ராங்கால் : வம்படியாக சிக்கும் தி.மு.க! நெருக்கடியில் ஸ்டாலின்! இன்னும் எத்தனை காலம்? சிதம்பர ரகசியமான சிறைவாசம்!

pcc

"ஹலோ தலைவரே, இடைத்தேர்தலில் நேரடியா களத்தில் இறங்கிய அ.திமு.க.வை விட, களத்தில் போட்டியிடாத பா.ம.க.விடம்தான் தி.மு.க.வுக்கு எதிரான அட்டாக்கில் வேகத்தைப் பார்க்க முடிஞ்சிதே!''’

""பஞ்சமி நிலம்ங்கிற பேரில் தி.மு.க., மீது பாம.க. நடத்திய யுத்தத்தைத்தானே சொல்றே?''’

sta

""ஆமாங்க தலைவரே, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ’"அசுரன்'’ படத்தைப் பார்த்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அதில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்து சொல்லப்பட்டதை டுவிட்டர்ல பாராட்டியிருந்தார். இதைப் பார்த்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட முரசொலி அலுவலக இடத்தை ஸ்டாலின் திருப்பித் தரவேண்டும்னு அட்டாக்கை ஆரம்பிச்சார். உடனே ஸ்டாலின், முரசொலி அலுவலகம் கட்டப்பட்ட நிலம் பஞ்சமி நிலமல்ல. அது காலம் காலமாகத் தனியாருக்கு உரிமையா இருந்த நிலம்தான்னு, அதற்கான 85-ஆம் ஆண்டு பட்டாவையும் வெளியிட்டு, அவசரக் கோலத்தில் புகார்களை அள்ளித் தெளிக்கவேண்டாம்னு பதிலடி கொடுத்தார். இதன்பிறகும் ராம்தாஸ், 85-க்கு முன்பு அங்கே ஆதிதிராவிட மாணவர் விடுதி இருந்தது. அது பஞ்சமி நிலம்தான்னு சொல்லி, மூலப் பத்திரத்தை வெளியிடச் சொன்னாரு. ஸ்டாலினோ, அது பஞ்சமி நிலம் இல்லையென்றால் ராமதாசும் அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவதாக ஒப்புக்கொள்வார்கள் என்றால், மூலப்பத்திரத்தை வெளியிடு றேன்னு ஒரே போடாகப் போட்டார். இப்படி அனல்பறந்த இந்த இருவருக்குமான கருத்து யுத்தம் இடைத்தேர்தலின் பிரச்சார யுத்தத்தையே தூக்கிச் சாப்பிடும்படி இருந்தது''’

""அ.தி.மு.க.வுக்கு இதில் என்ன ரோல்?''

""முரசொலி அலுவலக இடம் பற்றி பா.ம.க. ராமதாஸ் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு விசாரிக் கும் படி வருவாய்த் துறை அதி காரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு போட்டிருக்கார்.. ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை வச்சி தி.மு.க.வுக்கு நெருக் கடி கொடுக்கலாம்ன்னு அவர் ஒரு பக்கம் வியூகம் வகுத்துக்கிட்டு இருக்கார். அதேபோல் வக்போர் டுக்குச் சொந்தமான இடங்கள், இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள், வன்னி யர் அறக்கட்டளைக்குச் சொந்த மான இடங்கள் போன்றவற்றில் எங்கேனும் தி.மு.க.வினர் ஆக்கிர மிப்பு செய்ததாகப் புகார்கள் இருந்தாலும், அவற்றைய

"ஹலோ தலைவரே, இடைத்தேர்தலில் நேரடியா களத்தில் இறங்கிய அ.திமு.க.வை விட, களத்தில் போட்டியிடாத பா.ம.க.விடம்தான் தி.மு.க.வுக்கு எதிரான அட்டாக்கில் வேகத்தைப் பார்க்க முடிஞ்சிதே!''’

