"ஹலோ தலைவரே உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாத நிலையிலும் எல்லாப் பக்கமும் கூட்டணிக் குளறுபடிகளைப் பார்க்க முடியுது''’
""ஆமாம்பா, கட்சித் தலைமைகள் மேலே கூட்டணிப் பங்கீடுகள் குறித்துப் பேசி முடிவெடுத்தாலும், இரண்டு பெரிய கட்சிகளின் மா.செ.க்கள் லெவலில் தனித்தனியா லாபி பண்றாங்கன்னு தகவல் வருதேப்பா''’
""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. கூட்டணியில் இப்ப ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துக்கிட்டு இருக்கு. குறிப்பா ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள், பா.ஜ.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் நாங்க சீட் ஒதுக்க முடி யாதுன்னு சொன்னதோட, பா.ம.க.வினரின் தோளில் மட்டும் கைபோட்டுக்கிட்டு சீட்டுகளைப் பகிர்ந்துக்கறாங்க. இதனால் மற்ற இரு கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு எதிரா கோதாவில் குதிக்கிது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் அனுசரணை காட்டாததால், அங்கும் பா.ஜ.க.வினர் அங்கங்கே தனித்துக் களமிறங்கறாங்க. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மந்திரிகளும் மாஜி மந்திரிகளும் எம்.பி.க்களும், லாபி பண்ணி தங்கள் கூட்டணிக் கட்சியினரைப் பதற வச்சிக்கிட்டு இருக்காங்க. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனியில், தினகரனின் அ.ம.மு.க.வினர், நான்கைந்து இடங்களில் தேர்தலே வராமல் போட்டி யாளர்களை வசப்படுத்திக்கிட்டு அன்னப்போஸ்ட்டா வெற்றிவாகை சூட முயற்சிக்கிறாங்க. இதில் ஓ.பி.எஸ். தரப்பே அப்செட்டாகி இருக்குதாம்''’
""அரசியல் எதிரிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட உள்ளாட்சித் தேர்தலில் சீக்ரெட்டாக் கைகோத்து தேர்தல் உடன்பாடு செய்து கொள்வதாவும் சொல்லப்படுதே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வில் இருக்கும் மா.செ.க்களும், பவர்ஃபுல் மாஜி மந்திரிகளும் லோக்கலில் இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களோடு டீலிங் பேசி, அவங்களுக்குள் உடன் பாடா போய்க்கிட்டு இருக்காங்க. இது இருதரப்பு கூட்டணிக் கட்சிகளையும் மிரள வச்சிருக்கு. குறிப்பா சொல்லணும்னா, விருது நகர் மாவட்டத்தில் தி.மு.க. முன் னாள் அமைச்சரான கே.கே.எஸ். எஸ்.ஆரும் இப்போதைய அ.தி. மு.க. அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும் ரகசியமா கை கோத்து அதிரடி டீலிங்கில் இருக்காங்க. இதன்படி மாவட் டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் தொடர்புடைய உள்ளாட்சிப் பதவிகள் தி.மு.க.வுக்காம். விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட மற்ற பகுதிகள் அ.தி.மு.க.வுக்காம். அதனால் முட்டல் மோதல் எதுவும் இல்லாம இருதரப்புக்கும் ஆதாயம் கிடைக்கும்ன்னு இரு தரப்பும் சந்தோசமா இருக்குதாம். இதேபோல் திருவாரூர் மாவட்ட மன்னார்குட
"ஹலோ தலைவரே உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒருவாரம் கூட இல்லாத நிலையிலும் எல்லாப் பக்கமும் கூட்டணிக் குளறுபடிகளைப் பார்க்க முடியுது''’
""ஆமாம்பா, கட்சித் தலைமைகள் மேலே கூட்டணிப் பங்கீடுகள் குறித்துப் பேசி முடிவெடுத்தாலும், இரண்டு பெரிய கட்சிகளின் மா.செ.க்கள் லெவலில் தனித்தனியா லாபி பண்றாங்கன்னு தகவல் வருதேப்பா''’
""உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க. கூட்டணியில் இப்ப ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துக்கிட்டு இருக்கு. குறிப்பா ஈரோடு மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள், பா.ஜ.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் நாங்க சீட் ஒதுக்க முடி யாதுன்னு சொன்னதோட, பா.ம.க.வினரின் தோளில் மட்டும் கைபோட்டுக்கிட்டு சீட்டுகளைப் பகிர்ந்துக்கறாங்க. இதனால் மற்ற இரு கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு எதிரா கோதாவில் குதிக்கிது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அ.தி.மு.க.வினர் அனுசரணை காட்டாததால், அங்கும் பா.ஜ.க.வினர் அங்கங்கே தனித்துக் களமிறங்கறாங்க. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த மந்திரிகளும் மாஜி மந்திரிகளும் எம்.பி.க்களும், லாபி பண்ணி தங்கள் கூட்டணிக் கட்சியினரைப் பதற வச்சிக்கிட்டு இருக்காங்க. துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனியில், தினகரனின் அ.ம.மு.க.வினர், நான்கைந்து இடங்களில் தேர்தலே வராமல் போட்டி யாளர்களை வசப்படுத்திக்கிட்டு அன்னப்போஸ்ட்டா வெற்றிவாகை சூட முயற்சிக்கிறாங்க. இதில் ஓ.பி.எஸ். தரப்பே அப்செட்டாகி இருக்குதாம்''’
""அரசியல் எதிரிகளான தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட உள்ளாட்சித் தேர்தலில் சீக்ரெட்டாக் கைகோத்து தேர்தல் உடன்பாடு செய்து கொள்வதாவும் சொல்லப்படுதே?''
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வில் இருக்கும் மா.செ.க்களும், பவர்ஃபுல் மாஜி மந்திரிகளும் லோக்கலில் இருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களோடு டீலிங் பேசி, அவங்களுக்குள் உடன் பாடா போய்க்கிட்டு இருக்காங்க. இது இருதரப்பு கூட்டணிக் கட்சிகளையும் மிரள வச்சிருக்கு. குறிப்பா சொல்லணும்னா, விருது நகர் மாவட்டத்தில் தி.மு.க. முன் னாள் அமைச்சரான கே.கே.எஸ். எஸ்.ஆரும் இப்போதைய அ.தி. மு.க. அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும் ரகசியமா கை கோத்து அதிரடி டீலிங்கில் இருக்காங்க. இதன்படி மாவட் டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம் தொடர்புடைய உள்ளாட்சிப் பதவிகள் தி.மு.க.வுக்காம். விருதுநகர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட மற்ற பகுதிகள் அ.தி.மு.க.வுக்காம். அதனால் முட்டல் மோதல் எதுவும் இல்லாம இருதரப்புக்கும் ஆதாயம் கிடைக்கும்ன்னு இரு தரப்பும் சந்தோசமா இருக்குதாம். இதேபோல் திருவாரூர் மாவட்ட மன்னார்குடி மேற்கு ஒன்றியத் தில் உள்ள சேரன்குளம் டி.டி.வி. தினகரனின் சொந்த ஏரியா. இங்கே ஒன்றியக்குழு உறுப்பின ருக்கும் பஞ்சாயத்து உறுப்பின ருக்கும் தி.மு.க. சார்பில் யாரும் போட்டியிடலை. வேட்டைத் திடல் ஊராட்சியிலும் தி.மு.க. போட்டியிடாம ஒதுங்கியதால் அ.தி.மு.க. சத்தியமூர்த்தி போட்டியின்றி தலை வரா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்காரு. இப்படி கட்சித் தலைமைகளுக் குத் தெரியாமல் லோக் கல்ல இவங்க உருவாக் கும் சீக்ரெட் கூட் டணியால் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளில், கட்சித் தலைமைகள் நினைக்கிற மாதிரி எதுவும் நடக் காதுங்கிற நிலைமை ஏற்பட்டிருக்கு''’
""இதே மாதிரி போனால் மாநகராட்சி, நகராட்சித் தேர்தல்கள் என்னாகும்?''’
