ஹலோ தலைவரே... முதல்வர் ஸ்டாலினின் டெல்லி விசிட், அகில இந்திய அரசியல் களத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''
"ஆமாம்பா... மோடி கொடுத்த முக்கியத்துவம் அவரது அமைச்சரவை சகாக்களுக்கே அதிரடியா இருந்திருக்கே?''
"டெல்லி சென்ற ஸ்டாலினுக்கு, இசட் ப்ளஸ் பாதுகாப்பைக் கொடுத்திருக்கு பிரதமர் அலுவலகம். இது முதல்வராக இருந்த எடப்பாடிக்குக் கூட கொடுக்கப்படலை. அதேபோல் எந்த நேரத்திலும் தன்னை அழைத்துப் பேசும் வசதி கொண்ட, தனது ஹாட் லைன் எண்ணையும் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார். இந்த எண் ஜெ.’வுக்குப் பிறகு ஸ்டாலினுக்குதான் கொடுக்கப்பட்டிருக்கு. இதை எல்லாம் கவனித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஸ்டாலினுக்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாகணுமான்னு சற்று எரிச்சலாகவே மோடியிடம் கேட்டிருக்கார். அவரிடம் ஸ்டாலினின் அரசியல் வலிமையை எடுத்துச் சொன்னாராம் மோடி.''
"தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு சட்டமன்றத்தில் கவர்னர் ஆற்றிய முதல் உரையில், பொருளாதார ஆலோசனைக் குழு அறிவிக்கப்பட்டிருக்கே?''
"முதல்வர் ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ, . ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ராஞ்சி பல்கலைக் கழகத்தின் ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகியோர் இடம் பெற்றிருக்காங்க. பா.ஜ.க அரசின் பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பை உணர்த்தியவர் ரகுராம் ராஜன். அவரை ஸ்டாலின் தன் டீமில் சேர்த் திருப்பதும் தமிழ்நாட்டின் நிதி நிலை அறிக்கை பற்றி வெள்ளை அறிக்கை தரப்படும்னு சொன்னதும் மோடிக்கு ஷாக் ஏற்படுத்தியிருக்காம்.”
"ம்...''
"பிரதமர் அலுவலகத்தில் தற்போது இணைச் செயலாளராக இருக்கிறார் அமுதா ஐ.ஏ.எஸ். கலைஞர் மரணமடைந்த போது, அவரது அடக்க நிகழ்ச்சியை, அருகில் இருந்து இவர் சிறப்பாக கவனித்ததால், ஸ்டாலின் உள்பட கலைஞர் குடும்பத்தினர் இவர் மீது நல்ல மதிப்பை வச்சிருக்காங்க. அதனால் அவரை தமி ழக அரசுப் பணிக்கு திரும்பணும் என்றும், பள் ளிக் கல்வித்துறையின் செயலாளர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்றும் மாநில அரசிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருக்கு. அமுதாவோ, பிரதமர் அலுவலகத்தில் தனக்குள்ள மரியாதை யை சுட்டிக்காட்டி, முதல்வரின் செயலாளராகும் வாய்ப்பு கிடைத்தால் மாநில அரசுப் பணிக்கு வரலாம்னு சொல்லியிருக்கிறாராம்.''
"ராஜ்யசபா தேர்தல் நிலவரம்?''”
"சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யான முகமது ஜான், மரணமடைந்து விட்டார். எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றிபெற்ற கே.பி.முனுசாமியும் வைத்தியலிங்கமும் தங்கள் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய, ராஜ்யசபா எம்.பி.க்களின் காலி இடம் மூன்றாக உயர்ந்துவிட்டது. இவற்றுக்கான தேர்தலை ஒன்றாக நடத்தலாமா? தனித்தனியா நடத்த லாமா?ன்னு தேர்தல் ஆணையம் தற்போது ஆலோசனை பண்ணிவரும் நிலையில், இந்தத் தேர்தலைத் தனித்தனியாக நடத்துங்கன்னு தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலுவும், வழக்கறிஞர் வில்சனும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருக்காங்க. காரணம், 3 இடங்களுக்கும் தனித்தனியாகத் தேர்தலை நடத்தினால் தி.மு.க. மொத்தமாக ஜெயிக்கும் வாய்ப்பு உள்ளது. ஒரே சமயத்தில் நடத்தினால், 1 இடத்தை அ.தி.மு.க. கைப்பற்றிவிடுமாம்.''
"தமிழக பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன், சில முக்கியமான அறிவுறுத்தல்களை செய்திருக் காரே?''
"ஆமாங்க தலைவரே, அண்ணாமலை பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த முருகேசன், மாநில அரசின் தகுதித் தேர்வான ’செட்’ குறித்து, தன்னிச்சையாக வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையானது. இது பற்றி அண்மையில் நாம் விரிவாகவே பேசி இருக்கோம். அதனால், உஷாரான துறைச்செயலாளர் கார்த்திகேயன், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் என் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு வாருங்கள்னு அனைத்துப் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கார்.''
"எனக்கு கிடைச்ச ஒரு தகவலைச் சொல்றேன். வனத்துறைக்குச் சொந்த மான நிலத்தையும், யானை செல்லும் வழித்தடங்களை யும் ஆக்கிரமித்து, ஆசிரமக் கட்டிடங்களைக் கட்டி யிருக்கும் கோவை ஈஷா மைய ஜக்கி வாசுதேவ், இனி தப்பிக்க முடியாதுன்னு நிதியமைச்சர் பி.டி.ஆர்.தியாகராஜன் சொல்லியிருந்தார். ஆனா, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், ஜக்கி தரப்புடன் நட்பு வைத்து, அவர்களுடைய சில கம்பெனிகளில் பார்ட்னராக இருப்பதை நம்ம நக்கீரன்தான் கடந்த இதழில் அம்பலப்படுத்துச்சு. இப்ப ஜக்கி, முதல்வரின் மருமகன் சபரீசன் பெயரைச் சொல்லி, எங்களை எதுவும் செய்ய முடியாதுங்கிறாராம். இயற்கை ஆர்வலர்கள் முதல்வரை நம்பியிருக்காங்க.''
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... போன ஆட்சியில் கொரோனா கட்டுப் பாடுங்கிற பேருல ப்ளீச்சிங் பவுடர், லைசால், பினாயில் வாங்குவதாக 2,000 கோடி ரூபாய் கணக்கெழுதி எதுவுமே வாங்காம சுருட்டியிருக்காங்க. இது சம்பந்தமான ஆதாரங்கள் இப்போ தைய ஆட்சியாளர்களிடம் சிக்கியிருக்கு தாம். இந்தக் கொரோனா அலை அடங்கு னதும் அந்த ஊழல் அலையில் சம்பந்தப் பட்ட மாஜி மாண்புமிகு திமிங்கலம் சிக்குமான்னு எதிர்பார்ப்போடு காத்திருக் காங்க சம்பந்தப்பட்ட துறையினர்.''