""பஞ்சமி நிலம்ங்கிற பேரில் தி.மு.க., மீது பாம.க. நடத்திய யுத்தத்தைத்தானே சொல்றே?''’

sta

""ஆமாங்க தலைவரே, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ’"அசுரன்'’ படத்தைப் பார்த்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அதில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புக்கு எதிரான கருத்து சொல்லப்பட்டதை டுவிட்டர்ல பாராட்டியிருந்தார். இதைப் பார்த்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்ட முரசொலி அலுவலக இடத்தை ஸ்டாலின் திருப்பித் தரவேண்டும்னு அட்டாக்கை ஆரம்பிச்சார். உடனே ஸ்டாலின், முரசொலி அலுவலகம் கட்டப்பட்ட நிலம் பஞ்சமி நிலமல்ல. அது காலம் காலமாகத் தனியாருக்கு உரிமையா இருந்த நிலம்தான்னு, அதற்கான 85-ஆம் ஆண்டு பட்டாவையும் வெளியிட்டு, அவசரக் கோலத்தில் புகார்களை அள்ளித் தெளிக்கவேண்டாம்னு பதிலடி கொடுத்தார். இதன்பிறகும் ராம்தாஸ், 85-க்கு முன்பு அங்கே ஆதிதிராவிட மாணவர் விடுதி இருந்தது. அது பஞ்சமி நிலம்தான்னு சொல்லி, மூலப் பத்திரத்தை வெளியிடச் சொன்னாரு. ஸ்டாலினோ, அது பஞ்சமி நிலம் இல்லையென்றால் ராமதாசும் அன்புமணியும் அரசியலை விட்டு விலகுவதாக ஒப்புக்கொள்வார்கள் என்றால், மூலப்பத்திரத்தை வெளியிடு றேன்னு ஒரே போடாகப் போட்டார். இப்படி அனல்பறந்த இந்த இருவருக்குமான கருத்து யுத்தம் இடைத்தேர்தலின் பிரச்சார யுத்தத்தையே தூக்கிச் சாப்பிடும்படி இருந்தது''’

""அ.தி.மு.க.வுக்கு இதில் என்ன ரோல்?''

""முரசொலி அலுவலக இடம் பற்றி பா.ம.க. ராமதாஸ் சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு விசாரிக் கும் படி வருவாய்த் துறை அதி காரிகளுக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவு போட்டிருக்கார்.. ஏதேனும் சிக்கல் இருந்தால், அதை வச்சி தி.மு.க.வுக்கு நெருக் கடி கொடுக்கலாம்ன்னு அவர் ஒரு பக்கம் வியூகம் வகுத்துக்கிட்டு இருக்கார். அதேபோல் வக்போர் டுக்குச் சொந்தமான இடங்கள், இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள், வன்னி யர் அறக்கட்டளைக்குச் சொந்த மான இடங்கள் போன்றவற்றில் எங்கேனும் தி.மு.க.வினர் ஆக்கிர மிப்பு செய்ததாகப் புகார்கள் இருந்தாலும், அவற்றையும் தோண்டித் துருவச் சொல்லி யிருக்காராம் எடப்பாடி. இதைப் பார்த்த சீனியர் அமைச்சர்கள் சிலர் எடப்பாடியிடம், ஆட்சி மாற்றம் நடந் தால், இதே பாணியில் அவங்க நம்மை நோண்டி நொங் கெடுத்துடுவாங் களே. சிறுதாவூர் பங்களாவே பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிச்சி தான் கட்டப்பட்ட துன்னு அந்தப் பகுதி மக்கள் கடுமையா போராடிய சம்பவத் தையும் நாம் நினைச் சிப் பார்த்து நிதானமாவும் சூதனமாவும் நடந்துக்கறதுதான் புத்திசாலித்தனம்ன்னு எடுத்துச் சொல்லியிருக்காங்க''’

""கலைஞருக்குப் பிறகும் தி.மு.க.வை ஸ்டாலின் தேர்தல் வெற்றிகளோடு சிறப்பா வழி நடத்துறார்னு மக்கள் மத்தியில் ஒரு இமேஜ் இருக்கு. அந்த இமேஜுக்கு தி.மு.க. தரப்பில் இருந்தே சோதனைகள் ஏற் படுதே''’

