"ஹலோ தலைவரே, ராஜீவ்காந்தி பீரியடில் ஃபோபர்ஸ் ஊழலும், மன் மோகன் சிங் பீரியடில் 2 ஜியும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடி கொடுத் ததுபோல், இப்ப ரபேல் விமான ஒப்பந்த ஊழல், மோடி அரசுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துக்கிட்டு இருக்கு.''’’
""ஆமாம்பா, ரபேல் விவகாரம் பூதாகர மாவது பத்தி போனமுறைதானே நாம பேசிக்கிட் டோம். இந்த நிலையில் பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, மோடி தலைமையிலான இந்திய அரசு பரிந்துரை பண்ணிய ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்குதான், கொள்முதல் செய்யப்பட்ட விமானங்களைப் பராமரிக்கும் உரிமத்தைக் கொடுத்தோம்ன்னு வாக்குமூலம் போலவே சொல்லியிருக்காரே.''’
""உண்மைதாங்க தலைவரே, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ’இந்துஸ்தான் ஏரோ நாட்டிகல்’ செயல்பட்டுக்கிட்டு இருக்கும் போதே, அதை ஓரங்கட் டிட்டு, விமானக் கொள்முதல் நடக்க இருந்த 10 நாளைக்கு முன்பு, அம்பானியால் தொடங்கப் பட்ட, முன் அனுபவமே கொஞ்சமும் இல்லாத, அந்தப் புத்தம் புதிய ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு மட்டும், விமானங்களைப் பராமரிப்பதற்கான டெண்டரைக் கொடுக்கும்படி மோடியே பரிந்துரை பண்ணியிருக்காரு. இதி லேயே மோடியின் க்ளீன் இமேஜ் டர்...ர்..ர்..ர்...னு கிழிஞ்சிடிச்சி. இப்ப, இந்த ’ரபேல் விவகாரம்’ கிளப்பிய புழுதிப் புயலில், பா.ஜ.க. அரசு மூச்சுத் திணறுது. மோடியைக் காப்பாற்ற ஆளாளுக்கு விளங்காத விளக்கங்களைக் கொடுத்துக்கிட்டு இருக் காங்க. இதில் காங்கிரஸுக்கு அதிக மகிழ்ச்சின் னாலும் ஒருவித ஆதங்கமும் அதுகிட்ட இருக்கு.''’
""எம்.பி.தேர்தல் நெருங்குற நேரத்துல பா.ஜ.கவுக்கு எதிரா ஒரு பெரிய அரசியல் ஆயுதம் கிடைச்சிருக்கு.. இதிலே என்ன ஆதங்கம்?''’
""இந்த ரஃபேல் விவகாரம் தொடர்பாக, இந்திய தணிக்கைத் துறையான சி.ஏ.ஜி. முழுமையான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யணுங்கிற எதிர்பார்ப்போடுதான், காங்கிரஸ் இது தொடர்பான புகாரை சி.ஏ.ஜி.யிடம் கொடுத்தது. இருந்தும் இதுபற்றி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் வாயையே திறக்கலை. பொதுவா பா.ஜ.க.வுக்கு எதிரான விவகாரங்களில் கொடி பிடிக்கும் மாயாவதி, மம்தா பானர்ஜி, முலாயம் சிங் போன்றவர்களும், இந்த விவகாரத்தில் பூகம்பத்தை உண்டாக்குவார்கள்ன்னு காங்கிரஸ் எதிர்பார்த்துச்சு. ஆனால் எல்லாத் தலைவர்களும் ரபேல் விவகாரத்தைக் கண்டிச்சி அறிக்கை விட்டதோட, இதன் அடுத்தகட்ட நகர்வுகளை கவனிச்சிக்கிட்டு இருக்காங்க. தமிழகத்தில், தி.மு.க.விடமிருந்தும் கண்டன அறிக்கை வந்திருக்கு.. அடுத்தடுத்த கட்ட எதிர்ப்புகளை பலப்படுத்த ணும்னு எதிர்பார்க்குது காங்கிரஸ் தலைமை.''’
