ராங்கால் : ஆளுங்கட்சிகளை இயக்கிய எதிர்க்கட்சிகள்!

rangcall

லோ தலைவரே, ஏப்ரல் 1 வரைக்கும் 144ன்னு எடப்பாடி அறிவிச் சாரு. அது நடைமுறைக்கு வந்த நைட்டே 21 நாள் முடக்கம்னு பிரதமர் மோடி அறிவிச்சதால, நாடே முடங்கிக் கிடக்குதே?

ஆமாம்பா, கொரோனா அப்படிப் பட்ட கொடுமையானது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருக்கணும். இத்தனை நாள் முடங்குனா, சோத்துக்கு என்ன செய்வதுன்னு பாமர மக்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பயமிருக்குது. ஆனா, இந்த முடக்கம்தான் இப்போதைய தேவைன்னு எதிர்க்கட்சி களும்கூட பிரதமரின் முடிவை ஆதரிச் சிருக்குதே!'

rr

உன்மைதாங்க தலைவரே, மோடி யின் இந்த வீடடங்கு உத்தரவை காங்கிரஸின் சினியர் லீடர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வரவேற்றிருக்காங்க. அதே நேரத்தில் இதை இன்னும் முன்கூட்டியே செய்திருக்கணும்ங் கிறதுதான் எதிர்க்கட்சிகளோட வலியுறுத்தல். மார்ச் 22ந் தேதி மக்கள் ஊரடங்குன்னு சொல்லி, சாயங்காலம் 5 மணிக்கு கைதட்டச் சொன்னாரு மோடி. அப்போதே ராகுல் அது சரியான அணுகுமுறை இல்லைன்னு ட்வீட் செய்தார். அன்னைக்கு 5 மணிக்கு கைதட்டுறோம்ங்கி பேருல மணி அடிச்சிக்கிட்டு, சங்கு ஊதிக்கிட்டு ஊர்வலமா போய், காலை யிலிருந்து கட்டுக்கோப்பா இருந்தா ஊரடங்கை சல்லி சல்லியா உடைச்சி, கொரோனாவை வரவேற்ற மாதிரி பண்ணிட்டாங்க. இதில் வடநாட்டைச் சேர்ந்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு ரொம்பவே பங்கு உண்டு.

தமிழ்நாடு அந்தளவுக்கு மோசமா இல்லேப்பா..

இங்கே விழிப்புணர்வு உண்டு. ஆனாலும், கொரோனா நேரத்தில் தனித்திருக்கணும்ங் கிறதை வலியுறுத்தி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கச் சொன்னாரு எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். ஆனா எடப் பாடியோ, நாங்க உழைக்கிறோம். உழைக்கிறவங்களுக்கு கொரோனா வராது. சும்மா பீத

லோ தலைவரே, ஏப்ரல் 1 வரைக்கும் 144ன்னு எடப்பாடி அறிவிச் சாரு. அது நடைமுறைக்கு வந்த நைட்டே 21 நாள் முடக்கம்னு பிரதமர் மோடி அறிவிச்சதால, நாடே முடங்கிக் கிடக்குதே?

ஆமாம்பா, கொரோனா அப்படிப் பட்ட கொடுமையானது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டே இருக்கணும். இத்தனை நாள் முடங்குனா, சோத்துக்கு என்ன செய்வதுன்னு பாமர மக்களிடமும் உழைக்கும் மக்களிடமும் பயமிருக்குது. ஆனா, இந்த முடக்கம்தான் இப்போதைய தேவைன்னு எதிர்க்கட்சி களும்கூட பிரதமரின் முடிவை ஆதரிச் சிருக்குதே!'