""உண்மைதாங்க தலைவரே, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தி.மு.க. வர்த்தக அணியைச் சேர்ந்த பிரமுகர் திருப்பூர் மோகன்ராஜ் குமார் அதிரடிக் கைதுக்கு ஆளாகியிருக்கார். இவருக்கு மா.செ. சப்போர்ட் இருந்ததால், ஈஸ்டர் வெடி குண்டு சம்பவ நேரத்தில் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு இருந்தது. அடுத்து கலைஞர் மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி, பண மோசடி வழக்கில் சிக்கி, பிறகு சமாதானப் பஞ்சாயத்துகளால் தப்பிச்சிருக்கார். இப்படி அங்கங்கே இருக்கும் தி.மு.க. பிரமுகர்கள் சிலரும் கட்சித் தலைமைக்கு நெருங்கிய குடும்பத்தினர் சிலரும் செய்யும் ஏடாகூடக் காரியங்களால், வம்படியாக சிக்கி, ஸ்டாலின் சிந்திக்கொண்டிருக்கும் வியர்வைத் துளிகள் விரயமாகி விடுமோங்கிற கவலை யில் தி.மு.க. சீனியர்கள் இருக்காங்க.''

""நியாயமான கவலைதானே?''’

rr

""பிரபல பத்திரிகை அதிபர், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், பிரார்த்தனா தியேட்டருக்கு அருகில் இருந்த தன் இடத்தை புரோக்கர் பாலு என்பவர் மூலம் ரூ 130 கோடிக்கு விற்பனை செய்தார். அந்த தொகையில் அவர் நுங்கம்பாக்கத்தில் ஒரு நட்சத்திர ஓட்டலை வாங்கிய தோட, தன் தொலைக்காட்சிச் சேனலுக்கு ஒரு துணைச் சேனலையும் தொடங்க இருக் கார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணிப் பிரமுகரான வழக்கறிஞர் ஜோயலும், சுபாஷ் பண்ணையாரும் தங்களுக்கு கமிஷன் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததா, புரோக்கர் பாலு சென்னை காவல்துறை யிடம் புகார் கொடுத்திருக்கார். இது முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குப் போனபோது, புகாருக்கு ஆளானவர்களைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கார். இதைக் கேள்விப்பட்ட சுபாஷ் பண் ணையார் இந்த விவகாரத்தில் இருந்து கழன்றுகொள்ள, இப்ப வழக்கறிஞர் ஜோயலைக் குறி வைத்து, காவல்துறையின் மூவ்கள் தொடங்கியிருக்குதாம்.''’

""முதல்வர் எடப்பாடி இடைத்தேர்தல் முடிவை வைத்தும் ஒரு கணக்குப் போட றாராமே?''’

""ஆமாங்க தலைவரே, இடைத்தேர்தல் நடக்கும் நாங்கு நேரி, விக்கிர வாண்டி ஆகிய தொகுதிகளின் முடிவு தங்க ளுக்குச் சாதக மாக வந்தால், அதை மக்களின் மனநிலையாகக் கருதி உள்ளாட்சித் தேர்தலை இதே சூட்டோடு நடத்துவது என்றும், ஒருவேளை முடிவுகள் தங்களுக்கு எதிராக இருந்தால், தொடர் மழையைக் காரணம் காட்டி, மேலும் கொஞ்ச காலத்துக்கு ttatஉள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வச்சிட லாமுன்னும் இருவேறு கணக்கு களை அவர் போட்டுக்கிட்டு இருக்கார். மத்திய பா.ஜ.க.வோ, தங்கள் கட்சியினர் லாபக்கணக்கு போடும் வகையில் டாஸ்மாக்கில் இருந்து அவர்களுக்கு வரு மானத்துக்கான வழியை ஏற்படுத்திக்கொடுன்னு எடப்பாடி அரசுக்கு நிர்பந் தம் கொடுத்திருக்கு. அத னால் அங்கங்கே பா.ஜ.க. பிரமுகர்களுக்கு டாஸ்மாக் பார் லாபத்தில் ஷேர் கொடுங்கன்னு டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டி ருக்கு. அதேபோல் அவர் களுக்கு நம்பிக்கையூட்டும் தொடக்க மாக திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு பா.ஜ.க. பிரமுகர்களுக்கு டாஸ்மாக் பார் உரிமம் கொடுக் கப்படுது.''’