""தி.மு.க.வைப் பொறுத்தவரை மாநில அரசியல் பிரச்சினைகளை சமாளிக்கவே நேரம் போதலையே.. இடையில அழகிரி வேற அப்பப்ப வெளியே வந்து மீடியாவை அட்ராக்ட் பண்ணி டுறாரே.''…
""திருவாரூருக்கு அழகிரி போனதுகூட ஹைலைட் ஆனது. அதைத்தான் அவர் விரும்பு றாரு. தி.மு.க தலைமையை அவர் சீண்டுவதற்கு தகுந்தமாதிரி, தென்மாவட்டத்தில், குறிப்பா திண்டுக்கல் மாவட்டத்தில் அழகிரி பேரில் சிலர் பேரவையைத் தொடங்கியிருக்காங்க. முக்குலத் தோர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமி, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருப்பதோடு, திண்டுக்கல் மா.செ.வாகவும் இருக்கார். தேர்தல் களத்திலும் கில்லியா வேலை பார்த்து ஜெயிச்சிடுறாரு. ஆனா அவரோடு நெருங்கி நின்னு, கட்சி வேலைகளைப் பார்க்க முடியலையேங்கிற ஆதங்கம், சிலருக்கு இருக்கு. குறிப்பிட்டு சொல்றதுன்னா, திண்டுக்கல் தி.மு.க. விலேயே இருக்கும் ஒக்கலிகா கவுண்டர், கொங்கு வேளாளக் கவுண்டர், செட்டியார், வன்னியர், அம்பலத்தார் போன்ற சமூகத்தினருக்கு இருக்கு. தாங்கள் புறக்கணிக்கப்படறதாவும் அவர்களுக்கு அளவுகடந்த ஆதங்கம்.''’
""ஓ…?''’
""வேடசந்தூர் தொகுதியில் ஒக்கலிகா கவுண்டர் சமூகத்தினர் அதிகம். அதனால் போன முறை அந்த சமூகத்தைச் சேர்ந்த காந்திராஜன், தி.மு.க.வில் சீட் கேட்டிருக்கார். அவருக்கு சீட் தரப்படலை. அதே சமயம் அ.தி.மு.க. அதே சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் பரமசிவத்தை நிறுத்த, அவர் ஜெயிச்சி எம்.எல்.ஏ.வாவும் ஆயிட்டார். இது அந்த சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க.வினருக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கு. இப்படி அங்க இருக்கும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒவ்வொரு ஆதங்கமாம். இப்படிப்பட்ட ஆதங்கத்தில் இருந்த சிலர்தான் இப்ப, அழகிரி பேரவையைத் தொடங் கியிருக்காங்க. கட்சிக்குள்ள இருக்கிற இந்த மாதிரி ஓட்டைகளை அடைக்க லைன்னா தி.மு.க.வோட ஓட்டுகள்ல ஓட்டை விழுந் திடும்னு தென் மாவட்ட தி.மு.க.வினர் சொல்றாங்க.''’’
""குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ.யிடம் புதுசா பரபரப்பு தெரியுதே?''’
""உண்மைதாங்க தலைவரே, குட்கா விவகாரத்தில் ஏற்கனவே 5 பேரைக் கைது செய்திருக்கும் சி.பி.ஐ. டீம், அடுத்தகட்ட கைது நடவடிக்கையில் இறங்கப் போகுதாம். அந்தப் பட்டியலில் அப்போதைய செங்குன்றம் உதவிக் கமிஷனர் மன்னர்மன்னன், இணைக் கமிஷனராக இருந்த ஜெயக்குமார், இப்ப வடசென்னை கூடுதல் கமிஷனராக இருக்கும் தினகரன் போன்றோரின் பெயர்கள் இருக்குன்னு சொல்லப்படுது. இவர் களில் தினகரன், ஒருமுறை காவல்துறை தலைமை யகத்துக்கு ஒரு 25-ந் தேதியில் டிரான்ஸ்பர் செய்யப்பட, அவர் மறு மாதம் 2-ந் தேதி குட்கா தொடர்பான மாதப் பலனை வாங்கிக்கிட்டுதான், ரிலீவ் ஆனாராம். அதோட அவர் மட்டுமே ’5 சி’வரை குட்கா பலனை அடைந்திருக்கார்ன்னும் காக்கிகள் தரப்பிலேயே டாக் அடிபடுது.''’