rr

உன்மைதாங்க தலைவரே, மோடி யின் இந்த வீடடங்கு உத்தரவை காங்கிரஸின் சினியர் லீடர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வரவேற்றிருக்காங்க. அதே நேரத்தில் இதை இன்னும் முன்கூட்டியே செய்திருக்கணும்ங் கிறதுதான் எதிர்க்கட்சிகளோட வலியுறுத்தல். மார்ச் 22ந் தேதி மக்கள் ஊரடங்குன்னு சொல்லி, சாயங்காலம் 5 மணிக்கு கைதட்டச் சொன்னாரு மோடி. அப்போதே ராகுல் அது சரியான அணுகுமுறை இல்லைன்னு ட்வீட் செய்தார். அன்னைக்கு 5 மணிக்கு கைதட்டுறோம்ங்கி பேருல மணி அடிச்சிக்கிட்டு, சங்கு ஊதிக்கிட்டு ஊர்வலமா போய், காலை யிலிருந்து கட்டுக்கோப்பா இருந்தா ஊரடங்கை சல்லி சல்லியா உடைச்சி, கொரோனாவை வரவேற்ற மாதிரி பண்ணிட்டாங்க. இதில் வடநாட்டைச் சேர்ந்த பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு ரொம்பவே பங்கு உண்டு.

தமிழ்நாடு அந்தளவுக்கு மோசமா இல்லேப்பா..

இங்கே விழிப்புணர்வு உண்டு. ஆனாலும், கொரோனா நேரத்தில் தனித்திருக்கணும்ங் கிறதை வலியுறுத்தி, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஒத்தி வைக்கச் சொன்னாரு எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின். ஆனா எடப் பாடியோ, நாங்க உழைக்கிறோம். உழைக்கிறவங்களுக்கு கொரோனா வராது. சும்மா பீதியை கிளப்பாதீங்க. கொரோ னாவுல ஒரு உயிர்கூட போக அனுமதிக்க மாட்டேன்னு வீராவேசமா பேசுனாரு. கடைசியில என்ன ஆச்சு? அவரே சட்டமன்றத்தை ஒத்தி வைச் சிட்டு, ஊரடங்கை அமல்படுத்த வேண்டியதாயிடிச்சி. ஊரடங்கின் முதல் நாளிலேயே மதுரையில் கொரோனாவுக்கு முதல் பலி.

சரிதாம்ப்பா.. ஆனாலும் இந்தக் கொடூர வைரஸை அழிப்பதில் அரசியல் பேதம் பார்க்காமல் ஒன்றுபட்டு நிற்கணும்.

ஆமாங்க தலைவரே.. பா.ஜ.கவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரசின் முன்னாள் நிதி யமைச்சரான ப.சி.யும், மோடி எடுத்துவரும் அதிரடி நடவடிக் கைகளை மனம் திறந்து பாராட்டியிருப்பதோடு, இந்த நெருக்கடியான நேரத்தில், மிகுந்த சிரமம் எண்றாலும் கூட அனைத்து வணிக நிறுவனங்களையும், பிற சேவைகளையும் கணிசமாகவோ அல்லது முழுமையாகவோ தடைசெய்ய வேண்டிய நேரமிதுன்னு சுட்டிக்காட்டியிருக்கார்'

rr

சோனியாவின் வேண்டுகோள் கடிதம் ஒன்னும் மோடிக்குப் போயிருக்கே?

சோனியாவோட லெட்டரில், இது அறுவடைக் காலம்.. இந்தியாவில் இருக்கும் 60 சதம் பேர் விவசாயிகள். தேசம் முடக்கப்பட்டிருக்கும் சூழலில், அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்கள் அறுவடை செய்யும் தானியங்களை அரசே நல்ல விலை கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். அதோடு, ஜன்தன் திட்டத்தின் படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா ரூபாய் 7,500-ஐ அரசு வரவுவைத்து, அவர்களின் துயரத்தைத் துடைக்கவேண்டும்ன்னு கேட்டுக் கொண்டதோட, முதியோர்களுக்கும் இந்த உதவித் தொகை தேவைன்னு வேண்டுகோள் வச்சிருக்கார்'

ஆமாம்பா, இதற்கு பதிலளித்திருக்கும் மோடி, நிதியமைச்சகம் மூலம் முதல்கட்டமாக 1.70 கோடிக்கான சலுகைகளும் இலவசங்களும் அறிவிக்கப்பட்டிருக்கு. உங்களின் யோசனை யையும் ஏற்றுக்கொள்கிறேன். இது குறித்து நிதியமைச்சகத்தோடு ஆலோசிக்கப்படும்ன்னு தெரிவிசிருக்காரே?'.