""அது இருக் கட்டும்பா. 21-ந் தேதி பொதுத் தேர்தலை சந்தித்த அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸை ஓரங் கட்டி மீண்டும் வெற்றியைக் கைப்பற்றும் நிலையில் பா.ஜ.க. இருப்பதாகச் சொல்லப்படுதே.''’’

""இந்த இரு மாநிலத்திலும் பலவீனமான நிலையில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியால், அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க.வுக்கு டஃப் காட்ட முடியலை. அதே நேரத்தில் காங்கிரஸ் அதிகாரத் தில் இருக்கும் மத்திய பிரதேசத்தில் கோஷ்டி யுத்தத்தால் கோமா நிலையை நோக்கிப் போய்க் கிட்டு இருக்கு. மத்திய பிரதேச காங்கிரஸ் முதல்வரான கமல்நாத்துக்கும், அதே கட்சியைச் சேர்ந்த சீனியர் லீடரான ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே உரசல் இருக்கு. கமல்நாத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிப்படி, விவசாயக் கடன்களை சரிவர ரத்து செய்யலைன்னும் மக்களின் நம்பிக்கையை அவர் அரசு இழந்துவிட்டதுன்னும் அவர் பகிரங்கமா பேசி, பா.ஜ.க. தரப்புக்கு உற்சாகம் தந்துக்கிட்டிருக்கார். இதைப் பார்த்து ஷாக்கான கமல்நாத், ராகுல்காந்தியிடம் புகார் சொல்ல... ராகுல்காந்தியோ, நான் கட்சியின் தலைவரா இல்லை. அதனால் அம்மா சோனியாவிடமே பேசிக்கொள்ளுங்கள் என்று கழன்றுகொண்டார். உடல்நிலை சரியில்லாததால் சோனியாவும் கமல்நாத்தை சந்திக்க நேரம் ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சியின் நிலைமை... பல்ஸ் டவுன் ஆன நிலையில் சோதனைக் கட்டத்தில் இருக்கு.''’

""ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு விவகாரத்தில் சிக்கி திகாரில் இருக்கும் ப.சி.யின் நிலைமையும் பல்ஸ் டவுன் நிலைமை தானாமே?''

ch

""ஆமாங்க தலைவரே... ப.சி. மீது சி.பி.ஐ. தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கே வீக்கான வழக்குதான். அந்த நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தையே சி.பி.ஐ.யால் காட்ட முடியலையாம். அப்படிப்பட்ட வழக்கிலேயே இத்தனை நாள் ப.சி.யைத் தங்கள் சாமர்த்தியத்தால் சிறையில் வைத்து, அவரது எடையில் 5 கிலோவைக் குறைத்திருக்கிறது சி.பி.ஐ. அடுத்து ப.சி.க்கு எதிராக களமிறங்கி யிருக்கும் அமலாக்கத்துறை iiவசமோ ஏகப்பட்ட புதிய ஆதாரங்கள் இருக்கு தாம். குறிப்பாக ப.சி. தரப்பு சிங்கப்பூர், மலேசியா, யு.கே. உள்ளிட்ட நாடுகளில் பழனியப்பன் உள்ளிட்ட உறவினர்கள் பலரின் பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கிப் போட்டி ருக்கிறதாம். இதற்கான பண டிரான்சாக்ஷன் எல்லாமே எளிதில் சிக்கிக்கொள்ளும் வகையில் சாமர்த்தியம் இல்லாமல் நடத்தப்பட்டிருக்கிறதாம். அதுமட்டுமில்லாமல் ப.சிதம்பரத்தின் ஆடிட் டர்கள் இருவரை அப்ரூவராக்கித் தங்கள் கைவசம் வைத்திருக்கிறதாம் அமலாக்கத்துறை''’

