"ஹலோ தலைவரே, மத்திய அரசு, ரிசர்வ் பேங்கிலிருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாகப் பெறுவது, பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு''’
""ஆமாம்ப்பா, ரிசர்வ் பேங்க் என்பதே நிதியை ரிசர்வ் பண்ணி வைக்கக்கூடிய நிறுவனம்தான். நம் நாட்டின் நிதி ஆதாரமாக இருக்கும் அந்த ரிசர்வ் பேங்கிலிருந்து நிதியை நேரடியாக எடுப்பது என்பது, விதை நெல்லை எடுத்து சமைப்பது மாதிரிதானே?''’
"சரியா சொன்னீங்க தலைவரே, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இதுவரை கொண்டு வந்த பொருளாதாரத் திட்டங்கள் எல் லாமே நெகட்டிவ் பலன்களையே கொடுத்திருக்கு. குறிப்பா, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி, அரசுத்துறைகளை தனியார் மயத்துக்குக் கொண்டு வர்றதுன்னு அது அமல்படுத்திய அத்தனை திட்டமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கொஞ்சமும் கை கொடுக்கலை. அதனால் பட்ஜெட்டிலும் தொடர்ந்து கோடிக் கணக்கில் துண்டு விழுது. இதனால் ஏற்பட்ட சரிவைச் சமாளிக்க முடியாமல்தான், ரிசர்வ் பேங்கின் கஜானாவில் கைவைக்க முடிவு செஞ்சார் மோடி. ஆனால் ரிசர்வ் பேங்க் கவர்னர்களா இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் ஆகியோர் பொருளாதார நிலவரம் அறிந்ததால் இதுக்கு ஒத்துக்கலை. இந்த நிலையில் இப்ப ரிசர்வ் பேங்க் கவர்னரா சக்தி கந்ததாஸ் வந்ததும், மோடி யின் எதிர்பார்ப்பு எளிதா நிறைவேற்றப்பட்டிருக்கு. இந்த நிதிப் பரிமாற்றத்தால் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி உருவாகப்போகுதுன்னு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறாங்க''’
""இந்தியப் பொருளாதார நிலைமை ஒரு பக்கம்னா, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை சரிபண்ண முதல்வர் எடப்பாடி வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிட்டாரே?''’
""எடப்பாடி, டூர் புரோகிராமைப் போட ஆரம்பிச்சதில் இருந்தே, அவர் பொறுப்பையும், அவர் வசம் இருந்த இலாகாக்களையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட மந்திரிகள்ட்ட கொடுத்துட்டுப் போகணுங்கிற குரல் உள்ளுக்குள்ளே பலமா எழத் தொடங்கிடிச்சி. அதேபோல் மத்திய அரசும், ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டுப் போங்கன்னு வலியுறுத்துச்சு. ஆனால், எடப்பாடியோ, "இப்போதைய தொழில் நுட்ப காலத்தில் பொறுப்பை ஒப்படைக்கத் "தேவையில்லை, இருந்த இடத்தில் இருந்தே கான்பரன்ஸ் மூலம் நிர்வாகத்தை என்னால் கவனிக்க முடியும்'னு அமைதியா மத்திய அரசிடம் விளக்கம் கொடுத்து, மோடி-அமித்ஷா வையும் சமாதானப்படுத்திட்டாரு. அதன
"ஹலோ தலைவரே, மத்திய அரசு, ரிசர்வ் பேங்கிலிருந்து 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை நிதியாகப் பெறுவது, பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு''’
""ஆமாம்ப்பா, ரிசர்வ் பேங்க் என்பதே நிதியை ரிசர்வ் பண்ணி வைக்கக்கூடிய நிறுவனம்தான். நம் நாட்டின் நிதி ஆதாரமாக இருக்கும் அந்த ரிசர்வ் பேங்கிலிருந்து நிதியை நேரடியாக எடுப்பது என்பது, விதை நெல்லை எடுத்து சமைப்பது மாதிரிதானே?''’
