"ஹலோ தலைவரே, பத்தாண்டு களுக்குப் பிறகு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில், ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் வருது.''”
"வழக்கமான முறையில் கோலாகலமா கொண்டாடுற அளவுக்கு இந்த முறை கொண்டாட முடியாதபடி பேரிடர் சூழல் நிலவுதே?''”
"அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பிறந்தநாளன்று தி.மு.க.வினர் அவரவர் வீட்டிலேயே படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தணும்னு தெரிவிச்சிருக்காரு. உள்ளத்தில் நிறைந்திருக்கும் கலைஞரை இல்லத்தில் கொண்டாடுவோம்னும், ஊரடங்கால் உணவு கிடைக்காமல் இருப்போருக்கு உதவிகள் செய்யணும்னும் வலியுறுத்தியிருக்காரு. நடப்பதே கலைஞர் ஆட்சிதான்னும் அடுத்தடுத்த ஆண்டுகளில் கலைஞர் பிறந்தநாளை கோலாகலமா கொண்டாடலாம்னும் ஸ்டாலின் அறிவிச்சிருக்காரு.''
"இந்தப் பேரிடர் நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் கோவை விசிட், மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கு. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டுக்குள்ளே பி.பி.இ. கிட் உடையோடு போய், கொரோனா நோயாளிகளி டம் உடல் நிலையை ஸ்டாலின் விசாரித்ததும், "வி ஸ்டாண்ட் வித் ஸ்டாலின்'’என்ற வாசகம், சமூக ஊடகங்கள்ல ட்ரெண்டிங் ஆகியிருச்சே...''”
"உண்மைதாங்க தலைவரே, ஸ்டாலின் கோவை வருவதற்கு முன் பா.ஜ.க. தரப்பு ’கோ பேக் ஸ்டாலின்’ என்ற வாசகத்தை திட்டமிட்டு ட்ரெண்ட் ஆக்குச்சு. ஆனால் ஸ்டாலின் கோவையில் கொரோனா வார்டுக்கே போய் ஆய்வு நடத்தியதும் ட்ரெண்டு, அப்படியே மாறி ’"வி ஸ்டாண்ட் வித் ஸ்டாலின்'’என்ற வாசகம், இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் ஐந்தாம் இடத்திலும் ட்ரெண்டாகி, பா.ஜ.க. தரப்பைத் திகைக்க வச்சிடிச்சி.''”
"சென்னையைவிட கோவையில் கொரோனா தொற்று அதிகரித்ததால்தானே ஸ்டாலின் உடனடி விசிட் மேற்கொண்டார்.''”
"அவரோட இரண்டாவது விசிட் இது. கோவை, திருப்பூர் பகுதிகளில் லாக் டவுனிலும் தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால்தான் தொற்று அதிக அளவில் பரவிய விசயம் ஸ்டாலினுக்குத் தெரிஞ்சிருக்கு. அதனால் அதைக் கட்டுப்படுத்தச் சொல்லியிருக்கிறார். திருமணம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகள் அங்கங்கே நடத்துவருவதால், அதிக அளவில் பெண்கள் தொற்றுக்கு ஆளாகிற விசயமும் அவர் கவனத்துக்குப் போயிருக்கு. இதையும் கவனிக்கச் சொல்லியிருக்காரு.''”
"புதிய டி.ஜி.பி.யை நியமிக்க வேண்டிய நேரத்தில், முக்கிய இடத்தில் இருக்கும் அதிகாரிகளை வைத்து, ஆடுபுலி ஆட்டம் ஆடப்படுதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இப்போதைய டி.ஜி.பி. திரிபாதியின் பதவிக் காலம் இந்த மாதத்தோடு முடிவடையுது. ஏற்கனவே அவர் பணி நீட்டிப்பில் இருப்பதால், புதிய டி.ஜி.பி.யைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் தி.மு.க. அரசு இருக்கிறது. இந்தப் பதவிக்காகக் காத்திருந்த டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், கரன்சின்ஹாவை தீயணைப்புத் துறைக்கும் நியமித்துவிட்டதால், சைலேந்திரபாபு உள்ளிட்ட மூவர், டி.ஜி.பி. பதவிக்கான பரிந்துரைப் பட்டியலில் இருக் கிறார்கள். தமிழக அரசின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கும் இவர்களில் இருந்துதான், மத்திய அரசின் "எம்பவர்’ கமிட்டி' ஒருவரை, டி.ஜி.பி.யாகத் தேர்ந்தெடுக்கும். அதுவும், குற்றச்சாட்டுக்கு ஆளாத ஒருவரைத்தான் அது டிக் அடிக்கும். இந்த நிலையில், சைலேந்திரபாபு வரக்கூடாது என்று நினைக்கும் ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் சிலர், அவர் மீதான புகார்களை எல்லாம் தொகுத்து, எம்பவர் கமிட்டிக்கு அனுப்பிக்கிட்டு இருக்காங்களாம்.''”