""ஓ''’

""மேலும் ப.சி.மீதான இந்த வழக்கைக் கையாளும் அமலாக்கத்துறை இயக்குநர் ஜான் தாமஸ் ஏற்கனவே சென்னை அமலாக்கத்துறையில் இயக்குநராக இருந்தவர். அவர்தான் ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கிலும், சசிகலா, தினகரன் மீதான aaவழக்குகளிலும் கவனமாகச் செயல்பட்டு, தண்டனைகளைப் பெற்றுத் தந்ததாம். அதனால் அவரைக் கண்டு ரொம்பவே நடுங்குகிறதாம் ப.சி. தரப்பு. இன்னும் எத்தனை காலம் சிறைவாசம்ங் கிறது சிதம்பர ரகசியமாகவே இருக்கும் நிலையில்... இந்த தீபாவளியை சிறையிலேயே கொண்டாடும் நிலையில் இருக்கார் ப.சி. ஆனால் அவரது தரப்பினரோ, எல்லாமே புனையப்பட்ட வழக்குகள்தான். உருப்படியான ஆதாரங்கள் அவர்களிடம் இல்லை. இது அவர்களுக்கே தெரியும். இருந்தும் அரசியல் பழிவாங்கலுக்காகவே அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க நினைக்கிறார்கள். அவர்கள் எண்ணம் விரைவில் தவிடு பொடியாகும் என்கிறது''’

""நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்பா. சமீபத்தில் 11 மாநில கவர்னர்கள், பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்காங்களாம். அவர்களுக்கெல்லாம் இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் தெலங்கானா கவர்னரான தமிழிசைக்கு மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த பொலிடிக்கல் மீடியேட்டர் ஒருவர் மூலம் அண்மையில் அப்பாயின்ட் மெண்ட் கிடைத்திருக்கிறது. அவர்கள் இருவரை யும் சந்தித்த தமிழிசை, தெலங்கானாவில் நான் வேண்டாத விருந்தாளியாகவே பார்க்கப் படுகிறேன்னு தன் ஆதங்கத்தை வெளிப் படுத்தினாராம். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொன்ன மோடியும் அமித்ஷாவும், அவ்வப்போது தெலங்கானா ஆட்சி நிர்வாகம் பற்றி ரிப்போர்ட் அனுப்புங்கள் என்று கேட்டுக்கொண்டதோடு, தமிழக பா.ஜ.க.வுக்கு அடுத்து யாரைத் தலைவராக நியமிக்கலாம் என்று தமிழிசையிடம் அவரது ஒப்பீனியனையும் கேட்டார்களாம்''

__________

இறுதிச் சுற்று

சென்னை மேயர்! பா.ஜ.க. வியூகம்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தச்செய்து சென்னை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டுமென்பது பா.ஜ.க.வின் அஜெண்டா. இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சியின் கள நிலவரங்களைப் பற்றி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜனிடமிருந்து சில பல தகவல்களை அரசியலுக்கு சம்பந்தமில்லாத முக்கிய பிரமுகர் மூலம் கேட்டுப்பெற்றுள்ளது பா.ஜ.க. அந்த வகையில், சென்னையில் தற்போது தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என 3 எம்.பி.க்கள் இருக்கிறார் கள். அதனை மையமாக வைத்து சென்னை பெருநகர மாநகராட்சி யை 3 மாநகராட்சியாகவும், 15 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு கவுன் சிலர் எனவும் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க.வின் இலக்கு சாத்தியமாகும் என கராத்தே தியாகராஜன் தகவல் தந்துள்ளார்.

-இளையர்

nkn251019
இதையும் படியுங்கள்
Subscribe