""வனத்துறையிலும் சலசலப்பு தெரியுதே?''’
""ஆமாங்க தலைவரே, அந்தத் துறையின் முதன்மை வனப்பாதுகாப்பு அதிகாரியா இருந்த உபாத்யேயாவை திடீர்ன்னு மாற்றிவிட்டு, அவருக்கு பதில் மல்லேஸப்பா என்ற அதிகாரியை உட்காரவச்சிருக்காங்க. என்ன காரணம்ன்னு விசாரிச்சப்ப பல தகவல்கள் கிடைச்சிது, நேர் மையான அதிகாரியான உபாத்யேயா, அண்மை யில் பலரது உயிரைப் பறித்த குரங்கணி காட்டுத் தீ விபத்து பற்றி, தனியா விசாரிச்சி, சில அதிரடி உண்மைகளைக் கண்டுபிடிச்சிருக்கார். அதன்படி இந்த விபத்துக்கு காரணமான விதிமீறல்களில் துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனும் சம்பந்தப்பட்டிருக்காருன்னு, இந்த சம்பவத்தை விசாரிக்கும் கமிஷனிடமும் அவர் தைரியமாகவே சொல்லியிருக்கார். இது, கோட்டைவரை பலத்த பரபரப்பை ஏற்படுத்திருக்கு. இந்த நிலையில், வனத்துறையில் 1500 பணி நியமனங்களை செய்வதற்கான வேலைகள் தொடங்கியிருக்கு. அதற்கான வசூலும் மேல்மட்டத்தில் ஆரம்பிச்சி டுச்சி. இந்த நேரத்தில் உபாத்யேயா போன்ற அதிகாரி, துறையில் இருந்தால் சிக்கல்ன்னு கணக்குப் போட்டுதான், சைலண்ட்டா அவரை டிரான்ஸ்பர் பண்ணியிருக்காங்க.''’
""எல்லா நடவடிக்கையும் அதிரடியா நடக்குது. ஆனா ஹெச்.ராஜா மீதான கைது நடவடிக்கை மட்டும் சைலண்ட்டா இருக்கே?''’’
""அது சம்பந்தமா நான் சொல்றேன்... அராஜகமா பேசினார்னு அதிரடியா எம்.எல்.ஏ. கருணாஸைக் கைதுசெய்த காவல்துறை,
ஏன் அதைப்போல் பேசிய பா.ஜ.க. பிரமுகரான ஹெச்.ராஜாவைக் கைது செய்யலைங்கிற கேள்வி, பாமர மக்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர் கள் வரை அனைவர் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்திருக்கு. ஏற்கனவே எஸ்.வீ.சேகரும் தப்பிச்சிட் டாரு. இதெல்லாம் கடும் விமர்சனமா மாறுனதால, முதல்வர் எடப்பாடி ஆலோ சனை நடத்தியிருக்காரு. சீனியர் அமைச்சர்கள் எல் லோரும், ரெண்டு தனிப்படை அமைச்சி அவரைத் தேடுவதா நாம் சொல்லும் போதும், போலீஸ் செக்யூரிட்டி யோடுதான் ஹெச்.ராஜா இருக்காரு. பப்ளிக்குல கேவலமா பேசுறாங்கன்னு சொல்ல, ஹெச்.ராஜாவை கைது செய்ய டெல்லியிடம் அனுமதி வாங்கும் பொறுப்பை முதல்வர் எடப்பாடி, தலைமைச் செய லாளர் கிரிஜாவிடம் ஒப்படைத்திருக்கிறார். ஆனால் டெல்லியிலிருந்து இன்னும் சிக்னல் கிடைக்கலை. ஹெச்.ராஜாவை காப்பாத்துறாங்க.'