""சரியான கேள்வியை வைக்கிறீங்க தலைவரே, கட்சித் தலைமைகளைத் தாண்டி அங்கங்கும் லோக்கலில் ’வல்லான் வகுத்ததே வாய்க் கால்ங்கிற மாதிரிதான், டீலிங் பேரங்கள் மூலம் எதிர்பாரா திருப்பங்கள் ஏற்படும்ங்கிற நிலை மைதான் வந்துக்கிட்டு இருக்குது. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இருப்பதால், இந்தத் தேர்தல்களையும் நடத்தும்படி உத்தரவு வரலாம்னு எடப்பாடி அரசு நினைக்கிது. அதனால்தான், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான இட ஒதுக்கீட்டையும் அது அவசரகதியில் அறிவிச்சிது. இந்தப் பதவிகளில் கூட்டணிக் கட்சிகளை உட்கார வச்சிடக்கூடாதுங் கிற கவனத்தோட அ.தி.மு.க. செயல்படுது. இப்பவே மாநகராட்சிப் பதவிகளைக் குறிவச்சி அ.தி.மு.க., தி.மு.க. ரெண்டு தரப்பிலும் ரேஸ் ஆரம்பிச்சிடுச்சி. சென்னை மாநகராட்சி மேயர் பதவியை அ.தி.மு.க.வைச் சேர்ந்த தென்சென்னை முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் குறிவைத்தபோதும், எம்.எல்.ஏ. வான தி.நகர் சத்யா, எப்படியும் மேயர் நாற்காலியைக் கைப்பற்றிடணும்னு வரிஞ்சிக்கட்டி நிக்கிறார். இதுக்காக 20 ’சி’வரை அவர் வாரி இறைக்கவும் ரெடியாயிட்டாராம். முதல்வர் எடப்பாடி, அமைச்சர் வேலுமணி ஆகியோரின் கடைக்கண் பார்வையையும் தன் சாமர்த்தியத்தால் பெற்றுவிட்டாராம் சத்யா''’’
""உள்ளாட்சிச் செய்திகள் இருக்கட்டும்பா. பொள்ளாச்சி விவகாரம் பத்தியும் ஏதேதோ தகவல் வருதே?''’
""பொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ. சீக்ரெட்டா ஒரு அதிரடி ரிப்போர்ட்டைத் தயார் பண்ணி டெல்லிக்கு அனுப்பியிருக்குதாம். அதில், பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டிருப்பது உண்மைதான் என்றும், இவர்கள் ஏழ்மையான, அழகான பெண்களை குறிவைத்து செயல்பட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருப்ப தோடு, அந்த மாதிரியான அப்பாவிப் பெண்களைக் கவர மகளிர் சுய உதவிக் குழுவில் அவர்களுக்கு கடன் வாங்கித் தருவதாக அணுகுவார்கள். இந்தக் கிரிமினல் கும்பலில் சிலர் கந்துவட்டித் தொழிலையும் நடத்தி வந்தனர். அதனால் பெண்களுக்குக் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தும் அவர்களை வீழ்த்தினார்கள். இப்படி நூற்றுக்கணக்கான பெண்களை இவர்கள் தங்கள் வலையில் விழ வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் அந்த ரிப்போர்ட்டில் அழுத் தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிற தாம். அதோடு, இவர் களால் ஏமாற்றப்பட்ட நான்கைந்து பெண் களின் கண்ணீர் ததும் பும் வாக்குமூலத்தையும் அவர்கள் இணைத்திருக் கிறார்களாம். ஆளுந் தரப்பு பிரபலங்கள் பலர் பெயர் அடிபடுதாம். இந்த பகீர் அறிக்கை யைப் பார்த்த டெல்லி மேலிடம், உள்ளாட்சித் தேர்தல்வரை மேற் கொண்டு எந்த நட வடிக்கையிலும் இறங்க வேண்டாம். நாங்கள் சொல்லும்போது நட வடிக்கை எடுத்தால் போதுமானது என்று சொல்லியிருக்கிறதாம். இது சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பிலிருந்தே நமக்குக் கிடைக்கிற செய்தி''’
""குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரா, தமிழகத்தி லும் பலத்த சூறாவளி வீசிக்கிட்டு இருக்கு. இந்த நிலையில், தலை மைச் செயலக அதிகாரி ஒருவர் சொல்லித்தான் மோடி அரசின் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித் தேன்னு அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினரான எஸ்.ஆர்.பால சுப்பிரமணியம் சொல்லியிருப்பது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி யிருக்கே?''’