உண்மைதாங்க தலைவரே, பிரதமர் மோடி எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணுறாரோ அதுபோல முதல்வர் எடப்பாடியும் தமிழ கத்தின் எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைச்சி குழு அமைத்து, இந்த நெருக்கடியான நிலை மையைக் கடந்து வரணும். நோய்த் தொற்றிலிருந்தும் தப்பிக்கணும். பசியின் கைகளிலும் சிக்கக்கூடாது. உயிர்வாழத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மத்திய அரசு உடனடியாக எல்லோருக்கும் வழங்கனும்ன்னு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் யெச்சூரி, 'நாம் தமிழர்' கீமான் போன்றவர்கள் வேண்டுகோள் வச்சிருக்காங்க'

கொரோனா பீதியால், விசாரணைக் கைதிகளுக்கு கூட ஜாமீன் கிடைக்குதே!'

கொரோனா நோய் என்பது இலிமி னாட்டிகளின் வேலை. அவர்களின் உத்தரவுப் படி இங்கே இருக்கும் மந்திரிகள் ஆடுறாங் கன்னு ஆடியோவில் ஒருமையில் அதிரடி கிளம்ப்பிய, மாற்றுமுறை மருத்துவரான ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீஸ் போன 20-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத் தது. இப்போது கொரோனா நெருக்கடியால், ஹீலர் பாஸ்கர் உட்பட விசாரணைக் கைதிகள் பலரும் விடுதலை செய்யப்படறாங்க

rr

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா வும், கொரோனா பீதியால் பரோலில் வரப் போறார்ன்னு ஒரு தகவல் பரபரப்பாப் பரவியதே?'

"அவரை தடபுடலா வரவேற்க மன்னார் குடித் தரப்பு ரெடியாகுதுன்னும் செய்திகள் பரவிக்கிட்டிருந்ததுங்க தலைவரே, இதுபற்றி விசாரிச்சப்ப, மன்னார்குடித் தரப்புக்கு சசிகலாவை வெளியே கொண்டுவரும் ஆர்வம் இருக்குன்னும், ஆனால் அவருக்கு எந்த மாதிரியான காரணத்தைக் காட்டி பரோல் கேட்பதுன்னும் ஆலோசிக்கப்பட்டிருக்கு, உடல்நலம் சரியிலைன்னு சொல்லலாம். ஆனால் அதற்கு உரிய மருத்துவ சார்டிபிகேட் சிறைக்குள் இருந்தே பெறவேண்டுமேன்னு அவர்கள் குழம்பியிருக்காங்க. ஆனால் சிறையில் இருக்கும் சசியோ, தினகரன், திவாகரன்னு ஆளாளுக்கு ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக்கிட்டிருக்கும் நிலையில், தான் வெளியே வந்தால் தனக்கு மேலும் மேலும் தலைவலி ஏற்படும்னு நினைச்சி, பரோல் கேட்கும் முடிவையே கைவிட்டுட்டாராம். கர்நாடக சிறைத்துறையும் சசிகலாவை பரோலில் அனுப்பும் ஐடியா இல்லைன்னு அறிவிச்சிடிச்சி.

'கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க நடிகர்கள் பலரும் தங்கள் இடங்களைக் கொடுக்க முன்வந்திருக்காங்களே?'