"சரியா சொன்னீங்க தலைவரே, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இதுவரை கொண்டு வந்த பொருளாதாரத் திட்டங்கள் எல் லாமே நெகட்டிவ் பலன்களையே கொடுத்திருக்கு. குறிப்பா, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி, அரசுத்துறைகளை தனியார் மயத்துக்குக் கொண்டு வர்றதுன்னு அது அமல்படுத்திய அத்தனை திட்டமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கொஞ்சமும் கை கொடுக்கலை. அதனால் பட்ஜெட்டிலும் தொடர்ந்து கோடிக் கணக்கில் துண்டு விழுது. இதனால் ஏற்பட்ட சரிவைச் சமாளிக்க முடியாமல்தான், ரிசர்வ் பேங்கின் கஜானாவில் கைவைக்க முடிவு செஞ்சார் மோடி. ஆனால் ரிசர்வ் பேங்க் கவர்னர்களா இருந்த ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் ஆகியோர் பொருளாதார நிலவரம் அறிந்ததால் இதுக்கு ஒத்துக்கலை. இந்த நிலையில் இப்ப ரிசர்வ் பேங்க் கவர்னரா சக்தி கந்ததாஸ் வந்ததும், மோடி யின் எதிர்பார்ப்பு எளிதா நிறைவேற்றப்பட்டிருக்கு. இந்த நிதிப் பரிமாற்றத்தால் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி உருவாகப்போகுதுன்னு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை மணி அடிக்கிறாங்க''’
""இந்தியப் பொருளாதார நிலைமை ஒரு பக்கம்னா, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை சரிபண்ண முதல்வர் எடப்பாடி வெளிநாட்டுப் பயணத்தைத் தொடங்கிட்டாரே?''’
""எடப்பாடி, டூர் புரோகிராமைப் போட ஆரம்பிச்சதில் இருந்தே, அவர் பொறுப்பையும், அவர் வசம் இருந்த இலாகாக்களையும் ஓ.பி.எஸ். உள்ளிட்ட மந்திரிகள்ட்ட கொடுத்துட்டுப் போகணுங்கிற குரல் உள்ளுக்குள்ளே பலமா எழத் தொடங்கிடிச்சி. அதேபோல் மத்திய அரசும், ஓ.பி.எஸ்.சிடம் பொறுப்பை ஒப்படைச்சிட்டுப் போங்கன்னு வலியுறுத்துச்சு. ஆனால், எடப்பாடியோ, "இப்போதைய தொழில் நுட்ப காலத்தில் பொறுப்பை ஒப்படைக்கத் "தேவையில்லை, இருந்த இடத்தில் இருந்தே கான்பரன்ஸ் மூலம் நிர்வாகத்தை என்னால் கவனிக்க முடியும்'னு அமைதியா மத்திய அரசிடம் விளக்கம் கொடுத்து, மோடி-அமித்ஷா வையும் சமாதானப்படுத்திட்டாரு. அதனால் எவரிடமும் தன் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் தன் டீமோட பிளைட்டும் ஏறிட்டார்.''’
""ஃபாரின் டூர் போட்டோக்களெல்லாம் பார்த்தேம்ப்பா...''’
""அவருடைய இந்த சாமர்த்தியத்தைப் பார்த்து திகைச்சிப் போன ஓ.பி.எஸ். ஆதரவாளர்களே, கட்சியிலும் ஆட்சியிலும் தன்னை நிலை நிறுத்திக்கிட்ட எடப்பாடியை இனி எதிர்க்க முடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு, அவரை வழியனுப்ப ஏர்போர்ட்டுக்கே வந்துட் டாங்க. ஜெ.-சசி காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட, காலில் விழும் கலாச்சாரத்தை எடப்பாடியிடமும் அ.தி.மு.க.வினர் ஆரம்பிச்சிட்டாங்க. அவரை வழியனுப்ப வந்தவர்களில் மாஜி மந்திரிகளான ரமணா, மூர்த்தி உள்ளிட்ட பலரும், எடப்பாடியின் கையில் பூங்கொத்துகளைக் கொடுத்துட்டு, அவர் கால்களையும் தொட்டு வணங்கி இருக்காங்க. இது ஆளும்கட்சித் தரப்பிலேயே பரபரப்பை உண்டாக்கியிருக்கு. திரும்பி வரும்போதும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப் போறாங்களாம்'' ’
""டூர் போறதுக்கு முன்னாடி, புகாருக்கு ஆளான அமைச்சர்களையும் எடப்பாடி வார்ன் பண்ணினாராமே?''’