"முதல்வரின் ஆலோசகரைத் தேர்ந்தெடுப்பதிலும், இழுபறிகள் நடக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, முதல்வராக இருந்த ஜெ.,’ ஐ.ஏ. எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமானுஜத் தையும், ஷீலா பாலகிருஷ்ணனையும் தனது ஆலோசகர்களாக வைத்திருந்தார். அதேபோல், இப்போது முதல்வரின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான துக்கையாண்டியை நியமிக்கலாம்னு, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சீனியர் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முதல்வர் ஸ்டாலினின் நண்பரான ராஜா சங்கர் உள்ளிட்டோர் முயற்சி செய்யறாங்க. அதுக்குக் காரணம், ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கை சரியாகக் கொண்டு சென்றதோடு, ஊழல் வழக்கில் ஜெ.வை கைது செய்து சிறையில் அடைத்தவரும் இந்த துக்கையாண்டிதான்.''”
"ம்...''”
"அதனால் துக்கையாண்டி மீது கடும் கோபமடைந்த ஜெ.,’ 2011-ல் ஆட்சியில் அமர்ந்தவுடன், துக்கையாண்டியை அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாறி மாறி தூக்கியடித்து, அவருக்கு தொடர் டார்ச்சர்களைக் கொடுத்தார். துக்கையாண்டி ஓய்வுபெற்ற பிறகும் கூட, அவரை ஜெ. குறிவைத்து டார்ச்சர்களைக் கொடுத்துவந்ததால், ஒரு கட்டத்தில் துக்கையாண்டி, வெளிநாடுகளுக்குச் சென்று, ஏறத்தாழ ஒரு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். இப்போது தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் அவர் சென்னைக்கே வந்திருக்கிறார். இந்த துக்கையாண்டி, முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்துவிட்டார். இந்த நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு விசுவாசமாக இருந்த காவல்துறையின் உயர் அதிகாரிகளான டேவிட்சன் தேச ஆசிர்வாதம், தாமரைக்கண்ணன் உள்ளிட்டவர்கள், துக்கையாண்டி பவர்ஃபுல் பதவிக்கு வந்தால் தங்களுக்கு சங்கடம் என்று நினைத்து, அவருக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார்களாம்.''”
"ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் சாதி லாபி தீவிரமா இருக்குதுன்னு கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபடுதே?''”
"ஆமாங்க தலைவரே, முக்கியமான துறைகளில் அதிக அளவில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இருந்தார்களாம். இப்ப முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஐ.ஏ. எஸ்.களை முக்கிய பதவிகளில் கொண்டுவருவதற்கான லாபி தீவிரமா நடக்குதாம். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு வலது கரமாக இருந்த கார்த்திகேயன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக அமர்த்தப்பட்டிருக்கார். அப்போது சி.வி.சண்முகத்துக்கு வலது கையாக இருந்த சுப்பிரமணியம், டாஸ்மாக்கின் எம்.டி.யாக நியமிக்கப்பட்டிருக்கார். அதேபோல் போன ஆட்சியில் செல்வாக்காக இருந்த குமரகுருபரன் இப்ப அறநிலையத் துறை ஆணையராக ஆக்கப்பட்டிருக்கிறார். முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சண்முகமும் இப்படித்தானாம். கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்காக இருந்தவர்களுக்கு முதல்வரின் மருமகன் சபரீசன் தரப்பால், செல்வாக்கான பதவிகள் கிடைச்சிருக்காம்.''”