""உண்மைதாங்க தலைவரே, பொதுவாக எந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் அவரவர் கட்சியைச் சேர்ந்த கொறடாக்கள் மூலம்தான், இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் யாரை ஆதரிக்கணும்னு உத்தரவு போகும். அப்படியிருக்க, எஸ். ஆர்.பி., தலைமைச்செயலக அதிகாரி சொல்லித்தான் வாக்களித்தேன்னு சொன்னது சர்ச்சையை எழுப்பியிருக்கு. தி.மு.க. பொருளாளரான துரைமுருகனோ, அப்ப தலைமைச்செயலகம் அரசியல் கேந்திரமா செயல்படுதான்னு கேள்வி எழுப்பியிருக்கார். இதைத் தொடர்ந்து எஸ்.ஆர்.பி.க்கு கோட்டை அதிகாரி எதற் காக உத்தரவிட்டாருன்னு நாம் விசாரணையில் இறங்கினோம். அப்ப, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன் றத்தின் இரு அவைகளிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரிக்கணும்னு டெல்லி அ.தி.மு.க.வுக்கு கறாராக உத்தரவிட் டது. உடனே அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு இந்தத் தகவலை பாஸ் பண்ணுமாறு அந்தக் கட்சியின் கொறடாவான விஜிலா சத்தியானந்திடம் கட்சித் தலைமை உத்தரவிட்டது. இருந் தும் அவர் மூலம் தகவல் யாருக்காவது போய்ச் சேரலைன்னா டெல்லியின் கோபத்துக்கு ஆளாகணுமேங்கிற எச்சரிக்கையால் முதல்வர் எடப்பாடி, தன் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மூலம் தங்கள் எம்.பி.க்களுக்கு தன் பங்கிற்கும் செய்தி அனுப்பிட்டார்னு கோட்டைவட்டாரம் சொல்லுது''’
""குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்க்கும் தி.மு.க., தன் தோழமைக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி பேரணியை அறிவிச்சிருக்கே?''’
""ஆமாங்க தலைவரே, தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தி.க., காங்கிரஸ், சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., ம.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் 18-ந் தேதி சென்னையில் கூடி விவாதிச்சிது. அப்ப குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழகம் தழுவிய பந்த்தை அறிவிக்கலாமேன்னு சிலர் சொல்ல, ஸ்டாலினோ, நாம் பந்த்தை அறிவிச்சா, ஆளும்கட்சி கடைகளை வலியுறுத்தித் திறக்கவைக்கும். அதோட உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் கடைகளை மூடச்சொல்வது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும். அதனால் 13-ந் தேதி மாபெரும் கண்டனப் பேரணியை நடத்துவோம்ன்னு சொன்னார். இதை எல்லோரும் ஏகமனதா ஏத்துக்கிட்டாங்க.''
""ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்காத மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலும் தி.மு.க. கூட்டணி நடத்தும் பேரணிக்கு தங்கள் ஆதரவு உண்டுன்னு தெரிவிச்சிருக்காரே?''’
""செய்தியாளர்களை கமல் சந்திச்சப்ப, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் நீங்கள், அதை எதிர்த்து தி.மு.க. கூட்டணி நடத்தும் பேரணியில் கலந்துகொள்வீர்களான்னு அவர்முன் கேள்வி வைக்கப்பட்டது. உடனே கமல், தி.மு.க. நடத்திய கூட்டத்துக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையேன்னு சொன்னார். இது தன் கவனத்துக்கு வந்ததும், கமலைத் தொடர்புகொண்ட மு.க.ஸ்டாலின், நாங்கள் எங்கள் தோழமைக் கட்சிகளின் கூட்டத்தை நடத்தியதால், உங்களை அழைக்கவில்லை. நாம் குடியுரிமை மசோதா விவகாரத்தில் ஒரே உணர் வோடு இருப்பதால், அதற்கு எதிரான பேரணியில் நீங்களும் பங்கேற்கவேண் டும்னு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்துதான், கமல் 13-ந் தேதி நடத் தப்பட இருக்கும் பேரணியில் மக்கள் நீதி மய்யமும் கலந்துகொள்ளும்ன்னு அறி விச்சிருக்கார்.’ இதையடுத்து முறைப்படி யான அழைப்பை தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதியும், பூச்சி முரு கனும் நேரில் போய் கமலிடம் கொடுத்தாங்க. தி.மு.க. கூட்டணி பேரணியில் கமல் பங்கேற்பது மத்திய-மாநில அரசுகளின் புருவத்தை உயர வச்சிருக்கு. பேரணியை பிசுபிசுக்க வைக்க என்ன பண்ணுவதுன்னு அரசுத் தரப்பு ஆலோசிக்குது.''
""குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிச்சதைக் கண்டித்து, முதல் வர் எடப்பாடியின் வீட்டை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சி, காவல்துறையையே திணறவச்சிடுச்சே?''’
""அதுவும் உண்மைதாங்க தலைவரே, மனித நேய மக்கள் கட்சி, முதல்வர் வீட்டை முற்றுகை இடப் போறோம்ன்னு திடீர்ப் போராட்டத்தை அறிவிச்சதால், அதில் 300 பேரில் இருந்து 500 பேர்வரை கலந்துகொள்ள லாம்ன்னு காவல்துறை கணித் திருந்தது. ஆனால் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த இந்த போராட்டத்துக்கு அணியணியாய் இஸ்லாமிய மக்கள் பெருமளவில் திரண்டு வந்ததால், பட்டினப்பாக்கம் தொடங்கி அடையாறுவரை டிராபிக்கில் திணற ஆரம்பிச் சிடிச்சி. கூட்டத்தை மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்த காவல்துறை இணை ஆணை யர் சுதாகர், இந்தத் தகவலை சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு போனார். உடனே எடப்பாடி, அவங்க யாரையும் கைது பண்ணிடாதீங்க. உள்ளாட்சித் தேர்தல் வருது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரிச்சி இஸ்லாமிய மக்களின் எதிர்ப்பை சம்பாரிச்சிட்டோம். இந்த நேரத்தில் இஸ்லாமிய மக்களைக் கைது செய்தா, அந்த எதிர்ப்பு பல மடங்காயிடும். அதனால் அவங்களை சாஃப்ட்டா ஹேண்டில் பண்ணி, கலைய வச்சிடுங்க. எதா இருந்தாலும் பிறகு பார்த்துக்கலாம்ன்னு சொல்லி விட்டார். அதனால் கைதுக்கான முயற்சிகள் கைவிடப்பட்டிருக்கு''’
""மதுரைக்கும் வாரணாசிக்கும் இடையில் விரைவில் விமானப்போக்குவரத்து தொடங்கும்ன்னு சொல்லப்படுதே?''’
""ஆமாங்க தலைவரே, ஆன்மிக நகரங்களை இணைப்பது என்பது பா.ஜ.க.வின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அந்த வகையில் இங்க இருக்கும் ராமேஸ்வரத்தையும் உ.பி.யில் இருக்கும் வாரணாசி யையும் இணைக்கும் விதமா, மதுரையில் இருந்து வாரணாசிக்கு விமான சர்வீசைத் தொடங்கணும்னு தமிழக பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்தனர். இதை டெல்லியும் ஏற்றுக்கொண்டது. விமானத்துறை அமைச்சரான ஹர்திங்சிங் பூரியும் இதற்குப் பச்சைக்கொடி காட்டிட்டார். அதனால் விரைவில் ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கும் அங்கிருந்து ராமேஸ்வரத்துக்கும் ஆன்மிக யாத்திரைகள் அதிக அளவில் நடக்கப்போகுது''’
""நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்ப்பா. முதல்வர் எடப்பாடிக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையில் உரசல்ன்னும், முட்டல் மோதல்ன்னும் வதந்தியை பரப்ப சிலர் முயற்சி செய்யறாங்களாம். அப்படிப்பட்டவர்கள் இதுபோன்ற தகவல்களை ஊடகங்களுக்கு அனுப்பறாங்களாம். இப்படிப்பட்ட செய்திகளில் எள்ளளவும் உண்மையில்லைன்னு சொல்லும் அமைச் சர் தரப்பு, முதல்வர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதற்கு மாறாக ஏதேனும் செய்திகள் வருமானால் தன்னிடமே விளக்கம் கேட்கலாம்ன்னு சொல்லுது.''