""ஆமாங்க தலைவரே, கோட்டையில் அமைச்சர்கள் பலரையும் சந்திச்சிப் பேசினார் எடப்பாடி. அப்ப அமைச்சர் ஸ்ரீரங்கம் வளர் மதியை அழைத்தவர் அவர் மீது குவிந்திருந்த புகார்கள் குறித்து நீண்ட நேரம் விசாரணை நடத்தினாராம். அதேபோல் திருச்சி முசிறி பகுதியில் எடப்பாடி தரப்பு நடத்திவரும் கல்லூரி, பெட்ரோல் பங்குகள், டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றில், எந்த வகையிலும் மந்திரி ஆட்கள் மூக்கு நுழைக்கக் கூடாதுன்னும் அறிவுறுத்தப் பட்டதாம். அதனால் முதல்வரின் அறையில் இருந்து வெளியே வந்தபோது அமைச்சர் வளர்மதியின் முகத்தில் ஈ ஆடவில்லையாம். அதேபோல் தன் வெளிநாட்டு டூரில் பால்வளத் துறை செயலாளரான கோபால் ஐ.ஏ.எஸ்.சை சேர்த்துக் கொண்ட எடப்பாடி, ஏன் பால் வளம் குறித்த முதலீடுகளை ஈர்க்க, ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்.ஸை சேர்த்துக்கொள்ளவில்லை என்ற சர்ச்சையும் கோட்டையில் எதிரொலிக்கிது. இந்த பரபரப்புக்கு மத்தியிலும் வெளிநாட்டு பயணம் குறித்த தகவலை கர்நாடக சிறையில் இருக்கும் தன்னோட மாஜி சின்னம்மாவான சசிகலாவுக்கு பணிவோடு அனுப்பிவிட்டுத்தான் போயிருக்கார் எடப்பாடி''
""எடப்பாடி வெளிநாட்டுக்குப் போயிருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பரபரப்பு காணப்படுதே?''’
""ஆமாங்க தலைவரே, கவர்னரின் செயலாளரான ராஜகோபால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கணும்னு விரும்பினாராம். இதையொட்டி ஒவ்வொரு பல்கலைக்கழகமா போயி, விவாத அரங்குகளை நடத்தத் திட்டமிட்டிருக்கார். தன் முதல் நிகழ்ச்சியை 29-ந் தேதி திருச்சி பாரதிதாசன் பல் கலைக்கழகத்தில் நடத்தப் போறதா, அங்கிருந்தவர் களுக்குத் தகவல் கொடுத் திருக்கார். இதைப்பார்த்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத், ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கார். அதில் நம் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் வரப்போகிறார். அதனால், அன்றைக்கு பார்வைக்கு மகிழ்வளிக்கும் வகையில் உடையணிந்து வரணும்னு குறிப்பிட்டிருந்தார். ஆண்-பெண் என இரு தரப்பு பேராசிரியர்களும் உள்ள பல்கலையில் கவர்னரின் செயலாளருக்காக இப்படி ஒரு சுற்றறிக்கையைப் பார்த்து கடுப்பான பேராசிரியர்கள், "பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் வந்து ஆலோசிக்கலாம்... அவருடைய உதவியாளர் நிலையில் இருக்கும் அதிகாரி எப்படி நம்மை அழைத்துக் கூட்டம் போடுவார்? "அவருக்கு என்ன அதிகாரம் இருக்கு?'ன்னு கொந்தளிச்சிட்டாங்க. உடனே துறை அமைச்ச ரான அன்பழகனுக்கு அவர்களிடம் இருந்து புகார்கள் பறந்தன. இது தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பார்வைக்குப் போக, அது கவர்னர் காதுக்கு போய் அவரை சூடாக்கிடிச்சி''
""ஓ...''’