'பாராட்ட வேண்டிய செயலுங்க தலைவரே, கொரோனா மருத்துவ வார்டு களை அமைக்க நடிகர் கமல், பார்த்திபன் உள்ளிட்ட திரைத் துறையினர் சிலர், தங்கள் வீடு களையும் அலுவலகங்களையும் ஒதுக்க முன்வந்திருக்காங்க. இவர் கள் எல்லாம் இப்படி பகிரங்கமாக அறிவித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சியத் தொடங்க இருக்கும் ரஜினி என்ன தரப் போறாருன்னு சமூக வலைத்தளங் களில் கேள்விகள் கிளம்பியது. சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையம் அமைக்கக் கொடுக்கலாமா?ன்னு தனது திருமதியான லதா ரஜினி காந்திடம் அவர் ஆலோசிச் சிருக்கார். இதற்கு லதாவும், க்ரின் சிக்னல் கொடுத்திருப்பதாக ரஜினி வட்டாரத்தில் இருந்தே தகவல் கசியுது

கொரோனா நிவாரணத்துக் காக நிதி திரட்டும் முயற்சியிலும் எடப்பாடி அரசு இறங்கியிருக்குதே'

'எந்த ஒரு பேரிடர் நேரத் திலும் நிவாரண நிதி திரட்டுவது வழக்கம்தான். இதில் முதல் நபராக, தனது சொந்தப் பணத் திலிருந்து 25 லட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார், அண்மையில் ராஜ்யசபா உறுப்பினராகியிருக்கும் கே.பி. முனுசாமி. இதேபோல் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினும், தி.மு.க, எம்.எல்.ஏ.க்கள் 96 பேரும் தங்களின் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள்ன்னு அறிவிச்சிருக்கார். பா.ம.க. எம்.பி. அன்புமணி தன் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக ஒதுக்கு வதாகச் சொல்லியிருக்கார்

நல்லது

'இதேபோல் அ.தி.மு.க எம்.பி.க்களான தேனி ரவீந்திரநாத் கன்னியா குமரி விஜயகுமார் ஆகியோர் உடனடியாக 1 கோடி ஒதுக்க, . ம.தி.மு.க எம்.பி. கணேச மூர்த்தியும் 1 கோடி, வழங்கியிருக்கிறார். இதற்கிடையே அ.தி.மு.க , எம்.பி.க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 1 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ..க்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா 25 லட்சமும் ஒதுக்குவார்கள்னு அறிவிப்பு வந்திருக்குது. கவர்னர் பன்வாரி லால் புரோஹித்தும் தனது 1 மாத சம்பளமான 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாக வங்கியிருக்கிறார். இப்படிப்பட்ட கொடைக்கரங்கள் நீள்வது நிதி நெருக்கடிக்கு ஆறுதலைத் தரும்.

இந்த ரணகளமான நேரத்திலும், அரசியல் கண்ணோட்டத்தோடு நடக்க இருந்த ஒரு செயல் நக்கீரன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டதா சம்பந்தப்பட்ட துறை யினரே பாராட்டுறதை நான் உங்களுக்கு சொல்றேன். வெள்ளிக்கிழமை முதல் பத்தி ரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்னு அரசாங்க அறிவிப்பு வந்ததால அந்தத் துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைஞ்சிட்டாங்க. பொதுவாகவே, பத்திரப் பதிவு குறித்து நிறைய புகார்களும், அரசியல் விளையாட்டுகளும் இருக்கிற சூழலில், கொரோனா நேரத்தில் ஊழியர்களை பாடுபடுத்துவதான்னு அவங்க குமுற, அது வியாழக்கிழமையன்னைக்கு நக்கீரன் இணையத்தில் வெளியாகி வைரலாக, உத்தரவைத் திரும்ப பெற்றுவிட்டது அரசு. பத்திரப் பதிவு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி.

nkn310320
இதையும் படியுங்கள்
Subscribe