"சசிகலா தன் ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோக்கள், அடுத்தடுத்து வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்கு.''”
"ஆமாங்க தலைவரே, சசிகலா துறவறத்தையும் நம்ம நக்கீரன் மட்டும்தான் சொன்னது, அவ ரோட ரீஎண்ட்ரியையும் நக்கீரன்தான் சொன்னது. சசிகலா தனது ஆதரவாளர்களைத் தொடர்புகொண்டு, கட்சியை சரிசெய்ய விரைவில் வருவேன், நாங்கள்லாம் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி அது. அதை இவங்கள்லாம் சண்டை போட்டு கெடுக்கறாங்க. அதையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்ற ரீதியில் பேசுகிற ஆடியோக்கள், அடுத்தடுத்து ரிலீஸ் ஆகியிருக்கு. இந்த ஆடியோக்கள் மூலம், தனது அரசியல் எண்ட்ரி பற்றிய முன்னறிவிப்பை சசிகலாவே தன் ஆட்கள் மூலம் ரிலீஸ் செய்கிறார்ன்னு, அ.தி.மு.க. தரப்பிலேயே டாக் அடிபடுது. இதன் பின்னணியில் சு.சாமி இருக்கலாம் என்றும் சொல்லப்படுது.''”
"சசிகலா தரப்புக்கு அவர் தொடர்ந்து சப்போர்ட் பண்ணிக் கிட்டிருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே... பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் தி.மு.க. ஆட்சியை கலைப்பேன்னு சொல்லி அசிங்கப்பட்டுப் போன சு.சாமி, தி.மு.க. அரசுக்கு எதிராக சசிகலாவை ஒரு பெரிய சக்தியா முன்னிறுத்த நினைக்கிறார் என்றும், பிராமண சமூக ஆதரவை சசிக்காக அவர் திரட்ட முனைகிறார் என்றும் கூட சொல்லப்படுது.''”
"இதை அ.தி.மு.க. தரப்பு எப்படிப் பார்க்குது?''
"சசிகலாவின் அரசியல் வருகையை ஓ.பி.எஸ். தீவிரமாக எதிர்பார்க்கிறார். சசிகலாவை அ.தி.மு.க.வுக்குக் கொண்டுவந்து, அவரது பலத்தோடு தனது ஒரே பவர்ஃபுல் எதிரியான எடப்பாடியை ஓரம் கட்டிடணும் என்பதுதான் அவரது திட்டமாம். அதனால், அ.தி.மு.க.வில் இருக்கும் சீனியர்களை அவர் மீண்டும் சசிகலாவின் ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கிவிட்டாராம். இதையெல்லாம் பார்த்து உஷாரான எடப் பாடியோ, சசிகலாவை அ.தி.மு.க.வுக்குள் அனுமதிக்கக் கூடாதுங்கிற கருத்தை கட்சி முக்கியஸ்தர்களின் நெஞ்சில் விதைக்க ஆரம்பிச்சிருக்கார். அதேபோல, அ.ம.மு.க.வில் இருக்கும் முக்கிய பிரமுகர்களை எல்லாம் அ.தி.மு.க.வுக்குக் கொண்டுவந்து, அவர்களைத் தனது ஆதரவாளர்களா ஆக்குகிற முயற்சியிலும் அவர் இறங்கியிருக்காராம்.''”
"நானும் முக்கியமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பெண் போலீஸ் அதிகாரிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரத்தில் வலுவாக சிக்கியிருக்கும், ஏ.டி.ஜி.பி. ராஜேஸ்தாஸ், ஜெ.’பாணியில், ஓ.எம்.ஆர். சாலை, தையூர் பகுதியில் மிகப்பிரமாண்டமான பங்களாவைக் கட்டியிருப்பதை, நம் நக்கீரன்தான் படங்களோடு அம்பலப்படுத்தியது. இப்போது அந்த பங்களா பகுதியில் உள்ள 70 சென்ட் இடத்தை, ராஜேஸ்தாஸ் அபகரித்துவிட்டதாக, அவர் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.''”