""நிகழ்ச்சியை உடனடியா ரத்து செஞ்சிட் டாங்க. இருந்தாலும் நிறைய டவுட் நீடிக்குது. நீண்ட நாட்களாக அந்தப் பல்கலைக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 60 பேரை நிரந்தரப் பணியாளர்களா இப்ப ஆக்கப்போறாங்க. அதேபோல் அங்கே 26 உதவிப் பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 14 பேராசிரியர்கள்னு மொத்தம் 54 பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு வருதாம். இப்படிப்பட்ட நேரத்தில் எதுக்கு ஆளுநரின் செயலா ளர் இங்கே டூர் புரோக்ராம் போட ணும்னு அங்க இருக்கும் பேராசிரியர்கள் சந்தேகம் கிளப்பு றாங்க. கவர்னரின் செயலாளர் விசிட் பற்றி தனக்குத் தெரியாதுன்னு உயர்கல்வி அமைச்சர் சொல்ல... திருச்சி விவாத அரங்கை நான் உறுதி செய்யலைன்னு கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் விளக்கம் கொடுத்திருக்கார்''’
""தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை நியமிக்க அதன் டெல்லித் தலைமை தயாராயிடுச்சாமே?''’
""எம்.பி. தேர்தல் தோல்விக்குப் பிறகு, மாநில பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிக்க ஆலோசனை நடந்திட்டிருக்கு. அகில இந்திய பா.ஜ.க. செயல் தலைவர் நட்டா ஒரு சீக்ரெட் ஆய்வுக் குழுவை அனுப்பிவச்சார். அந்தக் குழு தமிழகம் வந்து பா.ஜ.க. தொண்டர்களின் மன நிலையை அலசி ஆராய்ந்தது. அதன் அடிப்படை யில் இப்ப தலைமைப் பதவியைக் குறிவைத் திருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குறித்து திருப்தியான கருத்துக்களைச் சொல்லலையாம். அதேசமயம் ஒரு சிலரின் பெயரை அது பரிந்துரை பண்ணியிருக்கு. அதில் பெரும்பான்மைச் சமூகமான வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜையும், மிகச்சிறுபான்மைச் சமூகமான செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த நரசிம்மனையும் அந்தப் பட்டியலில் அது வைத்திருக்கிறது''’
""கோவை மாநகர் பலத்த பரபரப்பில் இருக்கு தாமே? ஏதேனும் தீவிரவாதிகள் விவகாரமா?''’
""இது வேற விவகாரம்ங்க தலைவரே, ஈஷா மைய குருவான ஜக்கி வாசுதேவின் வலது கரமாக இருந்தவர் ஏகா சாமி என்கிற தாயுமானவன். திருச்சிக்காரரான அவர்தான் ஈஷா யோக மையக் கட்டிடங்களை முன்னின்று கட்டியவர். ஜக்கியின் சகல கணக்கு வழக்குகளோடும் இவர் சம்பந்தப் பட்டவர். ஜக்கிக்கு அடுத்த நிலையில் இருந்த இந்த தாயுமானவனுக்கும் ஜக்கிக்கும் பர்சனல் மேட்டரில் பிரச்சினை வெடிக்க, அது இருவருக்கும் இடையே பெரும் பிரச்சினையாகியிருக்கு. இந்த நிலையில் தாயுமானவன் ஜக்கியின் ஆசிரமத்தில் இருந்து மாயமாகிவிட்டார். இதனால் திகைத்துப் போன ஜக்கி, தாயுமானவனைக் கண்டுபிடிக்க அமைச்சர் வேலுமணியின் உதவியைக் கேட்டிருக்காரு. அதனால், போலீஸ் டீம் கோவைப் பகுதியையே சலித்தெடுத்துக்கொண்டு இருக்குது''’
""நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன். இலங்கை தொடர் குண்டு வெடிப்போடு தொடர்புடைய தீவிரவாதிகளின் உடல்களை, அங்குள்ள நீதிமன் றம் அடக்கம் பண்ணச் சொல்லிவிட்டது. உடனே சிங்களப் போலீஸ் மட்டக்களப்பில் இருக்கும் இஸ்லாமிய கல்லறைப் பகுதியில் அவர்களை அடக்கம் செய்ய முயன்றது. இதற்கு இஸ்லாமியத் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அந்த உடல்களை தமிழர்களின் இடுகாட்டுப் பகுதியில் புதைக்க போலீஸ் டீம் முயன்றது. இதற்கும் அங்குள்ள தமிழர்களோடு சேர்ந்து தமிழ் அமைச்சர் செந்தில் தொண்டமானும் பலமாக எதிர்ப்பு தெரிவிச்சிருக்கார். இருந்தும் தீவிரவாதிகளில் ஒருவனான முகமது அசரத் தின் உடலை தமிழர்களின் இடுகாட்டிற்கு அதிரடியாகக் கொண்டு வந்து அடக்கம் செய்துவிட்டுப் போயிருக்கிறது சிங்கள போலீஸ். ஏற்கனவே, போர்க் குற்றவாளி என ஐ.நா. சபை வரை குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 58-ஆவது படையணியின் தலைவராக இருந்த ஷவேந்திர சில்வாவை தலைமைத் தளபதியாக ஆக்கியிருக் காங்க. அதோடு இலங்கைக்கான அதிபர் தேர்த லில், ’ராஜபக்சே தம்பி’கோத்தபய ராஜபக்சே மீண்டும் போட்டியிட இருப்பதுன்னு தமிழர் களுக்கு கடும் நெருக்கடி உருவாகியிருக்கு.''
______________
இறுதிச் சுற்று
பழைய நாயகிக்கு புது பொறுப்பு?
முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி வெளிநாடு செல்லும் முன்பு பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் அரசு உயரதிகாரிகளும் முதல்வரை சந்தித்து வெளிநாட்டு பயணத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வரிசையில், எடப்பாடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்திருக் கிறார் பழம்பெரும் நடிகையும் எம்.ஜி.ஆரின் கதாநாயகியுமான லதா. வெளிநாட்டிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி திரும்பியதும், எம்.ஜி. ஆர். விசுவாசிகளை ஒருங்கிணைக்கும் பணியை லதாவிடம் ஒப்படைக் கும் வகையில் அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க முடிவு செய்திருப்ப தாகவும் அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.
-இளையர்
கேள்விக்கு பதில், அடி!
சேலத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான பியூஷ் மானுஷ் கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி, பொருளாதார மந்த நிலை, காஷ்மீர் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க சேலம் பா.ஜ.க. அலுவலகம் செல்வ தாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அங்கு சென்றார். பல்வேறு விவகாரங்கள் குறித்து அங்கிருந்த பா.ஜ.க.வினரிடம் கேள்வியெழுப்ப, அவர்களும் அவரிடம் கேள்விகள் எழுப்பியதுடன், அவரை "வந்தேறி' என விமர்சனமும் செய்தனர். ஒருகட்டத்தில் அங்கிருந்தவர்கள் அவரைத் தாக்கியதுடன் அவருக்கு செருப்பு மாலை அணிவிக்கவும் முயற்சிசெய்தனர். அங்கு காவ லுக்கு இருந்த போலீசார் தொடக் கத்தில் இவையனைத்தையும் வேடிக்கை பார்த்தனரேயன்றி, தாக்குதலைத் தடுக்க முயற்சிக்க வில்லை. அங்கு நடந்த கடும் தாக்குதலில் பியூஷ் மானுஷ் மயங்கிவிழுந்தார். இதையடுத்து போலீசாரிடம் இரு தரப்பினரும் புகார் செய்தனர். பியூஷ் மீது தாக்குதல் நடத்தியதாக பா.ஜ.க. தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-க.சுப்பிரமணியன்