை விட்டுவிட்டு, பிரச்சினை செய்து என்னைப் பேசவிடாமல் செய்துவிட்டார்'னு சொல்லியிருக்காரு. தமிழக பா.ஜ.க. தரப்பிலிருந்து தி.மு.க.வுக்கு எதிரா தேர்தல் ஆணையத்திலும் புகார் தரப்பட்டிருக்கு. ''’
""ரஜினியையும் ப.சிதம்பரத்தையும் மையமாக்கிக் கூட கருத்து யுத்தம் கடுமையா நடக்குதே?''’
""அமித்ஷா முன்னிலையில் காஷ்மீர் சட்டப் பறிப்புக்கு ஆதரவா ரஜினி பேசியதுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து கண்டனம் வந்தது. இது ரஜினி தரப்பை எரிச்சலாக்கிடிச்சி. சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையின் 3 அம்சங்களை ப.சி. பாராட்டியிருக்கார். குறிப்பா பிளாஸ்டிக் இல்லாத இந்தியா, குடும்பக் கட்டுப்பாடு பற்றி மோடி பேசியதை ப.சிதம்பரம் தன் டிவிட்டரில் பாராட்டினார். இதைக்கண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர், கதர்சட்டைப் ப.சி.க்கு காவி டிரஸ் மோடி மீது ஏன் இந்த திடீர் காதல்? தன் குடும்பத்தினர் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்க, அவர் கையில் எடுக்கும் தந்திரமா?ன்னு கேள்வி எழுப்புவதோடு, இது சம்பந்தமா காங்கிரஸ் தலைமைக்கும் காரசார கடிதங்களை எழுதிக் கிட்டிருக்காங்க.''’
""தமிழக காங்கிரஸ் தலைவரான கே.எஸ்.அழகிரி மீதும் புகார் எழுந்திருக்கே?''’
""அது சம்பந்தமா நான் சொல்றேன்... கே.எஸ்.அழகிரி, தன் குடும்பத்தாரோடு சேர்ந்து, சிதம்பரத்தில் காமராஜர் பெயரில் கடல்சார் அறிவியல் தொழில் நுட்பக் கல்லூரி என்ற நிறுவனத்தை நடத்திக்கிட்டு இருக்கார். மாணவர்களிடம் இந்த ஆண்டு 42 கோடி ரூபாய் அளவிற்குக் கட்டணமாக வசூலிச்ச இந்த நிறுவனம், இதுவரை எந்தவிதப் பாடமும் நடத்தாமல் பயிற்சியும் கொடுக்காமல், வெறுமனே சர்டிபிகேட்டை மட்டும் கொடுத்துருக்குதாம். கொதிப்படைந்த மாணவர்கள் இது தொடர்பா மும்பையில் இருக்கும் கப்பல் போக்குவரத்துத் துறையின் டைரக்டர் ஜெனரலுக்குப் புகார்களை அனுப்பி யிருக்காங்களாம். அதனால் இப்ப மும்பையில் இருந்து விளக்கம் கேட்டு கே.எஸ். அழகிரிக்கு நோட்டீஸ் வந்திருக்கு. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ப.சி. குடும்பம் போல, கே.எஸ்.அழகிரி குடும்பத் துக்கும் நெருக்கடி ஏற்படும். ரொம்ப அப்செட்டா இருக்கும் அழகிரி, 17-ந் தேதி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழாவில் கூட கலந்துக்கலை...''